Sunday 31 January 2010

அன்பளிப்புப் பைகள்

 கோடை விடுமுறை முடிந்து புத்தாண்டிற்காக நாளை மீண்டும் பாடசாலை திறப்பு விழா.

அதற்காக வலைப்பூவுக்கு மூடுவிழா எல்லாம் கிடையாது. அவ்வப்போது வந்து ஏதாவது 'அறுவடை' வெளியிட்டுப் புகை போக வைப்பேன். ;)

விடுமுறையில் முடிக்க நினைத்திருந்த வேலைகள் எல்லாம் முடித்து விட்டேனா!!! பெரிய வேலைகளை முடித்திருக்கிறேன் என்பது மனதுக்குத் திருப்தியாக இருக்கிறது. சில குட்டிக் குட்டிக் காரியங்களை மட்டும் - அவை குட்டியாக இருப்பதாலேயே நாளை, நாளை என்று கடத்தி... இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. நாளை எங்கே போகப் போகிறது, பிறகு பார்க்கலாம். 

இப்போ நேற்றைய கதை, குட்டித் தோழி அவுஸ்திரேலியாவில் இருந்து இரண்டு நாட்கள் முன் திரும்பி விட்டார். (அவர் குட்டித்தம்பி 'மூஸ் மூஸ்' என்று மூக்கையும் வாயையும் பிடித்துக் கங்காரு முகம் காட்டுகிறார்.)
நேற்று தோழியின் ஆறாவது பிறந்தநாள். அன்பளிப்பு ஏற்கனவே தயாராய் வாங்கி வைத்திருந்தேன். பதினோராம் மணிநேரம், பொதி சுற்றுவதற்குப் பொருத்தமாகக் கடதாசி கிடைக்கவில்லை. கண்ணில் பட்டன முன்பு அறுசுவைக்காகச் செய்து அனுப்பிய 'அன்பளிப்புப் பைகள்'. நீளம் போதவில்லை. எனவே ஒரே வர்ணத்தில் அமைந்த இரண்டு பைகளை ஒன்றுக்குள் ஒன்றாகப் போட்டு வைத்தேன். 
கூடவே கண்ணில் பட்ட மீதிப் பைகள் இவை.

'கான்ஃபிடி' & கிறிஸ்டல் பூக்கள்
ரிப்பன் & பின்னல்வேலைப் பூ 
பஞ்ச் பூக்கள்
'கிஃப்ட் ராப்' பை
'கான்ஃபிடி'
செய்முறைக்கு பார்க்க
      http://www.arusuvai.com/tamil/node/10049

Saturday 30 January 2010

அறுவடை - 4

அதிராவுக்கு என்னே ஞானதிருஷ்டி என்று வியந்து கொண்டே.... 
 
இந்தப் படங்களை இடுகை இடுகிறேன். ;)
 இவற்றை நான் சமைக்குமுன், ஏதாவது செதுக்குதல் வேலையில் ஈடுபடலாம் என்று இருந்தேன். 
அதற்குள்...
தலைமைச் சமையற்காரர் முந்தி விட்டார். 
இன்று இதுதான் கறி.சாப்பிடுங்கோ. ;)

Friday 29 January 2010

இன்றைய அறுவடை - 3

தரையில் வைத்தால் சிட்டுக்கள் பழங்களைத் தின்று விடுகின்றனவென்று வலை போட்டு மூடி வைத்தேன்.


இங்கு வாடிக்கையாக வரும் முள் எலியார் ஊர்ந்து போய்த் தின்ன ஆரம்பித்தார். சென்ற வருடம் முதல் செடிகள் இந்தக் கூட்டினுள் வளர்கின்றன.


இன்றைய அறுவடை இது மட்டும் அல்ல. இன்னும் இருக்கிறது.
                                      
                                                                                         மீதி நாளை தொடரும்.

Thursday 28 January 2010

தங்க மீன் தடாகம்

அம்புலிமாமா கதை அல்ல. fish pond ஒன்று தோட்டத்தில் இருக்கிறதே.. அதைச் சொல்கிறேன். :)

 
மகனை நச்சரித்து ஒரு விதமாக நீர்வீழ்ச்சியைச் சரி செய்ய வைத்தாயிற்று. இப்போ பூனைகளைக் காணவில்லை.

கட்டுக்கடங்காமல் வளர்ந்திருந்த நீர்த்தாவரங்கள் ஃபில்டர் உள்ளும் வளர்ந்திருந்ததுதான் நீரோட்டத்தைத் தடை செய்திருக்கிறது என்று மகன் சொன்னார்.


ஒரு கருப்பு தங்க! மீனும் ஒரு தங்க தங்க மீனும் மட்டுமே மீதம் இருந்தன. மீதி எல்லாம் பூனைகள் வயிற்றிலோ தெரியவில்லை.

இப்போ ஒரு சோடி தங்க மீன் குஞ்சுகள் வாங்கி விட்டிருக்கிறோம். மீதி பிற்பாடு பார்த்து விடலாம். ஃபில்டர் சுத்தம் செய்ய வேண்டி இருந்ததால் செடிகளும் கொஞ்சம் பிடுங்கப்பட்டு விட்டன. 

சல சலவென நீர் வழியும் ஓசை காதுக்கு இதமாகத் தான் இருக்கிறது.

இப்போ பூனைப் பிள்ளை எங்கே இருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்! பக்கத்து வீட்டு கார்டன் ஷெட் கூரை மேல். அங்கிருந்து தங்க மீன்களை வேடிக்கை பார்க்கிறார், என்னையும்தான். ;)

Tuesday 26 January 2010

"ஆன்டி, நான் உங்களைப் பிடிக்கும்,"...

...என்று என்னிடம் கூறிய என் ஆறு வயது குட்டித் தோழி இவர். :)













நாங்கள் ஒன்றும் ஓடி விளையாடவில்லை. அவர் சொன்ன வாக்கியத்தின் கருத்து என்னவெனில் 'Aunty, I love you' என்பதாகும். இவர் தன்னோடு நான் எப்பொழுதும் தமிழிலேயே உரையாட வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைத்திருக்கிறார். இரண்டு வருடங்களாக இந்த ஒப்பந்தம் நடைமுறையில்
இருக்கிறது.

எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. பாம்பு விழுங்க இருக்கும் தருணத்தில் (பாம்பும் ஏணியும்) ஒரு கட்டம் தாண்டி நிறுத்துவதை நான் காண்பதில்லை. :) தற்போது அவுஸ்திரேலியாவுக்கு 'பீன்' பண்ணி (been) இருக்கிறார். :) இந்த வார இறுதியில் திரும்புகிறார்.

இந்தத் தேவதை சென்ற திங்கள் அன்று என்னோடு சில மணி நேரங்கள் செலவிட வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இவை. 

இவருக்கு இறால் பீட்ஸா பிடிக்குமாம். அவரே சமைக்க விரும்பினார், உதவினேன்.

தேவையாக இருந்தவை :_

ரெடிமேட் சேவரி பேஸ்ட்ரி ஷீட்கள்
சுத்தம் செய்யப்பட்ட இறால்கள்
உப்பு
மஞ்சட் தூள்
ஆலிவ் எண்ணெய்
தக்காளி பேஸ்ட் 
துருவிய சீஸ்

இவற்றோடு... இரண்டு குட்டிக் கைகள் 

இறால்களை மட்டும் மஞ்சள், உப்பு சேர்த்துப் பொரித்து (வறுத்து) வைத்தேன்.

குட்டியம்மா வேலை செய்ய ஒரு தளம் வேண்டி இருந்தது. மேசை எட்டவில்லை. எனவே ஒரு லாச்சியைத் திறந்து வைத்து, அதன் மேல் ஒரு கட்டிங் போர்டை வைத்து விட்டேன்.

முதலில் பேஸ்ட்ரி ஷீட்களில் ஒரு கிண்ணத்தைக் கொண்டு வட்டம் வெட்ட ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் அதுவும் வசதிக் குறைவாக இருப்பதாகத் தெரிவித்துத் தானாகவே கீழே இருந்த லாச்சிக்கு பலகையை இறக்கி விட்டார்.












பிறகு வட்டங்களைப் பிரித்து....















பேக்கிங் ஷீட் விரித்த தட்டில் பரவினார்.
(இந்தப் படிநிலையில் தக்காளி பேஸ்ட் ஆடையில் பட்டுக் கெடுத்து விடக் கூடாதே என்கிற கவலை வந்தது. ஆகவே என் ஏப்ரன் ஒன்றை அணிந்து கொண்டார்.)













அடுத்து தக்காளி பேஸ்ட் தடவி....















 அதன் மேல் துருவிய சீஸைத் தூவி...



















ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு பொரித்த இறால் வைத்து...

பேக் பண்ணினார்(னேன்). :)

நினைவாக அம்மா, அப்பா, குட்டித் தம்பிக்கும் எடுத்துவைத்துக் கொண்டார். அங்கிள், அண்ணாமார் வீட்டுக்கு வந்த போது அவர்களுக்கும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.

நீங்களும் சாப்பிடுங்க. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். :)

இன்றைய அறுவடை

கறி மிளகாய் 
 
தொட்டிச் செடிகள் இம்முறை பெரிதாகக் காய்க்கவில்லை. 














இவ்வளவுதான் இன்றைய அறுவடை.













வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள். 
மீதியை நான் சமைக்கிறேன்.


Monday 25 January 2010

ஒரு...





                                                                                             வண்டு :D

An apple a day...


...keeps the doctor away.

அதனால் உங்கள் வீட்டார் யாராவது வைத்தியர்களானால் ஆப்பிள் சாப்பிடாதீர்கள். :)


இப்படி முயன்று பாருங்கள்.


.....சாப்பிடாமல் விட்டு விடுவீர்கள். :)


Sunday 24 January 2010

நுண்அலை மேடை

மீன் தொட்டியை நகர்த்திய பின்னும் இந்த உபகரணம் மட்டும் பழைய இடத்துக்குப் போகாமல் அதே இடத்தில் (அடுப்புக்குப் அருகில்) சில நாட்கள் இருந்தமை அருகே இருந்த 'எலிமன்ட்' (இதற்கும் பூனைக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை.) இரண்டும் பயன்படுத்துவதற்கு இடைஞ்சலாக இருந்தது. (இதற்குள் எந்த உபகரணம் என்று கண்டு பிடித்திருப்பீர்கள்.)

இந்த இடம் சமையலுக்கு வசதியாக இல்லாவிட்டாலும் சமையலறையில், நீள மேசையில் அதிக இடம் மீந்து இருந்தது மற்றைய வேலைகளுக்கு வசதியாக இருந்தது.

எல்லாவற்றையும் மனதில் கொண்டு பெரிய மகன் கொடுத்த யோசனை இது.

நேற்று சின்னவர், தன்  கம்பியூட்டர் மேசையை வேண்டாம் என்று சொல்லவும் (மடிக்கணணி வாங்கி விட்டார்) அதனைப் பிரித்தெடுத்து இப்படி ஆக்கியாயிற்று.

செயற்படுத்தியவர் கிறிஸ்.

இப்போ அடுப்பையும் முழுமையாகப் பயன் படுத்த முடிகிறது, மேலதிகமாக ஒரு குட்டி இடமும் கிடைத்திருக்கிறது.

ஒரு பப்பி, ஒரு தட்டு, ஒரு லட்டு

//சரி,அப்போ நீங்க ஜீனோவைச் சொல்லலை! ---- ஜீனோக்கு காதிலை புகை எல்லாம் போகவே இல்லை! :)// என்று சொன்ன....

...பப்பிக்காக ஒரு தட்டு லட்டு.

இது நான் 'மஹி'ஸ் கிச்சன்' இலிருந்து பிடித்தது. வெண்ணெய், சீனி அளவுகளைக் கருத்தில் கொண்டு குட்டியாகப் பிடித்து வைத்து இருக்கிறேன். எனக்கு மகி பிடித்த மாதிரி அழகாக வட்டமாகப் பிடிக்க வரவில்லை. ஆனால் சுவை நன்றாக இருந்தது. விரும்பினால் நீங்களும் முயன்று பாருங்கள். :)

http://mahikitchen.blogspot.com



நன்றி மகி.

சொல்ல மறந்த கதை

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

நன்றி... திரை மறைவில் பல வழிகளிலும் எனக்கு ஊக்கமும் உதவியும் நல்கும் என் 'பிரியமான' தோழி ரோஸ் (எ) ஜாஸ்மின்.


Friday 22 January 2010

பூப்பூவாப் பூத்திருக்கு நட்பு


வலைப்பூ ஆரம்பித்து இருபத்திரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருக்கிறது.
அதற்குள் பதின்மூவர் பின்தொடர்கிறார்களா என்று மலைப்பூ.
அதனால் வந்தது சிரிப்பூ. :D

நன்றியாக என் தோட்டத்து டேலியாப் பூ.

நன்றி


என் தாயார் செபா

விஜி சத்யா

சுஸ்ரீ

சாருஸ்ரீராஜ்

மகி

சோனியா

வானதி

அதிரா

ஜலீலா கமால்

சந்தனா

ஜீனோ

பிரபாதாமு வேதகிரி
சுபா


இவர்களோடு... இதுவரை எனது பதிவுகளுக்குப் பின்னூட்டம் கொடுத்து ஊக்குவித்த

அன்பு மகன் அருண் பிரகாஷ் 
ஹுசேன் 
தோழி இலா, மற்றும் பெயர் குறிப்பிடாது கருத்துத் தெரிவித்திருந்த சகோதரி 

அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

Tuesday 19 January 2010

ஒரு பப்பியும் ஒரு கரண்டியும்

பப்பி பாவம் எண்டு ஒரு கரண்டி போட்டு வச்சன்.


 கரண்டியைத் தூக்கத் தெரியாமல் பப்பி செய்திருக்கிற வேலையைப் பாருங்கோ!!