கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டாமா! ;)))
மகியின்
ஆங்கில வலைப்பூவில் கொடுக்கப்பட்டிருந்த கருப்பு எள்ளுருண்டை குறிப்பின் கீழ், பாதிக்குப் பாதி வெள்ளை எள்ளும் கருப்பு எள்ளும் கலந்து செய்வதாகக் கருத்துச் சொல்லியிருந்தேன்.
இதற்கு முன் கருப்பு எள்ளு வாங்கியதில்லை. முதல் தடவையாக சாப்பிட்டிருக்கிறோம். வாங்கி வைத்தது இதிலும்
தளகுளி நன்றாக வருமா என்பதை முயற்சிப்பதற்காக.
காற்கோப்பை கருப்பு எள், காற்கோப்பை வெள்ளை எள் சேர்த்து வறுத்து....
4 மேசைக்கரண்டி அளவு சர்க்கரையை உடைத்துப் போட்டு ஆறவிட்ட எள்ளை அதனோடு சேர்த்து சுற்றி எடுத்தேன். சின்னதாகப் பிடிக்க முயன்றேன். இயலவில்லை. பத்து செக்கன் மைக்ரோவேவ் செய்து, கலந்து, மீண்டும் பத்து செக்கன் மைக்ரோவேவ் செய்து, கலந்துவிட்டு குட்டிக் குட்டியாக (பெரிய கோலி அளவு) 21 உருண்டைகள் பிடித்து வைத்தேன்.
படம் சுமார்தான், பொறுத்தருள்க. ;)
அடுத்த தடவை bring a plate for morning tea என்றால் பாடசாலைக்கு எடுத்துப் போகலாம். கட்லட்டும்,
கில் மீ டேட்ஸும், பட்டீஸும் எல்லோருக்கும் பிடித்திருந்தாலும் பழகி விட்டது. வித்தியாசமான உணவுப் பொருட்களை முயற்சித்துப் பார்க்க விரும்புபவர்கள் அவர்கள். இது சற்றுப் புதுமையாக இருக்கும். சுவை... நிச்சயம் அவர்களுக்குப் பிடிக்கும். எனக்கும் சிரமமில்லாத சமையல்.
மகியின் விதவிதமான எள்ளுருண்டை குறிப்புகள்
இங்கே.