Showing posts with label விடுமுறைகள். Show all posts
Showing posts with label விடுமுறைகள். Show all posts
Thursday, 21 December 2017
Thursday, 26 January 2017
ஹலோ!
சென்ற வாரம் க்றிஸ்ஸுடன் நேப்பியர் சென்றிருந்தேன். 'எங்கெல்லாம் போகலாம்?' என்று விபரம் தேடிய வேளை கண்ணில் பட்டது ஒரு farm zoo பற்றிய விளம்பரம். பெரும்பாலும் எல்லாம் ஏற்கனவே கண்ட பிராணிகளாகத் தான் இருக்கப் போகிறது. புதிதாக எதுவும் இருக்கப் போவதில்லை. இருந்தாலும் ரசிக்கக் கூடிய இடம் என்பதால் போகலாம் என்று முடிவு செய்தோம்.
தீனி என்று ஒரு பிளாத்திக்குக் கிண்ணத்தில் சோளவிதைகள் கிடைத்தன. ஒரு போத்தல் பாலும் வாங்கிக் கொண்டோம்.
ஆரம்பத்திலேயே செம்மறிக் கன்றுக்கும் பாலூட்டும் வேலையை முடித்து அனுப்பிடுவது அங்கு வேலைக்கிருந்த இளம்பெண்களுக்கு சுலபமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒருவர் மற்றவரிடம் பொறுப்பை ஒப்படைக்க, அவர் வந்து அடைப்பிலிருந்த கன்று ஒன்றின் (குட்டியா!) கழுத்தில் நாடாவை மாட்டி வெளியே அழைத்து வந்தார். பால் போத்தலைக் கண்டதுமே உள்ளே இருந்த மூவர், நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு முன்னே வர, ஒருவருக்கு மட்டும் சந்தர்ப்பம் கிடைத்தது. (பிறகு இவரை அதே அடைப்பில் விடாமல் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டார்கள்.)
பெரும் அவாவோடு என் கையிலிருந்ததைப் பிடுங்காத குறையாக உறிஞ்ச ஆரம்பித்தார் குட்டியர்.
பெரும் அவாவோடு என் கையிலிருந்ததைப் பிடுங்காத குறையாக உறிஞ்ச ஆரம்பித்தார் குட்டியர்.
ஆட்கள் கொஞ்சம் பலசாலிகள் போல. என்னை இரண்டு கைகளாலும் போத்தலை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளச் சொன்னார் அந்தப் பெண். பால் முடியும் முன்பே பறித்துக் கொள்ளச் சொல்லிவிட்டார். காற்றை உள்ளே எடுத்துக் கொள்ளுவாராம். குட்டியர் போகப் பிரியமில்லாமல் போனார்.
பெரிய ஆடுகள் வேலிக்கு மேல் எட்டிப் பார்த்தன.

எனக்கு கையில் உணவு கொடுக்கும் எண்ணம் இருக்கவில்லை. ட்ரிக்ஸியும் ட்ரேஸியும் உலர்ந்த உதட்டுப் பெண்கள். என் கையிலிருந்து பட்டும் படாமலும் மெதுவே எடுப்பார்கள். ஈர வாய்க்காரர்களுக்கு க்றிஸ் கொடுக்கட்டும் என்று விட்டுவிட்டேன். :-)
அடுத்து இருந்த merino பெண் கொஞ்சம் கெஞ்சுவதாகப் பட்டது. எப்படியோ என் மனதைக் கவர்ந்துவிட்டார். கையில் தீனை வைத்து நீட்ட, பொறுக்கிக் கொண்டு கரக் முரக் என்று கடித்துச் சாப்பிட்டார்.
தடவி விடச் சொல்லிக் கழுத்தை நீட்டினார் இன்னொருவர். எனக்கு வீட்டில் விட்டுப் போன சின்னப் பெண்களின் எண்ணம் வந்துவிட்டது. :-) அதன் பின், தொடர்ந்து இருந்த ஆடுகளுக்கெல்லாம் தீன் கொடுத்தேன்.ஆங்காங்கே தங்களுக்கு வசதியாக வேலைக் கம்பியை நெளித்து வைத்திருக்கிறார்கள் பெரும்பாலானோர். பன்றிகளுக்குத் தீன் கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்கள். ஒரு பன்றிக்குட்டி ஆவேசமாகக் கம்பியை நெளித்துக் கொண்டு பாதைக்கு ஓடிவந்தது. கினிக்கோழிகளும் உள்ளேயும் வெளியேயுமாக ஓடித் திரிந்தன.

இவர் சார்லட் - 6 கால்ப் பெண்மணி. கொஞ்சம் அருகே வரத் தயங்கினார். 'பலர் இவரது ஐந்தாவது, ஆறாவது கால்களைப் பிடித்து விளையாடியிருக்க வேண்டும்,' என்று தோன்றிற்று.
இங்கு எல்லாமே வெகு மலிவாகத் தோன்றிற்று எனக்கு. எப்படிப் பராமரிப்பு வேலைகளைச் சமாளிக்கிறார்களோ என்று யோசித்தேன். பெரும்பாலானவர்கள் தாங்களே மனமுவந்து வேலை செய்வதாகத் தெரிந்தது. உணவுக்கும் பராமரிப்புக்கும் கூட அவர்கள் வாங்கும் பணம் போதுமாவெனத் தெரியவில்லை.
ஈமுக்கள் - எத்தனை அழகாக அமர்ந்திருக்கிறார்கள் பாருங்கள். தரையிலிருந்து உணவைப் பொறுக்கும் போதும் ஒரு நளினம் தெரிந்தது. :-) இவர்களது முட்டை - ஓடு மட்டும் ஒன்று வாங்கி வந்தேன். செதுக்கு வேலை செய்து பார்ப்பதாக எண்ணம். அதற்குள் உடைந்துவிடாமல் இருக்க வேண்டும். :-)
குதிரை ஏற ஒரு போதும் கிடைத்ததில்லை. ஆசைப்பட்டேன். அன்று காலை எழும்போது முகம் சற்று அதைத்து இருந்தது. இந்த விடுமுறையில் இது அடிக்கடி நிகழ்கிறது. காரணம் கண்டுபிடிக்க இயலவில்லை. அதனால் க்றிஸ் வேண்டாமென்றதை அரை மனதாக ஏற்றுக் கொண்டு முடிவிடத்திற்குப் போனோம்.
கை கழுவ Hand wash இருந்தது. க்றிஸ் கொண்டு சென்ற காப்பியை ஊற்றி உறிஞ்ச ஆரம்பித்தார். நான் என் பங்கைக் கிண்ணத்தில் ஊற்றி ஆற விட்டுவிட்டுத் திரும்ப, எதிரில் பெரிய பெரிய கூடுகள் தென்பட்டன. ஒன்றில், 'உள்ளே விரல்களை விட வேண்டாம்,' என்னும் வாசகம் தெரிந்தது. அதன் பின்னே.... சின்னதாக ஒரு தலை.

அருகே போய்ப் பார்க்க ஹிமாலயன் உப்பை நினைவுபடுத்துவது போன்ற நிறத்தில் கிளியார் ஒருவர்.
'ஹலோ!' என்றேன். அசையாமல் நின்றார். தொடர்ந்து, 'ஹலோ!' சொல்ல - மெதுவே தலையை அசைத்து ஏற்றுக் கொண்டார்.
நான் அடுத்து இருந்த கூட்டை நெருங்கும் சமயம் யாரோ, 'ஹலோ! என்பது போல் கேட்டது. யாரையும் காணோம். நான் புதிய கிளிகளைத் தேடிப் போனேன். அவை அருகே வரவேயில்லை. என்னோடு கோபித்த மாதிரி தூரவே நின்றார்கள்.
மீண்டும், 'ஹலோ!' ஹிமாலயன் ஆள்தான் கூப்பிட்டிருப்பாரோ! நான் அருகே அத்தனை நேரம் நின்றும் பேசாதவர் இப்போ பேசுகிறாரா! கிட்டப் போனேன். அருகே வந்து நின்றுகொண்டார். மீண்டும் நான் - 'ஹலோ!' ஆமோதிப்பது போல் தலை மேலும் கீழும் அசைந்தது. நான்கு முறை, 'ஹலோ!' சொல்லிவிட்டு அடுத்த கூட்டுக்கு நகர்ந்தேன். உடனே ஹிமாலயன் கூப்பிட்டார், 'ஹலோ!' இம்முறை குரல் சற்று அழுத்தமாக வந்தது. மீண்டும் அருகே சென்றேன். நான்கைந்து ஹலோ சொல்லிவிட்டுக் கிளம்ப... 'ஹலோஓ!! ;D எட்டிப் பார்க்கிறார். அவரோடு மட்டும் பேச வேண்டுமாம்.
Friday, 21 March 2014
"ஏணி வேண்டும்!"
ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கக் கூடாது என்பார்கள். இது எங்களுக்குப் பெரிய உதவி செய்தது ஊரில.
செபா நியூஸிலாந்து வர வெளிக்கிட்டதுமே எங்கட வீட்டை விற்றாச்சுது. பிறகு திருகோணமலைக்குப் போற நேரம் எல்லாம் மாமி வீட்டிலதான்; அது மச்சாள்ட வீடு என்றாலும்.. எங்கட வீடு மாதிரித்தான்.
இது போன முறை போன நேரத்துக் கதை. நாங்கள் இருந்த அறை கிட்டத்தட்ட யாரும் பாவிக்காத அறை. வீடு கட்டி முடியேல்ல இன்னும். இந்த அலுமாரிக்கு மேல மருமகள்ட கலியாண பனர் ++ எல்லாம் இருந்துது. பக்கத்து அறையிலதான் மாமி இருந்தவ. மேல தெரியிற இடைவெளியால இரவு முழுக்க மாமியின்ட "ஆண்டவரே! நாட்டிற்குச் சமாதானத்தைக் கொடும்," கேட்டுக் கொண்டே இருக்கும்.
ஒருநாள் கதவை இழுத்துச் சாத்த, அது பூட்டிக் கொண்டுது. நாங்கள் போற இடமெல்லாம் போய் வந்தாச்சுது. உள்ள மட்டும் போக முடியேல்ல. திறப்பு உள்ளே. ;)
சரி, ஒரு கோப்பி குடிக்கலாமெண்டு நினைச்சம். க்றிஸ் கோப்பி போடுறன் எண்டு போனார். பிறகு எனக்கு மட்டும் ஒரு கோப்பை வந்துது.
"நீங்கள் குடிக்கேல்லயா?"
"அதுக்கு ஏணி வேணும்,"
ஏதாவது விளங்குதா உங்களுக்கு!! ஏணியில ஏறி நிண்டு குடிக்கப் போறார் எண்டு நினையாதைங்கோ.
க்றிஸ் ஈக்வல் போட்டுக் குடிப்பார். ஈக்வல் அறையில. அறைத் திறப்பும் அறையில.
ஈக்வலை எடுக்க முதலில் திறைப்பை எடுக்க வேணும். எப்படி! நிறையப் ப்ளான் பண்ண வேண்டியிருந்தது. ;)
திறப்பை எடுக்க ஒரே வழி மாமிட அறைக்குள்ள ஏணி வைச்சு ஏறி படத்தில தெரியிற இடைவெளியால எங்கட அறைக்குள்ள இருக்கிற அலுமாரிக்கு மேல குதிச்சு, பிறகு கீழ குதிச்சு கட்டில்ல இருக்கிற திறப்பை எடுத்து... கொஞ்சம் பொறுங்கோ, முடியேல்ல இன்னும்.
ம்.. திறப்பை எடுத்தால் போதாது. கதவை உள்ள இருந்து திறக்க ஏலாது. ஆகவே மீண்டும் போன வழியே திரும்ப வெளிய வர வேணும். அது ஏலாது. ஏனெண்டால் உள்ளே ஏணி இல்லை அலுமாரியில் திரும்ப ஏற. கஷ்டப் பட்டு ஏற நினைச்சு அலுமாரியோட விழுந்தால்!!! சரி, விழாமல் ஏறியாச்சுது எண்டு வைப்பம். பிறகு அந்த உயரச் சுவரை எப்பிடித் தாண்டுறது! மற்றப் பக்கம் இன்னொரு அலுமாரி இல்லை.
திறப்பைக் கவனமா சுவருக்கு மேலால அடுத்த அறைக்கு வீசலாம். ஆனால்... முதல்ல உள்ள எப்பிடிப் போறது! ஏணியைக் காணேல்ல! அது யார் வீட்டுக்கு இரவல் உலா போயிருந்தது என்று தெரியேல்ல. கள்ளனைப் பொலீஸ் தேடிப் பிடிக்கிறது போல அயலெல்லாம் விசாரித்துக்கொண்டு இருந்தார்கள்.
"சரி, விடுங்கோ. அது கிடைக்குமட்டும் நான் அணிலைப் படம் எடுக்கப் போறன்."
"அதுக்கும் ஏணி வேணும்." - கமரா உள்ள!!
"அவ்வ்!!! ம்.. நான் என் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணப் போறன்."
"அதுக்கும் ஏணி வேணும். அட்ரஸ் கொப்பி உள்ளதானே இருக்கு!"
வீட்டு உடுப்பு மாத்த முடியேல்ல; குளிக்க முடியேல்ல.
நெட் கனெக்க்ஷன் போனால் நீங்கள் எவ்வளவு கஷ்டம் அனுபவிப்பீங்களோ அதே அளவு கஷ்டம் அனுபவிச்சம் அன்றைக்கு.
பிறகு ஒரு மாதிரி ஏணி வீட்டுக்கு வந்தது.
தொடர்ந்து வந்த நாட்களில் அறையை விட்டு வரும் ஒவ்வொரு தடவையும் கவனமாக திறப்பைக் கையில எடுத்துக்கொண்டோம்.
Thursday, 12 December 2013
காத்திருங்கள்!
இமாவின் உலகம்
இன்று முதல்
தடம் மாறியும் உருளும்.
அங்கும் இங்குமாய்
இடம் மாறி உலவும்.
எங்கு!
'அங்கு'தான்.
பொங்கலின் பின் வருவேன்
பொறுமையாய்க் காத்திருப்பீர்.
அதற்குள் முடிந்தால்
'அங்கு' வருவீர்.
இதற்கிடையில்....
நத்தார் வரும்
புத்தாண்டு மலரும்
பொங்கலும் வரும்.
சிலருக்குப் பிறந்தநாள் வரும்
மணநாளும் வரும்.
அனைத்திற்கும்
அனைவருக்கும்
என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திக்கும் வரை நன்றி கூறி விடைபெறுவது....
இமா க்றிஸ் _()_
இன்று முதல்
தடம் மாறியும் உருளும்.
அங்கும் இங்குமாய்
இடம் மாறி உலவும்.
எங்கு!
'அங்கு'தான்.
பொங்கலின் பின் வருவேன்
பொறுமையாய்க் காத்திருப்பீர்.
அதற்குள் முடிந்தால்
'அங்கு' வருவீர்.
இதற்கிடையில்....
நத்தார் வரும்
புத்தாண்டு மலரும்
பொங்கலும் வரும்.
சிலருக்குப் பிறந்தநாள் வரும்
மணநாளும் வரும்.
அனைத்திற்கும்
அனைவருக்கும்
என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திக்கும் வரை நன்றி கூறி விடைபெறுவது....
இமா க்றிஸ் _()_
Saturday, 6 October 2012
விடுமுறை எப்படி!
சின்னதாய் ஒரு விடுமுறை
பெரிதாய் ஒரு அனுபவம்
அனுபவித்ததில்லை
இப்படி அருமையாய்
ஒரு பொழுதும்.
விடும் முறை வந்த போது
புரிந்தது சிரமம் ;(
மீண்டும் ஒரு விடுமுறை
மீண்டும் ஒரு விடுமுறை
வராது போய் விடுமா!
வரும் நிச்சயம்.
நம்பிக்கையோடு...
விடை பெற்றோம்.
வீடு வந்த என்னிடம்
கேட்டனர் என் மக்கள்
"விடுமுறை எப்படி?"
சுருக்கமாகச் சொன்னேன்...
"அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை"
"விடுமுறை
இன்னொரு மகனோடு."
விரிவாகச் சொல்ல
வியந்தனர்.
ஆமாம்,
அன்பைப் போல் வலியது
எதுவும் இல்லை.
~~~~~~~~
இமாவின் உலகில் இடுகைகளின் கீழ் கருத்துச் சொல்லி விட்டுப் பொறுமையாகக் காத்திருந்த நட்பு வட்டத்துக்கு என் அன்பு நன்றி. வந்து விட்டேன், விரைவில் தினம் சில பக்கங்கள் என அனைவர் வலைப்பூக்களுக்கும் வருகை தருவேன்.- இமா க்றிஸ்
Saturday, 31 December 2011
புத்தாண்டு வாழ்த்துக்கள்
வெலிங்டன் போயிருந்த போது அங்கிருந்த மியூசியம் பார்க்கப் போனோம். அங்கே இருந்த மரச்செதுக்குவேலை நுழைவாயில் (உள்ளேதான் இருக்கிறது.) இது.
மீதி விபரங்கள் புகைப்படமாகவே கொடுத்திருக்கிறேன்; விரும்பினால் பெரிதுபடுத்திப் பார்க்கலாம்.
'Te Papa' என்பது மியூசியத்தின் பெயர்.
2012ம் ஆண்டின் நுழைவாயிலான இன்றைய தினமும் தொடர்ந்து வரும் நாட்களும் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியானவையாக அமைய என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
அன்புடன்
- இமா
Friday, 30 December 2011
ஆசை, தோ... ம்..ஹும்! பிட்டு , கம்பி, கைக்குட்டை
ஆசை, தோசை, பிட்டு, கம்பி, கைக்குட்டை
!!!
எப்போ விடுமுறை என்று எங்கு போனாலும் நாங்களே சமைத்துச் சாப்பிடுவதைத்தான் விரும்புவோம். இம்முறை விதி விளையாடி விட்டது. ;(
சென்று தங்கிய...
granny flat ல்... சமையற் பாத்திரங்கள் போதுமானதாக இருக்கவில்லை. ;( இங்கு வந்த 12 வருடங்களில் முதல்முறையாக மைக்ரோவேவ் இல்லாத ஒரு தங்குமிடம் அமைந்தது. பிட்டு அவிப்பதற்கு ஆயத்தமாக அரிசிமா கொண்டு போயிருந்தோம். ;((
முதல் நாள் வேறு வழியின்றி ஒரு மலேஷிய உணவகத்தைத் தேடி நடக்க, அது 'விடுமுறைக்காக மூடியுள்ளோம்' என்கிற அறிவிப்போடு எங்களை வரவேற்றது.
பக்கத்து dairy ல் பாண், மாஜரின், கரட், சலாமி, முட்டை என்று தேவைக்கு சில பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்தால் கண்முன்னே Yellow Chillie.
வெகு காலம் கழித்து ஒரு உணவகத்தில் நுழைந்து சாப்பிட்டுவிட்டு (அவர்கள் சமையல் பிரமாதமாக இருந்தது.) அறையில் போய் மாத்திரை எடுத்துக் கொண்டு உறங்கிப் போனேன்.
மறுநாள்...
தேன்கூட்டின் உள்ளே சுற்றும் முன் கைப்பையை அங்குள்ள பெண்ணிடம் ஒப்படைத்து 'டோக்கன்' பெற்றுக் கொண்டோம்.
"ஹச்சும்!" கையிலிருந்த 'டிஷ்யூவை' வெளியே எடுக்க... க்றிஸ் திடீரென்று, "கைக்குட்டை இருக்கிறது," என்கிறார்.
"என்னிடம் போதுமான அளவு டிஷ்யூ இருக்கிறது," இது நான்.
"ஒரு நாடா மட்டும் கிடைத்தால்...!!"
தலையும் புரியவில்லை; வாலும் புரியவில்லை. கர்ர்.. என்று வந்தது எனக்கு.
"புட்டு அவித்து விடுவேன்," என்று முடித்தார். "இருக்கிற pan ல ஹங்கியைக் கட்டி... அவிக்கலாம்."
"ம்!" வாயைத் திறக்க யோசனையாக இருந்தது எனக்கு. என் பிரியமான jacket ல் இருந்த நாடாவைப் பார்த்துவிட்டால் வேறு வினையே வேண்டாம். அமைதி காத்தேன்.
இரவு பாணும் பருப்புக்கறியும் சாப்பிட்டாயிற்று.
மறுநாள் இரவு அறைக்கு வந்ததும் ஒரு தட்டில் அப்பிள் கத்தி சகிதம் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமைந்தார் க்றிஸ். நான் குளித்துவிட்டு வரும்போது அப்பிள் தீர்ந்திருந்தது; கட்டிலில் தரையிலெல்லாம் ஏதுவோ நீலநிற ப்ளாத்திக்குத் துண்டுகள் போல் நீளநீளமாகக் கிடந்தது.
இன்னும் நீ..ளமாக ஒரு கம்பி.
!!!
ஏதாவது புரிகிறதா!!
என்னைப் பார்த்து ஒரு அரை வெற்றிச் சிரிப்புச் சிரித்தார்.
புரிந்தது எனக்கு - கோட் ஹாங்கர்!! ;)
புரிந்தது எனக்கு - கோட் ஹாங்கர்!! ;)
இதற்குப் பெயர்தான்... நளபாகம். நளமகாராஜா out of nothing சமைப்பாராமே! ;)
கைக்குட்டை கட்டிய pan...
துணி தீப்பிடிக்காமல்... 'சேஃப்டிபின்'...
தட்டில் பிட்டுக் குழைத்து....
பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து....
குழைத்த மாவை கைக்குட்டை மேல் கொட்டி...
மூடி அவித்தால்...
பிட்டு தயார். பிறகு... முட்டைப் பொரியல், காய்கறிக் கலவைப் பொரியல் என்று திருப்தியாக விருந்து சாப்பிட்டாயிற்று.
யம்! யம்! ;P
Friday, 30 September 2011
Thursday, 29 September 2011
Tuesday, 30 August 2011
காத்திருப்பு!
Subscribe to:
Posts (Atom)










