Thursday 7 January 2010

சுவர் இருந்தால்தான் சித்திரம்

விடுமுறை - வந்தால் முதலில் சந்தோஷம். பிறகு மெதுவே போரடிக்க ஆரம்பித்து விடுகிறது. எப்போதும் ஒரு பெரிய கூட்டத்தின் நடுவே இருந்து விட்டு திடீரென்று தனிமை.. தனிமை.. தனிமையைத் தவிர வேறில்லை.

இமாவின் உலகத்தில் 'பின்தொடருவோர்' வசதியைக் கொண்டுவரலாம் என்று முயன்று கொண்டு.. முயன்று கொண்டே.. இருக்கிறேன். எப்படிப் போனாலும் ஒரு குட்டிச் சுவரில் முட்டிக் கொண்டு இங்கேயே திரும்பி விடுகிறேன்.

பாடசாலையில் தினமும் 'வைப்ரன்ட் கலர்ஸ்' முகங்களைப் பார்த்துப் பழகிய எனக்கு போரடிக்கும் பழகிய முகங்கள் கூட இன்று அருகில் இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் சுவர்.. சுவர் .. சுவர் தான்.

ஊரில் சுவர் கூட சுவாரசியமாக இருக்கும். பள்ளிக்குடும்பத்துக்குப் பதில் பல்லிக்குடும்பம், பல்லிச்சண்டை, பெரிய பெரிய முதலைப் பல்லிகள். சுவரில் தொங்கும் புகைப்படச் சட்டத்தின் பின்னால் இருந்து ஒருவர் எட்டிப் பார்ப்பார். இன்னொருவர் நிறம் மாற்றிக் கொண்டு அடையாளமே தெரியாமல் படத்தின் மேலேயே இரையை எதிர்பார்த்து நிற்பார். வீட்டுக்கு வருவோர் கேட்டால் 'வளர்க்கிறேன்' என்று சிரிப்பேன். இங்கு மருந்துக்கு ஒரு பூச்சி கூடக் காணோம். (மருந்தடித்துக் கொன்று விட்டுக் காணோம் என்கிறேன்.)

அங்கு ஒரு தவளையார் இருந்தார். இரவு ஏழு மணி ஆனதும் காணலாம், தரையில் உலவித்திரியும் ஜந்துக்களை எல்லாம் சுவைத்துவிட்டு தன் இருப்பிடம் திரும்பி விடுவார்.

இங்கு இருப்பவர்கள் நான் வளர்ப்பவர்கள் மட்டுமே. இன்று திடீரென்று மழை பொழிகிறது. அதனால் பூனைப்பிள்ளைகளைப் பின் தொடர முடியாது. எனக்கு தூவானத்தில் நனையப் பிடிக்கும். இன்று நனையவும் முடியாது, ஏற்கனவே தும்மல்.

தும்மல் எப்படி வந்தது? 'டிஷூ' எப்படி வந்தது!

எங்கள் ஆமையார் நீந்தி விளையாடப் பிடிக்காமல் கொஞ்ச நாட்களாக அவரது மிதப்பிலே அமர்ந்திருந்தார். அதிகம் மெலிந்திருந்த மாதிரி தெரிந்தார். என்னைக் கண்டாலும் வரவில்லை. செதில் ஒன்று வேறு கழன்று போன மாதிரி தெரிந்தது. மகன் 'காம்பிங்' போய் விட்டார். அவர் அறையில் இருக்கும் ஆமை பற்றிய புத்தகங்களைத் துழாவிப் படித்ததில் இவருக்கு நியூமோனியா என்று அனுமானித்தேன்.

ஏதாவது செய்ய வேண்டும்.. என்ன செய்வது என்று தெரியாமல் தொட்டியில் நீர் நிறைத்துவிட்டேன். நீர் கலங்கிப் போயிற்று; மிதவை அமிழ்ந்து போயிற்று; ஃபில்டரும் நின்று விட்டது. ;(

இரவு மகன் வந்தார். "ஆமைக்கு சுகமில்லை போல இருக்கு கண்ணா" என்றேன் கவலையாக. போய்ப் பார்த்தான்.


"இட்ஸ் ஓகே! வேற ஒன்றும் இல்லை, ஷீ இஸ் க்ரோவிங் மம்" சிரிக்கிறான். ம்ம். மூன்று நாள் நான் தவித்த தவிப்பு எனக்குத் தான் தெரியும்.

இப்போ கலங்கிப் போன நீரை மாற்ற வேண்டி இருந்தது. ஃபில்டரைத் திருத்தி, மிதப்புக்கும் வழி செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் ஆமையார் உறக்கமில்லாமல் வருந்துவார் என்று தெரிவிக்கப்பட்டது.


நானும் உதவிக்குப் போனேன். எல்லாம் மாற்றிச் சரிசெய்தாயிற்று. வெளியே ஒரு தொட்டியில் வளர்ந்துபோய் இருந்த லில்லி பாட், நீர்த்தாவரம் எல்லாம் போட்டு அழகாய் அமைத்துக் கொடுத்துவிட்டுப் படுக்கைக்குப் போகையில் பதினோரு மணி.

காலையில் கண் விழித்தால் 'டிஷூ.. டிஷ்ஷூ ' என்று ஒரே தும்மல். இப்போ தெரிகிறதா! அந்தக் கடதாசிக்கு 'டிஷ்ஷூ' என்று பெயர் எப்படி வந்தது என்று!

டிஷூவோடு "டிஷூ.. டிஷ்ஷூ.." என்று சொல்லிக் கொண்டே ஆமையாரைப் போய்ப் பார்த்தேன். 'ஆஹா! ஆனந்தம்,' என்கிற மாதிரி பழையபடி கால், கை எல்லாம் அடித்துக் கொண்டு வளைய வருகிறார். என்னைக் கண்டதும் ஓடிவந்தார். அவருக்கும் எனக்கும் மட்டுமே புரியும் ரகசிய பாஷையில் பேசிக் கொண்டோம். "தாங்க்யூ இமா, தொட்டி இப்போதான் இயற்கையாகத் தெரியுது இல்லையா !" ம். இயற்கையாகத் தான் தெரிந்தது, லில்லி இலைகள் எல்லாம் பிடுங்கி வீசி தட்டுத்தட்டாய் மிதக்கிறது. மீதித் தாவரம், முழுகிவிட்டு துறைமுகவீதியில் நடை போய் வந்த இமா தலை மாதிரி இருக்கிறது. ஃபில்டர் கூட மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி இருந்தது. ;(


இப்படி இருந்தால்தான் ஆமைத்தொட்டி, சுவர் இருந்தால்தான் சித்திரம், ஸ்கூல் போனால்தான் தான் இமா.

14 comments:

  1. இமா வீட்டில் இருந்தால் தான் டிஷ்ஷு :)

    இமா - நான் என்னோட பக்கத்துல இருந்து உங்க ஃபாலோயர் ஆயிட்டேன்.. ஆட் காட்ஜெட் ல போயி அத ஆட் பண்ணுங்க..

    ReplyDelete
  2. ம்ம்..டிஷூ..டிஷூ..ஒன் மோர் டிஷூ ப்ளீஸ்! :)

    ஆன்ட்டி, உங்கட ஆமையார் "நான் வளர்கிறேனே மம்மி" சொல்லிருக்கார்,புரியலை உங்களுக்கு! ஹி,ஹி!!

    ReplyDelete
  3. //என்னோட பக்கத்துல// அதிரா பக்கமா! :)

    நானே போதுமான கடுப்பில இருக்கேன் எல்போர்ட். நீங்க வேற கடுப்பேத்தாதீங்கோ. எனக்கு அது மட்டும் 'பரிசோதனைல இருக்கு' என்று வருது.
    (ச்சர்.. ச்சர்ர்.... இப்ப டிஷூ எடுத்து.... கண்ணைத் துடச்சுக்கறேன். ;( )
    :)

    வேற ஏதாவது வழி சொல்லுங்கோ சந்தனா, முயற்சித்துப் பார்க்கிறேன். உதவிக்கு வருவதற்கு நன்றி.

    ReplyDelete
  4. ஜீனோக்கு ஒரு டிஷ்யூம். :D

    //புரியலை உங்களுக்கு!// நமக்கு இருப்பது என்ன மெட்டல் மண்டையா! இல்லையே. :)
    நெக்ஸ்ட் டைம் ஏதாவது டவுட் என்றால் முதலில் பப்பியிடம் வந்து அட்வைஸ் கேட்கிறேன். :)

    ReplyDelete
  5. இமா.. நானே ஒரு கத்துக்குட்டி :)

    உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு புரியலயே.. நான் மறுபடியும் போய் பாத்தேன்.. அந்த ஆட் பட்டன அமுக்குன உடன முதல்ல வர்றது இதானே..அதயும் ஒருக்கா அமுக்கி, அதுக்கு டைட்டில் கொடுத்து சேவ் பண்ணிட்டேன்.. அவ்ளோ தான்.. நீங்க அதுல ஏதாவது சேஞ் பண்ண ட்ரை பண்ணீங்களா?

    ReplyDelete
  6. எங்க காணாம போயிட்டீங்க இமா? யூசர்னேம் பாஸ்வர்ட் மறந்து போச்சா? :)))) இல்ல இந்த மாதிரி ஒரு ப்ளாக் இருக்கறதே மறந்து போச்சா? :))))))) ஆமையாருக்கும் இறக்கை இருக்குன்னு உங்க படங்களப் பாத்து தான் தெரிஞ்சுகிட்டேன்..

    ReplyDelete
  7. ஹை இமா.. டிட் ஃபார் டேட்.. நாந்தான் உங்க ஃபர்ஸ்ட் ஃபாலோயர் :)))

    ReplyDelete
  8. போங்கப்பா, என்னை அழ வைக்கிறீங்க. ;;;( இங்க என் வலைப்பூவில ஒரு ஸ்பானரும் ஸ்க்ரூ ட்ரைவரும் தான் தெரியுது... :) L போர்டைக் காணோம். ;)

    காணாம எல்லாம் போகலைய்ய். ரெண்டு நாளா அந்த ஸ்க்ரூ ட்ரைவரையும் ஸ்பானரையும் வச்சுக் குடைஞ்சு கொண்டே இருக்கேன். மண்டைக் குடைச்சல் தான் வருது. ;( :)) நேற்று அபூர்வமா ஒருத்தர் பின் தொடர்றாரே என்று பார்த்தால் அது இமாவேதானாம். ;( ம்ம்.. விட மாட்டேன். :)

    நீங்க அங்க 'பனி'ப்பெண் முகத்தை இமா முகமாக மாற்றியாச்சா!?

    பிற்காலத்தில் ஆமை யோசித்ததாம்.. 'இறக்கை இல்லாததால்தானே கொக்குகள் கூடப் போய் பாதி வழியில் விழுந்தோம். நாமே வளர்த்துக் கொள்வோம்,' என்று வளர்த்துக் கொண்டதாம். :)

    ReplyDelete
  9. எல் போர்ட் படந்தான் - எல் ஷேப் ல இருக்கும். இன்னைக்கு காணலியே? :(

    மாற மறுக்குது இமா.. அதெல்லாம் விடுமுறை நாள் தான் பாக்கனும்..

    ஹி ஹி.. அது ஃபின்னைச் சொன்னேன் :)

    நீங்க ஆங்கில ப்ளாக் மாதிரி மாத்தப் பாருங்க.. ஒருவேளை, தமிழ் ப்ளாக் டெம்ப்ளேட் வேற மாதிரியோ என்னமோ? என்னோடது ஆங்கிலந்தான்..

    ReplyDelete
  10. சந்தனா!
    // இந்த மாதிரி ஒரு ப்ளாக் இருக்கறதே மறந்து போச்சா? :)))))//
    அதெப்படி மறக்கும், அதான் எல் போர்ட் அப்பப்ப பின்னூட்டுராங்களே!

    //எல் போர்ட் படந்தான் - எல் ஷேப் ல இருக்கும்.// அது சரி! :)

    //நீங்க ஆங்கில ப்ளாக் மாதிரி மாத்தப் பாருங்க..//
    மாற மறுக்குது சந்தனா. அதெல்லாம் விடுமுறை நாள் தான் பாக்கணும். :)
    மாற்றினால் அதில எல் போர்ட் கருத்துரைகள் மீள்பதிவாகுமா!! :)

    ReplyDelete
  11. சந்தனா..ஆ......
    எனக்கு விடுமுறை வந்தாச்சு... நான் பார்த்தாச்சு.... :))
    இப்ப எனக்கு 'L' தெரியுதே. :) (உண்மையில் நான் ஒன்றுமே செய்யவில்லை, பிளாக்கர் என் மேல் தன் கருணைக்கண் பார்வையை இப்போதான் திருப்பி இருக்கிறார்.)

    சந்தனா, தாங்கள் தொடர்ந்து கொடுத்த ஊக்கத்துக்கு நன்றி. :)

    ரோஸ் & ஜாஸ்மின்,
    'சுவாரஸ்யம்' சொல்லி இருப்பது நீங்கள்தான் என்று நினைக்கிறேன். :) வருகைக்கும் உதவிக்கும் நன்றி . :D

    ReplyDelete
  12. ஆஹா இமா அக்கா ரொம்ப ஸ்வாரஸ்ம் தான் ஆமை பற்றி சொலி இருக்கீங்க கையில் வைத்து அதை கவனிப்பது எனக்கு புதுமையாக இருக்கு.

    ReplyDelete
  13. ஜலீலா வரவு சர்ப்ரைஸ் ஆக இருக்கு. :) தாங்க்யூ.
    அது மகன் கை. அவர் ஆமையை வேறு யார் தொடவும் அனுமதிக்க மாட்டார். என்னை வேலை மட்டும் வாங்குவார். :)

    ReplyDelete
  14. இமா
    இப்பத்தான் ப்ளாக் விசிட்...
    இன்னும் முழுசா முடியலை.
    ஆமையாரைப் பார்த்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா