Thursday 9 May 2013

பக் பக் பயணம்

வாழ்க்கையில்...
பயணங்களற்ற பொழுதுகள் பல
'பக் பக்' 'திக் திக்'
இப்படி இருக்க...
'பக் பக் பயணம்' என்று
எதைச் சொல்ல!
எதை விட!
மொத்த வாழ்க்கையுமே
பக் பக் பயணம்தானே!
 
கடக்கையில்...
திக்திக்!

இதுவும் கடந்து போகுமென்று,
பல் கடித்துக் கடந்து முடித்திட...
'அப்பாடா!
நிம்மதிப் பெருமூச்சு.

பெரிதாய்த் தெரிந்த,
முதல் வந்த 'பக் பக்',
அடுத்து வந்த பெரிதொன்றால்,
மனதின் ஓர் இருள் மூலையில்.
அடுத்து வந்தது...
அதையும் விடப் பெரிது.

பெரிதா!
பெரிதாய்த் தோன்றிற்றா!!!!

வருடா வருடம்
கோடையும் குளிரும்
தப்பாமல்...
தப்புத் தப்பாய் வருகிறது.
"போன வருடத்தை விட
இம்முறை கொடுமை!'
தப்பாது சொல்கிறோம் நாமும்.

சிந்தித்துப் பார்க்கிறேன்,
இவை,
வெறும் தோற்றம்தானோ!

கோடையில் விசிறிக் கொள்ளலாம்;
குளிரில் கம்பளி போர்த்தலாம்.
மறுவருடம் மறந்து
அதையே சொல்லலாம்,
"போன வருடத்தை விட
இம்முறை கொடுமை!'

பக்கென்றதெல்லாம்
பத்திரமாய் உறங்குகிறது.
உறக்கட்டும் நிம்மதியாய்
விழிக்கும் போது விழிக்கட்டும்.
நான்...
அதன் உறக்கம் கலைக்க வேண்டாம்
என் உறக்கம் தொலைக்க வேண்டாம்.
~~~~~~~~~~~~~
அழைப்புக்கு நன்றி ஆசியா
எவ்வளவோ முயன்றேன்
இயலவில்லை எழுத.
அதனால்... ;)

7 comments:

  1. என்னாது இமாவே ஒரு “பக்பக்”.. அப்போ இமாவுக்கே பக்பக்கோ ஆவ்வ்வ்வ்வ்:)..

    சூப்பரா எழுதிட்டீங்க இமா.. இது கவிதையா கடிதமா தெரியேல்லை.. எதுவாயினும் பக்பக்.. நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. //இது கவிதையா கடிதமா தெரியேல்லை.. // உண்மையைச் சொன்னதுக்கு என் உளமார்ந்த நன்றிகள் அதீஸ். ;)

      Delete
  2. நல்ல பகிர்வு ...

    ReplyDelete
  3. அதெதுக்கு பூஸார் உப்பூடித் தூங்குறார்... உது நல்லதுக்கில்ல:) எனச் சொல்லி வையுங்கோ சொல்லிட்டேன்ன்:))..

    ஊசிக்குறிப்பு:
    2012 டிஷம்பரில உலகம் அழிய இருந்துதுதானே?:) ஆனா அழியேல்லை எல்லோ.. அழியாட்டிலும் ஏதோ மாற்றம் பூமியில் நடந்திருக்காம் அதனாலதானாம்ம் இப்பூடி இருக்கு காலநிலை உலகமெல்லாம். நல்லவேளை மனிஷருக்கு ஒண்டும் ஆகல்ல சாமி:).

    ReplyDelete
  4. எப்படி இமாம்மா உங்களால மட்டும்.... சூப்பர் இமாம்மா :)
    நல்லாயிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நங் நங். பாராட்டு போதல குணாங். ;)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா