Monday 10 September 2012

மாமா, யமி, பாட்டி & இமா

இவர் எங்கள் யமி.

அறுசுவையில் அடிக்கடி 'அமானுஷ்யம்' இழை முகப்பில் வருகிறது. எனக்கு யமி நினைப்பு வந்தது. படத்தைத் தேடிப்பிடித்தேன். கூடவே செபாவின் ஒரே தம்பியின் நினைப்பும் வந்தது. ;(

'இமாவின் பாட்டி கண்ட 'அது' என்னும் தலைப்பில் ஒரு பேய்க்கதை ;) எழுதினேன். 1997 செப்டெம்பர் 13 - 15 க்கு இடைப்பட்ட காலப்பகுதியின் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் அது.

15வது வருட நிறைவையிட்டு அனுபவங்கள் இரைமீட்கப்படுகின்றன.
பாட்டி இறந்து பதின்மூன்று வருடங்கள் நிறைவாகிவிட்டது. யமி இறந்தும் பத்து வருங்களாகிவிட்டது.

விரும்பினால் படிக்கலாம். ;) எச்சரிக்கை - கதை சிறியதுதான் ஆனால் அடுத்தடுத்த பக்கங்களிலும் தொடர்ச்சி இருக்கும்.

23 comments:

  1. //விரும்பினால் படிக்கலாம். ;) எச்சரிக்கை - கதை சிறியதுதான் ஆனால் அடுத்தடுத்த பக்கங்களிலும் தொடர்ச்சி இருக்கும்.//

    ;) ஆஹா, இதைச்சொல்லவே ஓர் பதிவு. இமா மிகவும் புத்திசாலி, தான். ;)))))

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க வேண்டும் அண்ணா. கதைக்கான தொடர்புக்குப் பதில் மீண்டும் யமி படத்திற்கானவே தொடர்பே தவறுதலாக இணைந்திருக்கிறது. கவனியாது விட்டிருக்கிறேன். இப்போ சரிசெய்தாயிற்று.

      Delete
    2. இப்போ இங்கு நள்ளிரவு 12.30 மணி.

      நான் மட்டுமே தனியாக இப்போது விழித்துக்கொண்டு இருக்கிறேன்.

      பேய்க்கதையெல்லாம் என்னால் இப்போது படிக்க முடியாது. அண்ணியை துணைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு, நாளைக்குப் பகலில் படித்து விட்டு, பிறகு கருத்துச்சொல்வேன்.

      அன்புடன்
      அண்ணா vgk

      Delete
  2. பேய் கதையா? சுவாரஸியமாய் இருக்குமே..

    ReplyDelete
    Replies
    1. மதுமதிக்கும் அதே பதில்தான். மன்னிக்க வேண்டும் என்னை. கதைக்கான தொடர்புக்குப் பதில் மீண்டும் யமி படத்திற்கானவே தொடர்பைத் கவனிக்காமல் இணைந்திருக்கிறேன். இரவுதான் செபா பார்த்துச் சொன்னார்கள்.

      இப்போ லிங்க் சரியாக இருக்கும். சுவாரசியமாக இல்லாவிட்டால் திட்டப்படாது என்னை. :)

      Delete
    2. விடுமுறையின் போது உங்கள் புத்தகங்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை மதுமதி. ;(

      Delete
  3. ஐயோ பேய் கதையா பகலில் படிக்கின்றேன் இப்போது பாரிஸ் இரவு இமா!ஹீஇ

    ReplyDelete
  4. டீச்சர் நான் உங்க கதையை படிக்கணும் ன்ன நீங்க அந்த அது எது ன்னு சொன்னா தான் லிங்க் உக்கே போவேன் ( இதுக்கு நீ எல்லாம் படிக்கவே வேணாமுன்னு நீங்க திட்டுறது மனக்கண்ணுல தெரியுது:)) ஏன்னா எனக்கு ரெண்டு அது (ப்ர்ர்றாம்பு அண்ட் பப்ப்ப்பேய் )ரெண்டுமே ரொம்ம்ம்ப பயம்ம்ம் (ப்ளீஸ் லா பூஸ் கண்ணுல படாம இந்த கம்மெண்ட பாதுகாத்துடுங்க :))

    ReplyDelete
  5. நேற்றே வந்தேன் இமா ..ஆனா அந்த பப்பி பையன் படம்தான் லிங்கில் இருந்தது ..இப்ப படிச்சேன் .
    நான் பயம் நோ நோ :))
    நான் எப்பவுமே அதீசை முன்னாடி நிக்க வச்சிட்டு தான் பின்னால் நிற்பேன் ..எல்லாம் ஒரு SAFETY :)))

    ReplyDelete
  6. இமா ஒரு வழியா தைரியத்தை வர வெச்சு கதையை படிச்சுட்டேன்... கடைசியில் உண்மை என்னன்னு நீங்க சொல்லி இருந்த பதிவை படிச்சதும் சிரிப்பு வந்துட்டுது. குட். - வனிதா

    ReplyDelete
  7. //'தான் பிடிச்ச காஸ்பருக்கு காலே இல்லை'ன்னு பிடிவாதமா இருக்கவே //

    இயல்பான நடையில் விறுவிறுப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. அறுசுவைக்காக எழுதினது அது. தமிழ் எங்கட நடையில இருந்திருக்காது. பொறுத்துக் கொண்டு வாசிச்சு கருத்தும் சொல்லி இருக்கிறீங்கள். சந்தோஷம். நன்றி ஜீவன்.

      Delete
  8. இதோ சென்று படிக்கிறேன் இமா.

    ReplyDelete
  9. //முழுசா வெள்ளையா ஒளிப்பிழம்பு மாதிரி நகர்ந்துச்சாம். பாதம் இருக்கலயாம். முகம் தெரியலயாம் ஆனா வெண்மையா இருந்துதாம். திரும்பியே பார்க்காம நகர்ந்து வெளிய போயிருக்கு. வெளில அரவம் எதுவும் கேட்கல. இவங்க 'அப்பா! நிம்மதி'ன்னு மூச்சு விட... திரும்ப ஆவி உள்ள வந்திருக்கு. அதே வழியைப் பிடிச்சு உள்ள போயிருக்கு. இவங்களுக்கு பயத்துல கத்தவும் வரலயாம்.//

    என்னமா எழுதியிருக்கீங்க இமா..

    ReplyDelete
    Replies
    1. ;) நன்றி ஆசியா. ஆனால்... உண்மையைத்தான் எழுதி இருக்கிறேன். கற்பனையல்ல அது. ;D

      Delete
  10. இமாஆஆஆ....... இப்படி அலறவைச்சுட்டீங்களே:))))
    இம்மா என்னா (எண்டால்) சும்மாவா;) வெளுத்து வாங்கீட்டீங்க!
    த்ரில் ஸ்ரோறின்னுவேறு சொல்லீட்டீங்களா, சரி பொப்கான் எல்லாம் எடுத்துவைச்சுக்கொண்டு வாசிச்சா....... வாசிச்சா....... அடீங்...... ப்லிம் காட்டியிருக்கீங்க:)))))))))

    இருந்தாலும் கதா ஆசிரியை எல்லோ. பின்னீட்டிங்க இமா;)))
    ஆ.. ஒரு யோயனை;) சட்டுன்னு சினிஃப்வீல்டுல சேர்ந்திடுங்கோ. அங்கினை கதை, வசனம் எழுதுற ஆட்கள் வேணுமாம்;)))))))

    உங்க கற்பனை, எழுத்துநடைக்கு(உங்க நடையை நான் எங்க கண்டன்? கிறிஸ்க்குதான் தெரியும்;))))))) ) நான் ரசிகை தெரியுமோ!
    குறும்படம் பார்த்த நிறைவு!!! தொடரட்டும் உங்கள் திறமை. பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. உங்கட எழுத்தும் ரசிக்கிற மாதிரி இருக்கு இளமதி. ஆனால், எழுதுங்கோ எண்டால் எழுத மாட்டியள்.

      Delete
  11. கொஞ்சம் வலைச்சரம் பக்கம் வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போங்கோ

    http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_20.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜலீ. இப்போதான் விடுமுறை முடிந்து வந்திருக்கிறேன். விரைவில் பார்க்கிறேன்.

      Delete
    2. சென்று படித்துக் கருத்தும் பதிவிட்டிருக்கிறேன் ஜலீ. அறிமுகம் செய்து வைத்ததற்கு என் அன்பு நன்றி.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா