Monday 15 March 2010

லஞ்சுக்கு வாங்கோ!

கிறிஸ் ஒரு முழுப் பூசணிக்காய் வாங்கி வரவும், மீண்டும் கை துருதுருத்தது. அறுசுவைக்கு ஒரு குறிப்புக் கொடுக்கலாம் என்னும் நோக்கில் தயாரானேன்.
நீர், நீள நீளமாக முகில்கள், ஒரு nikau palm, cabbage tree, flax, அலைகளைக் கொஞ்சமாவது 'koru' மாதிரி...மூலையில் ஒரு ஆமை என்று வரைந்து கொண்டேன்.
நினைத்தது போல் சுரண்ட வரவில்லை. ;) அதனால் 'ஸ்டெப் பை ஸ்டெப்' எடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு இஷ்டம் போல் சுரண்ட ஆரம்பித்தேன். இருந்தாலும் அதே மரம்... என்ன கொஞ்சம் மாடர்ன் ;) 
ஃபிளாக்ஸ் கூட வேறு பூப் பூத்து விட்டது. ;)
ஒரு மீன் தொட்டி. 
ஒரு ஃபான் டெய்லும்...

...வாத்தும்.
 நாளை எல்லோரையும் வெட்டிக் கூறு போட்டுச் சமைக்க வேண்டியது தான். 
லஞ்சுக்கு வாங்கோ. ;)

26 comments:

  1. நம்பி வரலாமா? கத்திய பாத்தா பயமா இருக்கு?

    ReplyDelete
  2. ஒரே பூசணிக்காயிலயா இத்தனைப் படங்களும்?

    //...வாத்தும்.//

    வாத்துக் கால், குருவி வாய், மயில் தோகை எல்லாம் தெரியுது எனக்கு.

    அசைவம் சாப்பிடலேன்னு சொல்லிகிட்டே, இப்படியா வெட்டி கூறு போடறது எல்லாத்தையும்? :-))

    ReplyDelete
  3. ஆ.கா இமா என்ன பொருத்தம்.இங்கும் பூசனிதான்.ஆனால் உங்களைப்போல் நான் கைவண்ணம் காட்டவில்லை.கைப்பக்குவம்தான் காட்டமுடிந்தது. சூப்பரா இருக்கு இமா.மீனின் சின்ன வாய் கூட தத்ரூபமாய் செதுக்கியிருக்கிறீங்க.வாத்து,மீன்,மயில் ம்ம்ம் நான் எப்படி சாப்பிடவருவது இமா?
    //எல்லோரையும் வெட்டி கூறு போடவேண்டியதுதான்//எதை(யாரை) சொல்றீங்கள் இமா?இதை பார்க்க வேறு யோசனையாய் இருக்கு..

    ReplyDelete
  4. இமா, அழகா இருக்கு. லஞ்சுக்கு நம்பி வரலாமா?.

    //கிறிஸ் ஒரு முழுப் பூசணிக்காய் வாங்கி வரவும்.//
    நான் சோற்றிலே மறைத்து விட்டேன்.

    ReplyDelete
  5. உங்கள் கைவண்ணம் சூப்பர் இமா!! நாளை லஞ்சுக்கு மறக்காமல் வந்துடறேன் இருந்தாலும் ஒரே பயமாதான் இருக்கு....

    ReplyDelete
  6. இமா, ரொம்ப நல்லா இருக்கு கைவண்ணம் , வந்துட்டா போச்சு ஆனால் அம்முலு சொல்கிற மாதிரி கொஞ்சம் யோசனையாக இருக்கு

    ReplyDelete
  7. இமா!!! எப்படி இப்படி... என்னைபோல ஆக்கள வெங்காயம் வெட்ட சொன்னாலே விரலையும் ஒரு பதம் பாத்துடுவோம்... 7 வருஷமா ஒரே கத்தி அதனால்... புதுசா வாங்கிய கத்திகள் இன்குளூடிங் கார்விங் நைஃப் எல்லாம் பத்திரமா பாக்ஸ்ல இருக்கு....

    ReplyDelete
  8. கிட்டத்தட்ட 10 நாள் கழிச்சு வந்து இருக்கீங்க போல அண்ணாமலையான். ;) பயமில்லாம வாங்கோ. கத்தி காய்க்குத் தான். ;) உங்கள்ட்ட கரண்டியைக் கொடுத்துருறேன். ;)

    ~~~~~~~~~~

    ஹுசேன், அது பூசணிக்காய், பாக்கு இல்ல. ;)

    //...வாத்தும்.// இத்தனை இருக்க இது தான் உங்க கண்ணுக்குப் பட்டு இருக்கு. ;D

    //வாத்துக் கால், குருவி வாய், மயில் தோகை// அது மாடர்ன் ஆர்ட்பா. இமா என்கிறதால சொல்றீங்க. இதுவே பிகாசோ பண்ணினால் ஆகா ஓகோ என்பீங்க. ;)

    //வெட்டி கூறு போடறது// ஒன்லி பூசணிக்காயை.

    ~~~~~~~~~~

    அம்முலு, ஒரு கடன் இருக்கு. நான் மறக்கவில்லை. ;)
    யாரையும் கூறு போடவில்லை. பயப்படாமல் வரலாம். ;)

    ~~~~~~~~~~

    வாணி is becoming more & more குழப்படி these days. ;) குட்டீஸ் எப்படி இருப்பாங்க என்று யோசிச்சுப் பார்க்கிறேன். ;)

    ~~~~~~~~~~

    என்ன மேனகா, மற்றவங்க மாதிரியே நீங்களும் சொல்றீங்க! பயமில்லாமல் வாங்கோ. ;) வேணும் எண்டால் நீங்களும் ஒரு கத்தியைத் தூக்கிட்டு வாறது. ;)

    ~~~~~~~~~~

    இமா ரொம்ப சாது சாரு. ;)

    ~~~~~~~~~~

    இலா, நாமளும் வெட்டுவோம்ல. ;) இது வெட்டாம பத்திரமா பார்த்துப் பார்த்து வெட்டினது. முன்னால ஒரு எக்சிபிஷனுக்கு காரட்ல முயல் வெட்டி காரட், 'ராடிஷ்' - ஆ போனது இன்னும் மறக்கல.

    ReplyDelete
  9. இமா, என் குட்டீஸ் இமா போல ரொம்ப சாது. அதானே பாத்தேன் இமாவுக்கு ஏன் இவ்வளவு கொலை வெறி என்று. நீங்கள் சாது என்ற படியால் தான் உங்களுக்கு embroidery card செய்து தந்தேன். கவனம் புடுங்கி மகிக்கு கொடுத்து விடுவேன்.

    ReplyDelete
  10. பூசணியே அழகுதான்,அதனை இன்னும் மெருகேற்றியது excellent.இந்த அழகான பூசணியை சமைக்க மனம் வருமோ?

    ReplyDelete
  11. ஒரே பூசணிக்காயிலயா இத்தனைப் படங்களும்?

    சூப்பரா கலக்குரிங்க அம்மா. அதுவும் பூசணிக்காயில் உங்கள் கை வண்ணம் சூப்பார்.

    ReplyDelete
  12. இந்த வசனத்தை எங்கயோஓ... கேட்ட மாதிரி இருக்கே!!! ;)

    ReplyDelete
  13. Geno likes the trees!! Careful Carving auntie..keep it மேலே!!!
    உடனே வீட்டு ப்ளோர் மேலே,டேபிள் மேலே, பவுல் மேலே, தட்டு மேலே வச்சிருக்கன் எண்டு சொல்லப்படாது..கர்ர்ர்ர்ர்ர்!!

    ReplyDelete
  14. Simply super imma... ungalai adichchukka aalee illai!!!

    ReplyDelete
  15. முதல் முதலாய்... ஒரு மருதாணி போட்ட கை வந்து பின்னூட்டம் கொடுத்து இருக்கு. ;) நன்றி வனி.

    ம்... இமா நல்லா குட்டிக் குட்டிப் பாடமாக்கிக்கோ,
    V A N I வனி. V A N Y வாணி.
    V A N I வனி. V A N Y வாணி.
    V A N I வனி. V A N Y வாணி.
    V A N I வா...

    ReplyDelete
  16. hahahah.... kutta kai paththalannaa sollungo... aal anupparaen arusuvai'la irundhu. (VIPs). ;) mittaay'ku kadhavai thatti mayakkam poda vaiththa kovaththil iruppaanga... kuttina ini vani, vany kuzhappamee varaadhaakkum. :D

    ReplyDelete
  17. //Geno likes the trees!!// thought u were a puppy!!! illaiyaa!! ;)

    //வீட்டு ப்ளோர் மேலே, டேபிள் மேலே,// பிளேஸ் மாட் மேலே, //பவுல் மேலே, தட்டு மேலே வச்சிருக்கன்// எண்டு தான் சொல்லுவேன். அதுதான் உண்மை. ;)

    ReplyDelete
  18. 'அரியஸ்' வச்சதெல்லாம் சேர்த்து ஒண்ணா வந்து படிக்கிறீங்களோ வனி! ;)

    ம்.. பெரிய கையை விட்டுக் குட்ட வைக்கப் பாக்குறீங்க. ;D

    ReplyDelete
  19. hi IMMA Yesterday I send comments. Still now I did't see my comments? what happened?

    ReplyDelete
  20. hi Imma, Superup your pumking carving. Really u are the 8.

    ReplyDelete
  21. விஜி, வலைப்பூ ஆரம்பித்த காலம் முதல் இதுவரை நான் எந்த காமன்ட்டும் டிலீட் பண்ணவில்லை.

    உங்களுக்கு 'நெட்' பிரச்சினை இருக்கிறதா!! நீங்கள் சப்மிட் பண்ணிய போது காற்றில் காணாது போய் இருக்கலாம். ;)

    ReplyDelete
  22. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜி.

    ReplyDelete
  23. சோனியா16 April 2010 at 23:59

    ஹாய் இமா அம்மா எப்படி இருகிங்க. உங்க ப்ளாக் ரொம்ப அழகா இருக்கு. பார்த்து கிட்டே இருக்கலாம் போல இருக்கு. எனக்கு ஒன்னு தெரியனும்மா, உங்களுக்கு ஓவியம் வரைய தெரியும்மா. எல்லாம் சூப்பரா இருக்கு பார்க்க ரொம்ப ரொம்ப அழகா இருக்கு. தொடர்ந்து இது போல நிறைய போடுங்க எங்களுக்காக.

    ReplyDelete
  24. வாங்க சோனியா. ;) நான் நலம். நீங்க நலம்தானே? பார்த்து நாளாச்சு. ;)

    ஓவியம் என்று தெரியாது. கற்கவில்லை. சும்மா எப்போதாவது வரைவேன். ;) வலைப்பூவுக்கென்று எதுவும் செய்வதில்லை. வீட்டில் ஏதாவது செய்யும்போது படம் எடுக்க முடிவதை நிச்சயம் இணைக்கிறேன். வருகைக்கு நன்றி. ;) நேரம் கிடைக்கும் போது வாங்க.

    ReplyDelete
  25. all your crafts are amazing!!im lucky to follow you..otherwise i would have missed all your wonderful creations..though i dont know tamil, your presentation helps me lots..thank you..

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா