Saturday 20 March 2010

எனக்குப் பிடித்த பத்துப் பெண்கள்

இமாவுக்கு சீரியஸாக எதுவும் எழுத வராது, என்பது தெரிந்தும் என்னையும் மதித்து தொடர் பதிவுக்கு அன்பாக அழைத்த விஜிக்கு முதலில் (சீரியஸாக) என் நன்றிகள். ;)

நிபந்தனைகளை ஒரு முறை படித்துக் கொள்கிறேன். 
1. உங்களின் சொந்தக்காரர்களாக இருக்க கூடாது., ம்...
2. வரிசை முக்கியம் இல்லை., சரீ...
3. ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும், - இது நிபந்தனை இல்லை, ஓகே.(அப்போ, பல துறைகளில் உள்ள ஓர் பெண்மணி!)
4. இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் உள்ள நபர்களாக இருக்கவேண்டும்... - யோசிக்க வேணும். பார்க்கலாம். ;)

ம்.. உறவினர் தானே வேணாம். ஓகே! ரெடி, ஸ்டார்ட்... 'டுமீல்'
~~~~~~~~~~~
என்ன பண்றது என்றே தெரியலையே!! திடீர்னு யாரையாவது மனசுல நினச்சு தட்டி வச்சுட்டு பிறகு வந்து பார்த்தா... வேற யாராச்சும் முன்னாடியே போட்டிருக்காங்கபா. ;(
திரும்பத் திரும்பக் குட்டிச் சுவர்லையே முட்டி முட்டி நெற்றி வீங்கிப் போச்சு. ;(

எனக்குப் பிடிச்ச ஒரு ஆள் இருக்காங்க... இன்னும் அவங்களைப் பற்றி யாருமே எழுதல. நாம எழுதி அசத்திரலாம். அந்த அக்காவை எனக்கு பிறந்த நாள்ல இருந்தே தெரியும். நிபந்தனைக்குப் பொருந்தி வராங்க. போதாததற்கு ஒரே சமயத்தில் 'வெவ்வேறு துறையில் உள்ள' நபர் வேற. அவங்க ஒரு ஆளைப் பற்றி எழுதினாலே பத்துப் பேரைப் பற்றி எழுதினதுக்குச் சமானம்.
சரி, எழுதிரலாம்.

பேர்.. அது இருக்கு, கடைசில சொல்றேன். இப்போ கேளுங்க,
துறை 1 ) கல்வி - அனுபவம், மூணு வயசில இருந்து இன்றுவரை
            2 ) சமையல் - 27, 28 வருஷம் இருக்கும் 
            3 ) கைவினை - பிறந்ததுல இருந்தே கையோடதான் இருக்காங்க
            4 ) தோட்டவியல் - அது இருக்கும் ஒரு 28 வருஷம்  
            5 ) எழுத்து! - மூணு வயசில இருந்தே எழுதுறாங்க.
            6 ) தையல் - ஸ்கூல்ல இருக்கிற வரைக்கும் அதுக்கும் இவங்களுக்கும் எட்டாத தூரம். (ஒரு வியாழக்கிழமை, மதியம் ஸ்கூலுக்குக் கிளம்புறப்ப பார்த்துக் கடுமையான தலைவலி வரவும் இவங்க அம்மா அன்று தையல் டீச்சர்  ஸ்கூலுக்குப் போகல என்கிற சரியான தகவலைச் சொல்லி இவங்களைக் கிளம்பிப் போக வச்சாங்க.) பிறகு ஒரு மாதிரி தன் வீட்டுத் தையல் எல்லாம் தானே பண்ற அளவுக்குத் தேறிட்டாங்க.
            7 ) பெய்ண்டிங் - இது என்ன பெரிய விஷயம். நானே பண்றேன்.  முதல்ல 'நெய்ல் பாலிஷ் ரிமூவரைப்' பூசி க்ளீன் பண்ணிட்டு 'பேஸ் கோர்ட்' கொடுக்கணும். பிறகு கலரைப் பூசிக் காய விட்டு கடைசில 'டாப் கோர்ட்' பூசிட்டா சரி.
            8 ) புகைப்படம் - அவங்க காமரால நிறைய இடத்தில 'கோர்ட்டிங்' காணாமல் போய் இருக்கு. (அந்த அளவு... நகம் வளர்த்து வச்சிருப்பாங்க) 
            9 ) விலங்கியல் - இன்னும் எந்தப் பிராணியும் கம்ப்ளைன்ட் கொடுக்கல, பிடிக்காட்டியும் போஸ் கொடுத்துட்டிருக்கு. அதனால் யாரும் வந்து பிடிச்சுட்டுப் போகல. கஷ்டப்பட்டு யோசிச்சு ஒரு மாதிரி ஒன்பது வந்தாச்சு. 
பத்தாவது துறை... அட! எப்பிடி மறந்தேன்!! ;) இவங்க முன்னால துறைமுக வீதில இருந்தாங்க, ஒரு... முப்பத்திரண்டு வருஷம் இருக்கும்.

(போட்டோவும் போடணுமா! ம்.. சரி.. பொறுங்க இருக்கானு பாக்குறேன். கிடைச்சாச்சு.)

இவங்கதான் எனக்குப் பிடித்த முதல் பெண்.. பெயர் இமா ;)

பின்ன! எல்லாருக்கும் முதல்ல தன்னைத் தானே பிடிக்கணும் இல்ல! அப்பதான் அவங்களுக்கு மத்தவங்களைப் பிடிக்கும். மத்தவங்களுக்கு அவங்களைப் பிடிக்கும். தன்னை ரசிக்கத் தெரிஞ்சவங்க தான் மத்தவங்களை ரசிப்பாங்க.

இது சாட்சாத் இமாவேதான், நம்பணும் எல்லாரும். (இமா பக்கத்துல எமா, 'க்வீன் நீ' என்று சொல்லலாம் மாதிரி இருந்தாங்க. ;) அவங்களைக் கேட்காம படம் போட வேணாம் என்று விட்டுட்டேன். இவங்களுக்கும் இந்த இடுகைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா! அவரும் எனக்குப் பிடித்த பெண் தான் .)

இமாவிடம் எனக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லணும்ல!! இமா எப்பவும் 'இமா'வாவே இருப்பாங்க. ரொம்..ப அழகா, க்யூட்டா இருப்பாங்க. ;)) (படம் பார்த்தீங்களா!) அமைதியா 'பேசுவாங்க' (ம்.. இந்த வரியை இலங்கைத் தமிழில் வாசிக்க வேணும்.) எப்பவும் சிரிச்சுட்டே இருப்பாங்க. ('லூசு' எல்லாம் கிடையாது, வள்ளுவர் சொன்னதை தப்பாம ஃபாலோ பண்ற ஒரே ஆள், தமிழ் கூறு நல் உலகத்துல இமா மட்டும்தான்.) இவங்கள்ட எனக்கு முக்கியமா பிடிச்ச விஷயம் இவங்களை நிறையப் பேருக்குப் பிடிக்கும் என்பது. மற்றது... ('செல்ஃபூ' என்று பலபேர் கத்துறது காதில விழுது. இதோ, இதோ கிளம்பறேன்.. கிளம்பிட்டே இருக்கிறேன்.) ;)

சிரித்துக் கொண்டே எழுதினாலும் சீரியசாகத் தான் எழுதி இருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் நான் சரிதான் என்றே தோன்றுகிறது. எனக்கு இமாவைப் பிடிக்கும். மிக மிகப் பிடிக்கும். ;) மற்றவர்களுக்கு இமாவைப் பிடிக்கும் என்பதால் இமாவுக்கும் இமாவைப் பிடிக்கும்.

நன்றி விஜி. ;)
தொல்லை என்றெண்ணாமல் தொடர்ந்து படித்து முடித்த அனைவருக்கும் என் நன்றிகள். ;)

எனக்குப் பிடித்த பெண்கள் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லோர் பெயரையும் சுருக்கி ஒரே இடுகையில் போட விரும்பவில்லை. அதனால்....

பகுதி 2 விரைவில்...

21 comments:

  1. உங்களுக்கு பிடித்த பத்து பெண்களில் முதல் பெண்ணை எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

    சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  2. ///எல்லாருக்கும் முதல்ல தன்னைத் தானே பிடிக்கணும் இல்ல! அப்பதான் அவங்களுக்கு மத்தவங்களைப் பிடிக்கும். மத்தவங்களுக்கு அவங்களைப் பிடிக்கும். தன்னை ரசிக்கத் தெரிஞ்சவங்க தான் மத்தவங்களை ரசிப்பாங்க.///



    உண்மை உண்மை 100% உண்மை. அருமை அம்மா.


    ஓ அந்த படத்தில்ல் இருக்கும் சின்ன பொண்ணு இமாவா இல்லை இமா அம்மாவா (நான் கூப்பிடுவது ).

    ReplyDelete
  3. நல்லா எழுதி இருக்கிங்க இமா , ஆனால் வேற முகம் தெரிகிற மாதிரி போட்டோ போட்டு இருக்கலாம் இல்ல

    ReplyDelete
  4. இமா, நல்லா எழுதி இருக்கின்றீர்கள்.
    //அமைதியா 'பேசுவாங்க' (ம்.. இந்த வரியை இலங்கைத் தமிழில் வாசிக்க வேணும்.) எப்பவும் சிரிச்சுட்டே இருப்பாங்க. ('லூசு')//
    கிறிஸ் அண்ணாச்சி பாவம். எப்படி தான் சமாளிக்கின்றாரோ?

    ReplyDelete
  5. வாவ் இமா சுப்பரோ சூப்பர் செலக்‌ஷன். இதை விட வேற என்ன வேண்டும் இந்த விஜிக்கு. ம். எங்கோயோ போயிட்டிங்க. எனக்கும் குட்டி பென்னான சூட்டி இமாவை ரொம்ப பிடிக்கும். இமா எல்லாம் ஒ.கே. இந்த போட்டோ போட்டிங்களே அதுலேயுமா உங்களுடைய்ய கலை வண்ணத்தை காட்டிங்களே. ம்.. நல்லாவே இருக்கிங்க. காணான் எங்க ஊர் பென்னினை போலே பங்கியாயிட்டு உண்டு.

    ReplyDelete
  6. ஹா... ஹா.. ஹா.. இமா ரசிச்சுப்படிச்சேன். இருந்தாலும் தற்பெருமை ரொம்ப ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒவரப்பூஊஊ... பாவம் கிரிஷ் அங்கிள்:).

    என்ன இமா பின்னால பூச்சியே ஊருது சுவரில? கவனம் சட்டையில் விழுந்திடப்போகுது...

    பி.கு:
    இருப்பினும் தொடர்ப்பகுதியின் நிபந்தனையை உடைத்த இமாவை, உடனடியாக பிரித்தானிய நீதிமன்றத்துக்கு பிளேனில வரும்படி அதிரா உத்தரவிடுகிறேன்.... எதுக்கோ? சங்கிலி போடத்தான்... ஆங் நான் இப்பவும் கட்டிலுக்குக் கீழேதான்.. சேவ் ஆக இருக்கிறேன்..(இலங்கைத் தமிழில் படியுங்க மக்கள்ஸ்ஸ்ஸ், நான் கொமெண்ட்டைச் சொன்னேன்).

    ReplyDelete
  7. இமா.. சிரிக்கற மாதிரி தான் இருக்கு.. சீரியசா இல்லவே இல்லயே :))

    எத்தனையோ செல்ஃபூக்களப் பாத்திருக்கேன்.. இந்த செல்ஃபூ பிடிச்சிருக்கு :)

    ReplyDelete
  8. அருமை அருமை இமா..நானும் யோசித்து யோசித்து இருதியில் உங்கள் முறையையே பதிவு எழுதியாகிவிட்டது.. :-)

    ReplyDelete
  9. அழகா இருக்கீங்க இமா; ஆனா, ஏன் சின்ன வயசில (பள்ளியில் படிக்கும்போது) எடுத்த படத்தைப் போட்டீங்க? இப்ப சமீபமா எடுத்ததப் போடலாம்தானே?

    ReplyDelete
  10. இமா... படித்தேன்... பிடித்தது.... பின்னூட்டம் தர வந்துட்டேன். :) உண்மை தான்... எல்லாருக்கும் அவங்களை பிடிக்கணும்... முதலில் நீ உன்னை நேசி உலகம் உன்னை நேசிக்கும்'னு நான் நம்பறேன். உண்மையில் எனக்கு என்னை ரொம்ப இஷ்டம். எனக்கு நான் பண்ற தப்பும் தெரியும், நல்லதும் தெரியும்.... அதனால் தானோ என்னவோ எனக்கு என்னை பிடிக்கும்.

    எல்லாத்துக்கும் மேல உங்க படத்தை இன்று தான் பார்க்கிறேன்... அழகான அன்பான முகம். (அம்மா, ஆன்ட்டி.... ம்ஹூம்... எதுவும் ஒத்துவரல. இனி தங்கை'னு தான் கூப்பிடலாம்.).

    - வாணி இல்லை வனி ;)

    ReplyDelete
  11. இமாவைப் பிடிக்கும் என்று சொன்ன ஜலீலாக்கு ஒரு @}->-

    ~~~~~~~~~~

    நன்றி பிரபா. ;) அது.... இப்ப இங்க எங்க வீட்டு 'கண்ணாடில தெரியுற பொண்ணு. ;)

    ~~~~~~~~~~

    நன்றி அண்ணாமலையான். நீங்களும் என்னைக் கிண்டல் பண்ணல இல்ல! ;)

    ~~~~~~~~~~

    நன்றி சாரு. //வேற முகம்// போட்டால் அது நான் இல்லையே! ;) இருப்பினும் நெக்ஸ்ட் டைம் கட்டாயம் 'சாரு' முகத்தை இங்க போட்டுருறேன். ;)

    ~~~~~~~~~~

    வாணி, எல்லாம் //கிறிஸ் அண்ணாச்சி// கொடுக்கிற இடம்தான். வேற என்ன சொல்றது! //பாவம்// பார்க்காதிங்க. ;) உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன், இமா லக்கி. ;)

    ~~~~~~~~~~

    விஜி,
    //எங்கோயோ போயிட்டிங்க.// ம்... இங்க வந்து இருக்கிறேன். ;) எனக்கும் உங்களைப் பிடிக்கும். தமிழரல்லாத தமிழரது தமிழ் பிடிக்கும்.
    //போட்டோ// மகன் எடுத்தது.
    //காணான் எங்க ஊர் பென்னினை போலே பங்கியாயிட்டு உண்டு.// ம்... சின்னக்குயிலே!.... உங்க க்ளாஸ்மேட் சொல்றதை கொஞ்சம் வந்து ட்ரான்ஸ்லேட் பண்ணி உதவுங்க, புரியல. ;)

    ~~~~~~~~~~

    அதீஸ்,
    //கிரிஷ் அங்கிள்// பார்க்க வாணிக்குச் சொன்ன பதில். :) கடைசில 'h'!? shhhh!!!! ;)
    //பூச்சியே ஊருது சுவரில?// இல்ல. அது திருஷ்டிக்கு விட்டிருக்கிறன். (நம்பிராதைங்கோ, இமா நம்புறது இல்லை.) crop பண்ணேக்க எடுத்திருக்கலாம். ஆனாலும் அதிராட நினைவு வந்துது. ;) அவாக்கும் ஒரு வேலை வைக்க வேணாமோ எண்டு விட்டாச்சுது.
    //தொடர்ப்பகுதியின் நிபந்தனையை உடைத்த இமாவை// யார் என்ன சொல்றது எண்டு இல்லையோ!! என்ன கொடுமையப்பா இது! இந்த நீதிபதியைப் பிடிச்சு சங்கிலியில கட்டுங்கோ!

    ~~~~~~~~~~

    எல்ஸ், யன்னலால எட்டிப் பாருங்கோ, வெளிய ஆம்பியூலன்ஸ் நிக்குது.
    //செல்ஃபூ// எனக்கு இந்தப் பாஷை எல்லாம் முன்னால விளங்காது. எப்பவோ 'சீரியசான' ஆக்கள் எனக்குச் சொல்லவும் இன்னொரு தோழியிடம் கேட்டு அறிஞ்சு கொண்டன். ;)

    ~~~~~~~~~~

    கலக்கிட்டீங்க, ஹர்ஷினி அம்மா. ;) சரியான ஆளைத்தான் தெரிஞ்சு இருக்கிறீங்க.

    ~~~~~~~~~~

    ஹுசேன், //ஏன் சின்ன வயசில (பள்ளியில் படிக்கும்போது) எடுத்த படத்தைப் போட்டீங்க?// ;)

    ~~~~~~~~~~

    VANI - வனி அக்கா, //எனக்கு நான் பண்ற தப்பும் தெரியும்// ;) //எல்லாத்துக்கும் மேல// இல்லையே! நடுவுல தானே போட்டிருக்கேன்!! ;)

    ReplyDelete
  12. பங்கி என்றால் அழகான

    ReplyDelete
  13. ;)என்னையே எனக்கு பிடிச்சதாலதான்,உங்களை எனக்கு பிடிச்சது.உங்களை எனக்கு பிடிச்சதாலதான்,என்னையே என‌க்கு தெரிஞ்சுது.:)

    ReplyDelete
  14. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன், இமா லக்கி. ;)/// கடவுளே தற்பெருமை தாங்கமுடியேல்லையேஏஏஏஏஏஏ... இனியும் என்னால முடியாது... கால் வச்ச வனி... பிளீஸ்ஸ் வழிவிடுங்கோ... இஞ்ச விடுங்கோ என்ர கையை... ஏன் என்னைத் தடுக்கிறீங்கள்... தேம்ஸ் குளிருமெண்டோ? பறவாயில்லை... நான் நேரே போகிறேன்... தேம்ஸ்க்குத்தான்.... மக்கள்ஸ்ஸ் நாளைக்கு மறக்காமல் பிபிசி நியூஸ் பாருங்கோ... முகப்பில அதிரான்ர படத்தோட... கடவுளே எனனால முடியேல்லை... இமா இன்று மட்டும் ஒரு டிஸ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ். இனிக் கேட்கமாட்டேனெல்லோ:).

    ஊ.கு:அப்போ sh இல்லையோ?(இந்த நேரத்திலயும் விடுப்ஸ் குறையேல்லை)

    ReplyDelete
  15. விஜி, உங்க பதிலும் பங்கியாயிட்டு உண்டு. tkz. ;)
    (ஏற்கனவே சிலருக்கு நான் இலங்கையா இந்தியாவா எண்டு சந்தேகம் வந்து இருக்கு. இனி... ;) )

    ~~~~~~~~~~

    அம்முலு உங்களுக்கு ஒண்டும் ஆகேல்லையே! நல்லாத் தானே இருக்கிறீங்கள்?

    ~~~~~~~~~~

    //பிபிசி நியூஸ்// ஒண்டுமே சொல்ல இல்ல அதீஸ். ;)

    ReplyDelete
  16. அப்பப்பா... இமா... எப்போ இருந்து நீங்க அதிரா மாதிரி பேச ஆரம்பிச்சீங்க???!!! :(( (நடுவில் போட்டதா சொல்லிருக்கீங்களே அதை சொன்னேன்...)

    அதிரா'கு இப்போ தான் வனிதா கண்ணுக்கு தெரிந்திருக்கா.... இமா உங்க ப்ளாக் புண்ணியம் கட்டிக்கொண்டது.

    ReplyDelete
  17. hello!! padam, posting naduvula thaane irukku! ;)

    ReplyDelete
  18. //ஆனால் வேற முகம் தெரிகிற மாதிரி போட்டோ போட்டு இருக்கலாம் இல்ல// ஆன்ரீ..'பலமுக மன்னன் ஜோ' மாதிரி உங்கள்க்கும் பலமுகங்கள் இருக்கா?? இவ்ளோ நாளா ஜீனோக்கு இந்த ரகசியம் தெரியாதே!! கர்ர்ர்!

    //ஆனா, ஏன் சின்ன வயசில (பள்ளியில் படிக்கும்போது) எடுத்த படத்தைப் போட்டீங்க? இப்ப சமீபமா எடுத்ததப் போடலாம்தானே?// ஹா..ஹா..ஹூசைனம்மா,இம்பூட்டு அப்பாவியா கீரீங்களே? இது ஆன்ட்டீ லேட்டஸ்ட்டா எடுத்த படமேதான்;)... நம்புங்கோ,ப்ளீ..ஈ..ஈ..ஸ்!

    கிண்டல் அபார்ட், நல்ல கருத்தாய் சொல்லிருக்கீங்கோ..மீதி பெண்கள்ல புஜ்ஜி வில் ஆல்ஸோ கம்? ;௦) ;௦)

    ReplyDelete
  19. //'பலமுக மன்னன் ஜோ'// ?? ;)

    இது ஆன்ட்டீ லேட்டஸ்ட்டா எடுத்த படமேதான்;)... நம்புங்கோ,ப்ளீ..ஈ..ஈ..ஸ்! (ஆனால் வேற யாரையோ எடுத்திருக்கிறா.)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா