Friday 19 March 2010

say cheese ;D

 
ஸ்கூல்ல ஒரு குழப்படி ஃப்ரென்ட் இருக்கிறா. எப்பவும் கமராவோட திரிவா. ;) ஸ்கூல் மாகசினுக்கு எண்டு நடக்கிற எல்லாத்தையும் 'க்ளிக்'. யாரையாவது கண்டால் 'say undies' என்று சொல்லுவா, அப்பதான் படத்தில சிரிச்ச மாதிரி தெரியுமாம். 
 
சரி... இப்ப வந்து இருக்கிற எல்லாரும் வரிசையா நில்லுங்கோ. 
 
உயரமான ஆக்கள் எல்லாரும் பின்னால போங்கோ. 
 
குட்டீஸ் எல்லாரும் முன் வரிசைல வந்து பந்தியில இருக்கிற மாதிரி இருங்கோ. 
ம்.. வலக்கை, வலது முழங்கால்ல தாளம் போடுற ஸ்டைல்ல இருக்க வேணும்.  
ரெடி!!!! "ஸா.. ரீ.."
          ஐயோ!!! பாட வேணா....ம். சாரி செட் பண்ணுற ஆக்கள் இப்ப செட் பண்ணிக் கொள்ளுங்கோ. ;) ரெடி சொன்ன பிறகு பிறகு ஒருவரும் ஆடக் கூடாது.  
 
அது யார் அங்க... கொம்பு பிடிக்கிறது? சொல்லுக் கேட்க மாட்டீங்களோ! ஸ்கூல் பிள்ளையள விட மோசமா இருக்கிறீங்கள். ஒழுங்கா நில்லுங்கோ. இப்பிடி ஆடிக் கொண்டு இருந்தால்... கர்ர்ர்.... நான் எத்தின தரம்தான் தட்டுறது!!!!!!!!
ம். கடைசித் தரமா எடுக்கிறன். இப்ப.... கண்ண மூடினால் நான் பொறுப்பு இல்ல. 
ஓகே, ரெடி. 
   வண்...
          டூ... 
யார் அது ஓட ரெடியாகிறது? வண்டுக்குப் பயமோ உங்களுக்கு!!
அங்க போய் எதுக்கு நிக்கிறீங்கள்? அது பப்பிக்கு ரிசேவ் பண்ணி வச்சிருக்கிற இடம். அது கடைசியா மூச்சு வாங்க ஓடி வந்து நிக்கும். 
 சரி.... சரி.. இப்ப உண்மையாவே கடைசித் தரம்... 
one..  
      two....
              click 
தாங்க் யூ ;)
மெதுவா, கழுவிக் காய வச்சுப் பப்ளிஷ் பண்ணுறன். அப்ப வந்து யாருக்கு எத்தின கொப்பி வேணும் எண்டு சொல்லுங்கோ. ;)

11 comments:

  1. Auntee..Geno wants only one copy..its a group photo right? thats y!! ;)

    அப்டியே,அப்டியே சைட்ல திரும்பி, ஜீனோவ'மட்டும்'ஒரு அயகான போர்ட்ரெய்ட் எடுத்து கொடுங்கோவன்..புஜ்ஜி பர்ஸ்ல வச்சிக்கரா மாதிரி! :)
    இந்த போட்டோ வேணா ஒரு நூறு கோப்பி அனுப்பிடுங்கோ..ஏன்னா ஜீனோ தன் நண்பிகளுக்கு (ஷ்..இதெல்லாம் புஜ்ஜிகிட்ட நீங்கோ சொல்லக்குடாது..கர்ர்..ர்ர்ர்..ர்ர்) டிஸ்ட்ரிப்யூட் பண்ணோ யூஸ்புல்லாஇருக்கும்.ஹி,ஹி!:D :D

    ReplyDelete
  2. ஜீனோ ச்சீஸ் சொல்ல மறந்துடுச்சி..ஒன் மோர் டேக் ப்ளீஸ்.

    CHEEEEEEEEEEEESE!!!!!!

    ReplyDelete
  3. Me always smiling.. make a joke while taking picture pls....

    ReplyDelete
  4. இமா, அதெல்லாம் நல்லாவே போஸ் குடுப்பம். உண்மையிலேயே படம் எடுக்கிறீங்களோ? இல்லாவிட்டால் சும்மா ப்ளாஷ் யை தட்டுறீங்களோ??? என்று ஒரு சந்தேகம். நாங்களெல்லாம் ரொம்பவே அலர்ட் ஆன ஆக்கள் தெரியுமோ??

    ReplyDelete
  5. ;) நான் என்ன கோப்பிக் கடையோ வச்சிருக்கிறன்!! //எத்தின 'கொப்பி' வேணும் எண்டு சொல்லுங்கோ.// எண்டால் இத்தின 'கோப்பி' வேணும் எண்டு சொல்லுது இந்தப் பப்பி!!

    டோராம்மா... இங்க வந்து இந்தப் பெடியன என்ன எண்டு கேளுங்கோ, கனக்கக் கோப்பி கேக்குது. ;)

    ReplyDelete
  6. ஆன்ரீ.. நில்லுங்கோ.. நானும் நானும்.. ஹிஹ்ஹீஹீ.. என்னால இப்படித்தான் சிரிக்க முடியும்.. பரவாயில்லேயா..

    ReplyDelete
  7. இமா,
    //அது யார் அங்க... கொம்பு பிடிக்கிறது? சொல்லுக் கேட்க மாட்டீங்களோ!//
    அது நான் தான் அதிராக்கு கொம்பு பிடிக்கிறேன். அப்போது தான் இன்னும் அழகாக தெரிவார் என்று யாரோ சொன்னார்கள்.

    ReplyDelete
  8. CHEESE
    சொல்லிட்டேன் சரியாக சொல்லி இருக்கேனா ???
    அறுசுவை அனானி :)

    ReplyDelete
  9. பரவாயில்ல எல்ஸ். எப்பிடியோ சிரிக்கிறீங்களே, அது போதும்.

    ~~~~~~~~~~

    //அதிராக்கு கொம்பு// ;)

    ~~~~~~~~~~

    அனா, சுப்பர் சிரிப்பூ :)

    ReplyDelete
  10. இருங்கோ இருங்கோ நானும் வந்திட்டேன். என்னையும் சேர்த்து ஃபோட்டோ புடியுங்கோ.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா