Monday 8 March 2010

pra(e)ying mantis

சிறிய வயதில் இருந்தே எனக்குக் கும்பிடுபூச்சி மேல் ஒருவிதமான அனுதாபம். கண்டதும் பெரிதாக ஒரு கும்பிடு போடுவார், பார்க்கப் பாவமாக இருக்கும். 
வண்ணத்துப்பூச்சி வளர்க்க ஆரம்பித்தில் இருந்து அந்த உணர்வு வெறுப்பாக மாறி வருகிறது. 
நேற்று நடந்தது என்னவெனில், ஒரு குட்டிப் பெண் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கு வண்ணத்துப்பூச்சி காட்டவென்று தோட்டத்துக்கு அழைத்துச் சென்றேன். கத்தரிச்செடியைக் காட்டச் சொன்னார். என் கையில் ஊர்ந்த எறும்பைத் தட்டியவாறு நடந்தேன். மீண்டும் ஊரும் உணர்வு, மீண்டும் தட்டினேன். அது எறும்பல்ல, ஒரு கும்பிடுபூச்சி. தட்டியதால் கோபித்துக் கொண்டு அழுத்தி இரண்டு நறுக்கு நறுக்கி விட்டார். ;( இன்னமும் கையில் அரிப்பு இருக்கிறது.
இரண்டு செக்கன்கள் கழித்துப் பார்க்கையில் ஒரு தேனீயைப் பிடித்து வைத்திருந்தார். புகைப்படக்கருவியோடு வருகையில் தேனீ மயங்கிவிட்டிருந்தது.
 
"சாப்பிடுற நேரம் பார்த்துக் கொண்டு இருக்காதிங்க. வயிறு வலிக்கும்."

"போக மாட்டீங்களா! அப்ப சரி பார்த்துக் கொண்டே இருங்க, நான் சாப்பிடுறேன்."

9 comments:

  1. வழக்கம் போல நல்ல பதிவு புகைபடங்கள் அருமை

    ReplyDelete
  2. அய்!!! பெருமாள் பூச்சி :)) இப்படித்தாம் எங்க ஊர்ல சொல்லுவோம் :))
    தேனீ ஸ்வாஹா!!!

    ReplyDelete
  3. இமா, எனக்கு இந்த பூச்சிகள் என்றாலே அலர்ஜி. இந்த கும்புடுபூச்சி இந்த (வில்லத்தனமான) வேலைகள் எல்லாம் செய்யும் என்று எனக்கு தெரியாது. ஏதோ இலை தழைகளை சாப்பிடும் என்றல்லவா நினைத்தேன்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி சாரு, இலா & வாணி. ம்.. நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன் வாணி. ஒரு நாள் தரை எல்லாம் கரும்பச்சைத் திரவக் குளம். என்னடா என்று செடியில் பார்த்தால் ஒன்று விடாமல் எல்லாப் புழுக்களையும் மென்று தீர்த்திருந்தார். ;(

    ReplyDelete
  5. எங்க ஊர்ல இத "தயிர் சிலுப்பான்"பூச்சின்னு சொல்லுவோம் இமா.. நானும் இதை வெஜிடேரியன் பூச்சினுதான் நினைச்சேன்.நான் வெஜ் பூச்சியா இது?

    ReplyDelete
  6. செடிகொடிகள் பிடிக்கும்னாலும், இந்த பூச்சி, புழுக்களையெல்லாம் கண்டால் கொஞ்சம் பயம்!! சின்னப் பொண்ணில்லியா நானு அதான்!!

    ReplyDelete
  7. ஆமாம் மகி. அதன் பச்சை நிறம் செடியில் மறைவாக இருப்பதற்காக. மற்றப்படி என்னவெல்லாமோ சுவைப்பார், இன்க்ளூடிங் இமா'ஸ் கை. ;)

    ~~~~~~~~~~

    பயம் இருக்கலாம், அதுக்காக.. இது ஓவர் ஹுசேன். ;)

    ReplyDelete
  8. இம்ஸ்.. அந்தக் தேனியைக் காப்பாற்றி.. பதிலுக்கு தன் கையை மிஸ்டர் கும்பிடுவுக்குக் கொடுத்து அதனோட பசியையும் ஆற்றி.. கடையேழு வள்ளல்களுக்கு முன்னாடி உங்க பேர் வரச் செய்திருப்பீங்கன்னு நினைச்சா.. மறுபடியும் ஏமாற்றம்.. :))

    ReplyDelete
  9. இந்தாங்கோ டிஷ்யூ. கண்ணை துடச்சுக்கங்க சந்தூஸ். ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா