Wednesday 17 March 2010

நான் வரைந்த ஓவியமே! - 3இன்றுதான் அருகில் சென்று பார்க்கக் கிடைத்தது. இது ரூத் வரைந்த ஓவியம்தான். வலது பக்கக் கீழ் மூலையில் அவர் ஒப்பம் இருக்கிறது.


இந்த வாரம் வகுப்பில் நுழைந்த போது.. எங்கள் மூவரைத் தவிர மீதி அனைவரும் எங்கேயோ! போய் இருந்தார்கள். ;(


எதனால் எங்கள் கடந்த வகுப்புத் தள்ளிப் போயிற்று என்று சொல்ல வேண்டும்.
நான் வேலை பார்ப்பது ஒரு தனியார், கத்தோலிக்க பாடசாலையில். ஓவியவகுப்பு இடம்பெறவிருந்த அன்று 'ரைஸ் மீல்', அதாவது மதிய போசனத்தை வெறும் சாதம் (உப்பும் சேர்ப்பது கிடையாது) மட்டும் சாப்பிட்டு முடித்துக் கொண்டு அன்றைய உணவிற்கான பணத்தை 'கரிதாஸ்' ஸ்தாபனத்துக்கு நன்கொடையாக வழங்கி விடுவோம்.
முன்பாகவே இது பற்றி மாணவர்களிடம் பேசி விடுவோம். சில மாணவர்கள் தாங்களாகவே சோறு சமைத்து வர ஒத்துக் கொள்வார்கள். அரிசியை பாடசாலை கொடுத்து விடும். ஆளுக்கு இரண்டு கப் அளவுதான், அதிகம் இல்லை. எல்லோரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு.

நான்காவது பாட வேளை, சாதம் முழுவதையும் மைக்ரோவேவில் சுட வைத்து எடுத்து வைத்தது நான். என்னை நம்பி இந்த வேலையைக் கொடுத்து இருந்தார்கள். முக்கியமில்லாத வேலைகளை என் தலையில் கட்டி விடுவார்கள். ;) இந்தத் தடவை சொன்ன காரணம் - மற்றவர்கள் யாரும் வீட்டில் சோறு சமைப்பது இல்லையாம். சென்ற வருடம் வரை இதற்கெல்லாம் பொறுப்பாக இருந்த ஆசிரியை இவ்வருடம் மாற்றலாகிச் சென்று விட்டார். வழமையாக சாதம் சுட வைக்கும் ரூத் ஓவிய வகுப்பு எடுக்கச் சென்று விட்டார். மீதி இருவரில் ஒருவர் பிரேயர் பொறுப்பு, மற்றவர் மேற்பார்வை.

இந்த மூவருக்காகவும் மறு நாள் ரூத் ஸ்பெஷல் எடுப்பதாக ஏற்பாடு. ஆனால் அன்று பார்த்து லஞ்சுக்கு முன்பாக ஒருவர் காலை இடித்துக் கொண்டார். அவருக்குப் பன்னிரண்டு வருடங்களாக வலது குதியில் பிரச்சினை. இரண்டு வருடங்கள் முன்பாக திரும்பவும் தகடு மாற்றினார்கள். வலி பொறுக்க முடியாமல் தவித்தவரை வீட்டுக்கு அனுப்பி விட்டாயிற்று. மற்றவர் அவசரமாக ஒரு வேலைக்கு அனுப்பப்பட்டுவிட்டார். ரூத் போகிற போக்கில்  என்னிடம் 'அடுத்த வாரம் பார்க்கலாம்,' என்று சொல்லிட்டுக் கிளம்பி விட்டார். ;(

அந்த அடுத்த வாரம், இந்த வாரம் வந்ததும் 'நாங்கள்' மூவரும் ஒரு ஓரமாக அமர்ந்தோம். மற்றவர்கள் மறு பக்கம், அவர்கள் ஏதோ விதம் விதமான பிரவுன் கலர் எல்லாம் பூசு பூசு என்று பூசி வைத்திருந்தார்கள். நாங்கள் மூவரும் என்னமோ ஒன்றைத் தொலைத்தவர்கள் மாதிரி சோகமாக...

ரூத் வந்தார். கிளாஸ் எடுத்தார். ;) நான் இவ்வளவு தான் நடாத்தி இருக்கிறேன். ;)
அவர் சொல்லும் கலர் எல்லாம் எனக்குப் புரிவதேயில்லை. அந்தக் கத்தியை வேறு சீமெந்துக் கரண்டியைப் பிடிக்கிறது போல பிடிக்கிறேன் (என்று அவர் தான் சொல்கிறார்) ஆனாலும் தேறி விடுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.

கானமயிலாட்டம் ஆட முடியாது விட்டாலும் வான்கோழி ஆட்டமாவது ஆடலாம். ;)

11 comments:

 1. இமா அம்மா அந்த ஓவியத்துக்கு கலர் குடுத்ததும் இன்னும் சூப்பரா இருக்கு அம்மா. கலக்குரிங்க வாழ்த்துக்கள் இமா அம்மா.

  ReplyDelete
 2. ஐயஹோ!!! தாங்க முடியலயே!!! ;))

  tkz Prabha. ;)

  ReplyDelete
 3. ////ஐயஹோ!!! தாங்க முடியலயே!!! ;))////

  ஏன் இமா அம்மா இப்படி சொல்லுரிங்க?

  ReplyDelete
 4. //தாங்க முடியல//எதை
  //கானமயிலாட்டம் ஆடாவிட்டாலும்,வான்கோழி ஆட்டமாவது ஆடலாம்.//
  வான்கோழியா..????
  !!வாழ்க,வரைக!!

  ReplyDelete
 5. 'I'm so so sooo happy.' enru solkiren Prabha & Ammulu. ;D

  immavaik kindal panrathukku eppadaa chance kidaikkum enru paarththutte irunthu iruppeenka pola. ;))

  ReplyDelete
 6. //ஓவியம் அருமை// repeat

  ReplyDelete
 7. //ஓவியம் அருமை// எல்லாரும் ரூத் பெய்ன்ட்டிங் பற்றித் தானே சொல்றீங்க! ;)

  ReplyDelete
 8. இமா, பெயின்டிங் அழகா இருக்கு(ருத் பெயின்டிங்). உங்களுக்கு 20 மதிப்பெண்கள். முழுவதும் முடித்த பிறகு தான் மீதி மதிப்பெண்கள்.

  ReplyDelete
 9. நான்தான் அண்டைக்கே சொல்லிட்டனே!! நல்லா இருக்கு.... நான் மைக்குறோவேவில் வைத்த சாதத்தைச் சொன்னேன்....

  பி.கு:
  அடுத்த புதன்கிழமை கெதியா வந்திடப்போகுதே என எனக்கு நடுங்குது:), கொஞ்ச நாளைக்கு எங்காவது வெளியூர் போகோணும்...நான் என்னைச் சொன்னேன்.

  ReplyDelete
 10. சரி வாணி. முடிவில் எல்லாவற்றையும் கூட்டி எடுத்துக் கொள்கிறேன். ;)

  ~~~~~~~~~~

  இப்ப நாள் மாற்றி விட்டோம். ஒன்லி திங்கள். இன்னும் 2 திங்கள் (நாட்கள்) கழிந்தால் நானே இரண்டு வாரம் விடுமுறை விட்டு விடுவேன் அதீஸ்.

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா