Thursday 6 June 2019

பனங்களி பைக்லட்

ஊரில்.... மாவைக் கரைத்து மெல்லிசாக தோசையாக வார்த்து, அதற்கு வறுத்த பயறு, தேங்காய்ப்பூ, சீனி சேர்த்துக் கலந்த கலவையை நடுவில் வைத்து நீளமாகச் சுருட்டி... 'பான்கேக்' செய்வோம்.

இங்கு வந்தபின்... பான்கேக் / பைக்லட் - இனிமையான சின்ன வட்டமாக, தடிப்பாக மெத்தென்று வார்த்து, சூடாக இருக்கும் போதே மேலே வெண்ணெய் வைத்து, உருகியதும் உருகாததுமான நிலையில் சாப்பிடுவேன்.

ஊரில்.... பனங்காயிலிருந்து களி எடுத்து பனங்காய்ப் பலகாரம் சுட்டுச் சுடச் சுட வாசனையை நுகர்ந்தபடி சாப்பிடுவோம்.

இங்கு வந்தபின்... போத்தலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பனங்களியை வாங்கி பனங்காய்ப் பலகாரம் சுட்டுச் சாப்பிட்டிருக்கிறேன்.

மேலே படத்திலுள்ளது இரண்டுக்கும் இடையில் ஒரு கலவை. ;-) போத்தல் பனங்களியில் பனங்காய்ப் பலகாரம் சுட்டுக்கொண்டிருக்கும் போது, "பான்கேக்காக வார்த்தால் என்ன!" என்று தோன்றியது. வார்த்தேன். சுவை அபாரம். 

18 comments:

  1. அருமையான, அபூர்வமான குறிப்பு இது இமா! மிக வித்தியாசமாக இருக்கிறது. பனங்கிழங்கு தெரியும். பனம்பழம் தெரியும். பனம் நொங்கு தெரியும். பனங்களி பற்றி தெரியாது. உங்கள் பதிவைப்படித்ததும் கூகிள் சென்று அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் புதிய ஒரு உணவை அறிமுகப்படுத்தியிருக்கிறேனா! பனாட்டு என்றும் ஒன்று இருக்கிறது அக்கா. பனங்களியைப் பாயில் பரவிக் காயவிடுவார்கள். காயும் சமயம் காறுறு வீசினால் கொஞ்சம் மண்ணும் சேர்ந்துவிடும். மற்றப்படி அதன் சுவைக்கு ஈடான சுவை என்று எதுவும் கிடையாது. பழஞ்சோறும் தேங்காய்ப்பூவும் பனாட்டும் பிசைந்து சாப்பிட்ட சின்னக் காலம் ஞாபகம் வருகிறது.

      Delete
  2. வணக்கம் டீசசர் ... நலமா ....... பனம்பழம் சாப்பிட்டிருக்கிறேன் . இந்த பலகாரம் புதுமையாக இருக்கிறது . இங்கு பனைமரம் அழிந்து கொண்டு வருகிறது

    ReplyDelete
    Replies
    1. ஹாய் ராதா ராணி... நலம். நீங்கள் நலம்தானே! எல்லா இடமும் பெறுமதியான விடயங்கள் அழிந்துகொண்டே வருகின்றன என்பது கலையான விடயம்தான். பனகாய்ப்பலகாரம் வெகு பழைமையான தின்பண்டம். கேக்கை விட, பல காலம் முன்பே எமக்கு அறிமுகமான தீனி இது. இந்தியர் பலருக்கு இது கேள்விப்படாத தின்பண்டமாக இருக்கிறது போலத் தெரிகிறது. :-)

      Delete
  3. பார்க்க நன்றாக இருக்கிறது. இங்கே/தலைநகரில் கிடைப்பது இல்லை. கிடைத்தால் ருசிக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. இங்கு கிடைக்காதிருப்பதற்குப் பிரதான காரணம் MAF கட்டுப்பாடுகள். பழம் நாட்டினுள் அனுமதிக்கப்பட்டால் வித்திலிருந்து தாவரம் வளரும்; பிறகு அதுவே களையாக மாறிவிட்டால் சிரமம் அல்லவா? முளைகட்ட ஒழுங்கான பாசிப்பயறு கிடைப்பதே அபூர்வம். முளைக்காதபடி அரைகுறையாக பதப்படுத்தியவைதான் கிடைக்கும்.

      Delete
  4. பனங்களி??! நோ ஐடியா...நான் நுங்கு மட்டுமே சாப்பிட்டிருக்கேன், பனம்பழம் கூட தின்றது கிடையாது. ஹிஹி....போட்டோ அழகாக இருக்கு. கிடைத்தால் ருசி பார்க்கலாம்! :)

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் பலகாரம் சுவை அதிகம். எண்ணெய்ப் பதார்த்தம் எல்லாம் சுவைதானே! குச்சிக்கிழங்கு சாப்பிட்டதில்லையா! நீங்கள் தான் அந்தப் பெயரை எனக்கு அறிமுகப்படுத்தியதாக நினைவு. அங்கு போத்தலில் பனங்களி கிடைக்கும் மகி. இலங்கை / இந்தியக் கடைகளில் கிடைக்காவிட்டால் சீனரது கடையில் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் ஓலைப்பலகாரம் போல ஒன்று செய்வதற்காகப் பயன்படுத்துவார்கள்.

      Delete
  5. என் பேவரிட் பனங்காய்பலகாரம்(பணியாரம்) இது பார்க்கவே நல்லாயிருக்கே.
    வாங்கி செய்துபார்க்கனும்.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா... விருப்பமானதெல்லாம் இப்பவே சாப்பிட்டுருங்க. இங்க இப்ப ரெண்டு பேருக்காகச் சமைக்கிறதோ என்றே நிறைய விஷயம் செய்யிறேல்ல. இனிப்பு வேற. கனக்கச் சாப்பிடப் பயமா இருக்கு. ;)

      Delete
  6. ஓ மீண்டும் இமா:).. நாங்க பனங்காய்ப் பணியாரம்தான் இமா சுடுவோம்ம்.. இது புதுசா இருக்கே.. பனங்காய்ப் பான் கேக்:))

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆ றீச்சரைக் காணமே:) பனங்களிப்பான் கேக் சாப்பிடும்வர்சி நல்லாத்தானே இருந்தா:)..

      Delete
    2. வந்தேன் அதீஸ். ;-) தட்டத்தட்ட, முன் எழுத்தெல்லாம் காணாமல் போச்சுது. அதுதான் உடனே பதில் சொல்ல இல்லை. மன்னிக்கவும். நான் நல்லாத்தான் இருக்கிறன். லப்டொப் தான் பிரச்சினையாப் போச்சுது.

      Delete
    3. ;))))))) திருகோணமலையார் பனங்காய்ப் பலகாரம் தான் சுடுவோம் அதீஸ்.
      பான்கேக் எண்ணெய் இல்லாத சாப்பாடு, நல்லதெல்லோ! :-)

      (ஊ.கு 1 உங்களை பழைய வலையுலக நட்புகள் இரண்டு பேர் விசாரிச்சினம். 2. ஐபாட்லயும் ஃபோன்லயும் நான் நினைக்கிற வேகத்தில தட்ட முடியேல்ல அதீஸ். ;( எக்கச்சக்கமான எழுத்துப் பிழை வருகுது. அதுதான் இடுகையும் சுருக்கமா இருக்குது.)

      Delete
    4. ஆக ரெண்டுபேர்தானோ?:)... நான் எல்லோரையும் அப்பப்ப நினைப்பதுண்டு....

      Delete
  7. bottled ஐட்டம்ஸ் ?? அதில் செயற்கை சேர்மானம் இருக்குமா ??
    இங்கே ஸ்ரீலங்கன் ஷாப்பில் இதை பார்த்திருக்கேன் .நோ ப்ரெசெர்வேடிவ் என்றால் ஒரு ட்ரை குடுக்க ஆசை :)
    எங்கம்மா மைதாவில் தேங்காய் துருவி sugar சிரப் மிக்சிங்கில் செய்வாங்க .பனம்பழம் இதுவரை சாப்பிட்டதில்லை

    ReplyDelete
    Replies
    1. நினைவில் இல்லை அஞ்சூஸ். போத்தலில் எழுதி இருப்பாங்கள். வேற எதுவும் சேர்க்கவில்லை என்கிற மாதிரித்தான் நினைவு. பனம்பழத்திற்கு என்று ஒரு பிரத்தியேக வாசனை இருக்கிறது. அது போத்தல் களியில் கிடைப்பதில்லை.

      Delete
  8. மிக்க நன்றி சகோதரரே!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா