Tuesday 25 June 2019

பிறந்தநாள் வாழ்த்து

இந்த மாதம் பிறந்தநாளைக் கொண்டாடும் ஒரு நட்புக்காகச் செய்த வாழ்த்துமடல். நட்புக்கு என் மாங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிரிந்துபோக ஆரம்பித்த விசிறியொன்றில்... வெட்டிய பின் பிரிந்துவிடாமல் இருப்பதற்காக தாராளமாகப் பசை பூசி, காகிதத்தை ஒட்டிக் காய விட்டேன்.
கூடை வடிவை வெட்டி...
மினுக்கத்துக்காக,'nail polish top coat' கொடுத்தேன்.
'3 D sticky dots' கொண்டு ஒட்டினேன்.

சிவப்பு அட்டை - ஒரு திருமண அழைப்பிலிருந்து கிடைத்தது.

பூக்கள் - சேலையொன்றிலிருந்த லேபிள் - நிறம் பிடித்திருந்தது. பஞ்ச் கொண்டு பூக்களை வெட்டிவிட்டு நடுவில் அழுத்தி குவிந்த வடிவம் கொடுத்தேன்.

இலைகள் பச்சை நிறக் கடதாசி + பஞ்ச் + கொஞ்சம் மடிப்பு. 
ஒரேயொரு கவலை, மடியாமல் உதிராமல் போய்க் கிடைக்கவேண்டும் என்பது. 

4 comments:

  1. எவ்வளவு மெனக்கெடல். விசிறி வெட்டியபிறகு பிரியாமலிருக்க எடுத்த சிரத்தையும் கவனத்திற்குரியது. நட்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் இந்த வாழ்த்தினையும் பார்த்திருப்பார் கீதா. :-) உங்களுக்கு என் அன்பு நன்றிகள்.

      Delete
  2. வா.வ் எப்படி இப்படி ஐடியா எல்லாம் வருகுது.. சூப்பர் இமா. அழகா செய்திருக்கிறீங்க. சூப்பர்ப்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி ப்ரியா. இப்ப திரும்ப செய்யும் வேலை நடக்குது. ;-) இன்னும் 3 செய்திருக்கிறன். கிடைக்க வேண்டிய ஆக்களுக்குக் கிடைச்ச பிறகு தானே இங்க பப்ளிஷ் பண்ணலாம்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா