Saturday 19 July 2014

ஆப்பிள்கள்

[DSC07604.JPG]
"அம்மா! ஆப்பிள்,"
"எதுக்குடா கத்துற!" திரும்பக் கத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தாள். அது பையோடு தரையில் உட்கார்ந்திருந்தது.

"மேசைல வைச்சா என்னடா! இப்போ எனக்கு தேவையில்லாத வேலை. முதுகு பிடிச்சுக்கப் போகுது.
சோம்பேறித்தனம் தான். நாலு ஆப்பிள் தூக்கினால் முதுகு பிடிக்குமா என்ன! அவள் முணுமுணுத்துக் கொண்டு தூக்கி வைக்க பையன் மெதுவாகச் சொன்னான், "ஆப்பிள் சாப்பிட்டா எதிர்ப்புச் சக்தி பெருகும். முதுகுப் பிடிப்பு வராதும்மா."
ஏற்கனவே கடுப்பிலிருந்தாள். காலையிலிருந்து என்னவோ ஒரு எரிச்சல். இப்போ இவன் வேறு. பழத்தட்டை நிரப்பி விட்டு பையைத் தூக்கிக் கொண்டு உள்ளே போனாள்.

ஹாலை சுத்தம் செய்ய நினைத்து எல்லாவற்றையும் பரவிப் போட்டிருந்தாள். இடை நடுவே மீண்டும் அசதி தலை காட்ட அப்படியே ஒரு சோஃபாவில் சரிந்தவள் தூங்கிப் போனாள்.


தொலைபேசி அழைத்து எழுப்பிற்று. "பின்னேரம் நாங்கள் அந்தப் பக்கம் வாறம். நீங்கள் வீட்டில இருப்பீங்கள் எண்டால் உங்களையும் வந்து பார்க்கலாம் எண்டு நினைச்சம்."

வெகு நாட்களாக இவர்கள் வரவை எதிர்பார்த்திருந்தாள். அவளுக்குப் பிடித்த இலங்கை நட்பு வட்டம். ஆனால்... இப்போது வீடு இருக்கும் நிலையில்!!

"பிரபூ... இதை ஒதுக்க கொஞ்சம் உதவி செய்யேன்."
பிரபு வந்தான். அம்மா சொன்னது போல எல்லாம் செய்து கொடுத்தான்.

"முடியலைன்னா நாளை பண்ணலாம்ல! எதுக்கு இப்படி சிரமப்படுறீங்க?" என்றான்." கிட்டத்தட்ட வேலை முடியும் சமயம் ஒரு ஆப்பிளை எடுத்துக் கடித்தான். அம்மாவுக்கும் ஒன்று கொடுக்க, "இப்போ வேண்டாம்," என்றாள்.

"சும்மா சாப்பிடும்மா. சாப்பிட்டா..."

திரும்ப நோய் எதிர்ப்புச் சக்தி என்று ஆரம்பிக்கப் போகிறானோ என்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
"ஆன்டி வர மாட்டாங்க."
"அவங்கதான் டாக்டராச்சே!"
~~~~~~~~~~~
இன்னொரு ஆப்பிள் கடி இங்கே

8 comments:

  1. An apple a day, keep the doctor away.. unmai thaaan...

    ReplyDelete
  2. அழகாம் கலையது ஆப்பிளில்! சீராய்த்
    தளரா துடல்காக்கத் தந்து!

    கைவண்ணம் கண்டேன்
    கனியாம் ஆப்பிளில்
    கனிவாய் நலன்காக்கப் பதிவினிலும்!... :)

    வாழ்த்துக்கள் இமா!

    ReplyDelete
  3. வணக்கம்
    அம்மா
    ஆப்பிள்கள் மருத்துவகுணம் உடையது என்பதை நல்ல உரையாடல் வடிவில் சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. மருத்துவ விருந்தினரை விரட்ட இப்படியொரு வழியா? சுவாரசியப் பகிர்வு இமா.

    ReplyDelete
  5. இமாம்மா
    கதை & கவிதை அருமைங்

    ReplyDelete
  6. இமா வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்படுள்ளது.
    http://blogintamil.blogspot.ca/2014/07/blog-post_27.html

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா