விடுமுறையின்போது என்னை மிகவும் கவர்ந்த இடம் இது.
முதல் முறை சென்ற போது எங்களோடு சம்பந்தமில்லாத ஒரு குழுவினரோடு சென்றிருந்ததால் அதிகம் பார்க்க வசதி கிடைக்கவில்லை; குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் வண்டியிலிருந்தாக வேண்டி இருந்தது.
கூடவே வந்த 'கைட்' சொன்னவை பலதும் இயந்திர ஒலியில் காதில் விழவில்லை.
கூடவே வந்த 'கைட்' சொன்னவை பலதும் இயந்திர ஒலியில் காதில் விழவில்லை.
கற்களைத் தேவையான வடிவங்களில் தேய்த்து எடுக்கிறார்கள்
ஆனால் கண்ணுக்கு மட்டும்....
விருந்துக்குக் குறைவில்லை.
கடைசி இராப்போசனம்
ஒவ்வொரு படைப்பும் கொள்ளை அழகு.
படம் பிடிக்கத் தடை என்பதாக அறிவிப்புப் பலகைகள் சொன்னாலும் மறுப்பு வரவில்லை.
பாதி நிலையில்...
மீண்டும் பார்வையிட வர அனுமதி கிடைக்குமா என்று வரெவேற்புப் பெண்மணியை விசாரிக்க, தன் அடையாள அட்டையில் தேதி குறித்துக் கொடுத்தார். எப்போ வந்தாலும் அந்தத் தேதிக்குரிய கழிவு விலை கிடைக்கும் என்றார். அவருக்கு தொலைபேசியில் அழைத்தால் போக்குவரத்தும் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார்.
"இந்தச் சாடிகள் ஒற்றைக்கற் செதுக்கு வேலைகள்"
மூன்று நாட்கள் கழித்துக் கிளம்பினோம். பொருள் வாங்கும் நிர்ப்பந்தத்தைத் தவிர்க்க போக்குவரத்துச் சலுகையைத் தவிர்த்தோம். வாயிலில் எங்கள் வரவு பற்றி ஏற்கனவே தெரிவிக்கப் பட்டிருந்தது போல. ;) வரவேற்புப் பலமாக இருந்தது. அதே பெண் வந்து அழைத்துப் போனார். சற்றுக் கூட இருந்துவிட்டு தனியே பார்க்க விட்டுவிட்டார். (அங்கிருந்து கிளம்பும்போது அடுத்து நான் செல்லவிருந்த இடத்திற்கு இலவச வாகன வசதி செய்து கொடுத்தார் இவர்.)
எனக்கு இதுபோன்ற கைவினைகள் பிடிக்கும்.
எனக்கு இதுபோன்ற கைவினைகள் பிடிக்கும்.
ஒன்று போல் இன்னொன்று இராது என்பது இவற்றின் சிறப்பு.
அணிகலன்கள் சிற்பங்கள் செய்தவை போக மீதியாகக் கிடைக்கும் கற்கள் கொண்டு இவை தயாராகினாலும், நுணுக்கமான வேலைப்பாடு, செலவிடும் நேரம் என்று பார்த்தால் விலை அதிகம் என்று சொல்லத் தோன்றவில்லை.
கேட்டுத் தெரிந்துகொண்ட விபரங்கள் சில - சில வருடங்கள் முன்பு வரை இது போன்ற இருபரிமாண அமைப்புப் படங்கள் மட்டும்தான் தயாராயிற்றாம்.
தற்போது தயாராகும் முப்பரிமாண அமைப்புகளுக்கு உட்கட்டமைப்பாக கடினமான ஸ்பாஞ்ச் பயன்படுத்துவதாகச் சொன்னார்கள்.
மயிற்தோகை - செப்புத் தகட்டில் வெட்டி வளைத்து அதன் மேல் கற்துகள்கள் ஒட்டப்படுகின்றனவாம். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக, பாதுகாப்பான முறையில் பொதி செய்து அனுப்பி வைப்பார்களாம். ஒவ்வொரு படத்தின் பின்னாலும் கற்கள் & பெயர் கொண்ட மாதிரி அட்டை இணைக்கப்பட்டிருக்கிறது.
சில கண்ணாடிக் கூடுகளில் காட்சிப் பொருட்களோடு சிறிய குவளைகளில் நீர் வைத்திருப்பது கவனத்தில் பட, விசாரித்தேன். வெப்பநிலை மாற்றம் கற்களை / படைப்புக்களைப் பாதிக்காதிருப்பதற்காக அப்படி என்றார்கள்.
அணிகலன்களுக்குத் தனிப் பகுதி வைத்திருக்கிறார்கள். தோடு தவிர வேறு எதிலும் எனக்கு ஆர்வமில்லை. கண்ணில் பட்ட பிடித்த தோடுகள் பாரமாகத் தோன்றவும் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.
அணிகலன்களுக்குத் தனிப் பகுதி வைத்திருக்கிறார்கள். தோடு தவிர வேறு எதிலும் எனக்கு ஆர்வமில்லை. கண்ணில் பட்ட பிடித்த தோடுகள் பாரமாகத் தோன்றவும் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.
என் பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு சிறிய பறவை மருமக்களுக்கு சில அணிகலன்கள் வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
இத்தனை அழகாகப் படங்களைச் செய்தவர்கள் அவற்றின் பின்னணியிலும் சட்டம் (ஃப்ரேம்) தெரிவு செய்வதிலும் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாமோ! வெள்ளை நாரையும் வெண்கழுகும்...
இத்தனை அழகாகப் படங்களைச் செய்தவர்கள் அவற்றின் பின்னணியிலும் சட்டம் (ஃப்ரேம்) தெரிவு செய்வதிலும் கொஞ்சம் கவனமெடுத்திருக்கலாமோ! வெள்ளை நாரையும் வெண்கழுகும்...
வெள்ளை 'கான்வஸ்' பின்னணியில்... அவற்றின் அழகு சரிவர வெளிப்படவில்லையோவென்று தோன்றிற்று. தங்க நிறச் சட்டங்கள் சில படங்களுக்குப் எடுப்பாக இல்லை. அதுபோல்... சுத்தம் செய்யச் சிரமமான, விலையான படைப்புகள் இவை - கண்ணாடிப் பேழை போல் 'ஃப்ரேம்' அமைப்பு இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். காலப் போக்கில் ஒன்றிரண்டு கற்கள் விலகினாலும் தொலைந்து போகாமல் உள்ளேயே இருக்கும்; மீண்டும் ஒட்டிக் கொள்ளலாமல்லவா!
மூத்தவரும் இதே அபிப்பிராயம் கொண்டிருந்தார். பொருத்தமான கண்ணாடிப் பேழைச் சட்டங்கள் கிடைக்கும் வரை... தன்னுடையதை 'க்ளிங் ராப்' சுற்றி சுவரில் மாட்டிவிடப் போகிறாராம். ;)
மூத்தவரும் இதே அபிப்பிராயம் கொண்டிருந்தார். பொருத்தமான கண்ணாடிப் பேழைச் சட்டங்கள் கிடைக்கும் வரை... தன்னுடையதை 'க்ளிங் ராப்' சுற்றி சுவரில் மாட்டிவிடப் போகிறாராம். ;)
~~~~~~~~~~