உலகுக்கு இருப்பது ஒரே நிலவுதான். விழாக்கள் மட்டும் எத்தனை!
சிறு வயதில் வெசாக் தினத்தை ஆவலோடு எதிர்பார்ப்பேன்.
நியூசிலாந்தில் 'லாண்டர்ன் ஃபெஸ்டிவல்' வருவது பெப்ரவரி மாதம்தான். அது சீனப்புத்தாண்டு. என் சின்னவர்கள் பெரியவர்களானதன் பின் பார்க்கப் போனதில்லை நான்.
சிங்கப்பூரில் இருந்த சமயம் ஓர்நாள் இரவுணவின் பின் காற்றாட ஒரு மரத்தின் கீழ், வாங்கில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம் மூவரும். அருகிலிருந்த பாரிய மரத்தின் இரண்டு கிளைகள் நடுவே அழகாய் முழுநிலா தென்பட்டது. அதைப் படம் பிடிக்க முயன்றிருக்க...
;)))
அழகாய் விளக்கேந்தி மலர்ந்த முகக் குழந்தைகள் பெற்றோர் துணைக்கு வர ஊர்வலமாய் வந்தார்கள்.
சிறிய குழுதான். அழகுக் காட்சி அது. சீனக் குழந்தைகள்....
நடுவே நட்புக்குழந்தைகளும் இருந்தார்கள்.
நிலவொளி.. மெல்லிய காற்று... அமைதியான சூழல்... அருகே பாசமான இருவர், முன்னால் சந்தோஷமான பிஞ்சுகள் & அவர்களைச் சந்தோஷிக்க வைக்கவென்று நேரம் செலவிடும் பெற்றோர்.... வேலை, வீடு என்கிற கவலையில்லாது இயல்பாக இருக்க முடிந்த அந்தச் சில நிமிடங்கள்... மனதுக்கு இதமாக... விபரிக்க இயலாத இதமாக... நிறைவாக இருந்தது.
அன்றுதான் 'மூன் கேக் ஃபெஸ்டிவல்' பற்றித் தெரியவந்தது. பிடித்தவர்கள் படிக்க வசதியாக... http://www.asiarooms.com/en/travel-guide/singapore/singapore-festivals-and-events/mooncake-festival-singapore.html
'மூன்கேக்' என்பது 'முங்' கேக்காக இருக்குமோ என்று சந்தேகம் இருந்தது முன்பு. நான் சாப்பிட்டதில் எல்லாம் பயறுதான் சேர்த்திருந்திருக்கிறது.
வீட்டுக்குக் கொண்டுவர என்று இரண்டு மூன் கேக் எடுத்து வைத்தேன். 'டிக்ளேர்' செய்திருந்தேன். விமான நிலையத்தில் அருகே வந்த MAF நாய் என்னைக் கடந்து போய் இளைஞரொருவர் பையருகே அமர்ந்தது.
அடுத்த கட்டம்... பையைத் திறந்து எடுத்துக் காட்ட வேண்டி இருந்தது. பார்த்தார்கள்; தனியே ஸ்கானரில் அனுப்பினார்கள்; "முட்டை இருக்கும் போல" என்றார்கள். பையைப் பிரித்து கத்தியால் நறுக்கி... "இதோ பார், முட்டை மஞ்சள்," என்று காட்டினார்கள்.
அங்கே ஒரு குட்டி நிலா. இதலால் கூட இருக்கலாம் Moon Cake!! ;)
"கொண்டு போக அனுமதி இல்லை."
வெகு அவதானமாக இருக்கிறார்கள் எங்கள் நாட்டின் பாதுகாப்புப் பற்றி.