Sunday 7 November 2010

நியூசிலாந்துத் தீபாவளி

இமா எப்படித் தீபாவளி கொண்டாடினேன்?

யாரோ ;) கேட்டிருந்தார்கள்.

 

சின்ன வயதில் ஊரில் டைக் வீதியில் வசிக்கையில் தெருவில் அனேகமான வீடுகளில் அழகழகாய்த் தீப ஆவளி பார்த்திருக்கிறேன்.

வாசற்கதவைத் திறந்தால் தெரு, அப்படித்தான் எல்லா வீடுகளும் இருக்கும் அங்கு. படிக்கட்டில் அமர்ந்து பார்த்தால் தெரு முழுவதும் தெரியும். கார்த்திகைதீபம் பார்க்கப் பிடிக்கும். அத் தெருவுக்குக் காவடி வரும், கார்த்திகைப் பூச்சி ஊர்வலம் வரும்.

எல்லாம் சில வருடங்கள் தான்.

அந்த வீட்டை விட்டு எங்களுக்கே உரிய நிலத்திற்கு இடம் பெயர்ந்தோம். அத்தோடு இந்த மாதிரியான காட்சிகள் காண எங்காவது புறப்பட்டுப் போக வேண்டும் என்று ஆகி விட்டது. அயல் என்று ஆரம்பத்தில் தந்தையாரின் நண்பர் ஒருவரும் ஒரு சிங்களக் குடும்பமும் மட்டும் தான் இருந்தார்கள். பின்னால் ஒழுங்கையில் வீடு கட்டி வந்தவர்கள் தந்தையாரோடு கூடக் கற்பித்த ஆசிரியர்கள். அனைவரும் கிறிஸ்தவர்கள் ஆதலால் தீபாவளி கிடையாது.

ஆனாலும் ஒரு 'அங்கிள்' எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று வாழை வெட்டி வைத்துத் தீபம் ஏற்றிக்காட்டினார். ;) சந்திரகிரகணம் எப்படி ஏற்படுகிறது என்று பந்துகள் கொண்டு விளக்கம் கொடுத்தார். அப்போ  எங்கள் பகுதிக்கு மின்சார இணைப்புக் கிடையாது. சிமிளி விளக்கை வைத்து... ;)

ஊருக்குப் போனால் எல்லோரையும் பார்க்க வேண்டும்.

பொறுமையாக நிறைய விஞ்ஞான விளக்கங்கள் தருவார் அங்கிள். அவர்கள் வீடு சோலை போல் இருக்கும், அத்தனை மரங்கள். தொட்டி தொட்டியாக மீன்கள், ஆடு, மாடுகள். ஒரு தொட்டியில் 'மீன்களுக்குத் தீன்' என்பதாகப் புழுக்கள் கூட வளர்த்தார்.

இங்கு தீபாவளி... சென்ற வருடம் கடையில் ஒரு சிட்டி விளக்கைக் கண்டு பிடித்து வாங்கி வந்து 'கனோலா' எண்ணெயில் தீபமேற்றி அணையும் வரை வாசலில் வைத்திருந்தேன். பிள்ளைகள் இருவரும் என்னை வினோதமாகப் பார்த்தார்கள். (அந்தத் தீபத்தைத்தான் படம் எடுத்து வாழ்த்துப் போட்டேன்.)

இம்முறை இங்கு ஒரு 'அங்கிள்' வீட்டுக்குப் போனோம். அன்று அவர்களுக்குத் திருமணநாள். எனவே இரட்டைக் கொண்டாட்டம் - கேக், உளுந்துவடை, பருப்புவடை, ரோல் & பச்சைச் சம்பலோடு. செபாம்மாவும் கூட வந்தார்கள்.  'அன்ரி' போடும் கோப்பி சுவையாக இருக்கும்.

இம்முறை தீபாவளி அன்றுதானே Guy Fawks Day.

மறுநாள் ஏஞ்சல் வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு, 'வாண வெடிகள் வாங்கி இருக்கிறோம். வெடிக்க வருகிறீர்களா?' என்று. இது தீபாவளிக்காக அல்ல. Guy Fawks வெடிகள். இந்த வாரம் மட்டும் வாண வெடிகளுக்கு அனுமதி உண்டு.

இங்குள்ள வீடுகளில் அதிகமானவை பலகை வீடுகள்.எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்ற வாரம் எல்லா வகுப்புகளிலும் Fireworks safty தொடர்பான வகுப்புகள் எடுக்கப்பட்டன.

ஏஞ்சலில் அழைப்பை ஏற்று நானும் க்றிஸும் நேற்று இரவு அவர்கள் வீட்டுக்குப் போனோம். இங்கு இப்போ அஸ்தமனம் தாமதமாவதால் பேச்சு, ஒரு கோப்பி & உலர் பழங்கள் என்று பொழுது போக்கிவிட்டு இருள ஆரம்பித்ததும் வெளியே இறங்கினோம். 

படங்கள் தெளிவாக இல்லை, பொறுத்தருள்க. ;))

21 comments:

  1. ஆஹா தீபாவ‌ளி வாழ்த்துக்க‌ள் இமா கொஞ்ச‌ம் லேட்டோ?

    ReplyDelete
  2. அங்கு வெடி வெடிக்க முடிந்ததோ? இங்கு புகையிறதே! :))))

    சிறுவர் ஏஞ்சலின் தம்பியோ? க்யூட் இமா..

    இங்க வச்சே உங்கட பின்னூட்டத்துக்கும் ஒரு நன்றி சொல்லிக்கிறேன்.. :)

    ReplyDelete
  3. //க்யூட் இமா//

    இதில் க்யூட் என்னும் வார்த்தை சிறுவரைக் குறிப்பதாகும் :) புகைப்படம் எடுத்தவரை அல்ல. :))

    ReplyDelete
  4. சிறப்பான தீபாவளி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. லேட் எல்லாம் கிடையாது இர்ஷாத், க்றிஸ்மஸுக்கு இன்னும் 1 மாதத்துக்கு மேல் இருக்கிறது. நன்றி. ;)

    எல்ஸ்,
    //அங்கு வெடி வெடிக்க முடிந்ததோ?// ம். ;))
    //ஏஞ்சலின் தம்பியோ? // ம். ;)
    //நன்றி // :)
    //க்யூட்// ;))))

    அண்ணாமலையான், எங்க சார் இருக்கீங்க? வரீங்க, காணாமப் போறீங்க. தீபாவளி
    சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன். வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  6. பர்ாயி்்லை ஒ்ு வ்ியா அங்கு்் ்ெ்ி ்்டிச்்ாஅ

    ReplyDelete
  7. ஊரிலை தீபாவளி என்றாலே வெடி தானே. நானும், தங்கையும் ரோட்டில் போகும் போது எங்கள் தெருவில் இருந்த விடலைகள் இருவரையும் விரட்டி விரட்டி வெடி எறிய, அண்ணாவின் நண்பர் வந்து எங்களைக் காப்பாற்றினார்.
    இங்கு வெடி, மத்தாப்பு என்றாலே எனக்கு பயம். பக்கத்து வீட்டு வாண்டு கொழுத்தும்போது தூரத்தில்( ஜன்னல் வழியா ) நின்று வேடிக்கை பார்ப்பேன்.
    உங்களை படத்தில் பார்க்க முடியவில்லையே??? நீங்களும் என்னைப் போல வீரமான ஆளா????

    ReplyDelete
  8. இமா! உங்க தீபாவளி நல்லா இருந்தது போல...படங்கள் அருமை... பக்ஷணம் படம் காமிக்கவே இல்லை :((
    அந்த கை ஃப்பாக்ஸ் கதை இன்ட்ரெஸ்டிங் ! விக்கி லின்க்குக்கு நன்றி !

    ReplyDelete
  9. யாரோவாயிட்டேன்ல பரவாயில்ல ரீச்சர் ம்ம் ம்ம்ம்

    சாப்பாடு அயிட்டம் ஒண்ணுத்தையும் காணோம்? :(

    ReplyDelete
  10. ஜலீ...

    பரவாயில்ல.. ஒரு.. வழியா.. அங்கு... ம்ம்ம்ம்ம்
    மீதி என்ன? ;)

    ReplyDelete
  11. வான்ன்ன்ஸ்...
    பயமா? கிலோ என்ன விலை?

    //உங்களை படத்தில் பார்க்க முடியவில்லையே??? //
    ம்.. என் உலகம்தான் ஸ்ட்ரிக்டாக புகைத்தல் தடை செய்யப்பட்ட உலகமாயிற்றே. சுவாசிக்க சுத்தமான காற்று அவசியம். இதுக்கும் சிகரெட்டுக்கும் பெருசாக வித்தியாசம் இல்லை. முன்னேற்பாடாக ரெண்டு பஃப் இழுத்துவிட்டு காற்றுக்கு எதிர்த் திசையில் தூரமாக கமராவோட போய் நின்றாச்சு. எதுக்கு வம்பு. அப்பிடியும் கடைசியில் கம்பி மத்தாப்பூ 'புஸ்ஸ்...' என்கையில் எனக்கு 'கொக்கொக்' என்றது. ;)

    ReplyDelete
  12. இலா,
    அது கை ஃபாக்ஸ். நோ தீபாவளி. //பக்ஷணம்// க்றிஸ்மசுக்கு சமீபமா பண்ணுவேன். அப்ப காமிக்கிறேன்.

    ~~~~~~~~~~~~~~

    உங்களை 'யாரோ'ன்னு சொல்லுவேனா ப்ரியமுடன் வசந்த் சார். ;) அழாதீங்கோ. இனிமேல் யாரையும் வம்புக்கிழுக்கிறது இல்லை என்று தீர்மானம் பண்ணி இருந்தாலும்... என் பிறவிக்குணம் போற மாதிரி தெரியலை. ;))

    //சாப்பாடு அயிட்டம்// நான் நத்தாருக்கு தான் பண்ணுவேனாம். பண்ணினா, அப்போ காண்பீங்க. ;)

    ReplyDelete
  13. ஹையா இது நியூசிலாந்து தீபாவளியா?! நிறையபேருக்கு பட்டாசு புகை விட முடியலேன்னு காதுல இருந்து புகை வருதாம் :-).

    ReplyDelete
  14. இமா has left a new comment on your post "பதிவுலகில் ஜீனோ..":

    பப்பீஸ்... பட்டாசுக்குப் பயந்து ஒழிஞ்சு இருக்காம வெளிய வாங்க. சிங்கம்ல நீங்க. ;))

    ஜீனோவுக்கும் ஜீனோவின் அன்பு டோரா புஜ்ஜிக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். ()__

    அன்புடன் ஆன்டி
    _______________________________________________________

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஆன்ட்டீ!பட்டாசுக்கெல்லாம் பயம் படுமா ஜீனோ? ஓலவெடி-லஷ்மி வெடி-ஆட்டம் பாம்-குருவி வெடி-ஊசி வெடி அல்லா வெடியும் வெடிச்சி முடிக்க டைமாய்ரிச்சி. அதான் லேட்டு.

    புஸ்வானம் கொழுத்தினதுக்கே அல்லாரும் பொக விடறாங்கோ..அதான் ஜீனோ பயர்வொர்க்ஸ்லாம் போட்டோ எடுக்கல. கிக் கிக்கிக்!

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி திரு ஜீனோ அவர்களே. ;) (திரும்பக் காணாமப் போகப்படாது. ம்.)

    கவி.. எல்லாருக்கும் 'புகை' பகிடியாக் கிடக்கு. என்ன செய்றது. ;))

    ReplyDelete
  16. ஒரு தீப ஆவளி எத்தனை பழைய நினைவுகளை கிளறி விட்டது..!! :-))) அட்வான்ஸ் கிருஸ்மஸ் வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  17. ;) அப்பிடியே அட்வான்ஸ் மணநாள் வாழ்த்துக்கள், அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள், அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள், அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் எல்லாம் சொல்லிரலாமே மருமகனே. ;))))

    ReplyDelete
  18. //) அப்பிடியே அட்வான்ஸ் மணநாள் வாழ்த்துக்கள், //

    வேண்டாம் .., ஒருத்தருக்கு எண்ணி 56 தடவை போட்டதா நினைவு .அதுக்கு பிறகு அவரோட புது பதிவையும் கானோம் , ஆளையும் கானோம்.. :-((

    ReplyDelete
  19. ஜெய்லானி..

    நீங்க சொன்னது கேட்டுவிட்டது போல.
    பாருங்கோ இதை...
    http://gokisha.blogspot.com/2010/11/blog-post.html

    அன்புடன் இமா

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா