Thursday 17 February 2011

மீண்டும் ஆ!மை ஆமை.

;)
 விடுமுறையில் ஊருக்குப் போனேன் அல்லவா? முன்வீட்டில்...
 .....இவரோடு...
 இவரும் இருந்தார். தூக்கி வர ஆசைதான், முடியாது.
 இவர்... என் வீட்டு மேசை விளக்கில் இருந்தவர்.
கிறிஸ் முன்பு 7 Island Hotel இல்  வேலை பாரத்த சமயம் பிரியமாய் வாங்கிச் சேர்த்தவற்றில் மீதியாக உள்ளது இது.
மேஜை விளக்கு மூன்று பாகங்களாக இருந்தது. ;) ஆமைக் குட்டியை மட்டும் படம் பிடித்தேன்.
கொண்டு வரலாமா! வேண்டாமா! மூவருமாக ஆராய்ந்து, விட்டு விட்டு வரத் தீர்மானித்தோம்.
இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் எங்காவது நடுவே ஒரு விமான நிலையக் குப்பைத் தொட்டியில் போவதற்கு ஊரிலேயே இருக்கட்டும் என்று முடிவானது.

இவர்.... 'பின் குஷன் ஆமை'.
  கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து இவரைப் பார்த்தேன். கொஞ்சம் வயது போய் விட்டது. ;)) கண்ணையும் காணோம். (நான் தான் வைக்காமல் விட்டு இருப்பேன்.)

பாடசாலையில் ஒரு 'வாழ்க்கைத் திறன்' பாடப் பொருட்காட்சிக்காகத் தயாராகிக் கொண்டு இருந்த சமயம்... பக்கத்து வீட்டு அங்கிள் தனது காலுறைகளை எடுத்து வந்து "வீசப் போகிறேன், வேண்டுமா?" எனவும் எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துப் போய் என் வீட்டுப் 'பெட்டகத்தில்' பாதுகாப்பாக வைத்தேன். பின்பு ஆமையானது காலுறை. 'கழிவுப் பொருட்களிலிருந்து பயன்பாட்டுக்கான பொருட்கள்' என்னும் தலைப்பின் கீழே முதற் பரிசைப் பெற்றுக் கொடுத்தது.

இன்னுமொன்று சற்றுப் பெரிது... அதனை அடுத்த வட்டப் போட்டிக்காக என்று எடுத்துப் போய் விட்டார்கள். யார் வீட்டில் இருக்கிறதோ! அல்லது எந்தக் குட்டிக் குழந்தை கையிலாவது மாட்டி உயிரை விட்டு விட்டதோ தெரியாது.

இதனை மட்டும் என் ஆசிரியத் தோழி தனக்கு வேண்டும் என்று வாங்கி வைத்துக் கொண்டார். ஏழு வருடங்கள் முன்பு சென்ற போது தான் பத்திரமாக வைத்திருப்பதாக தன் 'ஷோ கேசை'க் காட்டினார். இம்முறையும் அது இருக்கிறதா என்று தேடினேன். இடம் மாற்றி இருக்கிறார். பிறகு பேச ஆயிரம் இருந்தது. நேரம் போதவில்லை, அதனை மறந்து விட்டோம்.

மறுநாள் வெளியே சென்று வரவும் வீட்டில் எனக்காக ஒரு உறை காத்திருந்தது,  உள்ளே இவர். கூடவே தகவலொன்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.. ;) என் மூத்தவர் அலனுக்குக் காட்ட வேண்டுமென்றால் நான் அதை நியூஸிலாந்து எடுத்துப் போகலாமாம். ஆனால் எத்தனை வருடம் கழிந்தாலும் மறு முறை நான் இலங்கை வருகையில் இதனைத் தன்னிடம் நினைவாகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமாம். ;) முன்பு என்னிடம் இருந்திருந்தால் இன்று உங்கள் கண்களுக்கு அகப்பட்டு இராது. நான்தான் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்து விட்டேனே. தோழியிடம் இருந்ததால் இன்று எனக்குக் காணக் கிடைத்தது. படம்பிடித்து வைத்துக் கொண்டு பத்திரமாகத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். என் நினைவாக அவரிடமே இருக்கட்டும்.

38 comments:

  1. என்ன கமெண்ட் போடறது தெரியவில்லை
    அதனால் ஒரு புது அனுபவம்
    முதன் முறை உறை போட்ட ஆமை பார்க்கின்றேன்

    ReplyDelete
  2. //உறை போட்ட ஆமை// கொஞ்சம் முன்னாலதான் யாரோ அதை ஸ்வெட்டர் போட்ட ஆமைன்னாங்க சிவா. ;))

    ReplyDelete
  3. இம்முறை நிஜமாவே சிவாதான் பர்ஸ்ட்பா!! வடைக்குப் பதில் ஒரு @}-->-

    ReplyDelete
  4. ஆஆஆஅ...மை ஆஆஅ..???:)

    ஏன் இத் தலைப்பு மேலே வரவில்லை? காஆஆஆஆஆத்துப் போயிடுத்தோஓஓஒ?

    முதலாவது ஆமை “சிலந்தி ஆமை” . சிலந்திவலைபோல் சூப்பராக இருக்கு.

    சொக்ஸில செய்ததை முதல்படத்தில் பார்த்ததும் உண்மை ஆ...மை... இப்பூடி இலங்கையில் இருக்கோ என வியந்து வேர்த்து விறுவிறுத்து... தெளிஞ்சுட்டேன்...

    ReplyDelete
  5. ஆமையை இவ்வளவு அழகாக வடித்து இருக்கின்றீர்கள்/

    ReplyDelete
  6. ஆமை அழகாயிருக்கு.குஷன் ஆமை செடிகள் பக்கம் பார்க்க நிஜ ஆமை போலவே இருக்கு.

    ReplyDelete
  7. ஆமை புகுந்த வீடு விளங்காது என்று பண்டைய பாட்டிமார்கள் சொல்ல கேள்விப் பட்டிருக்கேன்,ஆனால் நீங்களோ ஆமைக்கு சட்டை தைத்து அழகு பார்த்திருக்கின்றிர்கள் வாழ்த்துக்கள் !

    ஆமா இது குளத்து ஆமையா அல்லது நாட்டாமையா ? இல்லை காட்டாமையா ?

    ReplyDelete
  8. ஆ! மை மை!!! சூப்பர் இமா! வடைக்கு அடிதடிய மக்கள் விடமாட்டாங்களா.. நான் தான் ஆமை வேகத்தில இல்ல வருவேன் :))
    அந்த ஹோட்டலும் ரொம்ப அழகான இடத்தில இருக்கு. இவ்வளவு நாள் பத்திரமா வச்சிருக்காங்களே உங்க தோழி அதை சொல்லணும். சில நேரம் நம்முடைய கண்ணோட்டங்கள் நம்பிக்கைகள் எல்லாம் எப்படி மாறுது தெரியுமா... நான் பெயின்டிங் செய்த குட்டி அனிமல்களில் ஆமை மட்டும் யாரும் எடுக்கலை :) அனுப்பித்தரவா??

    ReplyDelete
  9. ஆ...........மை . கை வண்ணங் கண்டேன் ஓல்ட் இஸ் கோல்ட் என்பார்கள். அந்த நாள் ஞாபகங் களை மனதில் விட்டு செல்கிறது.

    குறிப்பு: நம்ம பக்கமும் வாங்களேன்...

    ReplyDelete
  10. இது உண்{ஆ}மையா?

    ReplyDelete
  11. ammulu said...
    இது உண்{ஆ}மையா?
    /// கலக்குறீங்க அம்முலு....

    ReplyDelete
  12. IlaVeera said...ஆ! மை மை!!! சூப்பர் இமா! வடைக்கு அடிதடிய மக்கள் விடமாட்டாங்களா.. நான் தான் ஆமை வேகத்தில இல்ல வருவேன் :))/// மறந்திட்டீங்களா இல்ஸ்ஸ்?, நீங்க ஆ...மை இல்லை, குழல் புட்டு:))).

    ReplyDelete
  13. எனக்கும் தான் வரேல்ல அதீஸ். ;) ஈ மெயில்ல இருந்து அனுப்பிப் பாப்பம் எண்டு அனுப்பினன்; படத்துக்குப் பதில் பெட்டி பெட்டியா வந்துது. திரும்ப எடிட் பண்ணிப் போட்டு இருக்கிறன். அது தானோ தெரியேல்ல.

    // “சிலந்தி ஆமை” // ஓ! நாங்கள் கட்டுப்பெட்டி ஆமை (star tortoise) என்கிறனாங்கள். (இப்ப வருவினமே சந்தேக சிகாமணிகள்... ;) ஸ்டார் எண்டால் கட்டுப்பெட்டியா எண்டு கேட்டுக் கொண்டு. ) ;))

    //சொக்ஸில செய்ததை முதல் படத்தில் பார்த்ததும்// ;))))

    ~~~~~~~~~~

    நன்றி ஸாதிகா & ஆசியா. ;)

    ReplyDelete
  14. //ஆமை புகுந்த வீடு விளங்காது.// நானும் கேள்விப் பட்டு இருக்கிறேன் அயுப். பிறந்தது முதலே என் வீட்டில் ஆமை இருந்து இருக்கிறது. ஒரு சமயம் 13 + 5 குட்டிகள் இருந்தன. சாதாரணமாக எல்லோரையும் போல்தான் இருக்கிறோம். எங்களுக்கு இதனால் சங்கடங்கள் வந்ததாக நினைவு இல்லை, சந்தோஷங்கள் தான் வந்து இருக்கின்றன.

    இவற்றைக் கட்டுப்பெட்டி ஆமைகள் (star tortoise) என்போம், அதிரா சிலந்தி ஆமை என்கிறார். காட்டாமை தான், இப்போ நாட்டாமை.

    ReplyDelete
  15. அதெப்பிடி விடுறது இலா! ;) வடைல ஆமைவடை இருக்குல்ல! ;))

    //அந்த ஹோட்டலும் ரொம்ப அழகான இடத்தில இருக்கு. // ம். ஒரு காலம் அது தான் கிறிஸ்ஸுக்கு வீடு போல. இப்போ நிறைய மாற்றங்கள் வந்தாச்சு. போய்ப் பார்த்தோம்.

    //இவ்வளவு நாள் பத்திரமா வச்சிருக்காங்களே உங்க தோழி அதை சொல்லணும். // அவங்க வித்தியாசமானவங்க இலா. ஒரு போஸ்டிங் இருக்கு எப்பவாவது அவங்களைப் பற்றி.

    //சில நேரம் நம்முடைய கண்ணோட்டங்கள் நம்பிக்கைகள் எல்லாம் எப்படி மாறுது தெரியுமா...// ம். ;) அது க்யூட்டா இருந்துதே, அனுப்பிருங்க.

    /// மறந்திட்டீங்களா இல்ஸ்ஸ்?, நீங்க ஆ...மை இல்லை, குழல் புட்டு:))) // ;)))) இப்ப அந்த இடத்துக்கு நான் போகலாம் எண்டு நினைச்சன். கிட்டடியில ட்ரைவர்ட பகுதிதான் ஓடிக் கொண்டு இருந்துது. மிஸ் பண்ணிட்டன். ;( திரும்பப் போகவேணும்.

    ReplyDelete
  16. ஹாய் நிலா.... இது என்ன 'குறிப்பு' எல்லாம்!! ;) வராமல் இல்ல நான். கருத்துச் சொல்லேல்ல என்றால் வரேல்ல என்று அர்த்தமா? இப்பதான் டைப் பண்ணக் கிடைக்குது. திரும்ப இந்த இயந்திரம் பறி போயிரும் நாளை. வருவன், யோசிக்காதைங்கோ.

    ~~~~~~~~~~

    அம்முலு...
    //இது உண்{ஆ}மையா?//
    ம். ;) என் ஆமை தான். ;)) ஆனால் நான் உண்ண மாட்டேன். நீங்களும் உண்ணாமை நன்று. ;))))

    உங்கள் வலைப்பூ விலாசம் கொடுக்கவும்.. ;))))

    ReplyDelete
  17. இப்பதான் நினைச்சேன் ஊரிலிருந்து வந்து ஆஆஆஆ மையையை கானோமேன்னு . கரேட்டா போட்டுட்டீங்க .எல்லாமே நல்லா இருக்கு . பெட்ஷீட் போட்டு வச்சிருக்கிறது அழகா இருக்கு

    ReplyDelete
  18. //சொக்ஸில செய்ததை முதல்படத்தில் பார்த்ததும் உண்மை ஆ...மை... இப்பூடி இலங்கையில் இருக்கோ என வியந்து வேர்த்து விறுவிறுத்து... தெளிஞ்சுட்டேன்..//

    ஹா...ஹா...என்கிட்ட இது மாதிரி ஒரு கதை டிராஃப்டில இருக்கு , போடனும் .

    நானும் மேலே ஏதாவது மாமி அங்கேயும் தன் கை’வண்ணத்தை’ காட்டிட்டாங்களோன்னுதான் நினைச்சேன் :-))))

    ReplyDelete
  19. ஆஹா...எவ்வளவு அழகு...நானும் கூட செடி பக்கத்தில் இருப்பது உண்மையான ஆமை என்று நினைத்து விட்டேன்...

    அருமை...

    ReplyDelete
  20. ஜெய்... அது பெட்ஷீட் இல்ல. டேபிள் கிளாத். ;)
    //என்கிட்ட இது மாதிரி ஒரு கதை டிராஃப்டில இருக்கு // சந்தேகக் கதையா??

    ~~~~~~~~~~

    //செடி பக்கத்தில் இருப்பது உண்மையான ஆமை// அது உண்மையான ஆமைதான் கீதா. ;)

    ReplyDelete
  21. //இவற்றைக் கட்டுப்பெட்டி ஆமைகள் (star tortoise) என்போம், அதிரா சிலந்தி ஆமை என்கிறார். காட்டாமை தான், இப்போ நாட்டாமை.//

    எது சொட்டர் போட்டவரா? போடா இருப்பவரா?

    ReplyDelete
  22. ம். வாங்கோ, வாங்கோ ஹைஷ் அண்ணே. ;)) எங்க கனகாலம் காணேல்ல?

    ReplyDelete
  23. nalla irukku andha aamai.
    i ve got to learn a lot from you ima.
    adhu real aamai endru ninaitheen .fantastic work

    ReplyDelete
  24. .ஆ மை ஆமை
    எவ்வளவு பிரமாதமாக யோசித்து
    தலைப்பை வைத்திருக்கிறீர்கள்
    ஆமையும் படங்களும் அற்புதம்.
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. Thanks for your compliments Angelin. ;) I liked all your work in your blog, shall visit often. ;)

    அந்தப் பக்கம் கைகாட்டி விட்ட சிவாவுக்கும் நன்றி. ;)

    ~~~~~~~~~~

    நன்றி ரமணி. ah!my! பழைய டெக்னிக். ;) உலகத்தைச் சுற்றிக் கொண்டிருந்த பழைய நட்சத்திரங்களுக்குப் பழக்கமான விஷயம். அடுத்த ஆமைப் பதிவில லிங்க் குடுக்கிறன், பாருங்கோ.

    ReplyDelete
  26. ஹ ஹ ஹா... ரொம்ப சிரிச்சேன் நேத்து நைட்... இப்ப தான் பதில் போட முடிஞ்சது. ஆமைவடை :))))))

    அதீஸ் ! அதை இன்னுமா மறக்கலை :)

    ReplyDelete
  27. ஜெய்... அது பெட்ஷீட் இல்ல. டேபிள் கிளாத்// hehee....

    இம்பூட்டு வெள்ளாந்தியா இருக்கிறீங்களே, லானி.
    என்னவோ போங்கள், இம்மி. எனக்கு இந்த ஆமைகளின் முகத்தை பார்த்தா ஒரு வித பயம். முறைச்சு பார்ப்பது போலவே இருக்கும்.

    ReplyDelete
  28. பாம்பு மாதிரி என்ன! ;)

    ReplyDelete
  29. கொஞ்சம் தாமதமாக வந்திருக்கேன் ரீச்சர்.. வகுப்பறையிலே இடம் உண்டா?

    இமாவை இருவது வருஷத்துக்குப் பின்னே போக வைத்த ஆமையார் வாழ்க!! என்றென்றும் பதினாறாக இருக்கிறார் (ஆமையைச் சொன்னேன் :) )

    கிறிஸ் அங்கிள் ரெஸ்டாரன்ட் வேலையோ? இமா கொடுத்து வைத்தவர் ;))

    ReplyDelete
  30. எல்லா ஆமைகளும் அழகாத்தான் இருக்காங்க இமா! குஷன் ஆமை க்யூட்ட்ட்!எனக்கும் அறுசுவை பார்க்கும்வரை ஆமைகளை வீட்டுல வளர்ப்பாங்க என்றே தெரியாது! ஆமைகளை பார்க்க ஆரம்பித்ததே உங்க ஆல்பத்திலேதான்.

    என்னமோ எனக்கும் ஆமையைப் பார்த்தா கொஞ்சம் அலர்ஜிதான்.ஓடுகள் தான் அழகா இருக்கு.ஹிஹி! :)

    ReplyDelete
  31. வாங்கோ சந்து. ;) உங்களுக்கு இல்லாத இடமோ! ;) என்ன, கன காலத்துக்குப் பிறகு புதினமாக அண்ணியும் தண்ணியும் ஒண்டா வந்து இருக்கிறீங்கள்?

    //என்றென்றும் பதினாறாக // சொல்லுற மாதிரிச் சொல்லி, சொல்லாத மாதிரி முடிப்பீங்கள். ;)

    //கிறிஸ் அங்கிள் // ரெஸ்டோரன்ட், ரிசெப்ஷன், பார், ஒஃபிஸ், கிச்சின், ஸ்டோஸ், எங்க வேணும் எண்டாலும் நிப்பார், வீட்டைத் தவிர. அங்க கனகாலம் மனேஜரா இருந்தார். (இதைத் தான் //இமா கொடுத்து வைத்தவர்// எண்டு சொன்னீங்களா? இப்பிடியான ஆக்கள் சமையலில மற்ற ஆக்களை விட அதிகமாக் குறை பிடிப்பாங்கள் தெரியுமா? ) ;))

    மகி... ;) //அறுசுவை பார்க்கும்வரை // எல்லாருக்கும் பழைய ஞாபகங்கள் வாற மாதிரி இருக்..கு. ;)) நல்லதுதான். ;))

    ReplyDelete
  32. ரொம்ப அழகா இருக்கு இமா

    ReplyDelete
  33. இமா... காலுறை ஆமை நிஜ ஆமை போலவே இருக்கு... ரொம்ப அழகு. இமா கை பட்டால் அழகு ஆகாத பொருளும் உண்டோ!!! - Vanitha

    ReplyDelete
  34. என்ன இமா இங்க வரவங்களுக்கு கொசுவத்தி ஏத்தி வைக்கிறீங்களா... தீப்புட்டி வேணுமா :))

    ReplyDelete
  35. அதுவும் டார்டாய்ஸ் கொசுவத்தி :)) இதை போடறதுக்குள்ள அந்த பின்னூட்டம் ஓடிட்டது :))

    ReplyDelete
  36. ஜலீஸ்... ;) ஒழுங்கா மரியாதையா.... 'இருக்கீங்க' ;) என்று சொல்லணும், ஓகேயா!! ;)) தாங்க் யூ.

    ~~~~~~~~~~

    ஹச்! ஹச்சும். ;))) இது வனிக்கு. ;)

    ~~~~~~~~~~

    //அதுவும் டார்டாய்ஸ் கொசுவத்தி // எப்பிடி விடாமப் பத்தவச்சாலும் சில கொசுக்கள் அங்கால பறக்காதாம். ;)))

    ReplyDelete
  37. Me llama mucho la atención la tortuga la veo que es de lana o de verdad me encantaría saber,es algo maravIlloso,pero no sé si es real,es demasiado original.abrazos.

    ReplyDelete
  38. Kia ora.

    Gracias por el cumplido y para el seguimiento de 'Mundo de Imma' Rosita.

    Me encanta tortises y las tortugas y los ha tenido como mascotas ya que tenía dos años.

    Las dos primeras fotos muestran a las mascotas de nuestros vecinos en Sri Lanka. El segundo ... era parte de mi lámpara de mesa hace 11 años. Ahora vivo en Nueva Zelanda y fue en un hotel recientemente a mi ciudad natal. Estas fotos fueron tomadas entonces. ;)

    Esa tortuga no es de lana. Me volví un calcetín viejo en un acerico. Ha estado viviendo en el escaparate de mi amigo durante los últimos veinte años. ;)

    No sé español, utilizando la facilidad de traducción de Google. ;) Espero que no le importará poco los errores que he hecho aquí. ;) Me pregunto cómo se las arregló para leer mi anuncio! ;)

    Imma

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா