Wednesday 18 May 2011

சௌசௌ

சௌசௌ பிரட்டல் 
தேவையானவை:-
   சௌசௌ – 1
   பெரிய வெங்காயம் – ஒரு பாதி
   கூனிக்கருவாடு – 1 மே.க
                      (சுத்தம் செய்து வைக்கவும்)
   யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் – ½ தே.க
   தக்காளி பேஸ்ட் – 3 தே.க
   புளி பேஸ்ட் – ¼ தே.க
   உப்பு அளவுக்கு

   தாளிக்க - கடுகு, சீரகம், கறிவேப்பிலை

செய்முறை:-
   # கடுகு, சீரகம் தாளித்து, கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கி எடுக்கவும். 
   # வெங்காயம் வதங்கியதும் கூனிக்கருவாடு சேர்த்து வதக்கவும்.
   # வெட்டிய சௌசௌ சேர்த்து மிளகாய்த்தூள், புளி, அளவுக்கு உப்பு சேர்த்து 1 ½ கோப்பை நீர் சேர்த்துக் கிளறி, மூடி வைத்து அவிய விடவும்.
   # காய் அவிந்து நீர் வற்றியதும் தக்காளி பேஸ்ட் சேர்த்துப் புரட்டி இறக்கினால் போது(மா)ம். ;))))

க்றிஸ் சமைச்சுப் போட்டுக் கண்ணுக்கு முன்னால கொண்டு வந்து காட்டவும்...
வடிவா இருக்குது, சாப்பிட்டுப் பார்ப்போம் எண்டு ஒரு கிள்ளுக்  கிள்ளி சாப்பிட்டிட்டன். சுப்பர். பிறகு வாய் கட்ட ஏலாமல் போச்சுது. பாணோட கொஞ்சம், கொஞ்சம் எண்டு நிறையவே சாப்பிட்டாச்சுது.

நடுவில உங்கள் எல்லார்டயும் நினைவு வரவும் படம் எடுத்து குறிப்பும் கேட்டு எழுதி இருக்கிறன். என்ட உலகத்தில முதல் சமையல் குறிப்பு இதாகத்தான் இருக்கும் போல. 

திருகோணமலையில இருக்கேக்க இந்த சௌசௌ 'ப்ரிசேவ்' மட்டும் கேள்விப்பட்டு இருந்தன். ரிச் கேக்குக்குப் போடுவம். இங்க அது கிடைக்காது. ஆனால் காய் தாராளமாகக்  கிடைக்குது. அங்கங்க வேலிகளில கொடி படர்ந்து இருக்கும். வெள்ளைப் பூ பூக்கும். கீரையும் விக்கிறாங்கள். 

ஒரு நாள் செபா வீட்டில கனக்க இருக்குதெண்டு தரவும் அறுசுவை பார்த்து ஒரு கூட்டு வச்சன். நல்லா இருந்துது. பிறகு அடிக்கடி சௌசௌ சமைக்கிறம்.

இன்னொரு நாள் செபா, "சௌசௌ காயில இருந்து வேர் வரும்," எண்டு சொல்லவும் ஆர்வம் வந்து பிறகு செபாவின்ட நண்பர்கள்ட்ட இருந்து ஒரு காய் வாங்கி வச்சன். அது முளை விடுற விதம் வினோதமாக இருந்துது.
நட்டு இருக்கிறன். நாலு பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு கொடி போதும் எண்டு இணையத்தில பார்த்தன். நட்டது நல்லா வளருது. இப்ப வெளிய இருட்டா இருக்கு. பிறகு படம் எடுத்துப் போடுறன். 

இந்த முறை க்றிஸ், தான் பருப்பு சேர்க்காமல் சமைச்சுப் பார்க்கப் போறன் எண்டு இப்பிடி நடத்தி இருந்தார். ரொட்டிக்கும் கோதுமைமாப் பிட்டுக்கும் இடியப்பத்துக்கும் கூட நல்லா இருக்கும்.

நல்லா ருசியாகச் சாப்பிட்டாச்சுது. தக்காளியும் கூனியும் இருந்துது எண்டு இப்ப ஒரு ‘அன்டிஹிஸ்டமைன்’ போட்டுட்டு வந்து டைப் பண்ணுறன். ;))

யாருக்காவது ‘சௌசௌ பிரிசேவ்’ செய்யிற விதம் தெரிஞ்சால் சொல்லுங்கோ.

28 comments:

  1. ஆன்டி,அங்கிள் நல்லாச் சமைச்சிருக்கர்.:P :P

    பேர் நல்லார்க்கே!!"வவ்,வவ்"-போல சௌ-சௌ!:)))))
    கிலன்னாதண்ணிவண்ணிண்டிவாங்கவாம்ம்ம்என்கிதுஓக்கைவீஈட்அன்ட்கம்பேக்க்கி

    இப்படிக்கு
    ஜீனோ
    ஜீனோ
    ஜீனோ

    ReplyDelete
  2. பிரமாதம்.பிரமாதம். இன்னும் பல விதமாகச் சமைத்துப்பாருங்கள்.

    ReplyDelete
  3. /இன்னும் பல விதமாகச் சமைத்துப்பாருங்கள்./Granny,ஆரையாக்கும் சமைச்சுப் பாக்கச் சொல்றீங்கள்?
    அங்கிளையோ? (ஓம் எண்டால் ஜீனோ வில் ஸே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!)
    ஆன்ரியையோ? (ஓம் எண்டால் ஜீனோ வில் ஸே கிலன்னாதண்ணிவண்ணிண்டிவாங்கவாம்ம்ம்என்கிதுஓக்கைவீஈட்அன்ட்கம்பேக்க்கி!!!)

    இப்படிக்கு
    ஜீனோ
    னோ

    .

    ReplyDelete
  4. //கிலன்னாதண்ணிவண்ணிண்டிவாங்கவாம்ம்ம்என்கிதுஓக்கைவீஈட்அன்ட்கம்பேக்க்கி// ;) சுருக்கமா கிக்கியா?? குழப்படிக்குட்டி. ;)))
    இப்ப குளாய்ல ஒழுங்கா தண்ணி வருது பப்பி, பௌசர்லாம் வாங்கப் போறதில்லை.

    ம்... ஹவ் இஸ் யுவர் டோராபுஜ்ஜி? ;)))

    //இன்னும் பல விதமாகச் சமைத்துப்பாருங்கள்.// காய் எடுத்து வைங்க மம்மி. ;)

    ReplyDelete
  5. செளசெள காயில் இருந்து வேர் பார்பது இது வே முதல் முறை.. நான் செளசெள அதிகம் சமைத்ததில்லை.. அதுவும் கூனியுடன்.. உங்களின் பதிவினை பார்க்கும் பொழுது ருசியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  6. நிச்சயமாக எடுத்து வைப்பேன் சனிக்கிழமை.
    ஞாயிறு வரும்போது எடுத்துக்கொண்டு போகலாம்.

    ReplyDelete
  7. சௌசௌ//

    அவ்..பெயரே குஸ் குஸ் மாதிரிப் புதுமையாக இருக்கே..
    இருங்க பதிவைப் படித்து விட்டு வாறேன்.

    ReplyDelete
  8. சமையல் குறிப்பு அருமை சகோ.

    சௌ,,,சௌ என்பது நான் கேள்விப் படாத ஒன்றாக இருக்கு. படத்தைப் பார்த்தேன், எதுவுமே கிளிக் ஆகலைச் சகோ.

    ReplyDelete
  9. நிரூபன்... நான் 'இமா' ;) அப்பிடியே கூப்பிடுங்கோ.

    'ப்ரிசேவ்' புதுசு இல்லை. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில இருந்து செபா கேக்குக்குப் போட்டுப் பார்த்து இருக்கிறன். மரக்கறியாக... இங்க வந்துதான் தெரியும்.

    இப்ப உங்களுக்காக மேல ரெண்டு இடத்தில லிங்க் குடுத்து இருக்கிறன். ஒன்று படம். மற்றதில விபரம் இருக்குது. பாருங்க. பெங்களூர் கத்தரிக்காய் என்று சொல்லுவாங்களாம் இதை.

    மலைநாட்டுப் பக்கம் கிடைக்கும் எண்டு நினைக்கிறன்.

    ReplyDelete
  10. இதில் கருவாடு போட்டு சமைத்ததில்லை.நல்லாயிருக்கு...கூனிக்கருவாடு ந்னா என்ன கருவாடு இமா??

    ReplyDelete
  11. நடுவில உங்கள் எல்லார்டயும் நினைவு வரவும் படம் எடுத்து குறிப்பும் கேட்டு எழுதி இருக்கிறன்./// karrrrrrrrr............rrrrrrrrrr........
    எனக்கு இந்த காய் பிடிக்காது. இருந்தாலும் யாராவது சமைச்சு தந்தா ட்ரை பண்ண ரெடி. எங்க ஆத்திலை எல்லாமே நாந்தேன் செய்யோணும்.

    ReplyDelete
  12. dried shrimps/ அது சென்னா கூனி .அதுதானே இமா
    (இந்த விவரம் மட்டும் எனக்கு நல்லா தெரியும் )
    அய்யோடா எங்க அம்மா சௌ சௌ சாம்பார் /கடலை போட்ட கூட்டு
    எல்லாம் செய்வாங்க .புது ரெசிபிக்கு நன்றி .

    ReplyDelete
  13. அடிக்கடி செஞ்சே என்னை அலற வப்பாங்க (ஆனா இப்ப செஞ்சு தர பக்கத்தில் இல்ல) ,படத்த பார்த்ததும்
    nostalgia

    ReplyDelete
  14. செள செள... எங்களுக்கும் புய்க்காது, அத்தோடு இங்கு கியைக்காது, ஒரு தடவை கிடைத்து வாங்கிவந்தால் .... அதைப் பார்த்துப்பார்த்தே நாள் ஓடியது, திடீரெனப் பார்த்தால் மரம் வந்திட்டுது, சாடியில் வைத்தேன் நன்றாக வந்திச்சா... அம்மா வந்தா அப்போ, அவவுக்கு வீட்டுக்குள் தாவரம் பார்த்தால் பெரிசா புய்ப்பதில்லை, வெளியில நடட்டோ என்றா.. ஓக்கை என்றேன்.. சமர்டைம்தான்... நட்டு ஒரு கிழமையில்... குளிர்தாங்காமல் கதை முடிஞ்சுது.

    எனக்கு ஆரோ சொன்னார்கள் இது ஈரப்பலாக்காய் மரம் மாதிரி என, நீங்க கொடி என்கிறீங்க அவ்வ்வ்வ்வ்வ்:). கொடிப்படம் எடுத்தால் போடுங்கோ.

    இது ஜீனோவுக்கு... வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).

    ReplyDelete
  15. இமா, என் சிற்றறிவிற்கு இது ஓர் புதிய மரக்கறியாகத் தான் இருக்கிறது. சிரமத்தைப் பாராது இணைப்பினைத் தந்து விளக்கமளித்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  16. இந்த எம் டீ ஜாம் சாப்பிட்டிருக்கேன். thanks for your explanation.

    ReplyDelete
  17. el fruto se parece a la kaiwa que es un verdura exótica,no me funciona el traductor ,se chino y rumano,pero no tu idioma ,pon un botón traductor si es posible por favor ,cariños y saludos ,buen fin de semana .

    ReplyDelete
  18. சௌ-சௌ தோல் சீவலையோ இமா? ;)
    புது ரெசிப்பியா இருக்கு. கருவாடு இல்லாம செய்து பார்க்கலாம்.எங்க வீட்டிலயும் செய்துதர ஆளில்ல,நானேதான் செய்யோணும்! ;)

    ReplyDelete
  19. இதில் நான் பருப்புபோட்டு வைப்பேன்.
    அம்மா, அப்பா நலமா? இப்போதுதான் உங்க பதிவுகளுக்கு பின்னூட்டம்
    எழுதமுடிந்தது.

    ReplyDelete
  20. குறிப்பு நல்லா இருக்கே இமா... அங்கிள் இதெல்லாம் கூட செய்வாங்களா?? சூப்பர் - வனிதா

    ReplyDelete
  21. //சென்னா கூனி// ம். மேனகாவுக்கு பதில் சொன்னதுக்கு தாங்க்ஸ் ஏஞ்சலின்.

    கொடிதான் அதீஸ். அது வின்டர் என்று இப்ப வளர ஸ்ட்ரைக் பண்ணுது. ;(

    மகி, //சௌ-சௌ தோல் சீவலையோ இமா?// இமாதான் எதுவுமே பண்ணலயே. ;) இது 'நளபாகம்'. //எங்க வீட்டிலயும் செய்துதர ஆளில்ல// காதுல பெரூசா வளையம் மாட்டி இருக்கேன். ;)

    Uncle enjoys cooking Vanitha. எங்க வெட்டிங் ஸ்ட்ரக்க்ஷர் ஐஸ் பண்ணினது அவங்கதான்.

    ReplyDelete
  22. சவ்சவ்வில் கூனிக்கருவாடு..ம்ம்ம்ம்..

    ReplyDelete
  23. //சௌ-சௌ தோல் சீவலையோ இமா? ;)//
    மகீ... இந்த சிரிப்புக்கு அர்த்தம் புரியாம தோல் சீவப் போய்... இடது உள்ளங்கை முழுக்க தோல் உரிஞ்சு... 3 நாள் கழிச்சு சரியாச்சு.

    ம்.. இப்பிடி ஆகும் என்று தெரிஞ்சு இருந்தா நிச்சயம் சொல்லி இருப்பீங்க. எனக்கு மட்டும் தான் ஒத்துக்கலயோ என்னமோ.

    இதுக்காகவெல்லாம் சாப்பிடாம விட முடியாது, இனிமேல் அப்புடியேதான் சமைக்கப் போறேன். இல்லாட்டா... இருக்கவே இருக்கு க்ளவ். ;)

    ReplyDelete
  24. //என்ட உலகத்தில முதல் சமையல் குறிப்பு இதாகத்தான் இருக்கும் போல. //


    இன்னும் இதுப்போல நிறைய போடுங்க ..:-)


    அதுசரி யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூளுக்கு நான் எங்கே போவது ..? அவ்வ்வ்வ்

    ReplyDelete
  25. ஆஹா .மஹி கேட்டுட்டாங்க ..நானே கேட்க வேண்டிய கேள்வி தோல் சீவாம அப்படியே பெங்காலி டைப்பில வ்ச்சிருக்கீங்களே ஹி...ஹி.. :-)

    ReplyDelete
  26. //யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூளுக்கு நான் எங்கே போவது ..?// ;) இது இலங்கைக் கடைகளில் மட்டுமல்லாமல் இந்திய மளிகைக்கடைகளிலே கூட கிடைக்கும் ஜெய்லானி. இல்லாவிட்டால் வீட்டில் தயாரித்து எடுக்கலாம். குறிப்பு வேண்டுமானால் எடுத்துத் தருகிறேன்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா