Wednesday 7 March 2012

இன்றைய செயற்திட்டம்!!


'ப்ரொஜெக்ட்' தமிழில் எப்படி எழுதுவது!! கர்ர்..
வேறு ஏதாவது நல்ல வார்த்தை இருக்கக் கூடும்.

பாடசாலை மின்னஞ்சலில் வந்தது ஒரு செய்தி... 'Snow White நாடகத்திற்காக ஆடை தயாரிப்பில் உதவ ஆட்கள் தேவை,' என்று. இதுபோல் பதினைந்து இருந்தன; செடி கொடிகளாம். கீழே கிழித்து விட்டிருப்பது வேர்கள்.
இழுபடக் கூடிய துணியில் தைத்திருந்தார்கள். கைகள் நீளமாக... எந்த அளவு மாணவர்களும் அணியக் கூடிய விதமாக... சிறிதாக்க, உருட்டி விட்டால் போதும்.

பதினைந்து ப்ளாத்திக்கு கொடித் துண்டங்கள்... சிலவற்றில் மிளகாய். மிளகாய் கொடியில் காய்த்து பார்த்திருக்கிறீர்களா யாராவது!! ம்.. சிலவற்றில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள், சிலவற்றில் பேரிக்காய்கள். ஒன்றில் மட்டும் தோடம்பழங்கள். அனைத்தும் கொடியில்!! வைத்திருந்தார்கள்.

பாடசாலையில் இடைவேளைகளின்போதே நான்கு தைத்துக் கொடுத்துவிட்டேன். வீட்டிற்குக் கொண்டு வந்தவை இரண்டு. அதில் ஒன்று இது... உங்கள் பார்வைக்கு.

10 comments:

  1. Mirror mirror on the wall...
    Who is the fairest of the all?

    :) :) :)

    ReplyDelete
  2. PROJECT என்பதற்கு தமிழ் வார்த்தையை நீங்களே கண்டு பிடியுங்கள், செயல் திட்டம் என்று வைத்துக் கொள்ளலாமா?

    ReplyDelete
    Replies
    1. குழப்புறீங்க சூரியஜீவா. ;)

      ஏற்கனவே அதைத்தானே தலைப்பாக வைத்திருக்கிறேன்!! செயற்திட்டம், செயல் திட்டம் இரண்டுக்கும் வேறு வேறு கருத்துக்கள் இருக்கின்றனவா?

      Delete
  3. ம்ம்ம்ம் நல்லாத்தான் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு அதீஸ். ;) கருத்துக்கு நன்றி. ;)

      Delete
  4. அழகாய் இருக்கு இமா :) யாராவது குட்டி போட்டிருக்கும் படம் போட்டிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும் - வனிதா

    ReplyDelete
    Replies
    1. //யாராவது குட்டி போட்டிருக்கும் படம்// ;)) எங்க வட்டாரத்துல குட்டி போடுற நிலமைல இப்போதைக்கு யாரும் இல்லியே வனீ! ;( தொட்டி மீன்கள்கூட எல்லோரும் சிம்ரன் மாதிரி இருக்காங்க. படத்துக்கு எங்கின போவேன் நானு!! ;))

      தாங்க்ஸ்ங்க. ;)

      Delete
  5. பிற்பாடு தைத்து முடியாத எல்லாத் துணிகளும் என்னிடம் வந்தன. முழுவதாகத் தைத்து முடித்துக் கொடுத்தாயிற்று. இன்று ஒரு மின்னஞ்சல்... நாடகத்திற்கு எனக்கு இலவச அனுமதி உண்டாம். வருகிற 31ம் தேதி மதியம் போகிறேன். ;)

    ReplyDelete
  6. இதெல்லாம் ஓவர் ;) நான் குட்டி பிள்ளைகள் இதை போட்டிருக்குற மாதிரி போட்டோ கேட்டேன். - வனிதா

    ReplyDelete
  7. நாடகத்துக்கு போறீங்களோ!!! எஞ்சாய் :) - வனிதா

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா