Monday 1 April 2013

என் பொருள்தான் எனக்கு மட்டும்தான்!

ஆசியா தனது என் பொருள்தான் எனக்கு மட்டும்தான்  இடுகையின் கீழ் என் கருத்துக்குப் பதிலளிக்கையில் என்னையும் பின்தொடருமாறு கேட்டிருந்தார்கள்.

கியும் தன்

தொடர்பதிவு, என் பொருட்கள்...

இடுகையில் தொடர அழைப்பு வைத்திருந்தார்.

பகிர்வதற்கு சில பொருட்கள் உள்ளன. முதலில்... இது.
செபாவிடம் ஒரு Japanese coffee set முழுமையாக இருந்திருக்கிறது. சாதாரண tea cups போல இல்லாமல் அவற்றின் பாதி அளவுதான் கொள்ளும்.
நான் பிறந்த வருடம் என் தந்தை சகோதரர்களில் மூவருக்கு குழந்தைகள் கிடைக்க, அப்பா ஒவ்வொருவருக்கும் ஒரு கப் & சாஸர் கொடுத்திருக்கிறார். மீதி இரண்டுக்கு என்ன ஆயிற்று என்று செபாவுக்கும் நினைவில் இல்லை. வேறு யாருக்காவது கொடுபட்டிருக்க வேண்டும். இது என்னுடையது. தேய்மானத்தைப் பாருங்கள். ;)
சென்ற தடவை ஊருக்குப் போயிருந்த போது coffee mug, sugar cup, milk jug எல்லாவற்றையும் எடுத்துவரத்தான் நினைத்தேன். நாத்தனாருக்கென்று கொடுத்துவிட்டு ஒவ்வொரு தடவையும் போய் எதையாவது சுருட்டிக் கொண்டு வந்துவிடுவது என்னவோ போல் இருக்க கேட்காமல் வந்துவிட்டேன். ;)

சாதாரணமாக chip இருந்தால் அந்தக் கோப்பையைத் தூக்கிப் போட்டுவிடுவேன்.
இது மட்டும் என்னிடம் இருக்கிறது. எப்போதாவது ஆசைக்கு வெளியே எடுப்பேன். இன்று உங்களுக்காக வெளியே வந்திருக்கிறது.

 

உள்ளே... கவிசிவாவின் 'கருப்பட்டி காபி'.

காஃபியைப் பார்வையால் மட்டும் அருந்துங்கள். கோப்பை... அது என் பொருள்; எனக்கு மட்டும்தான். ;) 

~~~~

நாங்கள் நால்வரும் ஒரே பாடசாலையில் கற்றோம். இப்போது நான் இங்கு, இருவர் ஊரில் இருக்கிறார்கள். (ஒருவரது மகன் இங்கு என்னைப் பின்தொடர்கிறார்.) ஒருவர் காலமாகி ஒரு வருடம் ஆகிவிட்டது.

21 comments:

 1. அடேங்கப்பா...இம்புட்டு வயசாச்சா இந்த காஃபிகப் & ஸாஸருக்கு? ;))))))) :) அழகாய் இருக்கு, பொக்கிஷத்தைப் பத்திரமா வைச்சிருங்க.

  என்னிடம் இன்னொரு பொருள் அம்மா வீட்டில் இருக்கு, அதைப் படமெடுத்தேன் என நினைத்தேன், ஆனா தொடர்பதிவு நேரத்தில் தேடியபோது கிடைக்கவில்லை. படம் இருக்குதோ, இல்லையோ தெரியல! அடுத்தமுறை ஊருக்கு போயிட்டு வரும்போது கட்ட்ட்ட்ட்ட்ட்டாயம் அந்தப் பொருளை எடுத்துட்டு வந்துருவேன், அவ்ளோ ஸ்பெஷல் அது! என்னன்னு மட்டும் கேட்டுராதீங்க யாரும்! ;) :)

  ஆனாலும், ஒரே ஒரு பொருளை மட்ட்ட்ட்ட்டும் போட்டு ஏமாத்திப்புட்டீங்களே இமா?!

  ReplyDelete
  Replies
  1. கர்ர்.. என்ன சிரிப்ஸ்!
   //அவ்ளோ ஸ்பெஷல் அது! என்னன்னு மட்டும் கேட்டுராதீங்க யாரும்! ;) // கேக்கல. எனக்கே தெரியுமே! ஆனா சொல்ல மாட்டேன்ன். ;)

   //ஒரே ஒரு பொருளை மட்ட்ட்ட்ட்டும் போட்டு // கர்ர்.. இதுக்கே பெரிய பாடாப் போச்சு. ;( டச் விட்டுப் போச்சு. மேல பாருங்க, ஒவ்வொரு லைன் ஒவ்வொரு சைஸ்ல வந்துட்டு மாற மாட்டுதாம். ;(

   ஒவ்வொரு பொக்கிஷத்தையும் ஒரு தனி பதிவா போட்டு 2014 ஆரம்பிக்குறதுக்குள்ள ஒரு 1000 போஸ்ட் தேத்திரலாம் என்று இருக்கேன். ;D

   Delete
 2. பகிர்வுக்கு மிக்க நன்றி இமா. கப் & சாஸர் கவிசிவாவின் கருப்பட்டி காப்பியுடன் மிக அழகு..கப்சாஸருக்கு உங்க வயதா ! வாழ்க பல்லாண்டு!இமாவின் ஜப்பானீஸ் காஃபி செட் பற்றிய பகிர்வும் ஆச்சரியம் தான்..

  ReplyDelete
  Replies
  1. //கப்சாஸருக்கு உங்க வயதா// ;) இல்ல என்னைவிட ஒரு வருஷமும் ஒரு மாசமும் மூப்பு. ;)
   //வாழ்க பல்லாண்டு!// ஆஹா! அங்க இருக்கே ரெண்டு பல்லு அடியாளம், பார்க்கல! ;)

   Delete
 3. இமா பகிர்விற்கு மிக்க நன்றி,மகிழ்ச்சி.கப் & சாஸர் மிக அழகு. என் இணைப்பில் லின்க் கொடுத்து விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன், மிக்க நன்றி ஆசியா.

   Delete
 4. காபி கோப்பையும் அருமை, அதில் உள்ள காபியும் அருமை :) - வனிதா

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கீங்க வனி. சந்தோஷம். _()_ :-)

   Delete
 5. கப்பும் கருப்பட்டி காபியும் சூப்பர்.. வயது ஏற ஏற காபி கப்பின் மதிப்பும் ஏறிட்டே போகும்..பத்திரமா வையுங்கள் இமா.

  ReplyDelete
  Replies
  1. இது சின்னதா உடைஞ்சிருக்கு. பெருசா மதிப்பு... விலை மதிப்பு என்று கிடையாது. என் ஆசைக்கு நான் இருக்கும் வரை இருக்கட்டும். ;)

   Delete
 6. பொக்கிஷம் சூப்பர்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. mee the first... enakuthan mudal cofee......

  ReplyDelete
  Replies
  1. அதுல நிறை...ய கருப்பட்டி இருக்கு, குடிப்பீங்களா? ;)

   Delete
 8. இது எங்கள் திருமணப் பரிசாக என் நண்பி ஒருவர் தந்தது. இன்னும் ஒரு நண்பி தந்த fruit salad set இன்னும் என்னிடம் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. Hi Mumma! ;) Thanks for the cup; Thanks for saving it for me. Thanks for all the lovely memories & for the lovely comment.

   Lov uuuu ;)

   Delete
 9. நினைவில் தங்கிய பொக்கிஷம் அருமை..!

  ReplyDelete
 10. //பகிர்வதற்கு சில பொருட்கள் உள்ளன. முதலில்... இது.//

  மத்த பொருட்களும் பார்க்க ஆசையா இருக்கு.. சீக்கிரம் போடுங்க இமா.... உங்க கப் & சாசர் அருமை... ரொம்ப நாள் பத்திரமா வச்சு இருக்க பொருள் பார்க்கும் போதே சந்தோஷம் தான்....

  ReplyDelete
 11. கப் அதிலுள்ள காபியும் அருமை

  ReplyDelete
 12. இவ்வளவு வருடமா பாதுகாத்து வைத்திருகிறீங்களே. பாராட்டவேணும்.

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா