Wednesday 10 July 2013

வாதுமை கேக்

சுனாமியின் போது மட்டுநகரிலிருந்த என் தந்தையின் சகோதரி குடும்பத்தை இழந்து போயிருந்தோம். இங்கும் விடுமுறைக் காலம் அது. தொலைபேசியில் விசாரித்து விபரம் அறிந்து கொண்டு என்னைப் பார்க்க வந்தார் சக ஆசிரியர் (ஆசிரியை அல்ல) ஒருவர். வரும்போது ஒரு கேக் கொண்டுவந்தார். இவர் நன்றாகச் சமைப்பார். கேக் சுவை குறிப்பைக் கேட்கத் தூண்டியது. 

விஸ்கி சேர்க்க வேண்டும் என்பதுதான் சிக்கலாக இருந்தது. அதற்கு எங்கே போவது! பிறகு இதற்காகவே சின்னதாக ஒரு போத்தல் வாங்கி வைத்தேன்.

பலமுறை சமைத்திருக்கிறேன். பாரமில்லாது, மெத்தென்று இருக்கும் இந்த கேக் பாடசாலையில் அனைவருக்கும் பிடிக்கும். சமீபத்திலும் செய்தேன். குறிப்பைப் பகிரத் தோன்றியது

Walnut Cake

தேவையானவை

soft butter - 200 கிராம்
பழுப்புச்சீனி - 150 கிராம்
சீனிப்பாணி (treacle) - 4 மே.க
முட்டை - 2
மா - 150 கிராம்
பேக்கிங் சோடா - 2 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை
பால் - 4 மே.க
விஸ்கி - 4 மே.க
சிறிதாக நறுக்கிய வாதுமை - 140 கிராம்
  • அவணை 160°c யில் சூடு படுத்தவும்.
  • பட்டர், சீனி, சீனிப்பாணி மூன்றையும் குழையும் வரை கலக்கவும்.
  • முட்டையைச் சேர்த்து அடிக்கவும்.
  • மா, பேக்கிங் சோடா, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் குழைக்கவும்.
  • பாலையும் விஸ்கியையும் சேர்த்து நன்கு அடிக்கவும்.
  • வாதுமையைச் சேர்த்துக் கலந்துவிடவும்.
  • வட்டமான கேக் தட்டில் ஊற்றி 50 நிமிடங்கள் வேகவிடவும்.
சில சமயங்களில் 180°யில் 25 - 30 நிமிடங்கள் வைத்து எடுப்பேன். கொஞ்சம் புடிங் பக்கம் இருக்கும்; ஆனால் கேக்கை விட இதற்கு வீட்டில் வரவேற்பு அதிகம்.
 
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியமான குட்டிப் பையனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். ;)

24 comments:

  1. Is it today Imma? Happy birthday to Mr.A!!

    Cake looks delicious, can u suggest any thing for whisky?

    ReplyDelete
  2. //Happy birthday to Mr.A!!// ;))) பரவால்ல குட்டி a இவங்க.
    Cake looks மட்டும் இல்ல,டேஸ்ட்ஸ் delicious too.

    ReplyDelete
    Replies
    1. //can u suggest any thing for whisky?// avvv!! முன்னபின்ன குடிச்சுப் பழக்கம் இருந்தா சொல்லலாம்.

      ஊறுகாய்!! ;)))))

      Delete
    2. // முன்னபின்ன குடிச்சுப் பழக்கம் இருந்தா சொல்லலாம்.

      ஊறுகாய்!! ;)))))// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*1000 இமாப்பாட்டி! :))))))

      //சொல்லவே இல்ல பேரன் பிறந்ததை.. // என்ன இமா, இப்படி முக்கியமான மேட்டர்லாம் சொல்லாம இருக்கலாமா? இது நியாயமா..நீதியா..தர்மமா? எல்லாரும் வாங்க, இமாவை என்னன்னு கேப்போம்! ;))))) ஆமாம், பேரன் பேர் என்னங்க இமாப்பாட்டி? :))))

      Delete
    3. டாய்ய்ய்!! குழப்படி. ;))

      Delete
    4. ha:) haa:)

      என்னன்னு கேப்போம்! ;)))))//

      என்ன ஊறுகாய் ??
      btw ..cakes looks delicious...

      //சக ஆசிரியர் // Mr Angel ...note this point :))

      Delete
    5. //சக ஆசிரியர் // தப்பாக சொல்லீட்டேனா? ம்...
      - ஆசிரியர்!

      //என்ன ஊறுகாய் ?? // இதுக்கு மகியே மேல். ;))) எனக்கு... செபா போடும் எலுமிச்சை ஊறுகாய் பிடிக்கும். Ruchi ப்ராண்ட் ஆவக்காய் ஊறுகாய் & முருங்கைக்காய் ஊறுகாய் பிடிக்கும். நான் செய்யும் கத்தரிக்காய் ஊறுகாய் பிடிக்கும். ;)))

      Delete
    6. Mr.Angel :))

      நான் எங்க ஆ...காரரை .சொன்னேன் இமா :)

      Delete
  3. சொல்லவே இல்ல பேரன் பிறந்ததை.. குட்டி பையனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ம்ம்..இங்க கிடைக்காத பொருளை எல்லாம் போட்டு கேக் படத்தையும் போட்டு ஆசைய தூண்டாதீங்க.. நா எங்க போறது சீனிப்பாணி வாங்குறதுக்கு..:)

    ReplyDelete
    Replies
    1. //சொல்லவே இல்ல பேரன் பிறந்ததை// வதந்தியை நம்பாதீர். ;)))

      Delete
    2. http://www.indiamart.com/sun-agrofoods/treacle.html
      இலங்கைல கிடைக்கும் எங்கூர் ப்ராண்ட். நிச்சயம் எல்லா இடமும் கிடைக்கும்.

      Delete
  4. கேக் நல்லா இருக்கு.ஆனா எக் போடாமல் செய்யமுடியாதோ.
    பையனுக்கு வாழ்த்துக்கள்.மிக்க நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் ட்ரை பண்ணிப் பார்க்கிறன். சரியா வந்தால் சொல்லுறன் ப்ரியா.

      Delete
  5. அதாரு குட்டிப்பையன்?இப்படி குழப்படி பண்ணி உங்க பிளாக் வாசிப்பவர்களை தலையை பிய்த்துக்கொள்ள வைப்பதில் இமாவுக்கு நிகர் இல்லை:(

    /சொல்லவே இல்ல பேரன் பிறந்ததை// வதந்தியை நம்பாதீர். ;)))..

    ம்ஹும்..

    நான் நம்புவேன்ன்ன்ன்ன்ன்ன்.

    இமா பாட்டிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சாரி ஸாதிகா. சில விஷயங்கள் அப்பிடி தன்னால ஆகிருது. போஸ்ட் தட்டிட்டே இருக்க சைட்ல நினைப்பு வருது. வாழ்த்தாம போனா எப்பிடி! அவங்கம்மா படிப்பாங்க. சின்னதாவாச்சும் ஒரு சந்தோஷம் வரும்ல!

      //நான் நம்புவேன்ன்ன்ன்ன்ன்ன்.// நல்ல பொண்ணு. வதந்தியை நம்ப வேணாம் என்று சொன்னதை நம்பினதுக்கு தாங்ஸ். ;)

      //இமா பாட்டிக்கு வாழ்த்துக்கள்.// (இன்னும் கொஞ்சம் ஸாதிகாவை குழப்பலாமா இமா!!) வாழ்த்துக்கு மிக்க நன்றி ஸாதிகா. ;))))))

      Delete
  6. கேக் ரொம்ப நல்லாயிருக்கு..விஸ்கிக்கு பதிலா என்ன சேர்க்கலாம்??

    பேரன் பிறந்திருக்கானா சொல்லவே இல்லை இமா பாட்டி!! பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. //விஸ்கிக்கு பதிலா என்ன சேர்க்கலாம்??// பதில் சொல்றதுக்கு 'விஸ்கி' கேள்வியா என்ன!! (யோசிக்காம ஒரு போஸ்ட் போட்டாச்சு. இனி எதையாச்சும் சொல்லித் தப்பணும் இமா.) ;))

      //பேரன் பிறந்திருக்கானா சொல்லவே இல்லை இமா பாட்டி!! பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!/// அவ்வ்வ்!! இது என்ன குழப்பமா இருக்கு!! பேரன் பிறந்தா பேரனுக்கே ஒரு வருஷம் கழிச்சுத்தான் பிறந்தநாள் வரும். நீங்க பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றீங்க! ஒண்ணுமே புரியல மேனகா. ;))) எனிவேஸ் தாங்ஸ்... என்னைச் சிரிக்க வைத்ததற்கு. ;)

      Delete
  7. பிறந்தநாள் கொண்டாடும் பிரியமான குட்டிப் பையனுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். ;)

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி அக்கா...
      நீங்களாவது என்னை நம்புறீங்களே! சந்தோஷமா இருக்கு. ரொம்ப நன்றி அக்கா. ;)

      Delete
  8. கமண்ட் போட்ட, வாழ்த்திய, சிரிக்க வைத்த அனைத்து நட்புக்களுக்கும் என் அன்பு நன்றிகள்.
    ~~~
    பி.கு
    பூஸ் இப்போதைக்கு உலகத்தை எட்டிப் பார்க்காது என்று தெரிகிறது. தப்பினேன். ;)))

    ReplyDelete
  9. Yummy Cake Imma, what did u use to write the letters on the cake?? doesn't look like butter icing . was it powdered suger ??

    ReplyDelete
    Replies
    1. Yup! Stencil & a heavy coat of icing sugar. Used the shaker.
      This cake is real yum! Worth trying Vaani.

      Delete
  10. thanks for the information Imma. will try sometimes later and get back to you :))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா