Wednesday 27 February 2019

வெற்றிலை

வெற்று + இலைதானே! பூக்காது, காய்க்காது என்பதனால் இதனை வெற்றிலைக் கொடி என்கிறார்களாம்.

 ஆனால் அதன் சுவையே தனிதான்.
எங்களை வளர்த்த "மம்மா" (போர்த்துக்கேய வம்சாவளியினர்) வெற்றிலை போடுவார். அவருக்காக எங்கள் வீட்டில் ஒரு இரும்பு உரலும் உலக்கையும் இருக்கும். பிற்பாடு அவர் வராது நின்றதும் அது எம் சமையலறையில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அப்போதெல்லாம் மின்சார இயந்திரங்கள் இல்லை. இஞ்சி உள்ளி தட்ட... ரசத்துக்கு இடிக்கவென்று ராக்கையில் வைத்திருந்தோம். பிறகு ஊருக்குய்ப் போயிருந்த போது மச்சாள் வீட்டில் பார்த்தேன். எடுத்து வர விருப்பமாக இருந்தது. அவர்கள் பொருளாகிப் போனதன் பின் எத்தனையைத் தான் கேட்பது! இருந்தாலும்... எனக்கும் அதற்குமான‌ உணர்வுப் பிணைப்பு அவர்களுக்கு இருக்கப் போவதில்லை. இப்போது கூட‌ அது வெளியேற்றப்பட்டிருக்கலாம்.

எம் வாழ்வும் ஒரு வகையில் வெற்றிலை தான். உணர்வு இருக்கும் வரை, வேறு இணைப்புகளுடன் சேர்கையில் அதன் சிறப்பு தனிதான்.
இது அதிராவுக்கு நூறாவது இடுகைக்கு மொய் எழுதின வெற்றிலை. ;-)

14 comments:

 1. ஹஹ்ஹா சூப்பர் .தர்மபுரில எங்க வீட்டுக்கு பக்கத்தில் வெற்றிலை தோட்டம் .வாசமா யிருக்கும் .பெரிய இலைகள் .கம்மார் வெற்றிலைனு சொல்வாங்க இளங்கருப்பு கலந்த பச்சை நிறமா இருக்கும் ஆலிவ் இலை நிறம்னும் சொல்லலாம் .
  இந்த வெற்றிலை செடி உங்க வீட்லயா ?
  அப்புறம் வெற்றிலையில் ரசம் செய்வார்களாம் ..இங்கே கிடைக்குது செய்யப்போறேன் நான் :) உங்க போஸ்ட் பார்த்து ஐடியா வந்து

  ReplyDelete
  Replies
  1. இது இங்கு வீட்டில் வளருகிறது அஞ்சு. வாசனை சுவை எதுவும் இல்லை. பெரும்பாலான குஜராத்திகள் வீடுகளில் வ்வளருக்கிறது, அவர்கள் மதச்சடங்குகளுக்காக.

   Delete
  2. வெற்றிலையின் ஒரு பானம் அறுசுவையில் வனி போடட்்டிருந்தாங்க, ட்ர்ரை பண்ணினேன். இலையின் நிறம் சரிய்யில்லை; ஜூசும் நல்ல நிறட்த்ட்தில் வரவில்லை. சுவை... ஓகே. ஒழுங்கான வெற்றிலை கிடைக்குமா என்று தேடுகிறேன்.

   Delete
  3. எ.பி பொறுத்தருள்க.

   Delete
 2. பூசின் 100 வது போஸ்டுக்கு போட்டதா இது ? நைஸ்

  ReplyDelete
  Replies
  1. அந்த மொய் எழுதிய வெற்றிலை மட்டும். ;-)

   Delete
 3. வெற்று இலைதான். ஆனா பலன்கள் அதிகம். எங்க வீட்டிலும் இருந்தது, இப்பவும் இருக்கு ஆனா இடம் மாறி. ப்ரெஷ் ஆ குட்டி இலை சாப்பிட விருப்பம்.


  ReplyDelete
  Replies
  1. எனக்கும் விருப்பம் ப்ரியா. ஊரில் கமுகமரத்தில் படரவிட்டிருந்தேன். சின்னவர்களிடம், 'அதற்கு மருந்து அடித்திருக்கிறேன். சாப்பிட வேண்டாம்,' என்று சொல்லி வைப்பேன். இல்லாவிட்டால் கொடி வளரும் முன்பே காலியாகி இருக்கும். ;-)

   Delete
 4. Replies
  1. வருகைக்கு நன்றி தனபாலன்.

   நான்கு மிளகும் வெற்றிலைய்யும் சேர்த்துச் சாப்பிட கொழுப்பு குறையும் என்கிறார்கள். இடைக்கிடையே சாப்பிடுவேன். கூடவே நிறைய ஆகாரமும் சாப்பிட்டு வைத்ததால் பலன் இருந்ததா என்பது தெரியவில்லை. ;-)

   இங்கு 'காவகாவா' என்று ஒரு வகைச் செடி - வெற்றிலையின் சகோதரி - இருக்கிறது. பல்வலிக்கு அதன் இலையை மென்று வாயில் அடக்கிக் கொள்வார்கள். மரத்துப் போகும். வெற்றிலையும் அதே வேலையைச் செய்யும் என்று நினைக்கிறேன்.

   Delete
 5. //இது அதிராவுக்கு நூறாவது இடுகைக்கு மொய் எழுதின வெற்றிலை. //
  அந்த ஜொந்தக் கதை யோகக்கதையை ஏன் கேட்கிறீங்க இமா, அதில 239 கொமெண்ட்ஸ் வந்திருக்கு, ஆனா நீங்க வந்தது வாழ்த்த, கடைசியிலதான் கர்ர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. ;) இங்க உடனே வர ஏலாமல் ஏதாவது இருந்திருக்கும் அதீஸ். லேட்டா எழுதுற மொய் கணக்கில வராதோ!

   Delete
 6. Replies
  1. ;-) நானே நிறையக் காலம் ஆப்சன்ட்.

   Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா