தொழிற்சாலை திறப்புவிழா என்று நினைக்காதைங்க.
சில பல காரணங்களுக்காக தேவைப்பட்டது.
காரணம் 1. சிலர் சிரிப்பார். சிலர் அழுவார். சிரித்தாலும் டிஷ்யூ கேட்பார். அழுதாலும் டிஷ்யூ கேட்பார். இன்று முதல் இமாவைக் கூவாமல் இந்தப் பப்பீஸ் & பூஸ் பெட்டியிலிருந்து தேவையானவர்கள் தேவைக்கு ஏற்ப எடுத்து தமக்கு உதவிக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
காரணம் 2. முன்னால இங்க சுற்றிக் கொண்டு இருந்த ஆக்களுக்கு எல்லாம் அப்பப்ப எதாவது ட்ரீட் கொடுத்து இருக்கிறன். நடுவில கொஞ்சம் மிஸ் பண்ணீட்டன். (ஆனால் மிஸ் பண்ண இல்ல.) இமாவின் உலகைத் திடீரென்று சில பல நட்சத்திரங்கள் சுற்ற ஆரம்பிச்சு இருக்கினம். 39, 40, 41 எண்டு டக் டக்கெண்டு நம்பர் கூடிக் கொண்டு போய் 42ல நிற்குது. கவனிச்சதும் கண் கலங்கிப் போச்சு... சந்தோஷத்தில தான். பெட்டியை வெளியில எடுத்திட்டன். விருந்தானாலும் மருந்தானாலும் பகிர்ந்து கொள்ள வேணும் எல்லோ! வாங்கோ, எடுத்துக் கொள்ளுங்கோ.
காரணம் 3. பிறகு... யார், எந்த நெப்போலியன்ட குதிரையை வாங்கி வந்து ஸ்பீ...டாகத் துரத்தினாலும் இமா உலகம் ஆமை வேகத்திலதான் சுற்றும். ஏனெண்டால்... அது அப்பிடித்தான். முயலாமை காரணம் அல்ல. இயல் ஆமை காரணம். இயலாமை காரணம். இந்த சோகத்தில / சந்தோஷத்தில கண்ணில இருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது.
காரணம் 4. நிலமை இப்படி இருக்க.. 'நியூ' ஆடிஷன்ஸ் சிலர் உலகில் இணைந்து இருக்கிறார்கள். (இங்க ஆ.க)
காரணம் 5. அவர்களைப் பற்றி அடுத்தடுத்த இடுகைகளில் தெரியவரும். தெரிய வரும்போது 'ah! my!' என்று நிச்சயம் வாயில் கை வைக்கப் போறீங்க. அப்ப... இமாவின் நிலமையை நினைச்சு உங்கட கண்ணில ரெண்டு சொட்டு வந்துது எண்டால்... அப்ப கேட்காமல் எடுத்துக் கொள்ளுங்கோ.
காரணம் 6. அறுசுவைல...... அழ வைத்துவிட்டேன். (சோ.க) ;) (தொடர்பு கண்டு பிடிக்க முடியவில்லை.)
காரணம் 7. வானதி என்னும் வாணி செய்த சதி பதி விரோத சதி. (சோ.க) ;)
காரணம் எட்டு. இது தான் உயரமான வெளிச்சம் - பாயிஜா ஒன்றுக்கு இரண்டாக விருது கொடுத்து இருக்கிறாங்க. (ஆ.க) மிக்க நன்றி சகோதரி.
இன்னும் இருக்கு. ஆனால் இப்போதைக்கு இது போதும். இல்லாட்டால் வாசிக்கிறவங்கள் ர.க விடுற மாதிரி ஆகீரும். ;)