Sunday 1 August 2010

டிஷூ ப்ளீஸ்!!

தொழிற்சாலை திறப்புவிழா என்று நினைக்காதைங்க.
சில பல காரணங்களுக்காக தேவைப்பட்டது. 

காரணம் 1. சிலர் சிரிப்பார். சிலர் அழுவார். சிரித்தாலும் டிஷ்யூ கேட்பார். அழுதாலும் டிஷ்யூ கேட்பார். இன்று முதல் இமாவைக் கூவாமல் இந்தப் பப்பீஸ் & பூஸ் பெட்டியிலிருந்து தேவையானவர்கள் தேவைக்கு ஏற்ப எடுத்து தமக்கு உதவிக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

காரணம் 2. முன்னால இங்க சுற்றிக் கொண்டு இருந்த ஆக்களுக்கு எல்லாம் அப்பப்ப எதாவது ட்ரீட் கொடுத்து இருக்கிறன். நடுவில கொஞ்சம் மிஸ் பண்ணீட்டன். (ஆனால் மிஸ் பண்ண இல்ல.)  இமாவின் உலகைத் திடீரென்று சில பல  நட்சத்திரங்கள் சுற்ற ஆரம்பிச்சு இருக்கினம். 39, 40, 41 எண்டு டக் டக்கெண்டு நம்பர் கூடிக் கொண்டு போய் 42ல நிற்குது. கவனிச்சதும் கண் கலங்கிப் போச்சு... சந்தோஷத்தில தான். பெட்டியை வெளியில எடுத்திட்டன். விருந்தானாலும் மருந்தானாலும் பகிர்ந்து கொள்ள வேணும் எல்லோ! வாங்கோ, எடுத்துக் கொள்ளுங்கோ.

காரணம் 3. பிறகு... யார், எந்த நெப்போலியன்ட குதிரையை வாங்கி வந்து ஸ்பீ...டாகத் துரத்தினாலும் இமா உலகம் ஆமை வேகத்திலதான் சுற்றும். ஏனெண்டால்... அது அப்பிடித்தான். முயலாமை காரணம் அல்ல. இயல் ஆமை காரணம். இயலாமை காரணம்.  இந்த சோகத்தில / சந்தோஷத்தில கண்ணில இருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது.

காரணம் 4. நிலமை இப்படி இருக்க.. 'நியூ' ஆடிஷன்ஸ் சிலர் உலகில் இணைந்து இருக்கிறார்கள். (இங்க ஆ.க) 

காரணம் 5. அவர்களைப் பற்றி அடுத்தடுத்த இடுகைகளில் தெரியவரும். தெரிய வரும்போது 'ah! my!' என்று நிச்சயம் வாயில் கை வைக்கப் போறீங்க. அப்ப... இமாவின் நிலமையை நினைச்சு உங்கட கண்ணில ரெண்டு சொட்டு வந்துது எண்டால்... அப்ப கேட்காமல் எடுத்துக் கொள்ளுங்கோ.

காரணம் 6. அறுசுவைல...... அழ வைத்துவிட்டேன். (சோ.க) ;) (தொடர்பு கண்டு பிடிக்க முடியவில்லை.)

காரணம் 7. வானதி என்னும் வாணி செய்த சதி பதி விரோத சதி. (சோ.க) ;)

காரணம் எட்டு. இது தான் உயரமான வெளிச்சம் - பாயிஜா ஒன்றுக்கு இரண்டாக விருது கொடுத்து இருக்கிறாங்க. (ஆ.க) மிக்க நன்றி சகோதரி.

இன்னும் இருக்கு. ஆனால் இப்போதைக்கு இது போதும். இல்லாட்டால் வாசிக்கிறவங்கள் ர.க விடுற மாதிரி ஆகீரும். ;)

46 comments:

 1. ஆ..வடை எனக்குதான்..!!

  ReplyDelete
 2. ஆ ,,பீட்சாவும் எனக்குதான்...!!

  ReplyDelete
 3. ஆஆஅ....சட்னியும் எனக்குதான் ..!!

  ReplyDelete
 4. சமையலுக்கு வான்ஸ் கூப்பிட்டதால என்னது தலையும் புரியலா வால்ல்ல்ல்ல்ல்லும் ஆஆ....இப்ப புரியுது

  ReplyDelete
 5. இமா மாமி பூஸு உங்களை பார்க்கும் பார்வை சரியில்ல .அதுவும் ஒரு மூட்டை மிளகாய் தூள்...ஹா..ஹ..அதான் ஜீனோவும் சிங்கதம்பியும் தலைய தூக்காம இப்பிடி கிடக்கினம்.எல்லாம் ஒரு பய்ந்தேஏஏஏஏஏஏன்.

  ReplyDelete
 6. ஐயோ போட்ட 5 க்மெண்டையும் கானோமே..!! அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 7. ஆங் ..இப்ப இருக்கு..இருக்கு..


  விருதுக்கு வாழ்த்துக்கள்...இன்னும் நிறைய கிடைக்க அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 8. ஜெய்லானி வந்து வடை பிஸ்ஸா சட்னி எல்லாத்தையும் ஆட்டைய போட்டாச்சா?! இதுல மட்டும் அவருக்கு சந்தேகமே வராதே.

  இமா எனக்கு கொஞ்சம் புரியுது நிறைய புரியல :-(

  பூஸ் ஏன் பப்பீஸ் கூடவே சுத்துதுன்னு மட்டும் புரியுது. நடுவருக்கு மிளகாய்ப் பொடி கேக் கொடுத்ததால அவரு கையில் கம்போட பூசை தேடிக்கிட்டு இருக்காராம். அதான் பாதுகாப்புக்கு தம்பியை துணைக்கு வச்சிருக்கு

  ReplyDelete
 9. விருதுக்கு வாழ்த்துகள், திறப்பு விழாவுக்கும் வாழ்த்துகள்:)

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 10. அவசரமாக எனக்கொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.....
  நான் இன்னும் அழுது முடியேல்லை:)...

  காரணம்:
  ஜெய்லானி said...
  ஆ..வடை எனக்குதான்..!!
  ///// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))), இன்னொரு டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்.

  சிலருக்கு, தன்னை ஆரும் அழைக்கமாட்டாங்களோ அன்பாக என்றிருக்கும்:), இது அன்பாக அழைத்து இனிமேல் என்னிடம் டிஷ்யூக் கேட்டிடாதையுங்கோ என்று சொல்லிப்போட்டினம்:((((.

  ஓ.. இதுதான் ஒன்று சிங்கத்தம்பி, இன்னொன்று சிங்கமில்லாத தம்பியோ?? இரு பப்பீஸ்:).

  ReplyDelete
 11. பூஸ் ஏன் பப்பீஸ் கூடவே சுத்துதுன்னு மட்டும் புரியுது. நடுவருக்கு மிளகாய்ப் பொடி கேக் கொடுத்ததால அவரு கையில் கம்போட பூசை தேடிக்கிட்டு இருக்காராம். அதான் பாதுகாப்புக்கு தம்பியை துணைக்கு வச்சிருக்கு /// ஆ.... கவி, கின்னசில இடம்புடிச்சிட்டீங்கள்:)))), ஆரங்கே எடுத்து வாங்கோ அந்தப்..போஓஓஒத்தகத்தை,,, எழுதிவிடுவோம்:).

  ஹைஷ்126 said...
  விருதுக்கு வாழ்த்துகள்,// ரிப்பீட்டு
  திறப்பு விழாவுக்கும் வாழ்த்துகள்:)/// திறப்பு விழாவோ ங்ங்ங்ங்ங்ங்ங்க???:)

  ReplyDelete
 12. இம்ஸ், எனக்கும் கவிசிவா போல ஒன்றுமே விளங்கவில்லை. டிஸ்ஷூ பெட்டி நல்லா இருக்கு. பூஸார் எங்கிருந்தாலும் அழகு தான். அதீஸூக்கு 2 தம்பிகளா? அல்லது ஒன்று அண்ணாவா? குழப்பமா இருக்கே.
  ஜெய், என்ன ஆச்சு? நீங்களே கமன்ட் போட்டு, நீங்களே உங்களுக்கு பதில் எழுதி....பாவம் நீங்கள்.

  ReplyDelete
 13. ஜெய், என்ன ஆச்சு? நீங்களே கமன்ட் போட்டு, நீங்களே உங்களுக்கு பதில் எழுதி....பாவம் நீங்கள். /// :)))))(இதை விடப் பெரிய ஸ்மைலி போட முடியவில்லை)

  ReplyDelete
 14. //ஜெய், என்ன ஆச்சு? நீங்களே கமன்ட் போட்டு, நீங்களே உங்களுக்கு பதில் எழுதி....பாவம் நீங்கள். //

  அது ஒன்னுமில்ல வரிசையா கமெண்ட் போட்டுட்டு பார்த்தா ஒன்னுமே கானோம் 0 கமெண்டுன்னு கமிக்குது அதான் அழுதுகிட்டே இன்னொன்னு போட்டேன் .கடைசில எல்லாமே இருக்குஹி..ஹி..

  ReplyDelete
 15. பாருங்க வான்ஸ் நீங்க குடுத்த ((இமா மாமி - கிறிஸ் = சோகம் ))அதிர்ச்சியில இமா மாமி வெரும் படத்த போட்டுட்டு போயிட்டாங்க.

  ReplyDelete
 16. இமா... புரியுது.. விருதுக்காக கொஞ்சம் ஆனந்தக் கண்ணீர்.. பிரிக்கச் செய்த சதியால் வந்த சோகக் கண்ணீர் கொஞ்சம்.. மிளகாய்ப்பொடியால் எரிச்சல் ஏற்பட்டு வந்த கண்ணீர் கொஞ்சம்.. பூஸ் பப்பி படத்தப் பாத்து வந்த கண்ணீர் கொஞ்சம்..

  அதுக்காக ஒரு டிஷ்யூ பாக்ஸ் முழுசா வேஸ்ட் பண்ணக்கூடாது.. ஒன்னே ஒன்னு மட்டும் எடுத்து துடைச்சிட்டு தூக்கிப் போட்டறனும் :))) வேனும்னா மூக்குக்கு (நன்றி ஜெய்லானி :) ) ஒன்னு எடுத்துக்கோங்கோ.. மீதியெல்லாம் எனக்கு கொடுத்துறனும்.. :)))))

  ReplyDelete
 17. இமா.. காட் இட்.. வாவ்!! அங்கங்க மட்டும் கலர்ல கொடுத்துட்டு மீதி எல்லா எழுத்துக்களையும் பேக் க்ரவுண்ட் கலரோட merge பண்ணியிருக்கீங்க.. வழக்கம் போல, இமாஸ் டச் ரசிக்க வைக்குது.. ஆனாலும், இதை முதல்ல கண்டுபிடித்தது பூஸ் கிட்னி தான் எண்டு மறக்கமாட்டேன் :) (தொன்னூறு வயசு ஆயா :) )

  மக்கள்ஸ்.. முழு போஸ்டையும் காப்பி பேஸ்ட் பண்ணுவதற்காக செலக்ட் செய்வது போல் செய்து படிச்சுப் பாருங்க..

  ReplyDelete
 18. ஆ.க, சோ.க, ர.க.. இந்தக் குறும்பையும் ரசிச்சேன் இமா..

  ReplyDelete
 19. சந்தூ சொன்னப்புறம் புரிஞ்சுடுச்சு :-). நாங்கள்லாம் ட்யூப்லைட் இமா.

  சூப்பர் இமா. இனிமே யாரையாச்சும் திட்டணும்னா கூட இப்படி பதிவு போட்டுடலாம். ஐடியாக்கு நன்றி :-)

  ReplyDelete
 20. டோட்டல் டேமேஜ் நான் குதிரைய விக்கப்போறேன்...!

  சந்தனா நீங்க என்னா பேசிக்கிறீகன்னே புரியல சத்தியமா இது ஏதோ பெரிய ரவுடி குரூப்புன்னு மட்டும் தெரியுது ஆழம் தெரியாம கால விட்டுட்டேனோ?

  ReplyDelete
 21. விருதுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 22. நம்பவே.... முடியேல்ல மக்கள்ஸ்!!! ஓவர் நைட்ல 21 கொமண்ட்டாஆஆ..!!!!! இது 'உலக' சாதனை. டிஷ்ஷ்..யூஊ... ப்ளீஸ்.. ;;;;)

  //கொஞ்சம் புரியுது நிறைய புரியல :-(// ;) கிக் கிக்
  அதான் 'ஹைலைட்டே' - உயரமான வெளிச்சம். கிக் கிக். ;)

  யாரது சொன்னது!! சாதனை எல்லாம் 'என் உலக' சாதனை தான். ம.பொ.ர - விளங்குற ஆக்களுக்கு விளங்கும். விளங்காத ஆக்களுக்கு விளங்காது. ஆதாரம் இதோ - http://imaasworld.blogspot.com/2010/06/blog-post_24.html (அப்ப... பாதிப் பேர் இது தெரியாமல் தான் அங்க கமண்ட் போட்டு இருந்தினமோ!!)

  கோவிக்காதைங்கோ, நேரம் போச்சுது. ஸ்கூலுக்கு லேட்டாப் போனால் குட்டீஸோட நானும் லைன்ஸ் எழுத வேண்டி வரும். பின்னேரம் வாறன்.

  ReplyDelete
 23. ஆன்ரீ..அயகான டிஷூ பொக்ஸ். ஜீனோ,ஜீனொவின் பிம்பம்,அக்கா இருவரும் என்னே அயகா போஸ் கொடுக்கினம்!! இதைப்பார்ப்பவர்களுக்கும் கண்ணீர் வருமோஓஓ?

  விருதுக்கு வாழ்த்துக்கள்! ஹேப்பி ஸ்கூலிங். :)

  ReplyDelete
 24. இமா! என்னைப்போல கொஞ்சம் லேட்டா வர்ரவங்க ( வடை/பிட்சாக்கு அடிதடிபோடாம) பின்னூட்டமும் படிச்சு.. அப்புறம் தான் பதிவே வெளங்குது.. நல்ல வேளைநான் பிழைத்துக்கொண்டேன்...
  வாழ்த்துக்கள் இமா!

  ReplyDelete
 25. இமா.. உங்க ஆதாரம் ஏற்றுக் கொள்ளப் பட்டது. முன்னாடி சொன்னத வாபஸ் வாங்கிட்டு, உங்க உலகத்துக்கே அந்தச் சாதனைய உரித்தாக்கி, கொப்பி ரைட் வழங்குறம் :)

  அப்போஓஓஓ படிக்கயிலே, நான் நினைச்சனான் - இமாக்கு இடுகை பதிப்பதிலே ஏதோ பிரச்சனை போலன்னு :))) இதயும் முதல்ல பாத்தப்போ அப்பிடித் தான் நினைச்சன் :)

  கவி... குறும்பு பண்றதுல இமாவும் சளைச்சவங்க இல்ல :) ஆமா.. நல்ல ஐடியா.. திட்றதுக்கு யூஸ் பண்ணிக்கலாம் :)

  ReplyDelete
 26. வசந்த்.. நீங்க, ப்ளஸ் இன்னும் கொஞ்சம் பேர் புதுசா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சதுக்கு, இமா நன்றி சொல்லியிருக்காங்க.. அப்புறம், வானதி ஒரு கற்பனை பதிவு போட்டாங்க (சமையல் போட்டி)... அதுக்காகவும் எழுதியிருக்காங்க..

  இந்த போஸ்ட செலெக்ட் பண்ணி படிச்சுப் பாருங்க.. எழுத்துகள் தெரிய வரும்.. இங்க பின்னூட்டம் போட்டவங்க எல்லாரும் ஏற்கனவே ஒருத்தர ஒருத்தர் அறிஞ்சவங்க.. நிக் நேம்ஸ் வச்சிருக்காங்க.. தொடர்ந்து படிச்சா புரியும்.. கண்டிப்பா ரவுடி கும்பல்லாம் இல்ல.. ஆனா சரியான கேலி-கிண்டல்-வம்பு-விளையாட்டு கும்பல் :))))))

  ReplyDelete
 27. ஓஹ்...! இந்த ஐடியா கூட நல்லாருக்கே

  நட்சத்திரம் :))) ம்ஹ்ஹும்

  ஆ.க.,சோ.க,ர.க, புடிபடல

  இயலாமை-நேரமின்மை???

  சாகோதரி - டைமிங் சென்ஸ் :)))))

  சீக்கிரம் என்னை கத்தார் அஹமத் ஹாஸ்பிட்டல்ல மெண்டல் செக்சன்ல சேர்த்துடுவாங்க போல.. முடியல தாயி முடியல..

  ReplyDelete
 28. இமாவோட உலகத்தச் சுத்த புதியதாக வந்திருக்கும் நட்சத்திரங்கள் - புது ஃபாலோயர்கள்.. நீங்களெல்லாம் தான்.. இன்னொருத்தர் முகிலன்.. மத்தவங்களெல்லாம் தெரியல..

  ஆ.க.,சோ.க,ர.க, புடிபடல - ஆனந்தக் கண்ணீர், சோகக் கண்ணீர், ரத்தக் கண்ணீர் :)

  //இயலாமை-நேரமின்மை???// அப்படின்னு தான் நானும் நினைக்கறேன்.. நீங்களெல்லாம் குதிரை மேல ஏறிப் பயணிக்கற மாதிரி வேகமா இருக்கறவங்க (உங்க படத்தைப் பார்த்து சொல்லியிருக்காங்க :) ). அவங்க மெதுவாத் தான் பதிவு போடுவாங்களாம்..

  //சாகோதரி - டைமிங் சென்ஸ் :))))//

  அது தவறுதலா டைப் பண்ணினதுன்னு நினைக்கறேன்..

  //சீக்கிரம் என்னை கத்தார் அஹமத் ஹாஸ்பிட்டல்ல மெண்டல் செக்சன்ல சேர்த்துடுவாங்க போல.. முடியல தாயி முடியல..//

  சரி, நான் உங்களுக்கு ஒரு கெட் வெல் கார்டும், பூச்செண்டும் அனுப்பி வைக்கறேன் :)))))))))))

  ReplyDelete
 29. //டோட்டல் டேமேஜ் நான் குதிரைய விக்கப்போறேன்...!//

  இது வரை எவ்வளவு கி மீட்டர் ஓடி இருக்கு..வண்டி எந்த மாடல் , சேசிஸ் நெம்பர் ,ஆர் சி புக் இருக்கா ,இன்ஸுரன்ஸ் இருக்கா .லாஸ்ட் பிரஸ் எவ்வளவு..

  ReplyDelete
 30. //சரி, நான் உங்களுக்கு ஒரு கெட் வெல் கார்டும், பூச்செண்டும் அனுப்பி வைக்கறேன் :))))))))))) //

  சந்தூஊஊ என் சார்பில லெமன் ஜூஸ் அதுவும் என் கையால செஞ்சது தரேன் பொக்கே கூட அனுப்பிடுங்க ஹி..ஹி..

  ReplyDelete
 31. //இலா--//இமா! என்னைப்போல கொஞ்சம் லேட்டா வர்ரவங்க ( வடை/பிட்சாக்கு அடிதடிபோடாம) பின்னூட்டமும் படிச்சு.. அப்புறம் தான் பதிவே வெளங்குது.. நல்ல வேளைநான் பிழைத்துக்கொண்டேன்...//

  உங்க பிளாக்கில நீங்க வளர்த்த மயில் இது வரை 5 குட்டி போட்டுடுச்சி புதுசா ஏதாவது போடுங்க மேடம்..

  ReplyDelete
 32. //உங்க பிளாக்கில நீங்க வளர்த்த மயில் இது வரை 5 குட்டி போட்டுடுச்சி புதுசா ஏதாவது போடுங்க மேடம்..// :))) இலா புதுமை பெண்ணா பொங்கி எழும் வேகத்தில் வாரம் ஒரு பதிவு போட்டு காட்டுங்க (5 பதிவுதான் 5 குட்டிதானே போட்டு இருக்கு):)

  ReplyDelete
 33. //சந்தனா நீங்க என்னா பேசிக்கிறீகன்னே புரியல சத்தியமா இது ஏதோ பெரிய ரவுடி குரூப்புன்னு மட்டும் தெரியுது ஆழம் தெரியாம கால விட்டுட்டேனோ?// ஆமாம் அன்பால் அடாவடி பண்ணும் ரவுடி குரூப் :)))

  ReplyDelete
 34. //உங்க பிளாக்கில நீங்க வளர்த்த மயில் இது வரை 5 குட்டி போட்டுடுச்சி புதுசா ஏதாவது போடுங்க மேடம்..//

  கடவுளே.. இந்த ஜெய்லானி லொள்ளு தாங்க முடியல.. சிரிச்சிட்டே இருக்கேன்.. இலா.. இதுக்காகவாவது நீங்க எழுதோனும் :))))))))))

  ReplyDelete
 35. //இது வரை எவ்வளவு கி மீட்டர் ஓடி இருக்கு..வண்டி எந்த மாடல் , சேசிஸ் நெம்பர் ,ஆர் சி புக் இருக்கா ,இன்ஸுரன்ஸ் இருக்கா .லாஸ்ட் பிரஸ் எவ்வளவு..//

  வாங்காத குதிரைக்கு இம்புட்டு கேள்வியா? :)))

  ReplyDelete
 36. //சந்தூஊஊ என் சார்பில லெமன் ஜூஸ் அதுவும் என் கையால செஞ்சது தரேன் பொக்கே கூட அனுப்பிடுங்க ஹி..ஹி.//

  வேணாம் ஜெய்லானி.. இப்பூடியெல்லாம் விஷப் பரீட்சை செய்யப்படாது..

  ReplyDelete
 37. வெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி குட்.. இத்தோட நாப்பதாவது கொமெண்ட்.. அடுத்த உலகச் சாதனை.. நாளைக்கு ஆன்ரி வந்து பாத்துட்டு மறுபடியும் கண்ணீர் வடிக்கப் போறாங்கோஓஓஓ.. :))))

  ReplyDelete
 38. //சந்தூஊஊ என் சார்பில லெமன் ஜூஸ் அதுவும் என் கையால செஞ்சது தரேன் பொக்கே கூட அனுப்பிடுங்க ஹி..ஹி.//

  இதை தான் எங்க ஊரில் சொல்வாங்க பனையாலை விழுந்தவனை மாடேறி மிதிச்சுதாம்.

  ReplyDelete
 39. என்ன இமா எல்லாமே ஒரே குழப்பமா இருக்கு எனக்கு. ஒன்னுமே புரியல்லை. இதுக்கு தான் என்றைக்கும் இங்கு வரனும் என்பது சரி தானே. சரி எனக்கு மட்டும் தனியா புரியும் படிகா சொல்லுங்கோ.
  வர்ரேன், மறுபடியும்.

  ReplyDelete
 40. ஆஹா...எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை...இப்போ தான் கமண்டில் பார்த்தேன்...படித்தேன்...இது தான் இமா ஸ்பெஷ்ல் என்பது....

  ReplyDelete
 41. எல்லாருக்கும் ஏதோ புரியுது... எனக்கு தான் ஒன்னும் புரியல!!! எல்லா பதிவும் படிச்சும்... புரியுது... ஆனா புரியல!!! - வனிதா

  ReplyDelete
 42. என்னாச்சு வனி... புரியுது... ஆனா.... புரியல...ன்னு புலம்பறீங்க.

  இமா பாருங்க வனி எவ்வளவு புலம்பறாங்கன்னு. அப்புறம் வனி அழுதுடுவா... வந்து விளக்குங்க. பாத்திரத்தை இல்லை பதிவை :-)

  ReplyDelete
 43. ஜெய்லானி said...

  //டோட்டல் டேமேஜ் நான் குதிரைய விக்கப்போறேன்...!//

  இது வரை எவ்வளவு கி மீட்டர் ஓடி இருக்கு..வண்டி எந்த மாடல் , சேசிஸ் நெம்பர் ,ஆர் சி புக் இருக்கா ,இன்ஸுரன்ஸ் இருக்கா .லாஸ்ட் பிரஸ் எவ்வளவு/////

  நீங்க எப்ப கயாலான் கடை ஆரம்பிச்சிக

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா