Saturday 28 August 2010

முறவியத்தும்! ,,மேற்கோட்குறியும்"

'முறவியத்' - இது Maori சொல் என்று நினைக்க வேண்டாம், ஒரு மிருகத்தின் ரஷ்யன் பெயர்.

நான் வேலை செய்வது ஒரு தனியார் பாடசாலையில், அவ்வப்போது வெளிநாட்டு மாணவர்கள் படிக்க வருவார்கள். சிலர் ஒரு வருடம், இரண்டு வருடம் படித்து விட்டுப் போவார்கள். யாராவது ஓர் உறவினர்  வீட்டில் தங்கி இருப்பார்கள். சிலர் 'ஹோம் ஸ்டே'யோடு தங்கி இருப்பார்கள்.

முன்பெல்லாம் அதிகம் கொரிய மாணவர்கள் வருவர். சில சீன மாணவர்களையும் கற்பித்து இருக்கிறேன். நடுவே பாலமாக எந்த மொழியும் இல்லாமல் மொழி தெரியாதவர்களுக்குக் கற்பிப்பது சுவாரசியமான விடயம். சில விடயங்கள் தன்னால் புரியும். சிலது புரிய வைப்பது கஷ்டம். இங்கு 'விஷுவல் எய்ட்ஸ்' நிறைய உதவும்.

கையில் எதுவும் கிடைக்காவிட்டால் படம் வரைந்து காட்டிப் புரிய வைப்பேன். எல்லாம் கற்றுக் கொண்டது தான். நான் சிங்களம் அதிகம் கற்றுக் கொண்டது தமிழோ ஆங்கிலமோ தெரியாத திரு. ஃப்ரான்ஸிஸ் பெர்ணாந்து என்கிற சிங்கள ஆசிரியரிடம். நீர்கொழும்பைச் சேர்ந்தவர். ரசனை மிக்க மனிதர். அழகாகப் பாடுவார். நன்றாக வரைவார். எதையும் வரைந்து புரியவைத்து விடுவார்.

இலங்கையில் எனக்கு அமைந்த மாணவர்கள் மத்தியில் சிங்கள மாணவர்களும் ஒரு கொரியனும் இருந்தார்கள்.

இங்கு... இரண்டு வருடங்கள் முன்னால் சொன்யா என்று ஒரு குட்டி மாணவி வந்து சேர்ந்தார். ரஷ்யன்... என் ரஷ்யத் தோழி மூலம் எங்கள் பாடசாலை பற்றி அறிந்து பெற்றோர் அனுப்பி வைத்திருந்தனர். அவர்கள் நாட்டில் விடுமுறைக் காலமானால் இங்கு வந்து விடுவார். சுட்டிப்பெண் நன்றாகப் பிடித்துக் கொள்ளுவார்.

சென்ற வருடம் கூட இன்னொரு குட்டிப் பெண்ணை (டெய்ரா) அழைத்து வந்தார். இவரும் ஓரளவு கற்றுக் கொண்டு திரும்பினார்.

இந்தத் தவணை பாடசாலைக்குச் சென்ற போது என்னிடம் ஒப்படைக்கப் பட்டவர்கள் இரண்டு டெய்ராக்கள். அதே பழைய டெய்ரா... கூட தன் வகுப்புத் தோழியான மற்றுமொரு டெய்ராவை அழைத்து வந்திருக்கிறார். இருவரும் பாடசாலைக்குச் சமீபமாக ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.

இவர்களிடம் சில விடயங்கள் கற்றுக் கொண்டேன். மேற்கோட்குறி வினோதமாக இருக்கும். நாங்கள் "sixty six & ninety nine" என்று சொல்லிக் கொடுப்போம். இவர்களிருவரும் பேச்சு ஆரம்பிக்கும் இடத்தில் ,, போட்டு வைக்கிறார்கள். முடிகையில் ". ஒரு வசனக்கணக்கு கொடுத்து அதைக் கணித வடிவில் கொடுக்கச் சொன்னால்
6 ; 3 = 2
3 · 2 = 6
என்று எல்லாம் எழுதி வைக்கிறார்கள். திருத்த முயன்று தோற்றுப் போனேன்.

குடும்பப் பெயர்கள் இருவருக்குமே 'வா' உச்சரிப்பில் முடிந்திருந்தது. இவர்களுக்கான ஓர் படிவத்தினை நிரப்புகையில் 'ஹோம்ஸ்டே'  இவர்களது தந்தையர் பெயர்களைத் தவறாக எழுதி இருப்பதாகச் சொன்னார்கள். எனக்குச் சரியாகத் தெரிந்தது. குடும்பப் பெயர் பெண்களுக்கு 'வா' என்று முடிந்தால் ஆண்களுக்கு 'வ்' என்று முடிய வேண்டுமாம்.

நடுவே ரூத் எதையோ சுத்தம் செய்கையில் அகப்பட்டதென்று ஒரு பென்சில்கேஸ் கொணர்ந்து தந்தார். "Have fun," என்று வாழ்த்தி விட்டுப் போனார். அதைக் கொட்டி ஒவ்வொன்றாய் உள்ளே இருந்த ப்ளாத்திக்குப் பொம்மைகளுக்குப் பெயர் சொல்லி விளையாடினோம். ஒன்று வினோதமாக இருந்தது. என்ன பிராணி என்று புரியவில்லை. இலங்கையிலும் கண்டதில்லை, இங்கும் இல்லை.
சாம்பல் நிறமாக இருந்த அந்தப் பொம்மையை டெய்ரா-B கையில் எடுத்துச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். இருவரில் இவர்தான் குறும்புப் பெண். ,,எனக்குத் தெரியும். இது முறவியத்" என்றார். ,,முறவியத், முறவியத்" என்று குதித்தார். அவரோடு கண்களும் சிரித்தது. என்னவென்று கேட்டால் புரிய வைக்கத் தெரியவில்லை. படம் வரைந்து காட்டினார்.

,,ஈ!"
,,இல்லை"
,,தேனீயா!!"
,,அதுவும் இல்லை"
,,!!கண்டு பிடித்துவிட்டேன். எறும்பு,"
,,இல்லைய்ய்ய்" ,,இது அதைத்தான் சாப்பிடும்,"
,,ஓகே"  ;((  ,,என்னால் முடியாது,"

இந்த விளையாட்டுக்கு அப்போதைக்கு ஒரு தற்காலிக முற்றுப் புள்ளி வைத்து விட்டு அடுத்த வேலைக்குத் தாவினோம்.

இரண்டு நாள் கழித்து வில்ஸ் ,,டெய்ராக்கள் எப்படி இருக்கிறார்கள்?" என்று கேட்கவும் எனக்கு ,,முறவியத்" நினைவு வந்தது. பொம்மையைக் காட்டிக் கேட்டேன். அவருக்கு என்னவென்றே புரியவில்லை. பொம்மையை அப்படி அமைத்து இருந்தார்கள் தயாரிப்பாளர்கள். ,,ரைனோ!!!" ஆளாளுக்குப் பொம்மை கை மாறிற்று. டைனோசர், நீர்யானை என்று அனைத்தும் முயன்ற பின் ஒருவர் ,,ஆன்ட்ஈட்டர்" என்றார். அனைவரும் ஆமோதித்தனர். எனக்கோ சந்தேகம், நான் அவர்கள் வரைந்த படத்தை எறும்பு என்றபோது இல்லையென மறுத்தார்களே!! கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

எறும்புதின்னி சாப்பிடுவது கறையானையாம்.

"ஓ! கறையானைத் தான் 'முறவியா' என்பீர்களா?" (சின்ன வயதில் 'ஹாவா, மூவா, அளியா, கொட்டியா, சிங்ஹயா, நறியா' என்று வரிசையாக மிருகங்களின் பெயர்களை மனனம் செய்து வைத்திருந்ததன் விளைவு.)
விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ,,அது முறவி, முறவியா அல்ல.''

இன்னும் 2 கிழமைகள் மட்டுமே இங்கு இருப்பார்கள் சிறுமிகள்.
"வில் யூ மிஸ் அஸ்!!" கேட்டார்கள் ஒரு நாள்.
,,வில் யூ!!"
,,ஆமாம், நிச்சயமாக."
,,ஏனென்றால்... நீங்கள் எனக்கு நிறையப் புது விடயங்கள் கற்றுக் கொடுத்து இருக்கிறீர்கள். கூடவே முறவியத்துக்கு ஆங்கிலத்தில் என்னவென்பதையும் சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள்." குறும்பு கொப்பளித்தது முகத்தில். ;))


முறவியத்தைச் சிலர் செல்லப் பிராணிகளாகக் கூட வளர்க்கிறார்கள் போல் இருக்கிறது. ;)

பி.கு
'நெப்போலியன்' குறிப்பு வேண்டுபவர்களுக்காக தயாரிப்பு முறை கொடுத்திருக்கிறேன். அதற்கான கருத்துக்கள் குறிப்பின் கீழ் மட்டும் வரவேற்கப்படுகின்றன.

25 comments:

 1. இம்மி, நல்ல பொறுமையான வேலை தான். எறும்பு சாப்பிடும் விலங்கு armadillo (http://www.google.com/search?client=safari&rls=en&q=armadillo&ie=UTF-8&oe=UTF-8) . சரியா ???

  ReplyDelete
 2. வாங்கோ வாணி.
  வடிவா இருக்கிறார் உங்கட ஆள். ;) வேலை மினக்கெட்டுத் தேடித் தந்திருக்கிறீங்கள். நன்றி. ஆனால் இவரில்ல அது.

  அங்க லிங்கில இருக்கிறவர்தான்.

  ReplyDelete
 3. லிங்க் காணேல்லயோ!!
  பொறுங்கோ வாறன்.

  ReplyDelete
 4. இப்ப பாருங்கோ வாணி. எரர் இல்லாமல் வரும்.

  ReplyDelete
 5. //பி.கு
  'நெப்போலியன்' குறிப்பு வேண்டுபவர்களுக்காக தயாரிப்பு முறை கொடுத்திருக்கிறேன். அதற்கான கருத்துக்கள் குறிப்பின் கீழ் மட்டும் வரவேற்கப்படுகின்றன.//

  வரவேற்ப்பிற்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 6. தமிழில் எறும்புத்தின்னி சரியான பேர்ன்னு நினைக்கிறேன்.. !!

  ReplyDelete
 7. கொஞ்சமல்ல.. நிறையவே வினோதமாகத் தான் இருக்கிறார் இமா..

  பிள்ளைகள் நல்லாத் தான் கலாய்க்கிறாங்க ஆசிரியர... :))

  ReplyDelete
 8. ஜெய் அண்ணாத்த கலக்கீட்டார்.. :))) ant eater க்கு தமிழ்ல எறும்புதின்னியாம் :)

  ReplyDelete
 9. முறவியத் நன்றாக இருக்கிறார் இமா, நானும் இப்படம் எங்கோ பார்த்ததாக நினைவு.

  வாணி உது எப்ப தொடக்கம்?:))).... நான் “ஆராட்சி”யைக் கேட்டேன்:).

  ReplyDelete
 10. ஹை! எல்லா பிள்ளைகளும் ரீச்சரை கலாய்ப்பதில்லை போல :))
  இமா! படம்பாத்ததும் மறுபடி போட்டியா இருக்கும் என்று நினைத்தேன்.. நீங்களே சொல்லிட்டிங்க .. வீடியோல ரொம்ப கியூட்டா இருக்கு பார்க்க...

  அங்கயே ஸ்வீட் பார்த்தேன்.. இட்டாலியம் பேக்கரியில சாப்பிட்டு இருக்கேன்.. வெயிட் குறைந்தால் செய்து பார்க்கிறேன்...

  ReplyDelete
 11. //ஹாவா, மூவா, அளியா, கொட்டியா, சிங்ஹயா, நறியா//

  ரீச்சர் இதெல்லாம் என்னது?

  அந்த படத்தை பார்த்ததும் நான் எலின்னுதான் நினைச்சேன் முதல்ல ஆவ்வ்வ் :)

  ReplyDelete
 12. அதீஸ்,
  //வாணி உது எப்ப தொடக்கம்?:))).... நான் “ஆராட்சி”யைக் கேட்டேன்:)//

  வடை, நெப்போலியன் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இப்பூடி எல்லாம் நிற்க வைத்து கேள்விகள் கேட்கபடாது.
  ஹைஷ் அண்ணாவே ஒரு வழியா மனதை தேத்திக் கொண்டு பின்னூட்டம் போட்டு விட்டார்.

  ReplyDelete
 13. பி.கு மட்டும்தான் படிச்சனீங்களோ ஹைஷ்!! ;) நன்றிக்கு நன்றி. ;)

  ஜெய்லானி... இந்த முறை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்க இல்லையே நான். ;)

  கலாய்க்கிறதோ!! சிலநேரம் திரும்பப் பூமிக்குக் கொண்டு வரப் படாத பாடு பட வேணும். அப்ப பொய்க்காவது வேற முகம் காட்ட வேண்டியதா இருக்கும். ;(

  ReplyDelete
 14. வாங்கோ அதீஸ். பாட்டி எல்லாம் முடிஞ்சுதோ! ;)

  இலா,
  //மறுபடி போட்டியா இருக்கும் என்று நினைத்தேன்.// ;)
  //ஸ்வீட்..... வெயிட் குறைந்தால் செய்து பார்க்கிறேன்.// ;D

  வசந்த்,
  உங்கட 'அஸ்வயா'வுக்கு என்ன ஆச்சு!!! துக்கம் கொண்டாடுற நேரம்தானே கறுப்பும் வெள்ளையும் உடுத்துவினம். !!!

  ஹாவா - முயல்,
  மூவா - மான்,
  அளியா - யானை,
  கொட்டியா - அதான் எல்லாருக்கும் தெரியுமே, சிங்ஹயா - கொடியில ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நிக்கிறவர்,
  நறியா - பேரிலயே இருக்கு விபரம்

  சிங்களம்.

  //அந்த படத்தை பார்த்ததும் நான் எலின்னுதான் நினைச்சேன்// க்ர்ர்ர். ஒரு அழகான ஓவியத்தை இப்புடி மட்டமா விமர்சிக்கப்படாது. நான் எவ்வளவு கஷ்டப் பட்டு வரைந்தது. ;)
  (பரவாயில்லை, குதிரை என்று நினைக்காத வரைக்கும் போதும்.) ;)
  அந்தப் பொம்மையைப் பார்த்தால் என்ன சொல்லி இருப்பீங்கள் என்று யோசிக்கிறன். ;))

  ReplyDelete
 15. முக்கிய அறிவித்தல்

  இமாவின் உலகம் ஸ்ட்ரிக்ட்டாக 'ஸ்மோக் ஃப்ரீ ஸோன்'. ;))

  ReplyDelete
 16. சரிங் ரீச்சர்..! நாங்க ரீச்சர் பேச்ச கேக்குற ஆளுகளாக்கும்...!

  இத்துனியூண்டுல எப்டி கண்டு பிடிச்சீங்க?

  ReplyDelete
 17. //ஜெய்லானி... இந்த முறை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்க இல்லையே நான். ;)//

  மொழி பெய்ர்ப்பாளர் எஸ் ஆகி விட்டதால் அடியேன் டிரை பண்ணீயது.. ஒரு வேளை ”இது” ”அது”வா இருக்குமோ..?

  ReplyDelete
 18. வசந்த், நல்ல ஸ்டூடண்ட் நீங்க. ;)

  //இத்துனியூண்டுல எப்டி கண்டு பிடிச்சீங்க?// ஜெய்லானி கொடுத்த ட்ரெய்னிங். ;D

  ~~~~~~~~~

  ஜெய்லானி, எதூ..!!!!!

  ReplyDelete
 19. //ஜெய்லானி, எதூ..!!!!! //

  அதான் ”இது”

  ReplyDelete
 20. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 21. //பி.கு மட்டும்தான் படிச்சனீங்களோ ஹைஷ்!! ;) நன்றிக்கு நன்றி. ;)// முழுவதும் தான் படித்தேன் ஆனால் அதனால் வந்த மட்டகளப்பு, கண்டி, யாழ்பாணம், வவூனியா, பட்டிகொலா, கொழும்பு நினைவுகளை அசைமட்டும்தான் போட முடியும் எழுத முடியாது!

  “மௌனம் கலகனாஸ்தி”

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 22. //ஜெய்லானி, எதூ..!!!!! //

  அதான் ”இது”

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~
  பி.கு மட்டும்தான் படிச்சிங்களா? பதிவு முழுவ்து படிக்க வில்லையா என கேட்க, நானும் அதான் சொல்றேன் கேட்டாதானே

  அதான் “இது”

  ReplyDelete
 23. //நடுவே பாலமாக எந்த மொழியும் இல்லாமல் மொழி தெரியாதவர்களுக்குக் கற்பிப்பது சுவாரசியமான விடயம்//

  கஷ்டமான விஷயத்தை சுவாரசியம்னு சொல்றதுலேர்ந்து, உங்க அனுபவம் புரியுது!! கிரேட்!!

  (இவ்வளவு அனுபவசாலியா இருக்கதுனால, உங்களை இனி நான் “ஆண்ட்டி”ன்னு தான் அழைக்கப் போறேன்!! இல்ல, பாட்டின்னு சொல்லவா?)

  ReplyDelete
 24. //நானும் அதான் சொல்றேன் கேட்டாதானே// ம். ;)

  ~~~~~~~~~~

  //“ஆண்ட்டி”ன்னு தான் அழைக்கப் போறேன்!! இல்ல, பாட்டின்னு // ம்ம்ம்!!! ம்.;)
  ஆரம்பகாலத்தில் உங்களோடு பேசிய இழைகள் நேற்று தூசு தட்டிப் பார்த்தேன் ஹுசேன். ;) பேசி நாளாயிற்று இல்லையா!!

  சமீபத்தில் வேறொரு இடத்தில் உங்களுக்குச் சொல்ல விரும்பிய நன்றி, அங்கே தொடர விரும்பாததால் இங்கே.

  மிக்க நன்றி ஹுசேன்.

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா