Tuesday 13 April 2010

பெத்தாவும் பெத்தம்மாவும்

இமா மெதுவாக நழுவி விட்டாங்களோ!... என்று நினைக்கிற ஆட்களுக்கு, இதோ மீண்டும் வந்தேன். ;)

எனக்குப் பிடித்த, என் வாழ்வில் மறக்க முடியாத பெண்  'பெத்தா'. அப்படித்தான் எல்லோரும் அழைப்பார்கள், பூரணம் அவர் பெயர். குழந்தைகள் இல்லை. (ஒருவரை வளர்த்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை நான் பார்த்ததில்லை.)

தஞ்சாவூர் மண் எடுத்துத் தாமிரபரணி தண்ணி எடுத்து செய்த பொம்மை மாதிரி... எனக்குரிய DNA எல்லாவற்றோடும் பெத்தாவின் குணங்கள் சிலவும் என்னில் தொற்றி இருப்பதைப் பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன்.

எனக்கு என் அம்மம்மாவைத் தெரியாது. டடாம்மாவை விடவும் பெத்தாவோடு நான் செலவழித்த நாட்கள் மிகமிக அதிகம். எனக்கு நினைவு புரிய ஆரம்பித்த காலங்களில் அயல் வீட்டில் இருந்தவர் பெத்தா. வெளியிட என்னிடம் ஒரு படமும் இல்லை. மனதில் இருக்கும் படத்தை இங்கு மாற்றிடும் திறமை எனக்கில்லை. ஆகவே...

..பெத்தம்மாவுக்குப் பதில் இங்கு ஒரு 'காகாபோ' (kakapo from New Zealand)
நான் ரசித்த, மதித்த பெண். மலேஷியன் தமிழ்ப் பெண்மணி என்பதாக நினைவு. கணவர் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் கற்பித்து இளைப்பாறியவர். 'மாணிக்கம் மாஸ்டர்' என்று ஊரில் தெரியும், எனக்கு மாஸ்டர் அப்பா, பெத்தாவுக்கு மட்டும் 'பள்ளியையா'. அப்படித்தான் கூப்பிடுவார். ;) (இதெல்லாம் நான் எழுதுகையில் அந்த நாட்களுக்கே போய் விட்டேன். )

பெத்தா கிளி வளர்ப்பார். அது அவர் குழந்தை. அவர் 'பெத்தம்மாவோடு' பேசுவதைப் புதினமாகப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன். அது ஒரு தலை உறவல்ல. ;) அந்தக் கிளியும் அவரைப் புரிந்து வைத்திருந்த மாதிரித் தான் பதில் சொல்லும்.

தினமும் ஒரு குளியல் - ஒரு 'மில்க்மெய்ட்' பேணியில் மெல்லிய ஆணியால் துளைகள் தட்டி வைத்திருப்பார் பெத்தா. துருப்படியாத புதுப் பேணிதான் பெத்தம்மாவின் ஷவர். கிணற்றடியில் கூட்டோடு 'பெத்தோ' குளிப்பார். ஒரு வாளியில் நீர் நிறைத்து வைத்து ஒரு பேணியால் இந்தப் பேணியில் ஊற்றினால் இறங்கும் பூமழையில் அவர் (கிளி) குளிக்க வேண்டும். சமயங்களில் திட்டும் கிடைக்கும். ;) பிறகு, துவாலையால் துடைக்கப்படுவார், சாம்பிராணிப்புகை காட்டப்படுவார். கொடுத்துவைத்த பெத்தம்மா. பிறகு காரக்குழம்பு சேர்த்துக் குழைத்த ஒரு கவளம் சோற்றை அதல் கூட்டில் தட்டில் வைப்பார் பெத்தா. கிளி வளர்ப்பது ஒரு அழகான கலை. ;)

பெத்தாவிடமிருந்து நான் கற்றதும் பெற்றதும் அதிகம். எழுத எவ்வளவோ இருக்கிறது. ஒரே நாளில் அதிகம் சொன்னால் எப்படிப் படிப்பீர்கள்! அலுத்து விடுமே உங்களுக்கு! அதனால் சொல்கிறேன் மெதுவே, ஒவ்வொன்றாய்.

இன்று பெத்தாவும் மாஸ்டர் அப்பாவும் உயிரோடு இல்லை. அவர்கள் நேரடி வாரிசுகள் என்றும் யாரும் இல்லை. இந்த இடுகை பூரணம் பெத்தாவையும் மாணிக்கம் மாஸ்டரையும் அறிந்தவர்கள் கண்ணில் பட்டால் ஒரு நிமிடம் அவர்கள் ஆன்ம இளைப்பாற்றிக்காகப் பிரார்த்தித்துக் கொள்ளும்படி அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.
- இமா 
பிடித்த பெண்கள் இன்னும் வருவார்கள்

15 comments:

  1. நான் கூட சின்ன வயதில் பெத்தம்மா வளர்த்து இருக்கிறேன்.இடுகை சுவாரஸ்யம்.

    ReplyDelete
  2. அன்புள்ள இமா!

    உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றி!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. நன்றி அக்கா. ;) நான் அங்கு உங்கள் வலைப்பூ பார்வையிட்டுக் கொண்டிருக்க நீங்கள் இங்கு வந்தீர்களா! ;) மீண்டும் நன்றி.

    ReplyDelete
  4. எனக்கு இப்பவும் வளர்க்க ஆசைதான் ஸாதிகா. ஆனாலும் இன்னொரு மனது வேண்டாம் என்கிறது. இயற்கையை இயற்கையாகவே இருக்க விடு, என்கிறது. ;)

    ReplyDelete
  5. கவுரவம் ப்டத்தில் சிவாஜி வசனம் + பாடல் நினைவுக்கு வருது,தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  6. ;) Thanks Jeylaani.

    New Year greetings to u & ur family too. ;)

    ReplyDelete
  7. இமா, எங்கள் மம்மா ( அம்மாவின் அம்மாவும் ) கிளி வளர்த்தார்கள். அதன் பெயர் பெத்தி. இன்னும் அப்படியே பசுமையாக ஞாபகம் இருக்கு. யாராவது புது ஆட்கள் வீட்டிற்கு வந்தால் பெரிய சத்தம் போட்டு, ஒரே ஆரவாரம் செய்யும். நாளெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கலாம் போல அப்படி ஒரு அழகு.

    படிக்க நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. பெத்தா கதை அழகு...

    பிடித்த பெண்கள் இன்னும் வருவார்கள்/// அதுக்காகத்தானே அதிரா வெயிட்டிங்....

    ReplyDelete
  9. tkz Vany. ;)

    athu kathai alla athees. ;)
    aduththa 'pidiththa pen' athira enru solluveno!!! ;)

    ReplyDelete
  10. இமா,
    பெத்தம்மா இடுகை நல்லா இருக்கு. என்னிடமும் அது போல் இன்று இருக்கு. நேரம் கிடைக்கும் போது செல்லாங்கள் பகுதியில் போடறேன்.

    ReplyDelete
  11. சொல்லக் கூடாது செல்வி. போடணும். ;) எதிர்பார்ப்பேன்.

    ReplyDelete
  12. ரெண்டு பேரையுமே தெரியாது இமா.. இருந்தாலும், வேண்டியாச்சு :))

    ReplyDelete
  13. மிக்க நன்றி சந்தனா. ;)

    ReplyDelete
  14. என் யூடி ஐ ஞாபகப்படுத்திவிட்டீங்க.நான் வளர்த்த (இங்கு)கிளி.ரெம்ப நன்றி.
    ஆனால் அருகில் நிறைய யூடிக்கள் இருக்கின்றன்.

    ReplyDelete
  15. அங்க வந்து 'செல்லங்களில' சொல்லுவீங்கள் எண்டு எதிர்பார்க்கிறன் அம்முலு. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா