Saturday 25 September 2010

இமாவும் தமிழ்த் தட்டச்சும்

நெருப்புநரி திடீர் திடீரென்று சுருண்டு படுத்துக் கொள்கிறது. ;(

இதுவரை காலமும் இல்லாது முதல் தடவையாக 'வர்ட்பாட்' பக்கம் வந்து தட்டச்சு செய்கிறேன்.

தமிழில் தட்டச்சு செய்யவேண்டும் என்பது எனக்கு ஒரு கனவு.

பல வருடங்கள் முன்பு, ஊருக்கு வந்திருந்த என் சகோதரர் ஒரு கணனி வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தார். அப்போ அது ஏதோ பெரிய என்னவோ போல, தனி அறை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தது. (இந்த ஊரில் எனக்கே ஒரு அறை கிடையாது. ஹும்! )

ஸ்கூல் விட்டு வந்து வேலை எல்லாம் முடித்து விட்டு ஆட்டோ பிடித்துப் போய் கணனிக்கல்வி கற்றுவந்தேன். (இந்தக் காலகட்டத்தில் என் 'மேட் 50' க்கு    என்ன ஆயிற்று என்பது இப்போ நினைவுக்கு வரவில்லை.) எல்லோரும் சின்னச் சின்ன மனிதர்களாக இருக்க, நான் மட்டும் பொருந்தாமல் இருந்தேன். தட்டச்சு வேறு தெரியாது.

இரண்டு சிறு பெண்கள் மனமிரங்கி என்னைத் தோழியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒருவர் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் வேலை பார்த்தார். நாட்டைவிட்டு நிரந்தரமாகப் பயணப்படவிருப்பதை அவருக்கு மட்டும் சொல்லி இருந்தேன். "டீச்சர், என்னையும் உங்கட ப்ரீஃப் கேசில வச்சுக் கூட்டிக் கொண்டு போங்கோ," என்பார்.

பரீட்சையில் எனக்குத்தான் எல்லாவற்றிலும் அதிக புள்ளிகள் கிடைத்திருந்தது.  காரணம் என்று எனக்குத் தோன்றியது 1. வினாத்தாள் ஆங்கிலத்தில் இருந்தமை. 2. தட்டச்சு செய்வதில் என் வேகம் போதாவிட்டாலும் தட்டியவரை தவறு இல்லாமல் தட்டி இருந்தமை.

அங்கு கற்றது கைமண்ணளவுதான் என்பது பின்னால் புரிந்தது.

பிற்பாடு க்றிஸ் அலுவலகத்தில் ஒருவர் உதவியால் தமிழ் தட்டச்சு என்று ஆரம்பித்து, தேவை எதுவும் இல்லாத காரணத்தால் அப்படியே நின்று விட்டது. என் பெயருக்கான குறியீடுகளை மட்டும் மனனம் செய்து வைத்திருந்தேன்.

இங்கு வந்து வெகு காலம் கழித்து மீண்டும் அந்த ஆவல்.. எப்படியாவது தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும். இங்குள்ளவர்களிடம் விபரம் எதுவும் பெயரவில்லை. ஊரில் இருந்து குறுந்தட்டு வரவழைக்கலாம் என்றார்கள். 

இலங்கையரிடமும் கேட்டு அலுத்து விட்டது. ஒரு குட்டி சிங்கள மாணவரைப் பிடித்தேன். அவர் சொன்னார், "மிஸ், ஜெனி மிஸ்ஸைக் கேளுங்கள். அவர் ஏதோ வலைத்தள உதவியோடு ஜேர்மன் மொழி தட்டுகிறார்," ஜெனியிடமும் கேட்டேன், முன்னேற்றம் எதுவும் இல்லை.

அலன் தன் வேற்று மொழித் தோழர்கள் ஆங்கில மூலம் தட்டச்சு செய்வதைச் சொன்னார். எல்லாம் அரைகுறைத் தகவல்களாக இருந்தன. ஒரு ரஷ்யத் தோழி ஒலிமாற்ற முறைத் தட்டச்சு பற்றிக் குறிப்பிட்டு விபரம் சொன்னார். அங்கிருந்து அவரது உதவியால் 'கூகிள் ட்ரான்ஸ்லிடரேஷன்' முறையில் தட்ட ஆரம்பித்தேன். என் சிந்தனை முறைக்கும் அதற்கும் ஒத்துப் போகவில்லை. தவறுகள் சரளமாக வந்தன. திருத்தத்தில் நேரம் அதிகம் செலவாயிற்று.

இதற்குள் தூயாவின் சமையல் கட்டு வழியாக அறுசுவைக்குள் நுழைந்திருந்தேன். எழுத்துதவி பிடித்திருந்தது. அதுவே என் நிரந்தர தட்டச்சு இயந்திரமாயிற்று. அங்கு தட்டி எங்காவது கொண்டு போய் வைப்பது நேரம் எடுத்தாலும் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டேன் என்பதில் பெருமையாக இருந்தது.

ஆனாலும் தமிழரல்லாத தமிழர் பலர் அங்கு உலவியது புரியாமல் குழம்பிய நாட்கள் அதிகம். ஒருவரிடம் வசமாக மாட்டிக் கொண்டு திட்டு வாங்கி இருக்கிறேன். எப்போவாவது என் உலகுக்கு வருகை தருவார். இப்படி ஒன்று நிகழ்ந்ததே அவருக்கு நினைவில் இல்லை. ;)

அறுசுவையில் என் கைவினைகள் வெளியாக ஆரம்பித்தன. உண்மையில் புகைப்படக் கருவியோடு சுற்ற ஆரம்பித்தது அதன் பின்தான். படங்கள் திருப்தி தரவில்லை என்று சந்தேகம் கேட்டேன். தீர்வும் கிடைத்தது. அதிகம் உதவியவர் அறுசுவை நிர்வாகி சகோதரர் பாபு அவர்கள்தான். (இங்கு ஜெய்லானி)

அதற்கு முன்பு வீடியோக் கருவியோடு மட்டும் அலைவேன்.
அறுசுவை சிறிது சிறிதாக என் கூட்டை விட்டு என்னை வெளியே கொண்டு வந்து விட்டிருக்கிறது. நட்பு வட்டம் பெருகி இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

~~~~~~~~~~~~~

ம்.... நெருப்புநரி திடீர் திடீரென்று சுருண்டு படுத்துக் கொள்கிறது. ;(


இதுவரை காலமும் இல்லாது முதல் தடவையாக 'வர்ட்பாட்' பக்கம் வந்து தட்டச்சு செய்கிறேன்.....

சேமித்து வைத்து பிற்பாடு வலைப்பூவுக்குக் கடத்தலாம் என்பதாக எண்ணம். எகலப்பை நிறுவ வைத்த சகோதரருக்கு நன்றி. ;)

அது ஒரு சுவாரசியமான கதை. ஒரு நாட்காலை.. தினமும் இப்படிக் காலையில் ஒரு முறை மின்னஞ்சல் இருக்கின்றதா என்று பார்த்து விட்டுப் போக வருவேன். அப்படி வந்தேன். என் அன்புக்குரிய சகோதரரும் அரட்டைக்கு வந்தார். எப்போதாவது தான் அரட்டை என்பதால் நான்கு வரி பேசிவிட்டுப் போகலாம் என்று நினைத்துத் தொடர்ந்தால் அப்படி இப்படி அன்றே 'ஆன்லைன் வகுப்பு' எடுத்து எகலப்பை நிறுவ வைத்து விட்டார்.

எனக்குப் பாடசாலைக்கு நேரமாகிவிடுமோ என்கிற தவிப்பு. இதையும் விட முடியவில்லை. விடாது தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த அறிவுறுத்தல்களைப் பின்தொடர்வது சிரமமாக இருந்தது. எனக்குக் கணனி மொழி தெரியவில்லை. ;( சகோதரரோ விடுவதாக இல்லை. ;) எனக்குப் புரியக் கூடிய எளிமையான மொழிநடையில் அறிவுறுத்தல்கள் வர ஆரம்பித்தன.

"அதெல்லாம் இருக்கிற ஐந்து நிமிடநேரம் போதும்," என்று ஆரம்பித்து... ;) என் தடுமாற்றத்தால் நேரம் கடந்து கொண்டே இருந்தது. நடு நடுவே "சீக்கிரம், பாடசாலைக்கு நேரமாகிறது," என்று வேறு மிரட்டி வயிற்றில் புளியைக் கரைத்தார். ;)) இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. ;) மறக்க முடியாத அனுபவம். ;)

பிறகு... வெற்றிகரமாக வேலை முடிந்ததும் ஒரு சரிபார்ப்பு. ;) "தமிழில் தட்டு," "இப்போ ஆங்கிலத்தில் தட்டு," ஒருவாறாகத் திருப்தியாகி "சரி, இப்போ க்ளாஸ் எடுத்து முடிஞ்சுது. இனி நீங்க போய் உங்க க்ளாசை எடுக்கலாம்," என்று விடுவித்தார். ;)) 'அப்பாடா!' என்று ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பிப் பாடசாலைக்கு ஓடினேன்.

என் 28 வருட அனுபவத்தில்... எத்தனை பேரோடு கற்பித்திருப்பேன்! இப்படி ஒரு ஆசிரியரைக் கண்டதே... இல்லை. பிரமிப்பாக இருந்தது. ;) எடுத்த நோக்கத்தை நிறைவேற்றாமல் போவதில்லை என்கிற வைராக்கியம்... நான் நிச்சயம் இப்படி இல்லை. ;)

ஒரு விடயம் உண்மை. என்னை வேறு யாரும் இதுபோல் 'ட்ரில்' வாங்கியது இல்லை. ;))

அன்று எடுக்கப்பட்ட வகுப்பின்போது சொல்லப்பட்ட முக்கியமான கருத்து ஒன்று, "இந்த மாதிரி டவுன்லோட் பண்ணி வச்சா எங்க வேணுமானாலும் தமிழில் தட்டலாம்."

'நான் என்ன தட்டப் போகிறேன்,' என்று அப்போ நினைத்தேன். இப்போ புரிகிறது, உண்மைதான். நிறையத் தடவைகள் நன்றி சொல்லியாயிற்று என்பதாலும் சகோதரர் இதைப் படிப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு என்று கருதியும் இங்கு நன்றி நவிலவில்லை. ;))

(இந்த நிகழ்வு பற்றி எனக்கொரு சந்தேகமும் இருக்கிறது, சரியோ தெரியவில்லை. ஒரு வேளை... அரட்டையில் என் இலங்கைத் தமிழைத் தமிங்கிலத்தில் படிக்கச் சிரமப்பட்டு அதைச் சொல்லாமல், என்னை இப்படித் தமிழில் தட்டவைக்க மேற்கொண்ட முயற்சியாக  இருக்கக் கூடுமோ!!!... ;))

49 comments:

  1. இமா! எனக்கும் தமிழில் தட்டச்ச ஆரம்பித்த நாள் நினைவிருக்கு. தங்கிலீசில் அடித்து தமிழ் எழுத்துக்களை காப்பி பேஸ்ட் செய்யாமல் முழிச்சிருக்கேன் :))

    ReplyDelete
  2. உங்க ஆங்கிலப் புலமை அறுசுவைல ரொம்பப் பிரபலமாச்சே இலா. அப்போல்லாம் நான் இல்லை. ஆனா இருந்தேன். ;)) ரசிச்சிருக்கேன். ;))

    ReplyDelete
  3. இமா,தட்டச்சுக் கதை சுவாரசியமா இருக்கு.:)

    ReplyDelete
  4. பொய் சொல்லப்படாது L's அண்ணி. ;)

    ReplyDelete
  5. அட நானும் அறுசுவைக்கு வந்த பின்பு தான் தமிழ் டைப்பிங் கற்று தேறினேன்,உங்கள் தமிழ் தட்டச்சு வகுப்பு பற்றிய பகிர்வு அருமை.

    ReplyDelete
  6. இமா.. யார் அந்தச் சகோதரர்?

    என் கணினியில என்னமோ ஆகிப் போயி ஹைஷ் சொல்லியிருந்த nhm writer இப்போ வேலை செய்யறதில்ல.. இது கூகிள் சாப்ட்வேர்ல இருந்து செய்யறது.. transliteration தான்.. ஆனா அதை விட கொஞ்சம் எளிதாக இருக்கு.. என்ன, வார்த்தைகளை சேர்த்து எழுதினால் குழம்பி விடுகிறது.. அதுக்கேத்த மாதிரி என் தமிழையும் மாத்திக்கறேன் :)

    க்ரோம் நிறுவியிருந்தா அதுல இருந்து வலைப்பூவுக்கு வரப் பாருங்க.. சீக்கிரம் ஆகுது..

    ReplyDelete
  7. வாங்க ஆசியா. ஆமாம். பலருக்கும் ஆரம்பம் அங்குதானே! ஆரம்பத்தில் இரண்டு வரி எழுதவே எனக்கு எவ்வளவோ நேரம் ஆகும்.

    ~~~~~~~~~~~~~~~~~

    சந்தூஸ், ப்ரதர் பேர் எல்லாம் சொல்ல மாட்டம் பப்ளிக்ல. ;)))

    //வார்த்தைகளை சேர்த்து எழுதினால் குழம்பி விடுகிறது.// அது போகப் போகப் பழகிரும். இப்ப... உதாரணத்துக்கு மருமகனுக்குக் கடிதம் எழுதி சைன் பண்றேன் என்று வைங்க. எழுதுறேன் பாருங்க. அன்புடன் ஆந்தி. க்ர்ர்... பாருங்க. ;) இப்பிடித்தான் வரும். அதனால.. ஆடி போட்டு 'டி' யைத் திரும்பத் தாண்டிப் போய் 'ன்' போடணும். சரியா? ;)) பழகிரும். செகண்ட் நேச்சராவே ஆகிரும். ;)

    //அதுக்கேத்த மாதிரி என் தமிழையும் மாத்திக்கறேன் :)// அதுதான் புத்திசாலித்தனம். ;) 'ஞாபகம்' என்று எழுதுவது எப்படி என்பது ஞாபகம் வராமல் பலகாலம் 'நினைவு' என்கிற சொல்லை மட்டும் பிடிச்சிட்டுத் தொங்கியது ஞாபகம் வருகிறது. ;))

    //க்ரோம் நிறுவியிருந்தா// என் கண்ணாடில போட்டோக்ரோம் இருக்கு. பார்க்கலாம். ஆரம்பத்துல இருந்தே நிறைய பயனுள்ள டிப்ஸ் குடுத்துட்டு வரீங்க. உங்க உதவி இல்லாட்டி ஃபாலோவர்ஸ் காஜட் போட்டே இருக்க மாட்டேன். இன்னும் லின்க் டார்க் கலர்ல கொடுக்க முடியல. சண்டை போட்டுட்டு இருக்கேன். ;) பார்க்க வேணும் எல்லாம். மிக்க நன்றி சந்தனா.
    இது என்னமோ ஸ்க்ரீன் க்ராக் ஆகி இருக்காம். ஒரு எக்ஸ்பர்ட் ஆன்லைன்ல சொன்னாங்க. ;) மாத்தணும். அது முடிஞ்சதும் பார்க்கலாம்.

    ReplyDelete
  8. actually i no understand anything...:)))

    ReplyDelete
  9. 'நங்க்'
    இப்ப புரியுதா!! ;)

    ReplyDelete
  10. ஹா ஹா தட்டச்சு கதை நல்லா இருக்கு. அறுசுவைதான் எனக்கும் தமிழ் தட்டச்சில் முதல் ஆசான் :). இப்போ எ கலப்பை நிறுவி தமிழில் தட்டச்சுகிறேன். ஒரே ஒரு பிரச்சினை என்னன்னா இப்போ ஆங்கிலத்தில் தட்டச்சினா கூட me என எழுத mii என தட்டச்சுகிறேன் :(

    ReplyDelete
  11. எனக்கு ஃபாலோ அப் கமெண்ட்ஸ் என்னுடைய மெயிலுக்கு வரமாட்டேங்குது :( என்ன பிரச்சினைன்னு தெரியலை. யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்கோ ப்ளீஸ்! மற்ற மெயில்கள் எல்லாம் வருது.

    ReplyDelete
  12. எனக்கும் இதே ஸ்பெல்லிங் பிரச்சினை தான். பசங்க முன்னால தப்பா தட்டிரக் கூடாதே என்று கவனமா இருப்பேன். ;)

    கவி, எனக்கு இந்த ஃபாலோ அப் கமண்ட் பிரச்சினைக்கு தீர்வு சொல்லத் தெரியவில்லையே! ;(

    ReplyDelete
  13. ஹாய் கவி,
    நலமா?
    blogger.comல் லாகின் பண்ணி, settings->comments->Comment Notification Email போய் உன்னோட ஈமெயில் அட்ரெஸ் குடுத்தா போதும்னு நினைக்கிறேன்.
    மீதி அப்புறம்.
    அன்புடன்,,
    செல்வி.

    ReplyDelete
  14. இமா, நானும் முன்பு தமிழில் தட்டச்சு செய்ய தெரியாமல் வெட்கப்பட்டு (!!??), ஒதுங்கி இருந்தேன். பின்னர் அறுசுவையில் ஓரளவு பழகினேன். இப்ப விரைவா டைப்பண்ணுவேன்.

    ReplyDelete
  15. இமா! என்னை வச்சு எத்தன பேரு காமெடி பண்ணியிருப்பாங்க.. அதான் இப்போ பாதி தமிழ் பாதி ஆங்கிலம்.

    வான்ஸ்! நானெல்லாம் தட்டறதில வேகம் இருக்கோ இல்லையோ.. சத்தம் பலமா வரும் :)) கிக்..கிக்..கிக்.. [ பூஸ் எங்கே என் நினைவுகள் அங்கே:(( ]

    ReplyDelete
  16. செல்விம்மா நலமா? அது நம்முடைய பிளாகில் யாராச்சும் கமெண்ட் போடும் போது அதுதானே நம் மெயிலுக்கு வரும். நான் கேட்கறது நாம யாருக்காவது கமெண்ட் போட்டுட்டு அதுக்கப்புறம் அங்கு வரும் பின்னூட்டங்களை நம் மெயிலுக்கு வரச்செய்வது பற்றி. இவ்ளோ நாளும் பிரச்சினை இல்லை. இப்போ ரெண்டு நாளாத்தான் பிரச்சினை :(

    சாரி இமா(ம்மா) உங்கள் பிளாகில் இதைப்பற்றி கதைப்பதற்கு :)

    ReplyDelete
  17. நினைவா ஒவ்வொரு கமண்ட் போடும்போதும் சப்ஸ்க்ரைப் பண்றீங்களா கவி?

    இதுல என்ன இருக்கு? நல்லதுதானே. நாமும் தெரிஞ்சு வைப்போம் இல்ல.

    ReplyDelete
  18. //வான்ஸ்! நானெல்லாம் தட்டறதில வேகம் இருக்கோ இல்லையோ.. சத்தம் பலமா வரும் // ;)))

    ReplyDelete
  19. ////வான்ஸ்! நானெல்லாம் தட்டறதில வேகம் இருக்கோ இல்லையோ.. சத்தம் பலமா வரும் // ;))) //

    எங்கே முதுகிலையா..?..இல்லை ..நடு மண்டையிலையா...?..!! ஹா..ஹா..

    ReplyDelete
  20. நான் ஆரம்பத்தில ”’கம்பன் “” சாப்ட் வேரில் அடித்து வைத்து பிறகு பிரிண்ட் எடுத்து வந்தேன் . கொஞ்சமா முன்னேறி... “”ஏ கலப்பை -பாமினி “” ஆனா இப்ப என் எச்..எம் சூப்பரா ஒர்க் அவுட் ஆவதால் வேற எதையும் திரும்பி கூட பார்ப்பதில்லை .. இப்போ வேகமா தமிழில் டைப் அடிக்க இதுவே வசதியா இருக்கு

    ReplyDelete
  21. இமா...!நலமா? உங்க டைப்பிங் வரலாறு நல்லாதான் இருக்கு. எனக்கும் அறுசுவைக்கு வந்த பிறகுதான் தமிழ் டைப்பிங்கே தெரியும்! ஆரம்பத்தில்தான் கொஞ்சம் மிஸ்டேக் வந்தது. ரொம்ப சீக்கிரமே வேகமாக டைப் பண்ண வந்துவிட்டது, என்றாலும் எகலப்பை நிறுவினால் சரியாக வரமாட்டேங்குது. ஃபிரெஞ்ச் கீ போர்டாக இருப்பதாலோ என்னவோ...?! எதனால் என்று நல்ல மனசு வச்சு :) யாராவது சொன்னால் மீண்டும் அதை நிறுவி ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.

    ReplyDelete
  22. தட்டச்சு கதை அருமை இமா! பாருங்கள், இதை நீங்கள் எழுதியதும் எத்தனை உபயோகமான தகவல்கள் பின்னால் வந்து கொண்டேயிருக்கின்றன!!

    ReplyDelete
  23. நானும் இ கலப்பை தான் உபயோகிக்கிறேன். அஸ்மா சொல்கிற மாதிரி எனக்கும் அடிக்கடி இந்த பிரச்சினை வந்து கொண்டேயிருக்கிறது.. சகோதரர் ஜெய்லானி உபயோகிக்கும் எச்.எம் பற்றி- அவர் தகவல் சொன்னால் தேவலாம்!

    ReplyDelete
  24. வான்ஸ்,
    //வெட்கப்பட்டு (!!??), ஒதுங்கி//
    அதுவே இங்கும். அதற்கு என்னை யாரோ "நன்றி போஸ்டிங் போடுற ஆள்" என்று வேறு சொல்லி இருந்தார்கள். ;))

    ReplyDelete
  25. ஜெய்லானி, பயங்கரமா தட்டுறீங்க, பார்த்து. ;)))

    மனோ அக்கா உங்களிடம் ஒரு உதவி கேட்டு இருக்கிறார்கள், கவனித்தீர்களா? முடிகிறபோது மறக்காமல் உதவுங்கள்.

    ~~~~~~~~~~

    வாங்க அஸ்மா, என்னையறியாமல் ஒரு இடுகை போட்டாலும் போட்டேன். ஒரே அறுசுவைக்குப் பாராட்டு மழையாக இருக்கிறது. ;)
    உண்மையில் தட்டவென ஆரம்பித்தது வேறு தலைப்பு. நெருப்புநரி சுருண்டு... வேறெங்கோ கொண்டுபோய் விட்டார். ;)
    //டைப்பிங் வரலாறு.. ம். ;))

    //ஃபிரெஞ்ச் கீ போர்டாக இருப்பதாலோ என்னவோ...?! எதனால் என்று நல்ல மனசு வச்சு :) யாராவது சொன்னால் மீண்டும் அதை நிறுவி ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.//
    பார்க்கலாம் யார் அந்த நல்ல மனசுக்காரர் என்று. ;))

    (ஜெய்லானீ.... தயை கூர்ந்து மேடைக்கு வருக.)

    ~~~~~~~~~~

    உண்மைதான் மனோ அக்கா. அறியாத பல விடயங்கள் அறிந்து கொண்டேன். இடுகையிடும் போது நான் இதனை எதிர்பார்க்கவில்லை.

    ReplyDelete
  26. வாங்க இர்ஷாத். :)) உடல்நலக்குறைவு என்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போ பரவாயில்லையா?

    ReplyDelete
  27. NHM -ரைட்டர் யுனிக்கோட் டைபாக இருப்பதால் ஒரே சாஃப்ட் வேரை வைத்துக்கொண்டு ஒன்பது விதமான இந்திய மொழிகளில் அடுத்தடுத்து எழுதலாம் . உபயோகிப்பது ரொம்பவும் ஈஸியா இருக்கு .

    எல்லாவித மான சாஃப்ட்வேரிலும் தமிழில் மிக வேகமா அடிக்க முடிகிறது. எ-கலப்பை நிறைய இடங்களில் மக்கர் பண்ணுகிறது .

    tamil 99, phonetic, tamil Old typewriter, Bamani - வகை என நான்கு வகையான தட்டச்சுகளில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் .

    இதில வேர்ட் ,பவர் பாயிண்ட் போல இன்னும் சிலவற்றில ஃபாண்ட் மாற்ற தேவையில்லை அதுவாகவே மாறிக்கொள்ளும் .

    யூஸ் பண்ணிப் பார்தால் வித்தியாசம் தெரியும் .
    அதில் தமிழ் பொனடிக் யூனிகோட் (( ஆல்ட் + 2 )) மட்டும் செலக்ட் செய்து பாருங்க. ஆன் போர்ட் கீ போர்டும் இருக்கு..

    இதை டவுன்லோட் செய்ய என் பிளாகிலும் லிங்க் இருக்கு ..இல்லை http://software.nhm.in/products/writer போய் டவுன் லோட் செய்யலாம் .

    சிலர் இதை பயன்படுத்தினால் ஸிஸ்டம் ஹேங் ஆவதாக சொல்வது..காக்காய் உட்கார பண்ம்பழம் விழுந்த கதைதான் . எதற்கும் எதற்கும் மேலே ஒரு தடவை அண்ணாந்து பார்த்து கொள்ளவும். :-))

    ReplyDelete
  28. உதவிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி ஜெய்லானி.

    ReplyDelete
  29. எல்லோரும் கணணி பற்றி ஏதேதோ பேசுகிறீர்கள்.
    அது என்ன எகலப்பை? எனக்குத் தெரிந்ததெல்லாம் வயல் உழும் கலப்பை மட்டுமே.

    ReplyDelete
  30. இமா! என்னிடம் என்ன உதவி? மீண்டும் பின்னூட்டங்களையெல்லாம் படித்தேன். எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லையே?

    ReplyDelete
  31. அன்புச் சகோதரர் ஜெய்லானி!

    NHM DOWNLAOD பற்றி விரிவாக எழுதியிருந்ததற்கு அன்பு நன்றி! Download and installation செய்தேன். கீழே உள்ள icon -ல் க்ளிக் செய்தால் not valid என்று வருகிறது! E kalappaiயைப்போலத்தானே இதையும் install செய்ய வேண்டும்?

    ReplyDelete
  32. அன்பு மனோ அக்கா,

    அது ஜெய்லானிக்கான பதிலின் கீழ் உங்களுக்குப் பதில் சொல்லுமாறு அவருக்கு அழைப்பு வைத்திருந்தேன்.

    என் தமிழை மன்னிக்க. ;)தவறுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  33. இமா நலமா? சரி நான் மட்டும் எப்படி இதில் கல்ந்துக்காம இருக்கிறது. அதுதான் ஒடோடி வந்தேன்.
    எனக்கும் அருசுவை பாபு தான் குரு. அவர் தான் முதலில் எகலப்பை, அதன் பிறகு NHM. இப்ப சூப்பரா
    NHM வேலை செய்கிறது. ஜெய் சொல்வது போல் உபயோகித்தால் தான் தெரியும். உணமயிலேயே ரொம்ப நல்லா இருக்கு. ஆல்ட் 2 ப்ரஸ் செய்தால் கீ போர்ட் அப்படியே தமிழில் டைப் செய்ய வசதியா இருக்கும். எந்த கஷ்டமும் இல்லை. மனோ அக்கா ,ஆஸ்மா,ரொம்ப சிம்பிள் தான் இன்ஸ்டால் செய்து விட்டு கம்யூட்டர் ரீஸ்டார்ட் செய்து பாருங்க. சூப்பர வொர்க் ஆகும். மேலும் விபரங்களுக்கு கூகிலில் NHM தமிழ் பாஃண்ட் என்று ஸர்ச் பண்ணி பாருங்க. ரொம்ப சிம்பிளா குடுத்திருப்பாங்க. மேலும் டவுட் இருந்தால் கேளுங்க.
    ஆமாம் இமா இப்பவும் எனக்கு தமிழில் பிழை வருகிறது. அது வேற கதை.ம்.. நல்லா இருக்கு இமா.

    ReplyDelete
  34. இமா! நானும் சரியாக படிக்கவில்லையென்று நினைக்கிறேன். நான் தான் ‘மன்னிக்க’ என்று சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  35. அன்புச் சகோதரர் ஜெய்லானி!

    எனக்கு nhm writer சரியாக வரவில்லை. இன்று மறுபடியும் install செய்தேன். உடனேயே ஒரு பாக்ஸ் வருகிறது. அதில் “ Ad watch livel has blocked the process nhm writer set up 1511 exe[3104] from starting on your system. The process has been identified as win32.trojan.Spy.delf’ என்ற message வருகிறது. இதற்கு என்ன காரணம் என்று தெரிந்தால் சொல்லவும்.

    ReplyDelete
  36. இமா நீங்கல் எல்லோரும் சொல்வது போல்.எழுத்துதவி
    அருசுவை மூலமாக தான் தமிழ் தட்டச்சே பழகினேன்.(இதற்கு பாபுக்கு ரொம்ப நன்றி சொல்லனும்) தட்டச்சு மற்றும் தெரிந்திருந்தால் இன்னும் ஐந்து வருடம் முன்பே நெட்டில் குறிப்புகள் கொடுத்து இருப்பேன்.
    ஆனால் எல்லா குறிப்பை கூட் அதில் தான் டைப் செய்து அனுப்பினேன்.
    நிறைய பேர் சாட்டிங்கில் பேசும் போது அப்படியே தமிழில் அடிப்பார்கள் எப்படின்னு தெரியாம மண்டைய போட்டு குழப்பி இத்தனை வருடம் ,த்வித்து க்டைசியில் ஒரு பிளாக்கில் விபரமாக போட்டு இருந்தது பார்த்து அதன் படி இப்ப எல்லா கம்புயுட்டரிலும் இதை தரவிரக்கி வைத்துள்ளேன்ன் ரொம்ப ஈசியாக இருக்கு

    ReplyDelete
  37. சூப்பர் இமா உங்க தட்டச்சுக்கதை.நானும் அறுசுவைமூலமாகத்தான் (கை)தட்ட(ச்சு)க் கற்றுக்கொண்டேன்.நன்றிக்கடன் அறுசுவைக்கும், J.ja என்ற நண்பிக்கும்.இப்போ கூகுல்,இகலப்பை என தட்டச்சு(ஏற்று)கிறேன். நன்றி

    ReplyDelete
  38. //“ Ad watch livel has blocked the process nhm writer set up 1511 exe[3104] from starting on your system. The process has been identified as win32.trojan.Spy.delf’ //


    எனக்கு சரியாக வருகிரதே..!! எத்தனை முறை ரீ இன்ஸ்டால் செய்தும் சரியாக வருகிறது..!!

    உங்கள் மிஷினை அப்டேட் உள்ள ஆண்டி வைரஸால் திரும்ப செக் பண்னி ப்பாருங்க . பெரும்பாலும் இது வைரஸின் வேலைதான். இதுப்போல அழைய்யா விருந்தாளியாக வந்து நமது ரெஜிஸ்டிரிகளில்மாற்றம் செய்யாமல் இருக்க win Patrol சாஃப்ட் வேர் போட்டு வையுங்கள்..

    இதை http://www.winpatrol.com/download.html என்ற இடத்திலிருந்து டவுன் லோட் செய்யுங்க .சின்ன சாஃப்ட் வேர் இலவசம் ..!!

    உங்களை கேக்காமல் எந்த மாற்றமும் ரிஜிஸ்டிரியில் ஏறாது. வைரஸ் வரும் வழி அடைப்பட்டு விடும் :-))

    ###########
    லேட்டாக பதில் இட்டதுக்கு மண்ணிக்கவும்
    ###############

    ReplyDelete
  39. அச்சச்சோ... டவுட் கேட்டதையே மறந்துட்டேன், ஸாரி! இப்போ திடீர்னு இமா ஞாபகம் வந்ததும், வந்து பார்த்தால்... இத்தனை பதில்கள்! விளக்கம் தந்த ஜெய்லானி சகோவுக்கும் அதை யூஸ் பண்ணி விளக்கம் சொன்ன விஜிக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த இமா மற்றும் மனோ மேடத்துக்கும் என் நன்றிகள்.

    விஜி! யூஸ் பண்ணி பார்த்துட்டு சந்தேகம் இருந்தா கேட்கிறேன். விஜி, ஒரு நிமிஷம்! இனிமே என் பெயரை சொல்லும்போது மெதுவா வாயைத் திறங்க, சரியா? பெருசா 'ஆ'ன்னு திறந்தா 'ஆஸ்மா' ன்னுதான் வரும். நான் அஸ்மா :))) (புரியலயா? மேலே உங்க கமெண்ட்ஸ்ல பாருங்க, என் பேரை மாத்திட்டீங்கல்ல, அதான்:))

    ReplyDelete
  40. இமாவின் உலகில் இருக்கும் ஒரேயொரு உருப்படியான இடுகை இதுவாகத்தான் இருக்கும். சாதனைதான். ;)

    இந்த இடுகை மனோ அக்காவுக்கும் அஸ்மாவுக்கும் உதவியாக இருந்தது பற்றி மகிழ்ச்சி.

    நல்வரவு ஜலீலா & ஸ்ரீப்ரியா. எத்தனை பேருக்கு அறுசுவை, தமிழ்த்தட்டச்சின் முதற்படியாக இருந்திருக்கிறது என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது. அதன் நிர்வாகி பாபு அவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவரே.

    ReplyDelete
  41. வாங்கோ விஜி. ;)
    உங்க அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

    //இப்பவும் எனக்கு தமிழில் பிழை வருகிறது.// எனக்கும். ;))) (இதனைப் புரிந்து கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் எம்மால் முடிந்தால் அது ஆரோக்கியமான விடயம்தான்.) முடிந்தவரை பிழையில்லாமல் தட்டப் பார்ப்பேன். எனக்கு என்று பதில்கள் வரும்போது பதிலிட்டவரின் அன்பைக் கருத்தில் கொண்டு சிலசமயம் க.கா.போ தான். ;) அதே அன்பின் காரணமாகச் சிலசமயம் சுட்டிக்காட்டி விடுவதும் உண்டு. இங்கு எல்லோரும் தமிழரல்லவென்பது தெரிந்ததுதானே! ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

    ஆயினும், சிலரது வலைப்பூக்களில் தப்புத் தப்பாகத் தமிழ் இருப்பதால் சிறப்பான விடயங்களைப் பகிர்ந்து கொண்டாலும் கூட, படிக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றுவது இல்லை. சுவாரசியம் காணாமல் போய் விடுகிறது. ;(

    மிக்க நன்றி ஜெய்லானி. எத்தனையோ வேலை இருக்கும் உங்களுக்கு. எல்லாவற்றுக்கும் நடுவில் வந்து இப்படிப் பொறுமையாகப் பதில் சொல்லி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. மீண்டும் என் நன்றிகள். இந்த இடுகையைச் சிறப்பித்திருப்பது கொடுக்கப்பட்டுள்ள கருத்துக்களும், கேட்கப்பட்டுள்ள வினாக்களும் உங்களைப் போன்றோர் பதில்களும்தான். தொடர்ந்து வரவேண்டும். உதவிக்கு மீண்டும் என் நன்றிகள்.

    ReplyDelete
  42. //ஃபிரெஞ்ச் கீ போர்டாக இருப்பதாலோ என்னவோ...?! எதனால் என்று நல்ல மனசு வச்சு :) யாராவது சொன்னால் மீண்டும் அதை நிறுவி ட்ரை பண்ணிப் பார்க்கலாம்.//

    கீ போர்டுக்கும் அதுக்கும் சம்பந்த மில்லை .லே அவுட் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டு ஒரே நாளில் தட்டச்சலாம் ..( முடிந்தால் ஸ்டிக்கரில் பிரிண்ட் எடுத்து ஒட்டியும் வைக்கலாம் -நான் உபயோகிப்பது ஆங்கிலம் + அரபிக் கீபோர்ட் ) எப்படி அம்மா என்று ஆங்கிலத்தில தட்டுகிறோமோ அதுப்போலவே தட்டினால் தமிழில் அம்மா என்று வரும் .முயற்ச்சி செய்ய செய்யதான் ஆர்வம் வரும் :-))

    ReplyDelete
  43. //எல்லாவற்றுக்கும் நடுவில் வந்து இப்படிப் பொறுமையாகப் பதில் சொல்லி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. மீண்டும் என் நன்றிகள் ///

    இப்படி நன்றி..நன்றி சொல்லி தனியாக பிரிக்க வேண்டாம்...!! :-)
    :-(

    ReplyDelete
  44. ;) ஓகே. நன்றி வாபஸ். ;)))

    ReplyDelete
  45. சகோ, NHM Writter இல் தமிழை இலகுவாக தட்டச்சு செய்யலாம், உங்கள் கணினியில் இந்த லிங்கில் போய் இண்ட்ஸ்டால் செய்த பின்னர் வேண்டிய நேடத்தில் கீபோர்ட்டில் Alt+2 அழுத்தினால் போதும்.

    http://software.nhm.in/products/writer

    ReplyDelete
  46. பகிர்வு சுவாரசியம்.எனக்கும் ஆரம்பத்தில் மெயில் மூலம் தமிழில் குறிப்பு எழுத பாடமே எடுத்திருக்கிறார்.நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா