Sunday 26 December 2010

டிசெம்பர் 26 - ஒரு மீள்பார்வை

& ஒரு அழைப்பு

டிசெம்பர் 26 - வருடாவருடம் Boxing Day

டிசெம்பர் 26, 1960 - என் அன்புப் பெற்றோரது மணநாள்
டிசெம்பர் 26, 2004 - மட்டுநகரில்... இரண்டு நாட்களில் ஐம்பதாவது மணநாள் கொண்டாடவிருந்த என்  ஞானப்பெற்றோர் அவர்களது குடும்பத்தினரோடு ஆழிப்பேரலைப் பேரழிவில் சிக்கிக் காணாமற் போனமை
டிசெம்பர் 26, 2010 - செபாவின் தங்கத் திருமண நாள்


தாயாய்த் தாதியாய்த்
தோழியாய்
நல்லாசானாய்...
இன்றுவரை எனக்கு மட்டுமல்லாது 
என் குழந்தைகளுக்கும் 
அனைத்துமாக இருந்து வரும் 
என் அன்பு அன்னை செபாவையும் 
எனது அருமைத் தந்தையையும் 
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
 ~~~~~~~~~~

இங்குள்ள உறவுகள், நட்புக்களுக்கு இன்றிரவு ஒரு குட்டி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். ;) என் மகிழ்ச்சியில் இணைந்துகொள்ள உங்களையும் அழைக்கிறேன்.

அழைப்பிதழ் இதோ..

வருக. ;)

வாழ்த்த விரும்பின்.. செபாம்மா இதயத்திற்குத் தொடர்பு இதோ ;)

 அன்புடன் 
இமா