Thursday 28 April 2011

கையாலாகாத்தனம்

[l:-) இமாவின் உலகத்தார் அனைவருக்கும் அன்பு வணக்கம். 
கடந்த சில... அல்ல, பல மாதங்களாகவே தட்டச்சு செய்வது சிரமமாக இருந்து வந்தது.
இந்த வருஷம் வாழ்த்துக்கள் உட்பட இதுவரை 25 இடுகைகள்தான் பதிவிட்டு இருக்கிறேன். அவை கூட அதிகம் தட்டச்சு செய்யாமல் படங்களை இட்டு நிரப்பியவை. பலது ஏற்கனவே ஏதோ ஒரு சமயம் தட்ட ஆரம்பித்து அரைகுறையாக நின்ற பதிவுகள், இப்போ முடித்து வெளியிட்டவை.

எப்படியாவது சமாளித்து ஓட்டி விடலாம் என்று இதுவரை முயற்சித்து... இனி இயலாது என்கிற நிலைக்கு வந்தாயிற்று.

வலது கை கட்டாய ஓய்வு கேட்கிறது. மருத்துவ ஆலோசனையின்படி மெதுவே இடது கைக்கு வேலைகளை மாற்றிப் பழக்கிக் கொண்டு இருக்கிறேன். முறையாகத் தட்டச்சு கற்றதில்லை. என் வசதி போல் சில விரல்களைப் பயன்படுத்துகிறேன். ஆனால் பிடித்த வேலை. ;) தட்ட ஆரம்பித்தால் வேக வேகமாகத் தட்டுவேன்... பிறகு வேதனையில் இரவு உறக்கம் தொலைந்து போகிறது.

விடுபட்டுப் போன கடமைகள் நிறைய இருக்கின்றன, பதில் போடாத முக்கிய மின்னஞ்சல்கள் ஏராளம்; என் உலகத்து இடுகைகளில் கருத்துச் சொன்னவர்களுக்குச் சரியானபடி பதில் சொல்வதில்லை; பெற்றுக் கொண்ட விருதுகள் பல இன்னமும் இணைக்கப் படவில்லை.

அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.

இடது கையால் வேலை செய்வது சுலபமாக இல்லை. பழக்கம் இல்லை. அதிக நேரம் எடுக்கிறது. ஆனாலும் முக்கியமான வேலைகளைத் தவிர்க்க இயலவில்லை!
இன்னும் இரண்டு நாட்களில் இரண்டாம் தவணை வேறு ஆரம்பிக்கவிருக்கிறது.

எத்தனை நாளைக்கு ஸ்மைலியும் சுருக்கமான கருத்துக்களும் சொல்லிச் செல்வது! படிக்கிற வலைப்பூச் சொந்தக்காரருக்கு ஏனோதானோவென்று நான் கருத்துச் சொல்லி இருப்பதாகக் கூட எண்ணத் தோன்றலாம் அல்லவா? 

என் நிலையைத் தெளிவுபடுத்தி விட்டு வலைப்பூ உறவுகளிடமிருந்து தற்காலிகமாக விடைபெறலாம் என்று தோன்றிற்று.

இறுதித் தொடர்பதிவுக்கு அழைத்த விதத்தில் அதிராவுக்கு மட்டும் என் நிலை பற்றிச் சுருக்கமாகத் தெரியும். இப்போ மீதிப் பேரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்புகிறேன்.

சமீபத்தில் புதிதாகப் பின்தொடர இணைந்துள்ளவர்களை ஏமாற்றுவது போல் இருக்கிறது. கவலையாக இருக்கிறது. ;( மன்னியுங்கள்.

கை வலிக்கிறது என்று சொல்வதற்கும் கை வலிக்கத் தான் தட்டச்சு செய்ய வேண்டி இருக்கிறது. ;))

என் உலகில் சேமிப்பில் உள்ள இடுகைகள், முடிகிற வரை அவ்வப்போது தன்னால் வெளியாகும். வேறு பகிர்ந்து கொள்ள இருந்தால் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்கிறேன்.  

கருத்துச் சொல்லாவிடினும் வழமை போல் உங்கள் அனைவர் இடுகைகளையும் படித்துக் கொண்டு இருப்பேன். ;) தங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு என் நன்றிகள்.

அனைவருக்கும் மீண்டும் என் அன்பு

_()_

kia ora

மீண்டும் சந்திப்போம்

-    இமா

22 comments:

  1. இப்பூடி ஏமாத்திட்டீங்களே,

    தட்டச்சு இலகுவாக எப்படிச் செய்வது என்று நேற்று உங்களின் பழைய பதிவொன்றிற்கு பின்னூட்டம் போட்டேனே, வரவில்லையா?

    ReplyDelete
  2. http://software.nhm.in/products/writer

    இந்த இணைப்பில் உள்ள சாப்ட்வேரை தரவிறக்கினால், இலகுவாகத் தட்டச்சலாம். phonetic முறையில் தமிழ் டைப் செய்யலாம்.

    amma- அம்மா.

    ReplyDelete
  3. நல்லா கை சுகப்படவிட்டு நீங்கள் கெதியா வருவதற்கு பொசிட்டிவ் அலைகளை அனுப்புகிறேன்.

    ReplyDelete
  4. :(

    வருத்தமா இருக்கு இமா டீச்சர்

    இவ்வளவு கை வலியோடு அவ்வளவு பெரிய உறவுகள் கதை சுவாரஸ்யமாவே எழுதியிருந்தீங்க..

    மத்தவங்கள மாதிரி நீங்க ஸ்மைலி போட்டா தப்பா நினைக்கிறோம்ன்னு நீங்களாவே தப்பா எடுத்துண்டேள் தப்பு டீச்சர் .

    உங்களோட இந்த சின்ன சின்ன பகிர்தல்கள் படிக்கிறப்போ சந்தோஷமாவே இருக்கும் அதுக்காக எங்களுக்கு கருத்து சொன்னாதான் உங்களுக்கு கருத்து சொல்வோம்ன்னு நினைக்காம முடிந்த அளவு தங்கள் உலகத்திலிருக்கும் சின்ன சின்ன உயிரினங்கள் மரங்கள் செடிகள் இவைகளை புகைப்படங்களாக பதிவேற்றுங்கள். படிக்க கிண்டல் பண்ண நான் இருக்கினம்.

    டேக் கேர் டீச்சர் ட்ர்ரீட்மெண்ட் எடுங்க , ரெஸ்ட் எடுங்க.தொடர்பில் இருங்கள்.

    ReplyDelete
  5. என்ன இமா,இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுறீங்க.விரைவில் உங்கள் வலிக்கு நிவாரணம் கிடைத்து பூரண நலத்துடன் பிளாக் உலகம் திரும்ப என் வாழ்த்துக்கள்,.

    ReplyDelete
  6. உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

    என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

    http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

    ReplyDelete
  7. இமா உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள்,பின்னர் தான் மற்றவை எல்லாம்.மனம் வருந்த வேண்டாம். நேரம் கிடைக்கும் பொழுது அப்ப அப்ப வழக்கம் போல் அழகான சின்ன சின்ன நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    //கருத்துச் சொல்லாவிடினும் வழமை போல் உங்கள் அனைவர் இடுகைகளையும் படித்துக் கொண்டு இருப்பேன். ;) //

    மிக்க மகிழ்ச்சி இமா..God Bless.

    ReplyDelete
  8. நான் உங்க ப்ளாக்-ஐ பின்தொடர ஆரம்பித்த சொற்ப நாட்களிலேயே இந்த நிலைமையா..... :(
    நீங்கள் சீக்கிரம் குணமடைய என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நெடுகவும் கைவலியை வைத்திருக்கக்கூடாது இமா, அதுக்கு ஒரு முடிவெடுத்திட்டு.. உலகத்திற்கு வாங்க... சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம்.

    ReplyDelete
  10. /கருத்துச் சொல்லாவிடினும் வழமை போல் உங்கள் அனைவர் இடுகைகளையும் படித்துக் கொண்டு இருப்பேன். ;) //
    Thanks a lot ima
    take care சீக்கிரம் உங்கள் கை சுகமடைய பிரார்த்திக்கிறேன் .

    ReplyDelete
  11. என்னாச்சு இமா? கை வலி விரைவில் குணமாக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நீங்கள் பதிவுகளைப் பார்ப்பீர்கள் என்பதே போதும். ஒரு புள்ளி வைத்தாலும் இமா வந்து போனதற்கு அடையாளம் தான். நல்லா ரெஸ்ட் எடுத்து விரைவில் குணமாகி வாங்க இமா, காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  12. Take care of your health first Ima. We shall be here (insha allah) and we won't forget you and come back with new vigour.

    Get well soon!! :-))))))

    ReplyDelete
  13. கொஞ்சமல்ல, நிறையவே வருத்தமா இருக்கு :(((( கை சரியாவது தான் முக்கியம், எனக்கும் இந்த வலி இருக்கு.. விரல்கள்ல - தொடர்ந்து வேலையில ஸ்க்ரோல் செய்வதால வாறது..

    முன்னாடி நீங்க ஸ்மைலி போட்டுட்டு போனப்ப போக விடாம வம்பிழுத்தது நினைவுக்கு வருது.. :(( சாரி..

    இனிமே நீங்க வந்து ஸ்மைலி போட்டுட்டுப் போனாலே சந்தோஷம் தான் இமா.. உங்களைப் பாத்தா மாதிரி பேசினா மாதிரி இருக்கும்..

    சரியாகற வரைக்கும் கைகளுக்கு நல்ல ஓய்வு கொடுங்க.. அதுதான் முக்கியம்.. take care..

    ReplyDelete
  14. டேக் கேர் இமா! கைக்கு நல்லா ஓய்வு கொடுத்து சரியானபிறகு வாங்க.
    /இனிமே நீங்க வந்து ஸ்மைலி போட்டுட்டுப் போனாலே சந்தோஷம் தான் இமா.. உங்களைப் பாத்தா மாதிரி பேசினா மாதிரி இருக்கும்.. /ரிபீட்ட்டு! :)

    ReplyDelete
  15. /இனிமே நீங்க வந்து ஸ்மைலி போட்டுட்டுப் போனாலே சந்தோஷம் தான். உங்களைப் பாத்தா மாதிரி பேசினா மாதிரி இருக்கும்.. /ரிபீட்ட்டு!

    ReplyDelete
  16. அதெல்லாம் கைவ‌லி ந‌ல்லாப்போயிரும் இமா..டோண்ட் ஃபீல்.. கொஞ்ச‌ நாள் ஓய்வுக்கு பிற‌கு திரும்ப‌வும் எப்போ எழுத‌ தோணுதோ அதை அந்த‌ நேர‌த்துல‌ எழுதுங்க‌..

    உங்க‌ளுக்காக‌ என் ம‌ன‌தில் தோன்றிய‌ சில‌ வ‌ரிக‌ள்,

    'இமாவிற்கு கை
    கொடுக்கும் கை
    கூடிய‌ விரைவில்
    இடுகை'

    :)

    ப்ரார்த்த‌னைக‌ளுட‌ன்,

    ReplyDelete
  17. இமா அக்கா என்ன ஆச்சு, கைவலி இப்ப பரவாயில்லையா?
    பரவாயில்லை டைப் பண்ணலானனாலும் , வந்து படஙக்ளாவது போட்டு போங்களே/

    ReplyDelete
  18. வேலைப் பழுவின் காரணமாக ஒரு வாரம் இனைய தலத்திர்க்கு வர இயலவில்லை இன்ஷாஅல்லாஹ் பதினாரு தேதி அன்று ஊருக்கு போறேன் சந்திப்போம்...

    ReplyDelete
  19. மிக்க நன்றி நிரூபன். நீங்கள் குறிப்பிட்ட விடயத்தை மனதில் வைத்துக் கொள்கிறேன். என் பிரச்சினை இப்போது அதுவல்ல, என் கைதான். நான் ‘சொல்வதை’ அப்படியே தட்டச்சு செய்கிற மாதிரி ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும். ;))

    ~~~~~~~~~~~~~~~~~

    நன்றி வசந்த். //உறவுகள்// ;) அது இப்போ எழுதியது அல்ல. படிச்சுப் பார்த்து வந்து சொன்னதற்கு மிக்க நன்றி. ;)
    //படிக்க கிண்டல் பண்ண நான் இருக்கினம்.// ;)) உங்களுக்கு ஒரு க்ளாஸ் எடுக்க வேணும். பொறுங்க வாறன். ;)
    //டீச்சர்// ? 2 வாரத் தவணை முடிஞ்சு போச்சுது என்று நினைவு படுத்துறீங்களோ?

    ReplyDelete
  20. ஸாதிகா, // ஒரு குண்டை தூக்கிப்போடுறீங்க.// அதெல்லாம் நினைச்சுப் பார்க்கவே முடியாதே. ;)))

    ~~~~~~~~~~

    விருதுக்கு நன்றி ஃபாயிஜா. திரும்ப முழுமையாக வந்ததும் இணைத்து விடுகிறேன். குறை எண்ண வேண்டாம்.

    ~~~~~~~~~~

    நன்றி அனாமிகா, ஆசியா, cooking simple, ஏஞ்சலின், செல்வி, ஹுசைனம்மா, மகி & சிவா.

    ~~~~~~~~~~

    அதிரா, // அதுக்கு ஒரு முடிவெடுத்திட்டு.. உலகத்திற்கு வாங்க...// ம். சரி.

    ReplyDelete
  21. சந்தனா, // சாரி.. // எல்லாம் வேணாம். திரும்ப வந்ததும் பழி வாங்கிருவேன். ;)

    ~~~~~~~~~~~~

    கவிதை நல்லா இருக்கு இர்ஷாத். ;))

    ~~~~~~~~~~~~

    நடுவில் நான் செய்த வேலை எல்லாம் கூகிள் மெய்டெனன்ஸ் வேலைகளால் இப்போ காணவே இல்லை ஜலீ. ;( திரும்ப முயற்சிப்பதாக இல்லை. ;(

    ~~~~~~~~~~~~

    சந்தோஷமாகப் போய்வாங்க அயூப். Happy holidays.

    ~~~~~~~~~

    இன்றைக்கு தட்டியது போதும். ;))

    ReplyDelete
  22. The photo is wonderful,if not pinted or natural is too exotic,your previous dish is exquisite and l could not traduction mass,it would be nice to add the button to you blog traslator,affection hugs,like hello.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா