Wednesday 20 April 2011

பஞ்சு தோசை & மஞ்சு சட்னி

கொஞ்ச நாளாக இந்தத் தோசையும் சட்னியும் மனதில் வந்து தொந்தரவு தருது. இது அசோக்நகர் ஸ்பெஷல்.

யாராவது இந்தச் சிவப்புச்சட்னி (வெங்காய சட்னிதான்) குறிப்புத் தந்தால் அவங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும். ;)) இது மாதிரிக் குறிப்பு வேணாம், இதே குறிப்புத் தான் வேணும். ;) பாப்பம், யார் சொல்றீங்கள் எண்டு.
அம்முலூ... எங்க இருக்கிறீங்கள்!!! ;)

அப்பிடியே..
முன்னால 'ஆஸ்மி' படத்தைப் பார்த்து ஏதோ 'பதர் பேணி' பற்றிக் கதைச்சீங்களே, அதையும் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டுப் போங்க.

22 comments:

  1. நாகில் எச்சில் இப்பவே வருது ரொம்ப சுவையா இருக்கு போல இல்ல

    ReplyDelete
  2. ம். அது சொல்ல ஏலாத அளவு டேஸ்ட். இல்லாட்டி நான் ஏன் கேட்கிறன் யூஜின்.
    சரி... முதலாவது வந்த ஆளுக்கு ரெசிபி தெரியாது. ;)

    ReplyDelete
  3. ஹஹ்ஹா!! ட்ரிப் போனபோது அங்கே நண்பர் வீட்டில் சாப்ட்டுட்டு வந்து, இங்கே //இது மாதிரிக் குறிப்பு வேணாம், இதே குறிப்புத் தான் வேணும்.//என்று கேட்டால்????? செய்தவங்கதான் சொல்லோணும்!! :)

    பஞ்சு தோசையும் சட்னீஸும் சூஊஊஊப்பரா இருக்கு இமா! :P :P:P

    பி.கு.இரண்டாவது வந்த ஆளுக்கும் ரெசிபி தெரியாது. ;)

    ReplyDelete
  4. மகிக்கும் தெரியாதா!!

    நண்பர் வீடு என்றால் நண்பர்ட்ட கேட்டுருவன். இது வேற இடத்தில சாப்பிட்டது. கேட்கிறதுக்கு வசதி இல்லை. ;(

    ReplyDelete
  5. puthusa recipe pottu irukkeegnu vantha, ippadi emathiteengale?

    ReplyDelete
  6. சமையலா, நம்ம ஏரியா இல்லை!! ;-)))

    ரெண்டாம் படத்தில் இருப்பது இடியாப்பமா, ஜாலர் அப்பமா என்று சந்தேகமா இருந்துது. செய்முறையைப் பாத்தா கொஞ்சம் ஜாலர் போலன்னாலும், இது பொறிக்கிறது; அது ”சுடுறது”!!

    செய்முறையைக் கேக்க முடியாது, ஆனா ஃபோட்டோ எடுக்க மட்டும் முடியுமோ!! அப்படின்னா, ஹோட்டலா? ;-))))

    ReplyDelete
  7. படத்தில் இருப்பதை அப்படியே அள்ளி சாப்பிடவேண்டும் போல இருக்கிறது. அவ்வ்வ்வ்வ்

    இதைப் பாருங்கள். இல்லாவிட்டால் ஒன்லைன்ல தேடினால் லட்சக்கணக்கான ரெசிப்பி கிடைக்கும்.

    http://tamilmeal.blogspot.com/2008/09/blog-post_25.html

    ReplyDelete
  8. //ஹுஸைனம்மா said...

    சமையலா, நம்ம ஏரியா இல்லை!! ;-)))//
    எங்களுக்கு நல்லா தெரியுமே. அப்பாவியோட இதுக்குத் தான் கூட்டு சேரக்கூடாது என்று சொல்லுவார்கள்.

    ReplyDelete
  9. ரெசிபி போட்டிருக்கீங்க என்று ஓடி வந்தேன்
    பதர் பேணி ஹி ஹி ஹி நமக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும் .

    ReplyDelete
  10. இமா.. அந்தப் பஞ்சு தோசை மாதிரி கர்நாடகால நீர் தோசைன்னு ஒன்னு, நல்லா மெதுமெதுன்னு இருக்கும்.. சிவப்புச் சட்டினி - பார்க்கவே ஆசையாக இருக்கு.. யாராச்சும் சொன்னா நானும் செய்து பாக்குறேன் :)

    ஆனா ஒன்னு, என்ன தான் ஹோட்டல் ரெசிப்பின்னு போட்டிருந்தாலும் அங்க பண்ணுற மாதிரி வீட்டுல செய்யவே முடியாது - அதுவும் என்னால..

    ReplyDelete
  11. வாங்க குறிஞ்சி. குறிஞ்சிக்கும் தெரியேல்ல. ;)

    இது ஜாலர் அப்பம் இல்ல ஹுஸைனம்மா. ஒரு வகை கறுவாத் தாவரத்தின் இலைகளை தேங்காய்ப் பாலில் கசக்கிச் சாறு எடுத்து எண்ணெயில் விடுவார்கள். அது பொரிந்து நூல் போல ஆகிவிடும். ஒரு முறை புத்தாண்டு காலத்தில் ரூபவாஹினியில் காண்பித்தார்கள். கொழும்பு செல்லும் வழியில் ஒரு கடையில் விற்பார்கள். ஒவ்வொரு முறை கடக்கும் போதும் நினைவாக வாங்கி விடுவேன்.

    //puthusa recipe pottu irukkeegnu vantha// ;))
    பதில்.. அது //நம்ம ஏரியா இல்லை!! ;-)))//

    ஹோட்டல் இல்ல. ;) மஞ்சு (அம்முலு ரெகமண்டேஷன்) பண்ணிக் கொடுத்தாங்க. ஆனா எப்பவும் கால்ல சக்கரத்தைக் கட்டிக் கொண்டு திரிவாங்க. அதனால கேட்க முடியவில்லை. ;( இப்ப டூ லேட். தெரிஞ்ச ஒரே விஷயம்.. இதுல தக்காளி சேர்க்கல.

    தேடிக் கொண்டேதான் இருக்கிறன் அனாமிகா. கிடைக்கேல்ல இன்னும். நீங்கள் தந்த லின்க்.. இதைவிட கெட்டியா இருக்கும். மை மாதிரி இருக்காது. ஆனாலும் என்னில இரக்கப்பட்டு லிங்க் தேடித்த ஒரே ஜீவன் நீங்கதான். நன்றி நன்றி நன்றி. ;)

    ஏஞ்சலின் நீங்களுமா?? ;))

    எல்ஸ் சொல்ற தோசைதான்னு நினைக்கிறேன். ஆரம்பிச்சா நான்ஸ்டாப்பா உள்ள போய்ட்டே இருக்கும். ;) இந்தக் குட்டிப் பொண்ணு பண்ணுற எந்த டிஷ்ஷானாலும் அசத்தலா இருக்கும்.

    ReplyDelete
  12. சீக்கிரம் வந்து யாரவது அந்த ரெஸிப்பியினை போடுங்க...நானும் பார்த்து செய்ய ஆவலுடன் இருக்கேன்..

    ReplyDelete
  13. haa நானும் பஞ்சி தோசை ந்னததும் ஒடி வந்தேன்

    நாங்க பஞ்சி தோசைக்கு இனிப்புக்கு ரவை கீர்,ஜவ்வரிசி கீர் ,காரத்துக்கு ரெட் சட்னி வைத்த் தான் சாப்பிடுவோம்,
    அலல்து மட்டன் சிக்கன் குருமாக்கல்


    இமா ரெசிபி போட்டுட்டாங்கன்னு இருக்கிர பிசியிஉம் ஓடி வந்தேன்.

    // செபா ஆண்டிகு என்ன ஆச்சு, உடம்பு சரியிலையா எப்படு இருக்காங்க
    முடிந்த மெயில் பன்னுங்கல்

    feedbackjaleela@gmail.com

    ReplyDelete
  14. அஞ்சு தோசையை கொஞ்சும் சட்னி

    :))

    //குறிப்புத் தந்தால் அவங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும்.//

    புண்ணியம் என்கிட்ட நிறையவே இருக்குறதால எனக்கு வேணாம் வேற யாராவது புண்ணியமில்லாதவங்களுக்கு கொடுத்திடுங்க !!!

    ReplyDelete
  15. குழப்படி வசந்த். ;)))

    ReplyDelete
  16. இமா... தோசை பார்க்கவே சூப்பர். நான் கூட குறிப்பு காண தான் வந்தேன்... ஏமாந்துட்டேன். போங்க... உங்க பேச்சு “கா”. - வனிதா

    ReplyDelete
  17. தண்ணி குறைச்சு அரைச்சுப்பாருங்கோ. திருப்ப திருப்ப இந்தப் பக்கம் வர ஏலாது. கம்பியூட்டருக்க பாய்ச்சு எடுத்து சாப்பிடவேணும் மாதிரி வாயூறுது. இதிஸ் இஸ் நொட் ரைட் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

    ஒருக்கா பருத்துறைக்கு போகேக்க நல்ல மொத்த ஆனால் சொப்ட்டான தோசை ஒரு வீட்ட சாப்பிட்டனாங்கள். அவை சொன்னவை, தாங்கள் ஒரு நாளும் மொறு மொறுப்பு தோசை போடுவதில்லையாம். இப்படி மொத்தமாக நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு செய்வினமாம். தோசையும் கொஞ்சம் சிவப்பு நிறத்தில் இருக்கும். சிவப்பரிசி போடுறவை என்டு சொன்னவை. சாப்பிட்டு இருக்கியளோ

    ReplyDelete
  18. நன்றி எல்லாம் சொல்லி எஸ் ஆக முடியாது. ரெசிப்பி கண்டு பிடிச்சோனோ ஒரு சட்டி செய்து எனக்கு ஆஸிக்கு அனுப்புங்கோ.

    ReplyDelete
  19. இமா அக்கா

    நிறைய தடவை உங்க வலைப்பூவை படித்திருக்கிறேன்.

    //இது மாதிரிக் குறிப்பு வேணாம், இதே குறிப்புத் தான் வேணும்.// -ன்னு வேற கேக்கறீங்க. இதோ என்னால முடிஞ்சது. http://karaikudisamayal.blogspot.com/2011/04/red-chutney.html

    ReplyDelete
  20. இமா பஞ்சு தோசை சட்டினி குறிப்பு கிடைத்தா இல்லையா சப்பாத்தி குருமா....... ஆசையா இருக்குன்டு இப்பத்தான் கடையில் போய் நானும் என் பொண்ணும் சாப்புட்டுட்டு வாரோம்
    இப்ப இது வேரயா சீக்கிரம் குறிப்பு குடுங்க இமா

    ReplyDelete
  21. ஹாய் பல்கீஸ். வாங்க _()_ நல்வரவு. ;)
    குறிப்பு... http://karaikudisamayal.blogspot.com/2011/04/red-chutney.html ;))))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா