Thursday 2 June 2011

புதையல்கள் பலவிதம்

பலவருடங்கள் முன்பு, துணி கழுவும் இயந்திரத்தின் உள்ளே கழன்று தொலையும் பொத்தான்களுக்காகவென்று அதன் அருகே வைத்த உண்டியல் இது.
ப்ளாத்திக்கு மூடியில் ஒரு பெரிய பொத்தான் நுழையக் கூடிய அளவில் துளை போட்டு வைத்திருந்தேன். பிறகு சட்டைகளைத் திருத்தும் போது பொத்தான்கள் தேட வேண்டாமே.
 
ஆனால் காலப்போக்கில் பொத்தான்களோடு வேறு சில பொருட்களும் சேர்ந்திருந்தன.

# பிள்ளைகள் சட்டைகளின் கழுத்துப்பட்டிகள் உள்ளே இருக்கும் ப்ளாத்திக்குத் துண்டங்கள்
# செல்லாக்காசுகள் - சில வருடங்களின் முன் நியூசிலாந்து நாணயங்களின் அளவுகள் மாற்றப்பட்டன. ஐந்து சத நாணயங்கள் பயன்பாட்டிலிருந்து மீளப்பெறப்பட்டன.
# சில அவுஸ்திரேலிய நாணயங்கள் - நாணயங்கள் சேகரிப்பது என் பொழுதுபோக்கு
# சில செல்லும் காசுகள் - அவசரத்துக்கு கை கொடுக்கும். தேவை வருகிற போது யார் காசு என்றெல்லாம் பார்க்க மாட்டேன். ;D
# ஊசிகள்
# Travelling Rosary
# hair grip
# paper clip
# காற்சட்டையில் இருந்து கழன்று வந்த பித்தளை அலங்காரத் துண்டு
# உடைந்துபோன size extender
புதையல்கள் இன்னும் தொடரும்

10 comments:

  1. நான் எங்க வீட்டில் பல இடத்தில இப்படி treasure box வச்சிருக்கேன் .சமயத்துக்கு கை கொடுக்கும்.

    ReplyDelete
  2. " புதையல்கள் பலவிதம் " அடேங்கப்பா! தலைப்பை பாருங்கோ. நானும் ஏதோ புதையல் கிடைச்சிட்டுது போல என்று ஓடி வந்தா.... ரோஸ்டட் பீநட்ஸ் கன்டெயினரில்... அவ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  3. ஹி ஹி. நீங்களுமா இமாம்மா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. //நான் எங்க வீட்டில் பல இடத்தில இப்படி treasure box வச்சிருக்கேன் .சமயத்துக்கு கை கொடுக்கும்.//

    அடங்கொய்யாலே. இது வேறயா? ஏங்க்கா. ஏற்கனவே ஒரு குப்பையையும் நீங்க விடறதில்லை. இதில ட்ரெசர் பொக்ஸா? அதுக்குள்ள இருக்கறதை எல்லாம் படம் பிடிச்சு போடுங்களேன்.

    ReplyDelete
  5. வாவ்..இமா..நல்ல ஐடியா கொடுத்துட்டீங்க.இன்னிக்கு இருந்து எங்கள் வீட்டு வாஷிங் மெஷின் அருகிலும் ஒரு உண்டியல் உதயமாகி விட்டது.

    ReplyDelete
  6. :) நானும் ஏதோ புதையல் கிடைச்சிட்டுது போல என்று ஓடி வந்தா.... ரோஸ்டட் பீநட்ஸ் கன்டெயினரில்... அவ்வ்வ்வ்வ்வ்வ்......repeatuuuuu

    ReplyDelete
  7. ஆஹா...புதையல்கள் அருமை,,,

    ReplyDelete
  8. என்னை மாதிரி ஏஞ்சலின், வந்து ஏமாந்த வான்ஸ், "நீங்களுமா!" என்று கேட்ட அனாமி, சாதகமாக்கிக் கொண்ட ஸாதிகா, சோம்பேறி சிவா, "ஆஹா!" சொன்ன ஆச்சல்... அனைவருக்கும் என் நன்றி. ;)

    ReplyDelete
  9. /என்னை மாதிரி ஏஞ்சலின், வந்து ஏமாந்த வான்ஸ், "நீங்களுமா!" என்று கேட்ட அனாமி, சாதகமாக்கிக் கொண்ட ஸாதிகா, சோம்பேறி சிவா, "ஆஹா!" சொன்ன ஆச்சல்... அனைவருக்கும் என் நன்றி./ 7 கமென்ட்டுக்கு இப்படி பதில் சொல்லிட்டீங்க,என்னோட இந்த கமென்ட்டுக்கு என்ன சொல்லப்போறீங்கன்னு பார்ப்போம்!;)

    ReplyDelete
  10. ஹி ஹி ;)
    மஞ்சள்பூ மகி...

    என் கமென்ட்டுக்கே கமென்ட்டா!!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா