Friday 3 June 2011

சலவை நடுவே ஒரு விளையாட்டு

செபா என்னை 'நவீன நாகம்மா' என்று கூப்பிடுவார். ;)

முன்பு எங்களால் முடியாத போது நாகம்மாதான் சலவையில் உதவுவார்.
அழகான சின்ன உருவம்; எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். வெற்றிலை போடுவார்.

சின்னவர் பிறக்குமுன்பாக சின்னதாக ஒரு double loading சலவை இயந்திரம் வாங்கிக் கொண்டோம். அப்போது எனக்கு அமைந்த பெயர் இந்த 'நவீன நாகம்மா.'

இப்போதுள்ள வீட்டிற்கு வந்ததும் சின்னதாக ஒரு dryer வாங்கிக் கொண்டோம்.

அதிலிருக்கும் filter with lint


lamp shade! flying saucer!
அடிக்கடி இப்படி விளையாடுவேன்.

காயும் துணிகளைப் பொறுத்து விதம் விதமான நிறங்களில் இப்படித் தட்டுகள் கிடைக்கும்.
கத்தரிக்கோலால் ஒரு வெட்டு வெட்டி...
அப்படியே சுற்றிக் கொண்டு வந்து இதழ்களைச் சீராக்கினால் அழகான பூ.
வேண்டாம் - இது தூசு விளையாட்டு.

23 comments:

  1. அடேங்கப்பா! எதில எதிலயெல்லாம் பூ செய்யறீங்க?! :)))))))

    நானும் சிலசமயம் லின்ட் க்ளீன் பண்ணும்போது இப்படி உரிச்சு எடுப்பேன்,ஆனா இப்பூடி கலைவண்ணமெல்லாம் எங்க மெஷின்ல செய்ய முடியாது.

    ReplyDelete
  2. கை திறனில் கில்லாடி என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டு வர்ரீங்க இமா.

    ReplyDelete
  3. உங்க புதையல்,கைவண்ணம் சூப்பராக இருக்கிறது.ஒன்றும் மிச்சம்வைப்பதில்லைப்போல்.
    நலமாக இருக்கிறீங்களா?

    ReplyDelete
  4. ஆச்சூம்....ஆச்சூம்.... நான் வரேல்லை உந்த வி”லை”யாட்டுக்கு:).

    ReplyDelete
  5. ஆஹா....தூசிகளில் ஒரு கைவண்ணம் அருமை சகோ.

    ReplyDelete
  6. You rock in every way immamma

    ReplyDelete
  7. இமா.. இம்சை அள‌வில்லாம‌ போய் தூசி வ‌ரை வ‌ந்தாச்சு..ம் ம் ந‌ட‌க்க‌ட்டும்..

    (இதுக்கு பேசாம‌ ஸ்மைலி'ய‌ ம‌ட்டும் போட்டு எஸ்கேப்பாயிருக்க‌லாமோ :) )

    ReplyDelete
  8. சூப்பர்ப் இமா மேடம் சாம்பல் வண்ண ரோஜான்னே நினைச்சுட்டேன் நான்.

    அதைவிட நவீன நாகம்மா என்ற பெயர்காரணம் ரசனையாவும் சிப்பாவும் இருந்துச்சு..!

    ReplyDelete
  9. lint flower is cute, Immi.

    ReplyDelete
  10. இந்த லின்ட் பூ ரொம்ப அழகாக இருக்கின்றது...கலக்குறிங்க..

    ReplyDelete
  11. நான் முன்னாடியே சொன்னதுதான்!! உங்க வீட்டுக்குச் சாப்பிட வரக்கூட பயமாருக்கு. கரெக்டா வாயில் வைக்கிற சமயம், உங்க கற்பனை பயங்கரமா வேலை செஞ்சு , கைக்கெட்டினதை வாய்க்கெட்டாமச் செஞ்சிடுவிங்கபோல!!

    ஆமா, இவ்ளோகாணம் சேர்றவரைக்குமா ஃபில்டரைக் க்ளீன் செய்யாம விட்டிருப்பீங்க? ;-))))))

    ReplyDelete
  12. Beautiful grey spiral rose ima.
    (was something wrong with your blog ?i couldn't post comments for your previous 2 posts).
    shall try now.

    ReplyDelete
  13. இப்ப ஓகே .அன்னிக்கு ப்ளாக் திறக்கவேயில்ல .இப்ப பார்த்தேன் .

    ReplyDelete
  14. இமா கற்பனைக்கு அளவில்லாம போச்சே!!! இருந்தாலும் அழகு!!! - வனிதா

    ReplyDelete
  15. Thanks for your comment, send the link so you can place the button translator,beautiful grey spiral rose,cariños y abrazos.

    ReplyDelete
  16. இமா,வேலைப்பளுவின் இடையிலும் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம் என்று வந்தேன்,உங்கள் கைவண்ணத்தில் சாம்பல் கலர் ரோஜா உண்மையில் மிக அருமை.அழகோ அழகு.

    ReplyDelete
  17. கற்பனைகளும், கைவேலைத்திறனும், பொறுமையும் ஈடுபாடும் கொண்ட என்னையே பிரமிக்க வைக்கிறது உங்களின் சாதனைகள்.

    மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். என் வலைப்பூவினில் வந்தமர்ந்த புதிய வண்டாகிய உங்களை வருக வருக வருக என நன்றியுடன் வரவேற்கிறேன்.

    நானும் என்னை உங்கள் வலைப்பூவின் பின்தொடர்பவராக ஆக்கிக்கொண்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  18. கருத்து!ச் சொல்லிப் போன ;) மகி, ஸாதிகா, ப்ரியா, அதிரா, நிரூபன், அனாமிகா, இர்ஷாத் ;)), வசந்த் ;), வானதி, கீதா, சிவா ;), ஹுஸைனம்மா (இல்லாட்டா பூ செய்ய முடியாதே ;) ), ஏஞ்சலின், வனி, ஆசியா, அப்துல் காதர், கோபாலகிருஷ்ணன் ஐயா அனைவருக்கும் எனது நன்றி.

    Gracias por tu comentario Rosita. ;)

    விரைவில் வருவேன் ஸாதிகா.

    ReplyDelete
  19. ukkanthu yosipiyalo...super madam!

    -MCE

    ReplyDelete
  20. //ukkanthu yosipiyalo// ஆமாம், இந்த மாதிரி யாராச்சும் தங்க்லிஷ்ல போட்டா உட்கார்ந்து யோசிப்பேன். ;)))

    வருகைக்கு நன்றி MCE. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா