Friday 28 October 2011

சின்னவர்கள் பெரியவர்களாகும்போது

என் மூத்தவருக்கு ஆக்க வேலைகளில் ஈடுபாடு அதிகம். சமையல், தையல், வரைதல், தச்சுவேலை, கட்டுமானம், தோட்டம் என்று எல்லாவற்றிலும் ஈடுபாடு உண்டு.

நிறைய வாசிப்பார். படிக்கும் காலத்தில், 2004 ல் ஒரு பாடசாலை விடுமுறையின் போது ஓர் நாள், தன் புத்தகங்களையும் மேசைவிளக்கொன்றையும் வைத்துக் கொள்ளக் கூடியதாக 'bedside table' ஒன்று இருந்தால்  நல்லதென்று சொன்னார்.

அன்று பின்னேரம் க்றிஸ் வேலையால் வரவும் ஆறு துண்டுப் பலகைகளைக் காட்டி அவற்றைத் தான் எடுத்துக் கொள்ளட்டுமா? என்றார். சம்மதம் கிடைத்த அரைமணி நேரத்தில் இந்த அழகு மேசை தயாராகிவிட்டது.

கிடைத்த பலகைகளை (புதியவை அல்ல; மீள்சுழற்சி செய்திருக்கிறார்.) அப்படியே பயன்படுத்தினார் . எதையும் அறுக்கவோ, பெய்ன்ட் செய்யவோ வார்னிஷ் செய்யவோ இல்லை.
எனக்கு இந்த மேசையின் அமைப்பில் ஒரு பிடிப்பு. தர மாட்டேன் என்றுவிட்டார். ;) இப்போ 'ஃப்லாட்டிங்' கிளம்பும் தருணம் பொருட்களை காரில் ஏற்றிக்கொண்டிருக்கையில் என்ன தோன்றியதோ, "மம்மி, நான் கொண்டு போக முதல் ஸ்டூலைப் படம் எடுக்கிறதெண்டால் எடுங்க," என்று வந்து நின்றார்.

கண்ணில் அகப்பட்டதை வைத்து சட்டென்று ஒரு படம் எடுத்ததும் தூக்கிப் போய்க் காரில் ஏற்றினார்.

சொல்லி இருக்கிறேன், எப்போதாவது உடைத்து மாற்றங்கள் செய்யத் தோன்றினால் அல்லது வேண்டாம் என்று தோன்றினால் எனக்குத் தந்துவிட வேண்டும் என்று. ;)

இவர் வளர்ச்சி பற்றி, முன்னேற்றங்கள் பற்றி அன்னைக்கே உரிய இயல்பான சந்தோஷமும் பெருமையும் இருந்தாலும்...
பிரிவு!!
மெதுவே வலிக்கிறதே! ;(

46 comments:

  1. ஆ..வடை எனக்கே ..!!! :-)))

    ReplyDelete
  2. //இவர் வளர்ச்சி பற்றி, முன்னேற்றங்கள் பற்றி அன்னைக்கே உரிய இயல்பான சந்தோஷமும் பெருமையும் இருந்தாலும்...
    பிரிவு!!
    மெதுவே வலிக்கிறதே! ;( //

    அதெல்லாம் மருமகள் வந்தால் சரியாகிவிடும் டோண்ட் ஒர்ரி :-))))

    ReplyDelete
  3. //என் மூத்தவருக்கு ஆக்க வேலைகளில் ஈடுபாடு அதிகம். சமையல், தையல், வரைதல், தச்சுவேலை, கட்டுமானம், தோட்டம் என்று எல்லாவற்றிலும் ஈடுபாடு உண்டு//

    புலிக்கு பிறந்தது எலியாகவா இருக்கும் ..!!! :-))

    ReplyDelete
  4. எங்கே போயிருக்கிறார் இமா?.. எனக்கேதும் தெரியாதே...

    திடுதிப்பென இப்பூடிச் சொன்னால் ...:)))

    ReplyDelete
  5. ///Your comment will be visible after approval.//

    பிளீஸ்ஸ்ஸ் இது வேண்டாமே...:)) பின்னூட்டம் போடவும் மனம் வருகுதில்லை:((((.

    ReplyDelete
  6. அன்னைக்கே உரிய இயல்பான சந்தோஷமும் பெருமையும் இருந்தாலும்...
    பிரிவு!!
    மெதுவே வலிக்கிறதே! ;(//
    எல்லா mums ம் இப்படிதான் இமா .

    ReplyDelete
  7. சம்மதம் கிடைத்த அரைமணி நேரத்தில் இந்த அழகு மேசை தயாராகிவிட்டது. //
    queen of recycling இன் மகனாயிற்றே .தாயை போல பிள்ளை

    ReplyDelete
  8. உங்களுக்காக எடுத்தாச்சு அதீஸ். ;)

    ReplyDelete
  9. ஒருவரும் ஸ்டூலைப் பார்க்கேல்ல. ;(
    ;((((((((((((((((( டிஷ்யூ ப்ளீஸ்ஸ்.

    ReplyDelete
  10. பெட்சைட் டேபிள் அழகா இருக்கு இமா! டோன்ட் வொர்ரி எல்லாமே காலத்துக்கு நடந்தாலே வருத்தம் கிடையாது. அவர் தன்னிச்சையா வாழ்ந்தாதான் இனி வரும் காலத்துக்கு அவருக்கு நல்லது ??!!

    எனக்கு இந்த வுட் வொர்க் என்றாலே சிறா( இதுக்கு இங்கிலீஷ்ல ஸ்பிலின்டர்ன்னு நினைக்கிறேன்) ஏறிடுமோனு பயம்..

    அடியில் ஒரு பீஸ் பலகை அடிச்சிருப்பது நல்ல ஐடியா. எங்க எல்லாருக்கும் அப்பா எழுத்து பலகை அடிச்சி கொடுத்தார் அதிலே ஒன்னே ஒன்னு மட்டும் கொஞ்சம் டிசைனா இருக்கும் இன்னுமே வீட்டில இருக்கு... போங்க இமா... கொசுவத்தி ஏத்திட்டிங்க...

    ReplyDelete
  11. இமா உங்க 100th follower என் குட்டி பொண்ணு

    ReplyDelete
  12. நான் முதலில் போட்ட கமேன்ட்லாம் எங்கே ???????????

    ReplyDelete
  13. சூப்பரா செஞ்சிருக்கார் உங்க மகன்

    ReplyDelete
  14. //இவர் வளர்ச்சி பற்றி, முன்னேற்றங்கள் பற்றி அன்னைக்கே உரிய இயல்பான சந்தோஷமும் பெருமையும் இருந்தாலும்... பிரிவு!!
    மெதுவே வலிக்கிறதே! ;( //

    மகனின் பிரிவு வலிக்கத்தான் செய்யும். அனுபவித்தவர்களுக்கே அந்த வலியின் கொடுமை புரியும்.

    அதுவும் அவர் ஒரு படைப்பாளி + சகலகலா வல்லவர் என்பதால் வருத்தம் அதிகரிக்கவே செய்யும்.

    முன்னேற்றத்தை நோக்கித்தான் பறவை தற்காலிகமாகப் பறந்துள்ளது என்று மனதை சமாதானப் படுத்திக்கொள்ளுங்கள், இமா. vgk

    ReplyDelete
  15. //எனக்கு இந்த வுட் வொர்க் என்றாலே சிறா( இதுக்கு இங்கிலீஷ்ல ஸ்பிலின்டர்ன்னு நினைக்கிறேன்) ஏறிடுமோனு பயம்..//

    எனக்கும் பயமோ பயம் ..!! (ஹை ..சப்போட்டுக்கு ஒரு ஆள் இருக்கு ))

    ReplyDelete
  16. எனக்கும் ஒரு டேபிள் வேணும்

    ReplyDelete
  17. \\இவர் வளர்ச்சி பற்றி, முன்னேற்றங்கள் பற்றி அன்னைக்கே உரிய இயல்பான சந்தோஷமும் பெருமையும் இருந்தாலும்...
    பிரிவு!!
    மெதுவே வலிக்கிறதே! ;(\\

    உங்கள் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்திருக்கீங்க இமா..எல்லா தாய்மாரும் ஒரு கலாகட்டத்தில் சந்திப்பதே!:(..

    ReplyDelete
  18. நீங்களாவது நினைச்ச உடனே போய்ப் பார்க்கற தூரத்தில் மகன் இருக்கார்.எங்க அம்மாவை எல்லாம் நினைச்சு பாருங்க.. :( சின்னக் கோடுகளுக்குப் பக்கத்திலே பெரிய கோடுகள் போட்டு நம்ம சோகத்தை குறைச்சுக்கணும்! :)

    குருவிகளுக்கு றெக்கை முளைக்கும்..பறந்து போகணும்,அப்பதானே உலகம் தெரியும்? பழகிருவீங்க இமா,don't worry! :)

    ReplyDelete
  19. angelin said...
    சம்மதம் கிடைத்த அரைமணி நேரத்தில் இந்த அழகு மேசை தயாராகிவிட்டது. //
    queen of recycling இன் மகனாயிற்றே .தாயை போல பிள்ளை

    ReplyDelete
  20. தரையின் கலருக்கு மேட்சாக இருப்பதால் இன்னும் அழகாக தெரிகிறது... சூப்பர் கலக்கிட்டார்

    ReplyDelete
  21. ஸ்டேண்ட் ரொம்ப நல்ல இருக்கு, என்ன செய்வது இமாக்கா பிரிவு மிகுந்த வலியே

    ReplyDelete
  22. பெரியவர் வடிவா பெட் சைட் டேபிள் செய்து இருக்கார்.

    ReplyDelete
  23. குருவிகளுக்கு றெக்கை முளைக்கும்..பறந்து போகணும்,அப்பதானே உலகம் தெரியும்? பழகிருவீங்க இமா,don't worry! :)///இன்று நீ.நாளை நான்...

    ReplyDelete
  24. நல்ல ரசனை கொண்ட திறமையானவருக்கு எனது வாழ்த்துக்களை கூறிவிடுங்கள் ..
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. Side table is simple and beautiful..நேத்து அதிமுக்கியமான விஷயத்துக்கு மட்டும் கமெண்ட் போட்டுட்டு முக்கியமான விஷயத்துக்கு கமெண்ட் போடாம தூங்கிட்டேன்! :)

    ReplyDelete
  26. //இமா said...
    ஒருவரும் ஸ்டூலைப் பார்க்கேல்ல. ;( ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் பார்த்தது அதை மட்டும்தேன்.. ஆனா எழுதும்போது... குறிப்பிடாமல் விட்டுப்புட்டேன்:).


    ;((((((((((((((((( டிஷ்யூ ப்ளீஸ்ஸ்///

    என்ன கலர் இமா வேணும்?:).

    ReplyDelete
  27. //
    ஸாதிகா said...
    குருவிகளுக்கு றெக்கை முளைக்கும்..பறந்து போகணும்,அப்பதானே உலகம் தெரியும்? பழகிருவீங்க இமா,don't worry! :)

    ///இன்று நீ.நாளை நான்..///

    நாளையிண்டைக்கு நானு:)))).

    ReplyDelete
  28. //எனக்கு இந்த வுட் வொர்க் என்றாலே சிறா( இதுக்கு இங்கிலீஷ்ல ஸ்பிலின்டர்ன்னு நினைக்கிறேன்) ஏறிடுமோனு பயம்.//

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) நாங்க சிராய் எனச் சொல்லுவோம்.. கையில, நகத்தில ஏறிவிட்டால் அவ்ளோதான்.....:)).

    ReplyDelete
  29. //ஜெய்லானி said...
    //எனக்கு இந்த வுட் வொர்க் என்றாலே சிறா( இதுக்கு இங்கிலீஷ்ல ஸ்பிலின்டர்ன்னு நினைக்கிறேன்) ஏறிடுமோனு பயம்..//

    எனக்கும் பயமோ பயம் ..!! (ஹை ..சப்போட்டுக்கு ஒரு ஆள் இருக்கு )///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) எதுக்கெல்லாம் சப்போட்டுக்கு ஆள் தேடீனம்:)))).

    ReplyDelete
  30. //ஜெய்லானி said...
    ஆ..வடை எனக்கே ..!!! :-))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... இமாவுக்குக் கை ஏலாது, அதால இம்முறை வடை சுடவில்லையாம்.... பிளேன் ரீ மட்டும்தேன்:)))).

    ReplyDelete
  31. athira said...
    //இமா said...
    ஒருவரும் ஸ்டூலைப் பார்க்கேல்ல. ;( ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் பார்த்தது அதை மட்டும்தேன்.. ஆனா எழுதும்போது... குறிப்பிடாமல் விட்டுப்புட்டேன்:).


    ;((((((((((((((((( டிஷ்யூ ப்ளீஸ்ஸ்///

    என்ன கலர் இமா வேணும்?:).//

    ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ;-)

    ReplyDelete
  32. ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட தருணம் நேருவது சகஜம்தானே.. !! போகபோகப் பழகி போகும்.. இருந்தாலும் மனதில் அந்த பிரிவின் வலி இருந்துக்கொண்டுதான் இருக்கும்.. ஏனென்றால் உறவின் வலிமை அப்படி!! பகிர்வுக்கு நன்றி அம்மா..!!

    ReplyDelete
  33. நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.

    எனது வலையில் இன்று:

    மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  34. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  35. IMAA RELICS OF SAINT JOHN BOSCO IS BEING CARRIED TO SRILANKA AND ALL OVER THE WORLD .NOW IN CHENNAI .
    GO TO THE LINK FOR FURTHER DETAILS

    Schedule of the Pilgrimage of the Casket of Don Bosco to South Asia
    (May to November 2011)

    http://www.urn.donboscoindia.com/site/english/showcontent.php?menuid=1724

    ReplyDelete
  36. (co="red")ஹாய் இமா நலமா இருக்கிறீங்களா?(/co)

    ReplyDelete
  37. அன்னிக்கே படிச்சுட்டேன். கமெண்ட்தான் ரொம்பவே லேட்டாகிடுச்சு. But, better late than never!! (நமக்கு - சாரி, எனக்குன்னே இப்படி சொலவடைலாம் கண்டுபிடிச்சிருக்காங்க போல..)

    டேபிள் அழகு. பிரிந்தது அழகாயில்லை. மேலை நாடுகளின் இக்கலாச்சாரம் எனக்குப் பிடிக்கவேயில்லை. எப்படியும், திருமணம், வேலை அல்லது மேல்படிப்பு என்று காலத்தின் கட்டாயமாக, பிரிவுகள் காத்திருக்கத்தான் செய்கின்றன. அதற்குள் “கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சு” ரீதியில் இந்தப் பிரிவு எதற்கு?

    உங்கள் மகனை (குறிப்பிட்டுச்) சொல்லவில்லை; அக்கலாச்சாரத்தைத்தான் சொல்கிறேன்.

    ReplyDelete
  38. தாங்ஸ் அதீஸ். இப்ப எல்லாம் ஓகே. நோ டிஷ்யூ ப்ளீஸ். ;) சேவ் பண்ணி வைங்க, நாளயிண்டைக்கு உதவும்.

    ReplyDelete
  39. //மருமகள் வந்தால் சரியாகிவிடும் டோண்ட் ஒர்ரி// ம்.. அப்போ மருமகன் வந்தால் என்னாகுமாம் ஜெய்??

    ReplyDelete
  40. தாங்ஸ் ஏஞ்சல் & குட்டி ஏஞ்சல். ;)

    ReplyDelete
  41. நீங்களாவது நினைச்ச உடனே போய்ப் பார்க்கற தூரத்தில் மகன் இருக்கார்.எங்க அம்மாவை எல்லாம் நினைச்சு பாருங்க.. :( சின்னக் கோடுகளுக்குப் பக்கத்திலே பெரிய கோடுகள் போட்டு நம்ம சோகத்தை குறைச்சுக்கணும்! :)
    //
    பெரிய கோடுகள்...HAHAHA,..

    ReplyDelete
  42. நிச்சயம் இன்று எப்படியும் எல்லோருக்கும் பதில் போட்டு விடுவேன். ;)

    ReplyDelete
  43. கர்ர்ர். இமா இன்னும் பதில் போடேல்ல சிலருக்கு என்கிறது இப்பதான் கவனத்துக்கு வந்திருக்குது. மன்னிச்சுக் கொள்ளுங்கோ எல்லோரும். ;((((

    ReplyDelete
  44. ஹுசைனம்மாவுக்காக எப்போவோ இந்தப் பதில் தட்டி... ட்டாஃப்ட்ல சேவ் ஆகி இருந்து இருக்கு. ;)

    //ஹுசைனம்மா... வாங்க, வாங்க. ;) ஒவ்வொருவர் எண்ணமும் வேறுதான், இல்லையா? சில விஷயங்களை நான் நோக்கும் விதம் வேறு. பிரிந்த போது பிரிவு வலித்தே தவிர அதைத் தவறென்று காணவில்லை. இப்போ அது நல்லதென்றே தோன்றுகிறது. முன்பை விட எங்களோடு அதிகம் நெருக்கமாக இருக்கிறார், தன் முன்னேற்றங்களை எங்களோடு பகிர்ந்து கொள்கிறார். பிடித்திருக்கிறது. // ;D

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா