Sunday 18 December 2011

சின்னவர்கள் பெரியவர்களாகும்போது - 2

~~~~~~~~~~~~~~~~~~~~~~   
சென்ற வருட இறுதிப் பகுதியில் 'மெரில்' இறந்துவிட்டது. 
 
அல்ஃபி, "நான் வளர்கிறேனே மம்மி"
(ஓட்டுத்துண்டங்கள் நடுவே வெளிர்மஞ்சட் கோடுகளை அவதானித்தீர்களா! வளர்கிறார்.)
மெரில் இல்லாதது ஆணிக்கு இழப்பாகத் தெரிந்தாலும் அல்ஃபி பொருட்படுத்தவில்லை. ஆணி இல்லாது போயிருந்தால் கூட சந்தோஷம்தான் என்பதுபோல் இருந்தார். இருவருக்கும் பெரிதாக ஒட்டவில்லை.
ஆணி
அல்ஃபி இது தன் வீடு என்கிற உரிமையை விட்டுக்கொடுப்பதாக இல்லை. பகிர்ந்துகொள்ளப் பிடிக்கவில்லை அவருக்கு. திடீர் திடீரென்று சண்டை நடக்கும்; இரண்டு கால்களில் நின்றுகொண்டு முன்னங்கால்களால் ஆளை ஆள் பிடித்துத் தள்ள முயற்சிப்பார்கள். கடிக்க முயல்வார்கள். ஒருநாள் ஆணி காலில் இருந்து ரத்தம். ;( 

அல்ஃபி நன்றாக வளர்ந்திருக்கிறார், கிட்டத்தட்ட ஆணி அளவுக்கு.

இருவரும் சென்ற வாரம் மகன் வீட்டுக்குக் கிளம்பிப் போயாயிற்று. ;)
 
தொட்டி மட்டும் இன்னமும் என்னோடு இருக்கிறது. அதனைச் சுத்தம் செய்து காய வைப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறேன். மழைதான் விடுவதாக இல்லை.

தொட்டியை வீடுமாற்ற மகனோடு இன்னும் 4 பெரியவர்கள் வேண்டும், பெரீ..ய தொட்டி அது. என்னைப் போல எட்டுப் பேரை வளர்த்தலாம் என்பேன். ;))
சுத்தம் செய்யும் போது அந்தநீரை எங்கே ஊற்றுகிறேன் என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும் நான். தொட்டிச் செடிகளுக்கு விட்டால் தொடர்ந்து வரும் நாட்களில் நீர் விடாதிருந்தால் அமோனியா செறிவு அதிகரித்து செடிகள் கெட்டுவிடும். கீரைச்செடிகளின் மேல் விட்டால் உண்பதற்குப் பாதுகாப்பற்றதாகி விடும். பார்த்துச் செய்ய வேண்டிய வேலை.

எப்படியும் நத்தார் வருமுன்னால் முடிக்க வேண்டும், இல்லாவிட்டால் அசையாது இருக்கும் நீர் கெட்டு வாசனை வீச ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கும்.
 
என் மகனுக்கும் என்னைப் போன்றே ரசனைகள். ;)
ஒருநாள் ஒரு தோழரின் பாட்டி அழைத்தாராம். பேரனிடம் தொலைபேசி இலக்கம் விசாரித்து வாங்கியிருக்கிறார். அவர் வீட்டைத் தேடி அனாதையான ஓர் ஆமைக்குட்டி வந்திருக்கிறது. அதனைப் பாதுக்காப்பாக ஒரு வாளியில் எடுத்து வைத்துக் கொண்டு மகனை அழைத்திருக்கிறார்.

இவர் ஆமைக்குட்டியைப் போய் பார்த்துவிட்டு இங்கே வந்து நோயுற்ற மீன்களைப் பராமரிக்கவென்று வைத்திருந்த சிறிய தொட்டியையும் ஒரு சிறிய போத்தலில் ஆமை உணவு சிறிதும் எடுத்துப் போனார். மறுநாள் ஆமைக்குட்டியின் படத்தைக் காட்டினார், அழகாக இருந்தது குட்டி. எனக்குத் தந்துவிடுமாறு கேட்டேன். "வேலை அதிகமாகும், வேண்டாம்," என்றார், அது உண்மைதான்.

நேற்று மகன் வந்திருந்த போது விசாரித்தேன். பெரியவர்கள் இருவரும் நன்றாக இருக்கிறார்களாம். சின்னவர் இரவிலும் உறங்குவதில்லையாம்; எப்போதும் சாப்பிட்டுக்கொண்டும் நீந்திக்கொண்டும் இருக்கிறாராம். "பெரியவர்களை விட அதிகமாகச் சாப்பிடுகிறார், அத்தனையும் நீச்சலில் செலவளித்துவிடுகிறார்," என்றார் சிரித்துக் கொண்டு.

41 comments:

  1. ஆமையை கண்டாலே பயம்
    எப்படிதான் கையில் வைத்துக்கொண்டு
    ஆவ்வ்

    ம் நாய் காண்டல் நாலடி தூரம் போயடுவேனக்கும்
    பூசாராய் கண்டால் பயம்தான் இருந்தாலும் காட்டிக்க மாட்டேன்
    (பேபி அதிராவை சொல்லவில்லை )

    பொறுப்பாக ஆமை வளர்க்கும்
    அனைவரும் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. சென்ற வருட இறுதிப் பகுதியில் 'மெரில்' இறந்துவிட்டது.//

    ஆழ்ந்த அனுதாபங்கள் :(

    ReplyDelete
  3. ஆணி இல்லாது போயிருந்தால் கூட சந்தோஷம்தான் என்பதுபோல் இருந்தார். இருவருக்கும் பெரிதாக ஒட்டவில்லை.
    // ஹஹஹா
    மனிதர்கள் குணம் கொஞ்சம் கொஞ்சமாய் இவர்களுக்குமா

    ReplyDelete
  4. நீண்ட நாட்கள் கழித்த வரவிற்கும் நல்ல பகிர்விற்கும் மகிழ்ச்சி.
    //என் மகனுக்கும் என்னைப் போன்றே ரசனைகள். ;) /
    nice..

    ReplyDelete
  5. 4 வது படம் பார்த்து, பயந்து போய் கிடக்கிறேன். சாரைப் பாம்போ என்று நினைச்சு உதறுது.
    ஆமையின் சண்டை மனிதர்கள் சண்டை போல இருக்கும் போல.
    ஆமை தொட்டியில் என்ன வளர்க்கப் போறீங்க???? அதையும் படம் பிடிச்சு போட்டிருக்கலாம். எங்கட இமா போல 8 பேரை வளர்த்தலாமா ஆஆஆஆ?????

    ReplyDelete
  6. ஆமைகளின் பதிவு அருமை..புதுமை

    ReplyDelete
  7. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆமை போயாச்சு:( இமா வந்தாச்சு:).

    ReplyDelete
  8. எனக்கும் ஆமை என்றால் விருப்பம் இமா, ஆனா அது ஆமை வளர்ப்பவர்களுக்கு மட்டும்தான் அதன் வகைகள் தெரியும், கண்ட ஆமையையும் வீட்டுக்குள் எடுக்கப்படாது, சிலது பொல்லாத மணம் வரும், சிலது தொட்டவுடன்.. என்னவோ பண்ணும்... பாலாமைச் சாதிதான் நல்லதாமே .. சரி அது போகட்டும்..

    ஆணி சூப்பர் நல்ல வெளிநாட்டுக்காரன்போல ஒருவிதமாக இருக்கிறார்:), முகத்திலும் ஒரேஞ் கோடுகள்.

    //சுத்தம் செய்யும் போது அந்தநீரை எங்கே ஊற்றுகிறேன் என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும் நான். //

    இப்படியான வேலைகள், தினமும் கொஞ்சம் கொஞ்சம் செய்தால் பிரச்சனை வராதே..

    ReplyDelete
  9. //எப்போதும் சாப்பிட்டுக்கொண்டும் நீந்திக்கொண்டும் இருக்கிறாராம். "பெரியவர்களை விட அதிகமாகச் சாப்பிடுகிறார், அத்தனையும் நீச்சலில் செலவளித்துவிடுகிறார்,//

    சோட் சுவீட்டாகச் சொன்னால் எங்கட சிவாவைப்போல:)) பூஸ்ஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  10. ///பெரீ..ய தொட்டி அது. என்னைப் போல எட்டுப் பேரை வளர்த்தலாம் என்பேன். ;)) //

    உஸ்ஸ்ஸ்ஸ் இதை எல்லாம் சொல்லிக்காட்டத்தேவையில்லை, நாங்கதான் இமாவைப் பார்த்திருக்கிறமில்ல.... ஆஆஆஆஆஆஆ துரத்துறா.. நான் அப்பூடி என்ன சொல்லிட்டேன்:)).

    ReplyDelete
  11. siva said...
    ஆமையை கண்டாலே பயம்
    எப்படிதான் கையில் வைத்துக்கொண்டு
    ஆவ்வ்

    ம் நாய் காண்டல் நாலடி தூரம் போயடுவேனக்கும்
    பூசாராய் கண்டால் பயம்தான் இருந்தாலும் காட்டிக்க மாட்டேன்
    (பேபி அதிராவை சொல்லவில்லை //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பாருங்க இமா சிவாவை:)).

    ReplyDelete
  12. ஆமைகள் .,,நாய் ,எலி ...........நாட்டி பூனைஸ் மாதிரி நம்மகிட்ட பழகுமா இமா ?..

    ஒரு முறை நாங்க கார்ல போகும்போது ,நடு ரோட்ல மெதுவா ஊர்ந்துகிட்டு ஒரு குட்டி ஆமை ,சம்மர் டைம் வீட்டைவிட்டு வந்திடுச்சி .கணவர் ஸ்டாப் செய்து தூக்கி ஓரமா கொண்டு சென்றார் .கொஞ்சம்கூட அசையவில்லை
    அமைதியா இருந்தது . .
    pond விரிவாக்கி ரெண்டு குட்டி போடலாம்னு ஒரு ஐடியாருக்கு .பார்ப்போம்

    ReplyDelete
  13. ஆமைகளைப் பார்த்தா கொஞ்சம் ஒரு மாதிரியாத்தான் இருக்கு இமா! ;) ஆனா அந்த ப்ளாக் & யெல்லோ ஆமைக்குட்டி அழகாப் பார்க்குது. :) ஆணியும் ஆல்ஃபியும் ஒரே மாதிரிதான் தெரியறாங்க எனக்கு!

    சிவா-பேபி அதிரா கம்ப்ளெய்ன்ட்ஸுக்கு ரீச்சர் பதிலைக் காணோமே..?

    ReplyDelete
  14. ஆமை வேகத்தில் நான் வந்து கருத்து கூறுகிறேனோ?

    ஆமை புகுந்த வீடும்
    அமீனா புகுந்த வீடும்

    உருப்படாது என்று இங்கு தமிழ்நாட்டில் ஒரு பழமொழி சொல்கிறார்கள்! அது உண்மையோ பொய்யோ நீங்கள் தான் சொல்லணும்.

    ஏனெனில் அதுவாகப்புகாமல் நீங்கள் வலுவில் போய் புகுத்தி வளர்த்தும் வருகிறீர்கள் போலத் தெரிகிறது.

    ஆம வடை என்று ஒன்று இங்கு உண்டு.

    அதற்கும் ஆமைக்கும் எந்த சம்பந்தமும் நேரிடையாகக் கிடையாது.

    அது சாஃப்ட் ஆக இல்லாமல் சற்றே ஆமை ஓடு போல ஹார்ட் ஆக மொறுமொறு என்று இருக்கும்.

    அதனால் அந்தப்பெயர் வந்திருக்கலாம் என்பது என் யூகம்.

    மற்றபடி உங்களின் ஆமைப்பதிவை நான் ஏதும் விமர்சிக்க விரும்பவில்லை.

    மும்பையில் ஒரு பீச் அருகில் ஒரு கடல் பிராணிகள் கண்காட்சியில், கண்ணாடி நீர்த் தொட்டியில் வைத்திருந்த ஒரு முரட்டுக் கடல் ஆமையைப் பார்த்து பயந்தே போனேன். அவ்வளவு பெரியது அது.
    சுமார் 3 அடி Dia இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! ஆமாம் நான் ஒரு மடையன். நீங்கள் பார்க்காத ஆமைகளா! ஆமைப்பண்ணையே வீட்டுக்குள் வைத்திருக்கிறீர்களே.

    ஆமை தலையையும், கால்களையும் உள்ளுக்கு இழுத்துக்கொண்டு மறைப்பது போல, நானும் இத்துடன் என்னை மறைத்துக்கொள்கிறேன்.

    இந்த ஜந்துக்களை எதைக்கண்டாலும் உங்கள் அண்ணனுக்குப் பிடிக்காது ..... இமா.

    vgk

    ReplyDelete
  15. //மனிதர்கள் குணம் கொஞ்சம் கொஞ்சமாய் இவர்களுக்குமா // இல்லை சிவா.

    மனிதன் ஒரு 'சிறப்பு விலங்கு'. அதனால் இயல்பாக நமக்குள்ள விலங்குக் குணத்தை கொஞ்சம் அதிகமாகவே அடக்கி வாசிக்கிறோம். சமயத்தில் ஆறாம் அறிவு தாண்டி இயல்பு தலைகாட்டிவிகிறது. ;)

    ReplyDelete
    Replies
    1. //தலைகாட்டிவிகிறது// garr on me. ;((

      plz read it as 'தலை காட்டி விடுகிறது' ppls.

      Delete
  16. //சாரைப் பாம்போ என்று நினைச்சு // இதைவிட கட்டுப்பெட்டி ஆமைத்தலை பாம்பு மாதிரி இருக்கும் வான்ஸ். உங்களுக்காக ஒரு படம் எடுத்து வச்சிருக்கிறன், போஸ்ட் பண்ணட்டா? ;))

    //ஆமையின் சண்டை மனிதர்கள் சண்டை போல// ம். பார்க்க வடிவா இருக்கும். முகத்தில கூட கோப உணர்ச்சி தெரியுற மாதிரி இருக்கும் எனக்கு.

    //ஆமை தொட்டியில் என்ன வளர்க்கப் போறீங்க?// அது மகனாருடையது, எடுத்துப் போய் அங்கு மீண்டும் செட் பண்ணுவாராம். //அதையும் படம் பிடிச்சு// போட்டு விடலாம்.
    //எங்கட இமா போல 8 பேரை வளர்த்தலாமா// ஷுஷ்!! ;)))

    ReplyDelete
  17. _()_ மதுமதி. :-)

    தூரிகை அழகாகக் தூறி இருப்பது பார்த்தேன். உடனே கருத்து விட்டுவர இயலாது போய்விட்டது. அங்கேயே கருத்துச் சொல்கிறேன்.

    வருகைக்கும் பின்தொடர்தலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. அதீஸ்...

    //எனக்கும் ஆமை என்றால் விருப்பம் இமா// இமயவரம்பன்! ;)

    //ஆமை வளர்ப்பவர்களுக்கு மட்டும்தான் அதன் வகைகள் தெரியும்// ம்.

    //பாலாமைச் சாதிதான் நல்லதாமே// ஊரில் கிணற்றில் ஒன்று எப்போதும் இருக்கும். கொதிக்க வைத்திருந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடித்தோமா என்று இப்போது நினைக்க அருவருப்பாக இருக்குது. ;((( பாலாமையையும் கட்டுப்பெட்டி ஆமையையும் சாப்பிடுற ஆட்களைப் பார்த்திருக்கிறன்.

    //முகத்திலும் ஒரேஞ் கோடுகள்// இவர்கள் red eared turtles.

    //இப்படியான வேலைகள், தினமும் கொஞ்சம் கொஞ்சம் செய்தால் பிரச்சனை வராதே..// சுத்தம் செய்கிற வேலைகளை, ஒரே தரமாக அதற்கென்றுள்ள உடுப்புப் போட்டு க்ளவ் எல்லாம் போட்டு செய்து முடித்தால், இடத்தையும் பொருட்களையும் சுத்தம் செய்து ஒதுக்கிவிட்டு, போட்டு இருக்கிற உடுப்பை கழுவப் போட்டுவிட்டு நானும் குளிச்சு முடிச்சுருவன். இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய ஏலாது அதிரா. நான் செல்லங்களோட விளையாடுறதே குளிக்கப் போக முன்னால மட்டும்தான். பிறகு தூர இருந்து ரசிக்கிறதோட சரி. ;)

    ReplyDelete
  19. //நாங்கதான் இமாவைப் பார்த்திருக்கிறமில்ல// ;))

    //பாருங்க இமா சிவாவை// ;) பார்த்தாச்சு அதீஸ். ;)))

    ReplyDelete
  20. Dear Ima ,
    May your Christmas sparkle with moments of love, laughter & goodwill
    & may the year ahead be full of contentment & joy.
    Have a Merry Christmas.

    ReplyDelete
  21. இமா,உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

    http://mahikitchen.blogspot.com/2011/12/blog-post_22.html

    தொடரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!

    அதிரா கூப்ட்டாக..இப்ப நானும் கூப்ட்டிருக்கேன்..வீட்டிலிருக்க யாராவதையாவது டைப்படிக்க சொல்லி கதை எழுதிருங்கோ என்று அன்புடன் (மிரட்டல்)வேண்டுகோள் விடுக்கிறோம்mmmm!;)

    ReplyDelete
  22. அன்பு இமா... பல நாட்களாக பதிவுகள் இல்லாமல் இருந்ததால் வராமல் இருந்தேன்... இன்று பார்த்தால் பதிவு இருக்கின்றது. ஆமைக்குட்டிகள் எல்லாம் அழகாக இருக்கிறது. ஆனால் எனக்கு தான் இவர்களை தொட பயம். சிரியாவில் குட்டி குட்டி ஆமைகள் நிறைய பார்த்திருக்கேன், இவங்களாம் கொஞ்சம் பெருசா இருக்காங்க... பயமா இருக்கு வனிக்கு :) - வனிதா

    ReplyDelete
  23. அவங்க இருவரும் எப்படி சண்டை போட்டு ஒருவரை ஒருவர் தள்ள பார்ப்பாங்கன்னு சொல்லி இருப்பதை படிச்சதும் கற்பனை செய்து பார்த்தேனா... சிரிப்பா இருக்கு :) அவங்க சைஸ்க்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல அவங்களுக்கு???

    எங்க வீட்டில் நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ வெள்ளை முயல் ஒன்று சிவப்பு கண்ணோடு வளர்த்தோம். சில மாதத்துக்கு பின் அவர் தனியா இருக்காருன்னு துணைக்கு கருப்பு கண் உள்ள வெள்ளை முயல் குட்டிகள் 4 வாங்கினோம், எல்லாம் ரவுடி பிள்ளைங்க... அவங்களும் சண்டை போட்டு நாங்க முதலில் வளர்த்த முயல் குட்டியை கடிச்சு ரத்தம் வர வெச்சுடுவாங்க. தனி தனியாவே தான் வைத்து வளர்த்தோம்... அந்த நியாபகம் வருது உங்க பதிவை பார்த்து. - வனிதா

    ReplyDelete
  24. எனக்கும் வான்ஸ் அண்ட் சிவா வை போல ஆமை, நாய், பூஸ் (அதீஸ்:)), எல்லாரையும் பார்த்தால் பயம் பயம் பயம்!! நீங்க தைரியமா வளர்த்து இருக்கீங்க. Zoo வுக்கு போனாலே பாம்பு இருக்கும் பக்கம் நான் போக மாட்டேன் அப்புறம் நைட்டு கனவுல எல்லாம் பாம்பூஊ தான் வரும்!

    ReplyDelete
  25. ////பாருங்க இமா சிவாவை// ;) பார்த்தாச்சு அதீஸ். ;)))// இப்புடித்தான் ஸ்கூல் ல யும் பசங்க கம்ப்ளைன் பண்ணினா டீல் பண்ணுவீங்களோ??

    //நான் அப்பூடி என்ன சொல்லிட்டேன்:)).// பூஸ் வம்பிழுத்திட்டு அப்புடி என்ன சொன்னேன்னு கேள்வி வேற? பூஸ் குட் கேர்ள் ஆ இல்லேன்னா Santa ப்ரெசென்ட் எடுத்துகிட்டு வர மாட்டாரு !!

    ReplyDelete
  26. //(மிரட்டல்)வேண்டுகோள் விடுக்கிறோம்mmmm!;)// மஞ்சள் பூ terror பூ ஆயிட்டாங்க போல இருக்கே சீக்கிரம் பதிவ போட்ட்ருங்க.


    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ் அண்ட் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. இமா IS EVERYTHING OKAY OVER THERE ???
    நியூஸ் பார்த்ததும் உங்க நினைவுதான் வந்தது

    ReplyDelete
  28. //En Samaiyal said...
    எனக்கும் வான்ஸ் அண்ட் சிவா வை போல ஆமை, நாய், பூஸ் (அதீஸ்:)), எல்லாரையும் பார்த்தால் பயம் பயம் பயம்!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    //En Samaiyal said...
    ////பாருங்க இமா சிவாவை// ;) பார்த்தாச்சு அதீஸ். ;)))// இப்புடித்தான் ஸ்கூல் ல யும் பசங்க கம்ப்ளைன் பண்ணினா டீல் பண்ணுவீங்களோ??//

    சியேர்ஸ்.. கிட்னியை யூஸ் பண்ணி நல்ல ஒரு குவெஷ்ஷன்..

    ////நான் அப்பூடி என்ன சொல்லிட்டேன்:)).// பூஸ் வம்பிழுத்திட்டு அப்புடி என்ன சொன்னேன்னு கேள்வி வேற? பூஸ் குட் கேர்ள் ஆ இல்லேன்னா Santa ப்ரெசென்ட் எடுத்துகிட்டு வர மாட்டாரு !!///

    நான் 6 வயசிலிருந்தே ரொம்ப நல்ல பொண்ணாச்சே...:), சன்ரா நோத்போல்ல இருந்து புறப்பட்டுவிட்டார் பிரசண்ட்டோட:)))))...

    “என் சமையல்” அறையில்... நான் பூஸா... சுண்டெலியா....?:))

    ReplyDelete
  29. இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோ.

    சிஸ்டர் ஆதிரவுக்கும் சொல்லிவிடுங்கள் அவர் தளத்தில் கருத்து பெட்டியை காணோம்.

    ReplyDelete
  30. ஆமை என்றாலே வை கோ அவர்கள் சொல்லும் பழமொழி தான் எல்லோரும் சொல்ல கேள்வி பட்டு இருக்கேன் இமாஅக்கா.

    ஆனால் எப்படி வளர்கிறீர்கள் என்பது ஆச்சரியாமாக இருக்கு
    ஆனால் வேலை அதிகம் தான் இல்லையா

    கார்டூனில் உள்ளது பார்த்தா அழகா இருக்கு, ஆனால் பயமாவும் இருக்கு, கையில் வைத்திருப்பது பாம்பு என்றே நினைத்து விட்டேன்/

    ReplyDelete
  31. //......நாட்டி பூனைஸ் மாதிரி நம்மகிட்ட பழகுமா இமா?// m. ;)அதைவிட நல்லா பழகும். ;)
    //அமைதியா இருந்தது// ;) அது சத்தம் போடாது அஞ்சூஸ். ;)
    //pond விரிவாக்கி// ஓகே //ரெண்டு குட்டி போடலாம்னு ஒரு ஐடியாருக்கு// ஹா!! !!!!!! ;)))

    உங்கள் அனைவரது அன்பாலும் இமா is always ok. அன்பான விசாரிப்புக்கும் நத்தார் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அஞ்சூஸ். Hope u had a wonderful Christmas season. Happy new year.

    ReplyDelete
  32. மகி...
    //ப்ளாக் & யெல்லோ ஆமைக்குட்டி// அவர்தான் ஆல்ஃபி... எங்க வீட்ல சின்னதுல இருந்து இருக்கார். அதான் என்னைப் போலவே //அழகாப் பார்க்குது.// ;)ஆணிக்கு ஓடு சீராக இல்லை. ஆல்ஃபிக்கு இருக்கும்... கிடைத்த பராமரிப்பு அப்படி.

    //சிவா-பேபி அதிரா கம்ப்ளெய்ன்ட்ஸுக்கு// ரெண்டு பேபீஸ் அடிச்சுக்கறப்ப நடுவில போறது இல்ல நான். ;)))

    //அதிரா கூப்ட்டாக..இப்ப நானும் கூப்ட்டிருக்கேன்..// இப்போதான் 'அந்தப் பக்கம்' எட்டிப் பார்த்தேன். சொன்னதுக்கு நன்றி. //வீட்டிலிருக்க யாராவதையாவது டைப்படிக்க சொல்லி// !! நான் நல்லா இருக்கிறது பிடிக்கலயா!! //அன்புடன் (மிரட்டல்)// ஹா!!! ;))

    ReplyDelete
  33. உங்களுக்கு இனிய புத்தண்டு வாழ்த்துக்கள் அயுப்.

    //சிஸ்டர் ஆதிர...// இங்கேயே பார்த்து இருப்பாங்க. இருந்தாலும் உங்களுக்காக மெய்ல் பண்ணி இருக்கிறேன். //அவர் தளத்தில் கருத்து பெட்டியை காணோம்.// ஆமாம், நானும் இதுபற்றி அந்நியனிடத்தில் புகார் கொடுக்கலாம் என்று இருந்தேன். ;)

    ReplyDelete
  34. //ஆமை வேகத்தில் நான் வந்து கருத்து கூறுகிறேனோ?// ;) அது நான். ;)

    //ஆமை புகுந்த வீடும்...// அந்த முதற்பகுதி உண்மைதான் அண்ணா. ;) முயலாமை, பொறாமை... இதுபோன்ற ஆமைகள் புகுந்த வீடுகள் எப்படி உருப்படும்!! ;) ஆமைக்கும் எனக்கும் 48 வருட பந்தம். அவற்றால் இமாவுக்கு எந்தக் குறையுமில்லை, மகிழ்ச்சி தவிர.

    //அதுவாகப்புகாமல்// இல்லை அண்ணா. பொறுங்க, காலை எழுந்து உங்களுக்காக ஒரு லிங்க் தேடி அனுப்புகிறேன், பிடித்தால் (மட்டும்) படித்துப் பாருங்கள். ஆல்ஃபி மட்டும்தான் மகன் வாங்கிவந்தவர். மீதி அனைவரும் தாங்களாகவே வந்துசேர்ந்தவர்கள்தான்.

    //ஆம வடை // ;)) ஆமப்பூட்டு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா!! ;) Armer padlock. ;)


    ஜலீ..
    //வேலை அதிகம் // நீர் ஆமையானதால் அது. நட்சத்திர ஆமைகள் பராமரிப்பு சுலபம்.

    ReplyDelete
  35. ஹாய் வனி,

    //பல நாட்களாக பதிவுகள் இல்லாமல்... // ஹும்! நினைப்பிலேயே போட்டுவிடுகிறேன். ;)

    //சண்டை போட்டு... // ம். பார்க்க அழகா இருக்கும். ;)

    //எல்லாம் ரவுடி பிள்ளைங்க... // ஹி ஹி. அதுங்க வளர்த்தவங்களை மாதிரி இருக்கலாம்னு பார்த்திருக்கும் போல. ;)) (உண்மையை சொல்லிட்டேன்னு என்னை பெஞ்சு மேல ஏத்திராதீங்க.) ;)

    ReplyDelete
  36. ஹாய் கிரீஸ்... _()_

    //பாம்பு இருக்கும் பக்கம்...// ஊரில் வீட்டின் உள்ளே உலா வரும். சிறு வயதிலிருந்தே பார்த்ததால் மெதுவே பயம் காணாமல் போய்விட்டது.
    //இப்புடித்தான் ஸ்கூல் ல யும் பசங்க கம்ப்ளைன் பண்ணினா டீல் பண்ணுவீங்களோ?// இங்க இவங்க டீல் பண்ற விதமே தனி. இரு தரப்பினரும் கம்ளைன்ட் எழுதிக் கொடுக்க வேண்டும். சாட்சிகள், ஆதாரங்கள் தேடி... ஹும்! பெரிய வழக்காடுமன்றமே நடக்கும். ;)

    //மஞ்சள் பூ terror பூ ஆயிட்டாங்க போல இருக்கே சீக்கிரம் பதிவ போட்ட்ருங்க.// ஒத்து ஊதுறீங்களா!! உங்களைக் கோர்த்து விட்டுருவேன், ஜாக்ரதை! ;))

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. அந்தப்பழமொழிக்கு “முயலாமை + பொறாமை” போன்ற ஆமைகளே என்று என் இமாவின் விளக்கமும், அறிவும் எனக்கு இமா மேல் பொறாமையை ஏற்படுத்தி விட்டதே!

    வாழ்க இமா! .... இமா வாழ்க, வாழ்கவே!!

    vgk

    ReplyDelete
  38. தேர்தல்ல நிற்கலாம் போல இருக்கே!! ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா