Friday 20 April 2012

ஒரு ஃப்ரீஸர், ஒரு மோட்டார், ஒரு ஸ்கூட்டர்,

2000
இங்கு வந்த புதிது, இமா குடும்பத்தார் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு வாடகை வீட்டிற்குள் நுழைந்தோம். என் கையில் வேலைக்கான அனுமதி இல்லை. எல்லாமே புதிதாக வாங்கிக் கொள்ள இயலாத நிலை. தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் புதிதாக வாங்கினோம். குளிர்சாதனப்பெட்டி இல்லாமல் சில மாதங்கள் கடத்தியாயிற்று. பிறகு சில மாதங்கள் இன்னொருவர் பயன்படுத்தியதொன்றை வாங்கி வைத்திருந்தோம்.

2001
அது அடிக்கடி வெள்ளமெடுக்க ஆரம்பித்தது. இரவு வேளைகளில் கடமுடாவென்று சப்தம் வேறு போடும். வருட நடுப்பகுதியில், தவணைமுறையில் புதிதாக ஒன்று வாங்கிக் கொண்டோம்.

பிறகு... எல்லாம் நலமே.

2011
மேல் கதவை அடைத்தால் கீழ்க் கதவு திறந்துகொண்டது. அழுத்திச் சாத்தாவிட்டால் மேல்க் கதவு மூடிக் கொள்ளாது. வேலையால் வீடு வந்தால் சுத்தம் செய்யும் வேலை இருக்கும். கதவுகளில் குறிப்பு எழுதி ஒட்டினேன். ;) பிறகு எல்லோரும் கவனமாக இருந்ததில் பிரச்சினை எதுவும் தெரியவில்லை.

2012
6 வாரங்கள் முன்பாக க்றிஸ் முணுமுணுக்க ஆரம்பித்தார். வாங்கிவரும் காய்கறிகளை நான் நேரத்துக்குப் பயன்படுத்தாமல் வீணாகக் கெட்டுப் போக வைக்கிறேனாம். ;) "ஃப்ரிஜ் கிழவியாகீட்டுது," நான் சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. எல்லாம் எடுத்து எறிந்து புதிதாக வாங்கி வைக்க... மீண்டும் கெட்டுப் போயிற்று. தக்காளி, மிளகாய் எல்லாம் ஃப்ரீஸரில் வைத்தது போல கட்டியாக ஆகிற்று.

வெப்பமானியை அளவு மாற்றிவைத்தாலும் பயனில்லை.

காய்கறி எல்லாம் மேசையில் கூடையில் வைக்க ஆரம்பித்தோம். பாதியளவு குளிர் சாதனப் பெட்டிதான் பயன்பாட்டில் இருந்தது. தேனீருக்கு பாலை எடுத்துக் கவிழ்த்தால் 2 L போத்தலிலிருந்து ஒரு சொட்டும் விழவில்லை, அப்படிக் கட்டியாகி இருந்தது. முட்டை கல்லாக, sauce கூட அப்படி. ;)

சத்தம் பெரிதாக வர ஆரம்பித்தது. புதிது வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். பேச்சுக் கொடுத்த கடைக்காரர் போய்ப் பின் பக்கம் ஏதாவது விழுந்திருக்கிறதா என்று பாருங்கள் என்றார். பார்த்தோம் எதுவும் இல்லை.

வார இறுதியில் திரும்பவும் புதிது தேடும் படலம் புறப்படுவதாக இருக்க... நேற்று இரவு மூத்தவர் வந்தார். அவர் வீட்டில் யாருமில்லையாம். எல்லோரும் விடுமுறைக்குப் போய்விட்டார்கள். இப்படியான நாட்களில் தனியொருவருக்கு என்று சமைக்காமல் எங்கள் வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறேன்; எங்களோடும் பொழுதைக் கழித்ததாகுமே. வந்தார்; "அது என்ன சத்தம்?" என்றார். தன் மோட்டார்பைக் அங்கிகளைக் களைந்து வைத்துவிட்டு வந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தார். நான் திடீர் தோசைக்குக் கரைத்துக்கொண்டு இருந்தேன்.

"குளிர் காற்று மேலே எழும்பி வரவில்லை. fan பிரச்சினை கொடுக்கிறதோ!" என்றார். தந்தையும் மகனும் பேசிக்கொண்டே எல்லா உணவுப் பொருட்களையும் வெளியே பரப்பினார்கள். புதிது வாங்குவதென்று முடிவு செய்தாயிற்று; இனி உடைந்தால் என்னவென்று எப்படியோ அதன் உட்பக்கம் திறந்து பார்த்தார்கள்.
 
நினைத்தது போலவே fan வேலை செய்யவில்லை.
இந்த நடுக் குழிக்குள்தான் fan இருந்தது.
மகன் எப்பொழுதும் தனக்கெனத் தனியாக வேலைக்கான உபகரணங்கள் எல்லாம் வைத்திருப்பார். எல்லாமே அவர் வீட்டில் இருந்தன. "டெஸ்டர் இல்லையே!" என்றார். பிறகு "பெரிய torch எங்கே?" என்றார். அது charge இல்லாமல் இருக்க, சின்னவரது மொப்பெட் பாட்டரியில் பிடித்துச் சோதித்தார்கள்.
வேலை செய்தது. ஏங்கோ இணைப்பு தொடர்பு விட்டிருக்க வேண்டும் போல. மீண்டும் பொருத்திப் பூட்டிவிட, அமைதியாக அழகாக வேலை செய்கிறது எங்கள் குளிர்சாதனப் பெட்டி. ;)

ஐந்து வருட உத்தரவாதத்தோடு வந்தது பத்து வருடம் தாண்டியும் புது மெருகோடு ஓய்வில்லாமல் உழைக்கிறது.

இன்னும் எவ்வளவு காலம் வரும் என்பது தெரியாது. இருவருமாக எதையாவது செய்து ஒரு வருடமாவது ஓட்டி விடுவார்கள் என்று தோன்றுகிறது. ;)))

21 comments:

  1. ஒரு குளிர் சாதனா பெட்டி கதைப்பது போல
    கதையாக சொன்ன விதம் சூப்பர்
    இன்னும் பல வருடம் வரும் இப்படி பாத்து பாத்து பாதுகாப்பதால் .
    ஆக ஒரு ஆக்க பூர்வமான யோசனை பயன்பாட்டில் வந்து இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஷிவ்ஸ்ஸ்.. யார்ப்பா அது சாதனா!! இவங்கதான் புது பொன்னியா!!! ஹ்ம்! ;)

      Delete
  2. இமா இமா...எங்கள் வீட்டு பிரிட்ஜ்ஜும் கிட்ட கிட்ட உங்கள் வீட்டு பிரிட்ஜ் வாங்கிய பொழுதுதான் வாங்கி இருப்போம்.

    இப்பொழுது உங்களுக்கு வந்த பிரச்சினைதான் எங்களுக்கும்.கீழே பிரிஜ் பிரீசர் ஆக மாறிவிட்டது:(

    இன்ன்னொரு பிரிட்ஜ் இருப்பதால் கண்டு கொள்ள வில்லை.

    சித்த கிரிஸ் அண்ணாவையும் உங்கட பெரியவரையும் எங்கள் வீட்டுக்கு வரச்சொல்லுங்களேன்...:)

    ReplyDelete
    Replies
    1. ;) அதுக்கென்ன, அனுப்பி வைக்கிறேன். ;))

      Delete
  3. 2001-யும் 2011-யும் சரியா கவனிக்காமல், வாங்கியவுடனே புதியது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டதோ என நினைத்தேன் இமா :) அப்புறம் பார்த்தால் 10 வருஷத்துக்குப் பிறகுதான் கோளாறு ஆரம்பிச்சிருக்கு! நல்லவேளை உங்க வீட்டிலேயே டாக்டர்ஸ் இருந்ததுனால கிழவின்னு ஓரம் கட்டாமல் இருந்தீங்க‌ ;)

    ReplyDelete
  4. "ஃப்ரிஜ் கிழவியாகீட்டுது,"//என் கிழவன் ஆகாதா?

    ReplyDelete
    Replies
    1. ஹிக்! ;) கார், கப்பல்லாம் she-தானே! அதுபோல இதுவும். லோன் மூவர், வாக்யூம் க்ளீனர்லாம் மற்ற வகைல வரும். ;D

      Delete
  5. அழகான நகைச்சுவையான எழுத்துக்கள்.

    ”இமா” means நகைச்சுவைப்பேச்சு [என் அகராதியில்]

    //மேல் கதவை அடைத்தால் கீழ்க் கதவு திறந்துகொண்டது. அழுத்திச் சாத்தாவிட்டால் மேல்க் கதவு மூடிக் கொள்ளாது. வேலையால் வீடு வந்தால் சுத்தம் செய்யும் வேலை இருக்கும். கதவுகளில் குறிப்பு எழுதி ஒட்டினேன். ;) //

    புத்திசாலி ;)))))

    ReplyDelete
    Replies
    1. ம்.. எழுதுவதை எழுதிவிட்டு கூடவே ஒரு ஸ்மைலி போட வேண்டியது முக்கியம் அண்ணா. ;)))))

      Delete
  6. //6 வாரங்கள் முன்பாக க்றிஸ் முணுமுணுக்க ஆரம்பித்தார். வாங்கிவரும் காய்கறிகளை நான் நேரத்துக்குப் பயன்படுத்தாமல் வீணாகக் கெட்டுப் போக வைக்கிறேனாம். ;) "ஃப்ரிஜ் கிழவியாகீட்டுது," நான் சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. //

    ஒரு சின்ன சந்தேகம், இமா!

    அவர் ’கிழவியாகீட்டுது’ன்னு சொன்னது ஃப்ரிஜ்ஜை மட்டும் தானே?

    தங்கச்சியைத்தான் சொன்னாரோன்னு தவியாத்தவித்து விட்டார் இந்த உங்க அண்ணாச்சி.

    ReplyDelete
    Replies
    1. தங்கச்சியைத்தான் சொன்னாரோன்னு தவியாத்தவித்து விட்டார் இந்த உங்க அண்ணாச்சி.///

      என்ன வி ஜி கே சார் இப்படி கேட்டுட்டிங்க.க்றிஸ் அண்ணா அதை எப்பவோ சொல்லியாச்சாம்:)

      Delete
    2. எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும், இமா காலை வாரலாம்னு பார்த்துட்டு இருக்காங்க எல்லோரும். ஹ்ம்! ;))

      Delete
  7. ஆரம்பத்தில் இருந்தே உங்கள் பதிவுகளை படித்து வந்ததில் கிரிஸ் சாரோட மரவேலைகள்,உங்கள் மூத்தவரின் கைவேலைகள் இவற்றை படித்து ரெண்டு பேருமே வீட்டில் ஆகாத பொருட்களை பயனுள்ளதாக மாற்றும் திறமைசாலிகளாக இருப்பார்கள் போல,இமாக்கு எந்த பொருள் ரிப்பேர் ஆனாலும் கவலை இல்லன்னு நினச்சேன்..இந்த பதிவு அதை நிருபித்துவிட்டது இமா..:)

    ReplyDelete
    Replies
    1. உயர்திணைகள் ரிப்பேர் ஆகாதவரை கவலை இல்லைதான். ;D

      Delete
  8. வீடு நிறைய மெக்கானின்ஸ் இருந்தா பிரச்சனையே இல்லை! :)

    குட் லக் வித் யுவர் குளிர் சாதனா பெட்டி! ;)

    ஷிவ்ஸ்,என்ன றீச்சர் கேள்விக்கு பதில் சொல்லாம எஸ்கேஏஏஎப்பா?! ;)

    ReplyDelete
    Replies
    1. தாங்க்யூ மகி. ;))))

      ஷிவ்ஸ் வண்ணதாசன் எழுத்துக்கள் படிச்சுட்டு இருக்காங்களாம், இங்க யாரும் இல்லாதப்ப வருவாங்களாம். ;D

      Delete
  9. நான் சொல்லலாமுன்னு நினைச்சேன் நீங்களே சொல்லிட்டீங்க .. இது ஃபேன் பிராப்ளம்தான் .ஆனா இந்த ஃபேன் 220 or 110 v ஓல்டிலதான் ஓடும் .ஆனா நீங்க மொபட் பேட்டரியில ஓடுமுன்னு சொல்றீங்க :-)))

    ReplyDelete
    Replies
    1. காணாமப் போகாம இருந்திருந்தா கேட்டிருப்பேன். இப்போ 2 லேட் ஜெய். ;)

      இருந்தாலும் கேட்கிறேன். # டவுட்டு 53576 - யங்லதானே ஓடும்! ஓல்டில எப்பிடி! வீல்சேர்லயா!

      # டவுட்டு 53577 - //நீங்க மொபட் பேட்டரியில ஓடுமுன்னு சொல்றீங்க// இது என்ன புதுக் கதை! எப்போ சொன்னேன்!

      ;))) இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க - மொபெட், பாட்டரி இருந்தாலும் ரோட்லதான் ஓடும்; பாட்டரில ஓடாது. அதுவும்... பெட்ரோல் இல்லாட்டா ஓடாது. ;)

      Delete
    2. //இது என்ன புதுக் கதை! எப்போ சொன்னேன்! //

      ஓஹ்..நாந்தான் சரியா படிக்கலையா...நடுவில படம் வந்ததால குயப்ப்ப்ப்ப்ப்பம் ஹி..ஹி... :-)))

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா