Friday 25 March 2016

வாழ்த்தாமல் வாழ்த்துங்கள்!

நான் இணையம் வரத்தொடங்கிய முதல் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் குறைந்தது இரண்டு பேராவது பெரிய வெள்ளிக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். மின்னஞ்சல் வாழ்த்துக்களும் வந்திருக்கின்றன. சமையல் பற்றிய, "என்ன ஸ்பெஷல்?" என்று ஒரு கேள்வியையும் சமயத்தில் எதிர்நோக்குவேன்.

என்ன ஸ்பெஷல்!! உண்மையில்  பெரிய வெள்ளி துக்க தினம்; கிறீஸ்து இறந்த தினம். அதுதான் விசேடம்.

அதைத் தொடர்ந்து வருகிற ஞாயிறு - உயிர்த்த ஞாயிறு. இது உண்மையில் நத்தாரை விட முக்கியமான தினம். அன்று வாழ்த்தலாம்.

பெரிய வெள்ளி... சொல்வழி கேளாது போன ஆதாம் ஏவாளிடம், அவர்களுக்கு இன்னதுதான் தண்டனை என்பதைச் சொல்லிவிட்டு, மானிடர் செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக தன் மகனை அனுப்புவதாக இறைவன் வாக்குக் கொடுத்தாராம். அதன்படி கிறீஸ்து மனிதனாகப் பிறந்து மரணித்த காரணத்தால் மட்டுமே பெரிய வெள்ளியை Good Friday என்கிறார்கள்.

இது மதப்பிரச்சாரம் எல்லாம் கிடையாது. சொல்லிவைத்தால், இனி வரும் காலங்களில் வாழ்த்தாமலிருப்பீர்கள் அல்லது சரியான தினத்தில் வாழ்த்துவீர்கள் எனும் நல்ல நோக்கம் மட்டுமே! :-)
இன்றைய நாள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்.
என் அன்பு வாழ்த்துக்கள்.


இந்தச் சிலுவைக்காக ஒரு பெட்டி செய்திருந்தேன். அதற்கான செய்முறை விளக்கம் இங்கே... http://www.arusuvai.com/tamil/node/29054

4 comments:

 1. நிஜமாகவே இதுவரை தெரியாது
  விரிவாகப் பதிவிட்டு அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 2. ஹ்ம்ம் ..இந்த வாரமுழுதுமே மிக அமைதியா துக்கத்தை அனுஷ்டிக்கணும் குட் ப்ரைடே என்பதை சிலருக்கு புரியல்லைன்னு நினைக்கிறேன் ..நேற்று பெரிய வியாழன் சர்வீஸ்ல ஒரு லேடி கொயர் பாடி முடிச்சதும் படபடபடன்னு கைத்தட்டுது என்னத்தை சொல்ல ..சிலருக்கு எதுக்கு வாழ்த்தனும் எதுக்கு கைதட்டனும்னே புரியலை .விளக்கமான பதிவு ..இங்கே இன்னிக்கும் கடைந்களை திறந்து வைச்சிருக்காங்க ஸ்பெஷல் டீல்ஸ் வேற இதில்..!
  இன்னிக்கு பெரிய வெள்ளி சர்வீஸ்ல அண்ட் பொண்ணு கைய தட்டகூடாதின்னு வேண்டிக்கறேன் ..
  இன்னிக்கும் கொயர் பாடுவாங்க .,,வாழ்த்து கைதட்டல் என்பது இடம் பொருள் ஏவல் அறிந்து செய்யணும் !

  ReplyDelete
 3. good friday பற்றி ...எமக்கு தெளிவாக எடுத்து உரைத்ததற்கு மிகவும் நன்றி...

  ReplyDelete
 4. ம்.. இங்கு இது கொஞ்சம் சரியா கடைப்பிடிக்கிறார்கள் என நினைகிறேன். கடைகள் கண்டிப்பா பூட்டு. நான் வந்தபுதிது சொல்லிய அனுபவம் இருக்கு. இப்போ சரி செய்தாச்சு.

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா