Friday 18 March 2016

பம்பரக் கயிறு

_()_ :-)
பல சமயம் அன்பளிப்பைப் பொதி செய்த பின்போ அல்லது கொடுத்த பிறகோதான் நினைவு வரும், 'ஒரு படம் கூட எடுத்து வைக்கவில்லையே!' என்பது. எப்போதோ இங்கு சேமிப்பில் போட்டு வைத்த படம் இது.

ஏஞ்சல் என்னும் என் குட்டித் தோழிக்கு நத்தார்ப் பரிசாக இந்தக் கிண்ணத்தைத் தயார் செய்திருந்தேன்.  'ஏஞ்சல்' என்றதும் பொதுவாக சம்மனசு / குட்டித் தேவதை ஒன்றுதான் நினைவுக்கு வரும். இங்கு உள்ளது ஏஞ்சல் மீன். பல நிறங்களில், பல வடிவங்களில் கிடைக்கும் தொட்டி மீன் இனம் இது. படம்... கொஞ்சம் ஓவியத்தனமாக இருக்கிறது. :-)

'இமாவின் உலகம்' சுற்றாமல் ஒரே நிலையில் பல காலம் நின்று விட்டது. சுழல வைக்கும் முயற்சியாக, இன்று பம்பரத்தில் கயிறு சுற்றியிருக்கிறேன். :-)

13 comments:

  1. அருமை .எனக்கும் மக் கிவ்ட் குடுக்கிற பழக்கம் இருக்கு.ம்ம் இப்பிடி செய்து குடுக்கிறது நல்ல ஐடியா.யெஸ் பம்பரம் எண்டால் அப்பிடித்தான் ஸ்பீட் குறைஞ்சு நிக்க போகும் ஆனா விடக்குடாது.மறுபடியும் மறுபடியும் சுத்தல் ல விட வேணும்.

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை விடுறது இல்லை சுரேஜினி. ;)))

      இப்பிடி எத்தினையோ தரம் சொல்லியாச்சுது. பாப்பம். :-)

      Delete
  2. Welcome back! I think Angel is talking to that plant in water??!!! :) B-) :D

    ReplyDelete
    Replies
    1. This time... going to keep my world turning for good. ;))

      //talking to that plant in water// ;-) Looks like she has eaten the tip of the plant. ;))

      Delete
  3. வாவ் குட்டி ஏஞ்சல் கிப்ட் ரொம்ப அழகா இருக்கு அம்மா..
    நீங்க வரைந்தது ஏஞ்சல் அக்காக்கு தெரியுமா? ஹி ஹி😀😀

    ReplyDelete
    Replies
    1. வேற எங்கயாவது பார்த்திருப்பா அபி. ;)

      Delete
    2. பார்த்தேன் :)
      ✍(◔◡◔)

      Delete
  4. வருக வருக :) ஒன்ஸ் இன் டூ டேஸ் இங்கே பதிவுகள் தொடர்ச்சியா வர வேண்டும்

    ReplyDelete
  5. கோப்பையும் பெயிண்டிங்கும் அழகு :)

    ReplyDelete
  6. அழகு ஏஞ்சல் மீன்... அழகு கைவண்ணம். பாராட்டுகள் இமா.

    ReplyDelete
  7. மீண்டும் வலையில் காண்பது மகிழ்ச்சி.அன்பளிப்பு கொடுப்பதுடன் நம்பணி முடின்க்சுது)))

    ReplyDelete
  8. மீள் வருகைக்கு (தாமதமான )வாழ்த்துக்கள்.
    அழகாக இருக்கு ஓவியத்தனமான பரிசு.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா