Wednesday 4 October 2017

கா'தோடு' சொல்கிறேன்

தலைப்பு சிலசமயம் ஜிங் ஜிங் என்று மூளையில் வந்து உதிக்கும். சில சமயம் முடியைப் பிய்த்தாலும் ஊஹும்!

பாடசாலையில் ஓர் விஞ்ஞான ஆசிரியர் _ ஒரே இப்படி எழுதுவது சிரமமாக இருக்கிறது. Mr. B - தமிழில் மிஸ்டர். பா! ;(( இதுவும் பிடிக்கவில்லை. ;( ஒரு புனை பெயர் வைக்கலாம். ம்... பாரி - கடையெழு வள்ளல்களில் ஒருவர் பெயர். ;)

மீதி 6 பெயர்களும் நினைவிருக்கிறதா எனக்கு! சோதித்துப் பார்க்கலாம். பாரி, ஓரி, மலையன், எளி..இல்லை எ..ழினி. ;) நினைவு இருக்கிறது நன்றாக. பேகன், ஆய், நள்ளி. ஹையா! எனக்கு நானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொள்கிறேன். :-)

பாரியைப் பற்றிச் சின்னக் காலத்தில் ஒரு சந்தேகம் இருந்தது எனக்கு. அவர் எப்படி முல்லைக்குத் தேர் ஈந்தார்!! ஔவையார் திரைப்படத்தை (கருப்பு வெள்ளையில்) பார்த்தும் புரியவில்லை. அப்போ எனக்கு முல்லைச் செடியைத் தான் தெரிந்திருந்தது; கொடியைத் தெரியாது.
அது என்ன முல்லைச் செடி என்கிறவர்கள் மேலே உள்ள படத்தைப் பார்க்கவும். இதற்கு ஒரு சக்களத்தியும் இருப்பது சில வருடங்களுக்கு முன்தான் தெரிந்தது. எனக்குத் தெரிந்த வரை... முல்லைக் கீரை... குப்பென்று வாசம் வீசும். அதை அனுபவிப்பதற்காகவே செடியைத் தட்டித் தட்டி விடுவேன். :-) ஆசையாகக் கேட்டேன் என்று சென்ற தடவை ஊர் போயிருந்த சமயம் மச்சாள் சொதி வைத்துக் கொடுத்தார்கள்.

சாப்பிடும் போதும், பிறகும் என்னிடமிருந்து எந்தப் பாராட்டும் கிடைக்காமல் போக, மச்சாள் கேட்டார், "ஜெயா, முல்லைக் கீரை சொதி - எப்பிடி இருந்துது?" நான்,,, "ஙே!!":-)
"இது முல்லைக் கீரைச் சொதியா?"
"ஓம், முன் வீட்டில இருக்கு. உங்களுக்காகப் பிடுங்கீட்டு வந்து வைச்சன். ஏன் நல்லா இல்லையா?"
"இது முல்லையே இல்லை! வேற என்னத்தையோ சமைச்சிருக்கிறீங்கள். ;))"
"இல்ல, முல்லை தான். நான் பிறகு காட்டுறன்."
அப்படியே சமையலறை ஜன்னலால் எட்டிப் பார்த்தார். "அந்தா... மதிலுக்கு மேலால தெரியுது பாருங்க."
எனக்குத் தெரியவில்லை. மதில் அருகே போய்ப் பார்த்தும் தெரியவில்லை. அதையும் சிலர் முல்லை என்கிறார்கள்.
http://www.arusuvai.com/tamil/node/25075 இங்கே அகத்திக் கீரைச் சொதி குறிப்பு இருக்கிறது. அதே போல இறுதியில் முல்லைக் கீரையைப் போட்டு சட்டென்று இறக்கினால் முல்லைச் சொதி தயார். துளிர் இலைகளாகத் தெரிந்து நடு நரம்பை மட்டும் நீக்கிவிட வேண்டும். இலையை மென்மையாகக் கையாள வேண்டும். சொதி கம்மென்று வாசமாக இருக்கும். சுடச் சுட சோறு, வெறும் முல்லைச் சொதியோடு... தேவாமிர்தம் எனக்கு.

;))) பாரியில் ஆரம்பித்து இங்கே வந்தேனா! ;)

இந்த வெள்ளைக்காரப் பாரி, ஒரு தடவை சின்னவர்களுக்கு 'கணக்கெடுப்பும் அதை வரைபாக்குதலும்' பற்றிக் கற்பித்தார். நாக்கு உருட்டுவது, நீலக் கண், ஒட்டிய காது என்று பல விடயங்களையும் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார். மாணவர்கள் தங்கள் தங்கள் நாக்குகளை எதிரே இருக்கும் மாணவர்களிடம் உருட்டிக் காட்டுனார்கள். எனக்கு நா துருதுருத்தது. அந்தச் சமயம் பார்த்து பாரி, "Not many can touch their nose with their tongue you know. Some can," என் மனம் குளிர்ந்தது. இப்போ மாணவர்கள் நாக்கால் மூக்கைத் தொட முயற்சித்தார்கள். யாரும் வெற்றியடையவில்லை.

என் அருகே இருந்த மாணவரிடம் ரகசியமாகச் சொன்னேன், "I can do that you know."
CAN YOU MISS!!!!"
"Shhh!!!! Promise to keep it a secred and I will show you," :-)

இப்போ பயிற்சி போதாததாலோ அல்லது நாக்கு கொழுத்துப் போயிருப்பதாலோ (உடலில் மீதி உறுப்புகளை விட நாக்குக்கு கொழுப்போடு அதிக தொடர்பு இருக்கிறது. அதுதான் முதலில் குண்டாகுமோ! எப்போதோ எங்கோ படித்த ஞாபகம். சரியாக நினைவுக்கு வரவில்லை.) தெரியவில்லை - மட்டுமட்டாகத்தான் தொட முடிகிறது.

அதையெல்லாம் விடுங்க. காது பற்றி ஒரு கதையாவது சொல்ல வேண்டாமா!

தெலுகு, கன்னடம் தெரிந்தவர்களுக்கு ஒரு கேள்வி. கலைமகளில் ஒரு ஜோக் படித்தேன். (இதுவும் சின்..னக் காலத்து நினைவுதான்.) ஒரு சத்திரத்தில் இருவர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கைத்தடியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கினார். உறக்கத்தில் அதை நகர்த்தி விட்டார். அது மற்றவர் காதில் மாட்டுவிட்டது. அவர், "காதுரா! காதுரா!" என்பார். மற்றவர் தடியை இறுக்கிப் பிடித்தபடியே, "நாதுரா! நாதுரா!" என்பார். இப்படியே மாற்றி மாற்றிச் சொல்வார்கள். எந்த வார்த்தை என்ன மொழிக்குரியது!! மறந்து போனேன். இப்போ அறிந்துகொள்ள ஆவல்.
கீழே கருத்து சொல்லும் போது, ஏஞ்சல் 'நாதுரா' என்பது தெலுகு சொல் என்று சொல்லி உதவினார்கள். நன்றி அஞ்சு. :-)
என் ஒற்றைக் காதணி இது. முன்பு சில காலம் செஞ்சிலுவைச் சங்கக் கடை ஒன்றில் தொண்டராகப் பணியாற்றிய சமயம் கிடைத்தது. என் கடமைகளுள் அங்கு வரும் உடைந்து போன, உதிர்ந்து போன நகைகளைத் திருத்துவதும் ஒன்றாக இருந்தது. திருத்திக் கொடுத்தவை போக மீந்து போனவற்றுள் பின்னால் கொக்கி உடைந்த இந்த ஒற்றைக் காதான் கிடைத்தது. குறட்டால் மீதி இருந்த கொக்கிப் பகுதியை உடைத்து நீக்கி அந்த இடத்தில் 'ப்ரோச் பின்' ஒன்றை 'ஹாட் க்ளூ' வைத்து ஒட்டினேன். எனக்கு மிகவும் பிடித்த ப்ரோச் இது. வேறு யாரிடமும் இராது. :-)

20 comments:

  1. // "காதுரா! காதுரா னு சொன்னவர் தமிழ் நாதுரா னு சொன்னவர் தெலுங்கு :)
    இவர் காது னு சொன்னதை அவர் இல்லை/வேணாம்னு புரிஞ்சிட்டு நாதுரான்னு (என்னுதுரா :) னு கத்தியிருக்கார்

    ReplyDelete
    Replies
    1. இதற்கும்... நன்றி அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு. :-)

      Delete
    2. அய்ய்ய்ய்ய்ய் அஞ்சுக்கு டெலுங்கு தெரியுதே:).. மீக்கு ஹிந்தி நல்லா பூச்சண்டி:)..

      Delete
    3. I can talk walk sing laugh few languages. அனிமல்ஸ் மொழி கூட தெரியும்;)

      Delete
    4. ///I can talk walk sing laugh few languages///

      ஹையோ மீ நினைச்சது கரீட்டுத்தான்ன்ன்ன்ன்ன்.. பலதடவை நினைச்சதுண்டு அஞ்சு... “....” இருப்பாவோ என:) அது இப்போ கொன்ஃபோமாச்ச்ச்ச்ச்சூஊஊஊஊஊ அதேதான்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா:)..

      Delete
    5. //நல்லா பூச்சண்டி:)..// பூனையெல்லோ! அதுதான் பூச்சண்டி. ;-)

      Delete
  2. நாக்குக்கு எலும்பில்லை அதான் சீக்கிரம் குண்டாகுதோ :)

    நாங்க பேர்களை எங்களுக்கு விருப்பமான பேரை காரணப்பெயரா வச்சிக்குவோம் :)
    எங்க வீட்டுக்கு வரும் விசிட்டர் நேம் பிரபு ..
    அப்படி ஏதாச்சும் மாற்றிபேரை வச்சிக்க வேண்டியதுதான் விஞ்ஞான ஆசிரியர்னா டார்வின் நியூட்டன்னு வச்சிக்கோங்க :)

    ReplyDelete
    Replies
    1. :-) இதை வைச்சே ஒரு போஸ்ட் தேத்திரலம் போல இருக்கே! :-) என் சின்னவர்கள் பேர் க்ரியேட் பண்றதுல கெட்டிக்காரரா இருந்திருக்காங்க.

      //பிரபு// குண்..டா ஸ்வீட் டிம்பிள் சிரிப்போட இருப்பாரோ! ;D

      Delete
    2. கிக்கிய்க்கீ :) பிரபு நல்லா குண்டு :) அழகு அடிக்கடி தாங்க்யூ சொல்ற மாதிரி சிமிட்டுவான் நாலு காலும் socks போட்ட மாதிரி வெள்ளை உடம்பு கருப்பு வால் bushy ..மியாவ் சொல்லும்போது கரகரன்னு பிரபு கணேசன் பேசறமாதிரியே மிர்ர்ர்யாவ் னு சொல்வான் :)
      படம் இருக்கு போடறேன் விரைவில்

      Delete
    3. //கரகரன்னு பிரபு கணேசன் பேசறமாதிரியே // ;)))))) கெதியாக் காட்டுங்க.

      Delete
  3. இனிமேல் இப்பிடி சங்கடம் வந்தால் என் பேர வச்சிக்கோங்கோ இம்ஸ்

    ReplyDelete
    Replies
    1. ;) Sure! உங்கடதுதான் எனக்குக் கஷ்டமான பேர். யாராவது நறுக்கி எழுதி இருப்பினம். நான் சுத்தமான ஆங்கிலத்தில வாசிச்சு வைப்பன். ;D

      Delete
    2. இமா, சுரேக்காவை அதிரா விசாரிச்சுப்போட்டுப் போறா.. கண்டு கனகாலமாச்சாம் எனச் சொல்லிடுங்கோ:)..

      Delete
    3. சுரேஜினிக்கு சொல்லியாச்சு. நேரமிருக்கேக்க பார்ப்பா.

      Delete
    4. ம்ம் நம்மட அதிரா வை பாக்காமல் இருக்க முடியுமோ ஓடிக் கம்மீட்டன் பாத்தீங்களோ??
      எல்லாரும் நிறைய எழுதி வச்சிருக்கிறீங்கள் .
      வாசிச்சு வாசிச்சு அதுக்கு கீழ வந்து கதைக்கிறன்.
      அதுவரை மீயா க்கு என் அன்பு

      Delete
  4. அடடா புயுப் போஸ்ட் கண்ணில் பட்டு இங்கு வந்தால் இது இருக்கு புயுசு போயிந்தி:)..

    ஓ முல்லைக்கொடியிலையில் சொதியோ?:) இமா.. இக்கொடியைப் பார்த்தால் ஊரில் சாப்பிட்ட காணாந்தி.. எனும் இலை நினைவுக்கு வருதே:).. அதுவும் சொதிதான் வைப்போம். இதுபோலவே இருக்கும் இலை.. ஒருவேளை நனும் முல்லை சாப்பிட்டிருக்கிறேனோ காணாந்தி எனும் பெயரில் ..ஙேஙேஙே...:)

    ReplyDelete
    Replies
    1. கானாந்தி வேற அதீஸ். கானாந்தியில சொதி வைக்கிறதுதான். கீரையாக சமைக்கவும் செய்யலாம். அது வாசமா இராது.
      முல்லை நல்ல வாசம், அநியாயத்துக்கு வாசமா இருக்கும். மரம் தட்டுப்பட்டாலே வாசம் வரும். முருங்கை வாசம் போல இல்லை இது; ரசிக்கக் கூடிய வாசம்.

      //புயுப்...// அது ஒரு விபத்து. :-) க.கா.போ.

      Delete
  5. றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்ப போய் மூக்கால நாக்கை எல்லாம் தொட முயற்சித்திட வேண்டாம்:) பின்பு நாக்குச் சுழுக்கிடும்:).. அதிராவுக்கு சுழுக்கெல்லாம் எடுக்கத் தெரியாதூஊஊஊஊஊஊ:)..

    ReplyDelete
    Replies
    1. Haaaa haaaa spelling mistake// சுளுக்கு//

      Delete
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எழுதும்போது கொன்பியூசாகி.. முடிவில ழுதான் வரும் எனப் போட்டேனே கர்ர்ர்:)) ஹா ஹா ஹா:)

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா