Monday 8 January 2018

குட்டி நாற்காலிகள்

 வாங்க, ஒரு பானம் அருந்தலாம்! :-)
~~~~~~~
இங்கு வந்தது முதல் விமானப் பயணங்கள் எதனையும் என் பெற்றோர் மேற்கொள்ளவில்லை. ஒரு தடவையாவது அழைத்துப் போவது என்கிற‌ முடிவில் 2016 தை மாதம் க்ரைஸ்ட்சேச் அழைத்துப் போனோம்.

செய்ன்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ட்ராமுக்காகக் காத்திருக்கையில் சூடாக‌ ஒரு பானம் - 'ஹொட் சொக்லட்' அருந்தினோம். அந்தக் கடையில் காட்சிக்கு இருந்த இந்தக் கதிரை என்னைக் கவர்ந்தது.

ஒரு க்ளிக்.
அது முதல் அபூர்வமாக என் கண்ணில் படும் ஷாம்பெய்ன் தக்கைகளைச் சேர்த்து வருகிறேன்.

இப்போதுதான் எண்ணத்தைச் செயற்படுத்த நேரம் அமைந்தது.
நான் முதல்முதலாகச் செய்த‌ கதிரை இது.
இரண்டாவது தயாரிப்பு.
கம்பிகள் எப்படி வளைந்து இருக்கின்றன என்பதைப் பொறுத்தே நேர்த்தி அமைகிறது. சிலதை எப்படி முயன்றாலும் நேராக்க முடிவதில்லை - நாய்வால் போல!
ஸ்டூல்!
சின்ன வயதில்.... வீட்டில் அப்பா செய்த முக்காலி ஒன்று இருந்தது. ஏறி நிற்க விடமாட்டார். சரியான இடத்தில் காலை வைக்காவிட்டால்... 'டமார்'. இது நாற்காலி! (இந்த நாற்காலி உருவான கதை இன்னொன்று இருக்கிறது. இன்னொரு சமயம் சொல்கிறேன்.)

செய்வது சுலபம். :-) தேவையானவை ஒரு ஷாம்பெய்ன் தக்கையின் கம்பிக் கூடு (இதை எப்படிச் சொல்வார்கள் என்பதை அறிய பல நிமிடங்கள் கூகுளில் அலைந்தேன்.), வெட்டும் குறடு, கூர்மூக்குக்  குறடு, நிறையப் பொறுமை.
கூட்டில் இருக்கும், இறுக்கும் வளையக் கம்பியை நீக்கிவிட்டால் போதும். சில சூட்சுமங்கள் இருக்கின்றன. வளையக் கம்பியிலிருந்து வளைவுகளை நீக்கினால் தான் வெளியே எடுக்க முடிகிறது. எடுக்கும் பொது கால்களை அதிகம் விரித்து விட்டால் இருக்கை வீழ்ந்துவிடும். ஒரு தடவை விழுந்துவிட்டால் திரும்ப நிறுத்துவதற்குப் பொறுமை அவசியம். இருக்கையின் அடியில் இறுக்கமாக வைத்துக் கொண்டு மீதிக் காலை மட்டும் விரித்து விட்டால் 'ஸ்டூல்' கிடைத்துவிடும்.

கதிரை செய்வதானால் வளையக் கம்பியை வெட்டும் இடத்தைக் கவனிக்க வேண்டும். இதில்தான் முதுகு தயாராகப் போகிறது. எனவே, முறுக்கு இல்லாத பக்கம் நட்டநடுவில் - அந்தக் குண்டுயூசித் தலை தெரிகிற இடத்தில் வெட்டலாம். கீழே உள்ள படத்தில் இருப்பது போல் வரும்.
அல்லது... வெட்டாமல் முறுக்கை நீக்கியும் கம்பியைக் கழற்றலாம். உங்கள் கற்பனைத் திறனைப் பொறுத்தது மீதி.

22 comments:

 1. Hi Imma,

  Can you please check my blog and let me how it is...

  http://kanmanigraphicsanddesigns.blogspot.com/  Thanks

  ReplyDelete
 2. I have been there so many times before. May not have left a comment. ;-) My e-kalappai is dead. It looked great with games and doted drawings. All the best Ayeesri. Keep up your good work.

  ReplyDelete
 3. வணக்கம் இமா!

  நாற்காலி நல்லாத்தான் இருக்கு! கைவினைக் காரிகை இமா...:))

  வாழ்த்துக்கள்!

  உங்களை ஒரு 'டொடருக்கு' அழைச்சிருக்கிறேன்.
  ஒருக்கா வந்து பாருங்கோ...:)

  ReplyDelete
  Replies
  1. :-) தொடர்ந்து சில மாதங்கள் கடந்த பிறகு தான் எல்லாருக்கும் பதில் சொல்லுறன். ;)

   Delete
 4. சோcute,,...

  செய்முறை விக்கமும் நன்று...

  ReplyDelete
 5. எனக்கு 5 சேர் ஒரு ரவுண்ட் டேபிள் வேணும் :) ஆர்டர் எடுத்துக்கோங்க

  ReplyDelete
 6. wow அழகா செய்திருக்கிறீங்க இமா.

  ReplyDelete
  Replies
  1. ;) போஸ்ட் பண்ணுறதுல ஒரு பிரச்சினை இருக்குது பிரியா. ;) முதல் ஒரு ஐஸ்க்ரீம் பெட்டி போஸ்ட் போட்டன். நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடுவன் என்று நினைச்சு ஒரு கொமண்ட் வந்துது. ட்ரையர் லின்ட்ல ரோஸ் செய்து போட்டன். இவ்வளவு குப்பையும் சேருமட்டும் க்ளீன் பண்ணுறேல்லயா என்டுற மாதிரி ஒரு கொமண்ட் வந்துது. ஏற்கனவே கேக்குக்கு விடுறதைப் போட்டிருக்கிறன். இப்ப இதையும் பார்க்க.... இங்க நிறையக் குடிகாரர் இருக்கினம் எண்டு யாராவது நினைக்கப் போகினம். ;)

   Delete
 7. Replies
  1. நன்றி வெங்கட் நாகராஜன். :-)

   Delete
 8. எச்சூச்மி எனக்கு பானம் வாண்டாம் அந்த கதிரைகளை தாங்கோ.
  கதிரைக்கு 4 கால் இருக்கிறதால இது செய்யிறதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டன் .ஒரு கால் ஒரு மாதுரி வந்துடும்
  அதனால சின்ன வயசில விஷேசங்களுக்கு அன்ரி வீடுகளில எல்லாம் போய் கதிரைகளை வாங்கி வந்த பழக்கம்
  இப்பிடி கேக்க வைக்குது .
  தயவு செய்து உங்கள் வீட்டு கதிரைகளை எனக்கு இரவல் வேண்டாம் எனக்கே தரவும்

  ReplyDelete
  Replies
  1. :-) சுகமாக இருக்கிறீங்கள் எண்டு நம்புறன். அடுத்த முறை வரேக்க ஒரு செட் கொண்டுவந்து தாறன்.

   //சின்ன வயசில விஷேசங்களுக்கு அன்ரி வீடுகளில எல்லாம் போய் கதிரைகளை வாங்கி வந்த பழக்கம் // ;) டடா 5 கதிரைகள், தன்ட பேர் ஒட்டி வைச்சு வைச்சிருக்கிறார். இரவல் குடுக்கிறதை ஒரு சோஷல் சேவிஸ் மாதிரி நடத்திக்கொண்டு இருந்தார். இப்ப அவர்ட அறையில அடுக்கிக் கிடக்குது. ;-)

   Delete
 9. ஹாஹா நீங்கள் கதிரை செய்த விதம் அழகு. அதற்கு வந்த ப்ரியசகி, ஏஞ்சல், பாலா ஆகியோரின் கமெண்ட்கள் மனதை லேசாக்கின. இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி இமா :)

  ReplyDelete
  Replies
  1. :-) முன்பு போல மீண்டும் அடிக்கடி பதிவு இட வேண்டும், எல்லோருடனும் பேச வேண்டும் என்று ஆசை. எப்போதாவது எட்டிப் பார்க்கத் தான் முடிகிறது.

   வருகைக்கு என் அன்பு நன்றி தேனம்மை.

   Delete
 10. ரொம்ப நேர்த்தியா செஞ்சிருக்கீங்க இமா

  ReplyDelete
 11. அருமை, நன்றி

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா