Monday 11 May 2020

கெட்டுப்போன நுணல்!

சென்ற வருடம் கார்த்திகை மாதம், ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இவரைச் செய்தேன்.
முதுகில் தெரியும் பிறை, என் பெருவிரல் நகம் பட்ட தழும்பு. நுணலாரின் நகங்களுக்கு edible gold paint பயன்படுத்தினேன். கண்ணின் மத்திக்கு சின்னச் சின்ன வெள்ளை மிட்டாய்கள் வைத்தேன்.

சந்தோஷமாக உலர வைத்துவிட்டு தூங்கப் போனேன். காலையில் கையில் எடுக்க இரண்டு விரல்களும் மேலும் ஒரு நகமும் உடைந்து வந்தது.
பாடம் - நுணுக்கமான சிறிய வடிவங்கள் உலரும் போது உடைந்துதான் போகும். தேவைப்படும் வடிவத்தை ஒன்றுக்கு இரண்டாகச் செய்து வைக்க வேண்டும்.

இது என் தேவைக்குச் சற்றுப் பெரிதாக இருக்கும் என்று புத்தி சொன்னது. ஆனாலும்,  நுணலை என் வாயால் கெடுக்க விரும்பவில்லை. நான்கைந்து தேக்கரண்டி சீனிக்கு மேல் இருக்கும்; நிறம் வேறு கடுமையாக இருந்தது. என் வாயால் என் ஆரோக்கியத்தைக் கெடுப்பானேன்! எறும்புகளுக்குத் தீனியாக, தோட்டச் செடிகளின் கீழ் வைத்துவிட்டேன்.

ஒரு கேக்குக்காகச் செய்த நுணல் இது. 

8 comments:

  1. நல்ல முயற்சி ...

    நுணலும் நல்லா வந்து இருக்கு ... பின் எறும்புகளுக்கு தீனி ஆகிவிட்டார் போல...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஹலோவீன் சமயம் என்றால் பத்திரமாகப் பொதி செய்து சின்னவர்களுக்குக் கொடுப்பேன். அத்தனை காலம் வைத்திருக்க விரும்பவில்லை. குருவிகள் சாப்பிடாது.

      Delete
  2. முயற்சி திருவினையாக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. தவளையைச் செய்யும் போது கேக்குக்குத் தேவையான மீதி விலங்குகளை எப்படிச் செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். நம்பிக்கை இருக்கவில்லை. வேலையை ஆரம்பித்த பின். 'இதற்குத்தான் இத்தனை யோசித்தோமா!' என்று வியப்பாக இருந்தது.

      Delete
  3. நுணல் - நல்லா இருக்கே...

    முயற்சிகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. நிச்சயம் தொடரும். இனி ஒவ்வொரு வருடமும் ஒரு பிறந்தநாள் வரும்.

      Delete
  4. அழகா செய்த்திருக்கிறீங்க இமா.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. இது ட்ரையல்தான் ப்ரியா. பிறகு தவளைக்குஞ்சு செய்தேன். இந்த அளவு தவளை செய்தால் யானையை எத்தனை பெரிதாகச் செய்ய வேண்டும்! எல்லாவற்றையும் அடக்க எத்தனை பெரிய கேக் வேண்டும்! எப்படி அதை பயணப்படுத்துவது என்று ஆயிரம் கேள்வி மனதில் வந்து போயிற்று.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா