Sunday 20 May 2012

1.. 2... 3.... வட்டிலப்பம்

கிரி கொடுத்த விருதுக்கு நன்றியாகவும்....
நான் தொலைத்த பின்னூட்டம் இதுதான் கிரி, மன்னிக்க வேண்டும். ;((
எப்போதோ ஹுஸைனம்மா கேட்டிருந்தார்கள், இப்போதாவது கொடுக்கலாம் என்கிற எண்ணத்திலும் இந்த இடுகை.
 
ஆனால்... இது நளபாகம். உண்மையில் சரியான குறிப்பு அல்ல. 

மரத்திலிருந்து பழுத்து விழுந்த காய்களை இதற்கென்றே சேகரித்து வைத்து... அதெல்லாம் இங்கு நடக்கிற காரியமா! 'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை,' என்று எப்படியோ நடத்திக் கொண்டு இருக்கிறோம். இங்கு கிடைக்கும் கித்துள்... வாசனையே வரவில்லை. ;( பசுப்பால் ஊரில் சேர்த்ததாகவே நினைவில்லை. வனிலா சேர்ப்பதில்லை. சாதிக்காய் தூளாக்கிச் சேர்ப்போம். ஆவியில் வேகவிட்டு எடுத்தால் சுவை சற்று வித்தியாசம்தான்.

குறிப்பு எழுதி உதவிய முக்கிய பிரமுகருக்கு ;) என் அன்பார்ந்த நன்றிகள்.
~~~~~~~~~~~
இனி... இனிப்பு.
தேவையான பொருட்கள்
முட்டை - 10
கித்துள் பனங்கட்டி - 450 gm
brown sugar - 2 Ts
தேங்காய்ப்பால் - 1 டின்
பசுப்பால் - 1/2 கப்
butter - 25 gm
vanilla -1 ts
முந்திரி, திராட்சை -தேவைக்கு

செய்முறை
 
கருப்பட்டியை துருவி பசும்பாலில் கரைத்து வடிகட்டவும். அதனுடன் தேங்காய்ப்பால், brown sugar சேர்த்து கலக்கவும்.
முட்டைகளை ஒரு கிண்ணத்தில்  உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
பால் +கருப்பட்டி கலவையுடன் கலக்கிய முட்டை, உருக்கிய வெண்ணை,வெனிலா எஸ்ஸன்ஸ் இவற்றை சேர்த்து கலந்துகொள்ளவும்.
முந்திரி,திராட்சையை சேர்த்து கலக்கவும்.
அவன்-ஐ  180° C-க்கு முற்சூடு செய்யவும்.
பேக்கிங் பானை தண்ணீரில் கழுவி நீரை வடித்துவிட்டு, வட்டிலாப்ப கலவையை அதில் முக்கால் பாகம் வருமளவு ஊற்றவும்.
ஏறத்தாழ 30 நிமிடங்கள் bake செய்து எடுக்கவும்.
டூத் பிக்கால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும், அதுதான் சரியான பதம்.
சுவையான வட்டிலாப்பம் ரெடி. சூடாகவோ, குளிரவைத்தோ ருசிக்கலாம்.

------

வட்டிலாப்பம் தெரியாத ஆட்களுக்கு ஒரு குறிப்பு: இது கேக் போல இராது. கஸ்டர்ட் / புடிங் போல இருக்கும். கரண்டியால் எடுத்து கிண்ணத்தில் வைத்து சாப்பிடலாம்.

68 comments:

  1. ஹை, நான் கேட்டதை இன்னும் மறக்காம, எனக்கே எனக்காகச் செஞ்ச இமா.... ச்சோ ச்வீட்!!

    (ஹுக்கும்.. எப்பிடியோ என் பேரைச் சொல்லி நீங்க செஞ்சு சாப்பிட்டாச்சு!! - இது மை மைண்ட் வாய்ஸ், நானில்ல்லை!! :-)))) )

    இருந்தாலும் டவுட் கேப்பேனே: ‘அவன்’ -இவன் மைக்ரோவேவார்தானே? பின் ஏன் 30 நிமிடங்கள்? ரொம்ப அதிகமாகத் தெரிகிறதே?

    ‘பேக்’ செய்வது என்றால், கேக்கிற்கு வைக்கும் அதே செட்டிங்தானே? (நோ கிர் கிர்..)

    வட்டிலாப்பத்திற்கு நாங்கள் சீனிதான் சேர்ப்போம். அப்படியேச் செய்யலாமல்லோ?

    ‘பிரவுன் சுகர்’ - என்னக் கொடுமை இது இமா? ரீச்சரே இப்படியா? :-D

    //கித்துள் பனங்கட்டி// - இது(தான்) கருப்பட்டியா?

    //கித்துள்.// - வாட் இஸ் திஸ்?

    //பசுப்பால் ஊரில் சேர்த்ததாகவே நினைவில்லை. வனிலா சேர்ப்பதில்லை. // - மீ டூ இல்லை. சேர்க்காமலே செய்யலாமா? அல்லது ‘இவன்’ தகராறு செய்வானா? :-)))

    பட்டரும் சேர்த்தது இல்லை. கட்டாயமாச் சேர்க்கணுமா?

    (செஞ்சு சத்தம்போடாம சாப்பிட்டு ப்ளேட்டைக் கழுவிவச்சிட்டுப் போகாம, இந்தம்மாவுக்குன்னு குறிப்பு போட்டேன் பாரு, என்னைச் சொல்லணும்!! - இமா மைண்ட் வாய்ஸ்!!)

    :-))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. நானே வந்து அழைப்பு வைக்க இருந்தேன். வந்துட்டீங்க. ;))

      //‘அவன்’ -இவன்// இல்லை. மைக்ரோ இல்லை மாக்ஸி அவன்தான். மெக்ரோவேவ் ரெசிபி ஒன்று, தோழி கொடுத்தது இருக்கு. என்னைக் கவரவில்லை அது. வேண்டுமானால் தருகிறேன் ஹுஸைனம்மா.

      //30 நிமிடங்கள்// அண்ணளவுதான். பாத்திரத்தின் அளவையும் தன்மையைப் பொறுத்தும்கூட நேரம் மாறும்.

      //கேக்கிற்கு வைக்கும் அதே செட்டிங்தானே?// ம். ;)

      //சீனி// எல்லாம் இனிமைதானே. ;)

      //ரீச்சரே இப்படியா?// ;)) அது தமிழா! ;) ஆளைப்பாருங்க, குறிப்பே போடாத இமா குறிப்புக் கொடுக்கிறாங்க, ஹுஸைனம்மா படிச்சமா சமைச்சமா ருசிச்சமா என்று இருக்காம.. ;))

      //கித்துள்// இது சாதாரண பனை போல இராது. இந்தியாவிலும் வளருகிறதாமே! ம்.. http://en.wikipedia.org/wiki/Caryota_urens
      தென்னம்பாளைல பதநீர் எடுக்கிறது போல இதிலும் எடுப்பாங்க. பிறகு சர்க்கரை காய்ச்சி எடுப்பாங்க. கித்துள் சிரப் சாப்பிட்டா... மேப்பிள் சிரப் சுவையில்லை என்பீங்க. ஆனா இப்போதான் கிடைக்கிற எதுவுமே சரியாக இல்லையே! ;((

      வனிலா சாதிக்காய்த்தூளுக்குப் பதிலாகத்தான். ரெண்டுல ஏதாச்சும் ஒன்று இல்லாட்டா முட்டை வாடை வருமே. முழுவதும் தேங்காய்ப்பாலில் செய்யுங்க. அப்படித்தான் ஊரில் செய்வோம். தே.பால் சேர்த்தால் பட்டர் எதுக்கு!
      அது சும்மா... ஒட்டாமல் வரும் என்பதாக ஒரு அபிப்பிராயத்தில் சேர்க்கிறது. சொன்னேனே... இது நளபாகம். ;))

      மைண்ட் வாய்ஸ்லாம் இல்ல. எப்பவோ நினைச்சது. நீங்க லீவுல போய்ட்டீங்க. விட்டுட்டேன். நடுவுல செய்தப்போல்லாம் ஃபோட்டோ எடுக்கல.

      Delete
    2. //‘பிரவுன் சுகர்’ - என்னக் கொடுமை இது இமா? ரீச்சரே இப்படியா? :-D//

      றீச்சர் இதுக்குப் பதில் சொல்லாமல் நழுவுறா விடமாட்டேன் இண்டைக்கு.. எங்கிட்டயேவா?:))

      அதுசரி ஆரை அவன் இவனெண்டெல்லாம் மருவாதை இல்லாமல் திட்டுறீங்க? றீச்சரும் சேர்ந்தோ?:)) முடியல்ல சாமீஈஈஈஈஇ விடுங்க என்னை விடுங்க இப்பவே போறேன் தேம்ஸ்க்கு:)))...

      அவண்... க்கு என்ன டமில்?:))

      Delete
    3. //அவண்... க்கு என்ன டமில்?// ;) வெதுப்பி

      //‘பிரவுன் சுகர்’// ம்.. நிறம் எல்லாம் இல்லாமல் சொல்லுறன்.. சுத்திகரிக்கப்படாத சீனி.

      Delete
  2. சூப்பர் வட்லாப்பம்

    குழந்தைகளுக்கு இது பார்க்க இது சாக்லேட் கேக் போல் இருக்கும் இல்லையா?

    என் அம்மாவின் ஸ்பெஷல் ஸ்வீட் து//

    பனங்கட்டிக்கு பதில் நாங்க சர்க்கரை சேர்த்து செய்வோம்

    ReplyDelete
    Replies
    1. //சாக்லேட் கேக்// இல்லையே!! நொஷ்ஷ்..னு ;))) இருக்கும். கைல எடுத்து சாப்பிட முடியாது. ஸ்பூன் வேணும் ஜலீ.

      Delete
  3. அருமையாக செய்து காட்டியிருக்கீங்க இமா. நல்லதொரு சத்தான குறிப்பு.வாவ்!

    ReplyDelete
    Replies
    1. ;)) வாங்க ஆசியா. சத்தா!! பயங்கர சத்து. ;D ஆனா ருசி விடாதுல்ல.

      BTW... //அருமையாக செய்து// நானில்லை. //காட்டியிருக்கீங்க// இது இமா. ;)

      Delete
  4. வறுத்த முந்திரி + திராக்ஷைகளை மட்டும் ஒவ்வொன்றிலும் 100 கிலோ வீதம் அண்ணனுக்கு தனியாக அனுப்பி வைக்கவும். மீதியெல்லாம் நீங்களே சாப்பிடவும்.

    vgk

    ReplyDelete
    Replies
    1. //100 கிலோ// ;)))))))
      தோட்டம்தான் போடணும் நான். ;))))

      Delete
  5. This is my hubs favorite yummy dessert .
    பேக்கிங் முறையில் இதுவரை செய்தது இல்லை .இப்ப செய்து பார்க்கிறேன் ,
    நான் இங்கே கிடைக்கும் jaggery gur பயன்படுத்துவேன் . thanks for the recipe

    ReplyDelete
    Replies
    1. //This is my hubs favorite yummy dessert// ஹா!! தங்களுக்குமா! யார் சமைப்பாங்க அஞ்சூஸ்!! ;D

      Delete
  6. கிதுள் கருப்பட்டி போட்ட வட்டைலப்பாம்..ஆஹா..ரொம்ப அருமையாக இருக்குமே.இப்பவே நியூஸிக்கு பஸ் பிடித்து வரட்டுமா இமா?

    ReplyDelete
    Replies
    1. ;) ம். !! ஆட்டோ வராதாமா!! ;) வாங்க, ஒரு பாட்டில் நன்னாரி சிரப் கொண்டுவாங்க. ;D

      Delete
  7. குறிப்பு எழுதி உதவிய முக்கிய பிரமுகருக்கு ;) என் அன்பார்ந்த நன்றிகள்.//ஹலோ இமா.அந்த முக்கிய பிரமுகர் யாரு...??????????????உங்களுக்கு இதேதான் தொழிலாக போச்சு இமா.இப்படி சஸ்பென்ஸ் வைத்தே தலையை பிய்த்துக்கொள்ள வைப்பது..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..காகையில் நீங்கள் வைத்த சஸ்பென்ஸிலேயே என் மண்டை காய்ந்து போய் விட்டது..:(

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ;))) அதான் பாதில ஓடிட்டீங்களா!! ;))
      ம்... இது... சொல்ல மாட்டேனே. ;))) அவங்க படிச்சுட்டு சத்தம் போடாம இருக்காங்க. நிச்சயம் இதெல்லாம் கூட படிக்கிறாங்க ஸாதிகா. ;)

      Delete
  8. சுவையான குறிப்பு நன்றி

    ReplyDelete
    Replies
    1. ம்ஹும்! நன்றில்லாம் போதாது ராஜா சார். சமைச்சு சாப்பிட்டு, உங்க வலைப்பூவுல படமும் போடணும். ;)

      Delete
  9. அன்பு இமா... ரொம்ப சூப்பரா இருக்கு :) எனக்கு தானே??? கொடுத்துடுங்கோ அப்படியே... ப்ளீஸ். நானும் செய்து பார்க்கிறேன் இது போல. - வனிதா

    ReplyDelete
    Replies
    1. //கொடுத்துடுங்கோ அப்படியே// அய்! நல்ல கதை. எனக்கு இன்னும் லட்டு பார்சல் வரல. மெஹெந்தி போட்டுவிடல. அனுப்ப மாட்டேன்ன்ன்ன். ;)))

      Delete
  10. செய்து பார்க்க ஆசையாகவும் இருக்கு, நீங்க கடைசியில் குடுத்திருக்க குறிப்பைப் பார்க்கையில் கொஞ்சம் பயமாவும்(!) இருக்கு! ;) :)

    சும்மாவே எங்கவீட்டில் இனிப்புன்னா நான்தான் சாப்பிடணும், அதுவும் இந்த மாதிரி கேள்விப்பட்டிராத ஐட்டம்னா என்னவர் 4 காதம் தள்ளி நிற்பார்! ;) ;)

    கலர் கொஞ்சம் மிரட்டுது இமா! :) ஆனாலும் எப்போவாச்சும் ட்ரை பண்ணுறேன். குறிப்புக்கு நன்றி.
    [மேற்கண்ட வரி நீங்க காரக்கடலையில் சொன்னதை அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பண்ணிருக்கேன் என்று நினைக்கவேணாம், கைவலிக்க டைப் பண்ணிருக்கேன்! ;)]

    ReplyDelete
    Replies
    1. //நீங்க கடைசியில் குடுத்திருக்க குறிப்பைப் பார்க்கையில்// என்னாது!!! ஹ்ம்! ;))

      புரியுது, //காரக்கடலையில் சொன்னதை அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பண்ணிருக்கேன்// ம். ம். ;)))))

      Thanks 4 everything Mahi. ;)

      Delete
    2. //அப்படியே காப்பி செய்து பேஸ்ட் பண்ணிருக்கேன் என்று நினைக்கவேணாம், கைவலிக்க டைப் பண்ணிருக்கேன்! ;)]// இதுதான் மை டாட் நாட் இன் தி bushes அப்படீங்குறது டீச்சர் கரீக்டா தேவையானத மட்டும்ம் எடுத்துகிட்டாங்களே மகி ??????

      Delete
  11. இமா, சூப்பரா இருக்கு என்று க்றிஸ் அண்ணாச்சிக்கு சொல்லிவிடுங்கோ ( அவர் தானே செய்தது ). போட்டோ சூப்பரா இருக்கு. என்னிடம் தேங்காய்ப்பால் தவிர எல்லாம் இருக்கு. எல்லாம் வாங்கி நான் ( தான் செய்யோணும் ) செய்து பார்த்துட்டு சொல்றேன்.

    ReplyDelete
    Replies
    1. ;)) அப்பாடா! நீங்கள் ஒரு ஆள் எண்டாலும் ஒழுங்கா வாசிச்சு இருக்கிறீங்கள். ;D

      Delete
    2. ஹும்ம்ம்ம் ரிபீட்டு ;)) பட் ரொம்ப நல்ல ரெசிபி டீச்சர். பேசாம க்றிஸ் அண்ணாச்சிய உங்களுக்கு போட்டியா;)) ஒரு ப்ளாக் ஆரம்பிக்க சொல்லிடுங்களேன்:))

      Delete
    3. ம்ஹும்! ;) எவ்வளவோ நாளா துணை ஆசிரியராகக் கூப்பிடுறேன், வரமாட்டாங்களாம். ஆனா, அப்பப்ப ஏதாச்சும் உதவுறதால... அதுக்கு இது மேல் என்று விட்டிருக்கேன் கிரீஸ்.

      Delete
  12. முட்டையா அவ்வ்வ்வ்

    சிவா சைவம் ...no egggggggg...

    ReplyDelete
    Replies
    1. ;) முட்டை சாப்பிட்டால் கெதியா வளர்ந்துருவீங்கள் சிவா. ;))

      Delete
  13. ஒரு புலி ;) பதுங்கி இருந்து இப்பிடி கொமண்ட் போட்டு இருக்கு மக்கள்ஸ்.. ;)

    //டூத் பிக்கால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும்,
    00:54 டூத் பிக்கால் மட்டும் தாஅன் குத்தனுமா.... வேற ஏதும் உபயோகப்படுத்தினால் சுவை ஏதும் மாறி விடுமா? #சிரியஸ் டவுட், சிரிக்காம பதில் சொல்லனும்.//

    ஈட்டில வேணுமானாலும் குத்தலாம், பல்லு டாமேஜ் ஆனா நான் பொறுப்பு இல்லைன்னு சொல்லி இருக்கேன். ;D

    ReplyDelete
    Replies
    1. இது பப்பூஊஊஊஊஊஊ தானே?:))

      Delete
    2. ஹி ஹி... இல்ல அதீஸ். நோ பூ; பட் பூஸ் - பெரீ..ய பூனை. ;D

      எப்பவும் மேற்பார்வைலயே இருக்கப்படாது.

      Delete
  14. ஈட்டில குத்தி பாத்தாலும் ஒட்டாமல் வரவேண்டும் அதானே... சரி சரி குத்தி பாத்துட்டு சாப்பிடும் போது Spoon உபயோகப்படுத்திக்குறேன் :)

    ReplyDelete
    Replies
    1. ;))) புலி குதிருக்குள் இல்லை. ;)

      Delete
  15. ஆ..கடிலப்பம்.. கட்டிலப்பம்... சே..சே.. என்னப்பா இது ஒரு ஒழுங்கான வார்த்தையே வருகுதில்லை:)) வட்டிலப்பம் சூப்பர்.

    கனடாவில சூப்பர் வட்டிலப்பம் தமிழ் சாப்பாட்டுக் கடைகளில் பக் பண்ணி கிடைக்குது, ஆசைக்குச் சாப்பிட்டேன்:))

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ஒரு ஆசை இருக்குது அதீஸ். ஒரு ஆறு மாசம் ஊர்ல போய் ஒரு வீடு வாடைக்கு எடுத்து இருந்து... இஷ்டத்துக்கு எல்லாம் சமைச்சுச் சாப்பிட்டு... அதை ஃபோட்டோ எடுத்து... உலகத்தில போட்டு எல்லார் காதிலயும் புகை வரவைக்க வேணும். ;)))

      Delete
    2. எடுங்கோ இமா, அதில எனக்கும் ஒரு ஏசி போட்ட ரூம் தாங்கோ.. வெணுமெண்டால் நீங்கள் கட்டில்ல சாமான் எல்லாம் வையுங்கோ எனக்கு கட்டிலுக்குக் கீழ விட்டால் போதும்.. எப்ப இமா போவம்?:))

      உஸ்ஸ்ஸ் அமெரிக்காவில இருந்து புகை வருது.. மெதுவாப் பேசுங்கோ.. சிகரெட்டா.. சே..சேஎ.. என்னப்பா இது சீக்ரெட்டா:)))

      Delete
    3. //உலகத்தில போட்டு எல்லார் காதிலயும் புகை வரவைக்க வேணும். ;)))//

      நல்ல ஆசை வர வையுங்கோ வையுங்கோ :))

      Delete
    4. அதீஸ்ஸ்ஸ்ஸ்.. !! அப்ப நான்!! வாடையையும் கொடுத்துட்டு முருங்கைலயோ இருக்கிறது!!

      Delete
    5. //ஒரு ஆறு மாசம் ஊர்ல போய் ஒரு வீடு வாடைக்கு எடுத்து இருந்து...//

      //அதீஸ்ஸ்ஸ்ஸ்.. !! அப்ப நான்!! வாடையையும் கொடுத்துட்டு முருங்கைலயோ இருக்கிறது!!//
      ஹா..ஹா.. பூஸுக்கு கட்டிலடி ஆமைக்கு முறுக்கையோ ஹா...ஹா.. :-))X 348908

      Delete
    6. ஹயோ!! முடியேல்லயே!!! ;)
      யாரோ என் காதை முறுக்குறாங்கள் அதீஸ். :-))X 348908 X 348908

      Delete
  16. இங்க கிடைக்கிற கருப்பட்டியைதான் கித்துள் பனங்கட்டி என்று சொல்றீங்களா இமா..படத்துல பாக்கறதுக்கும் அப்படித்தான் தெரியுது.படங்களும் செய்முறையும் வட்டலாப்பம் செய்யுற ஆசையை தூண்டுது.:p

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு மேல எக்ஸ்ப்ளெய்ன் பண்ணத் தெரியல ராதா. பாக்குறதுக்கு எப்புடி இருக்கு என்கிறது முக்கியம் இல்லை. கித்துள், அந்த வகைப் பனைல மட்டும் எடுக்கிறது. அந்த ஓலைலயே சுற்றி விற்பனைக்கு வைச்சு இருப்பாங்க. ;) ம்... ட்ரை பண்ணிப் பாருங்க.

      Delete
  17. டீச்சர் சூப்பர் ரெசிபி கொடுத்து இருக்கீங்க. நான் இன்னிக்கு லஞ்ச டைம் இல் பதிவ பார்த்தேன் ஆனா கமெண்ட் தமிழ்ல டைப் பண்ண முடியாதுன்னு தான் வீட்டுக்கு வந்து டைப்பிகிட்டு இருக்கேன். எனக்கு ரெசிபி பார்த்து நெறைய்ய டவுட்டு இருந்திச்சு. ஆனா எனக்கு முன்னாலே வந்தவங்களுக்கு நீங்க விளக்கி இருக்குறத பார்த்து இப்போ பிரிஞ்சிடிச்சு :))

    ReplyDelete
  18. //நான் தொலைத்த பின்னூட்டம் இதுதான் கிரி, மன்னிக்க வேண்டும். ;((//

    ச்சே ச்சே எதுக்கு என்கிட்டே போய் மன்னிப்புன்னு பெரிய வார்த்தை எல்லாம். நோ ப்ராப்லம் டீச்சர். இதுக்கு பிராயச்சித்தமா பூச கொஞ்சம் பயம் காமிச்சீங்கன்னா அது போதும் எனக்கு ;))

    ReplyDelete
    Replies
    1. ;)) அதுக்கென்ன, காட்டீரலாம். ;)

      Delete
  19. //‘பிரவுன் சுகர்’ - என்னக் கொடுமை இது இமா? ரீச்சரே இப்படியா? :-த//


    ஹுசைனம்மா சூப்பர் form ல இருக்காங்க போல இருக்கே. மத்தியானமே பார்த்து சிப்பு சிப்பா வந்திச்சு. இதுக்கெல்லாம் மெரண்டு போயிடாதீங்க டீச்சர். யு கண்டின்யு தி ரேசிபிஸ்:))

    மாத்தி மாத்தி மைன்ட் வாய்ஸ் வேற கலக்குறீங்க. இனிமே பூச திட்டணுமுன்னா:)) மைன்ட் வாய்ஸ் யூஸ் பண்ணிக்க வேண்டியதுதான்:))

    ReplyDelete
  20. //முடியல்ல சாமீஈஈஈஈஇ விடுங்க என்னை விடுங்க இப்பவே போறேன் தேம்ஸ்க்கு:)))...//

    யாரு இந்த பூஸ் தேம்சுல குதிக்க விடாம கைய புடிச்சு வெச்சிருக்குறது ங்கற உண்மை எனக்கு இப்போ தெரிஞ்சாகணும். ரெம்ப நாளா இப்புடியே சொல்லிக்கிட்டு திரியுற பூஸ் கைய விடுங்கப்பா :))


    //யார் சமைப்பாங்க அஞ்சூஸ்!! // ஹும்ம்ம் இருக்கு அதனாலே அள்ளி :)) முடிஞ்சுக்குறீங்க :))எங்க வீட்டுல எல்லாம் நாங்கதேன் சமையல். போர் அடிச்சா இல்லே ஒடம்பு சரி இல்லேன்னா மாக்சிமம் டேக் அவே வாங்கிட்டு வருவாங்க டீ போட்டு கொடுப்பாங்க பட் நோ சமையல். என் பையன இப்பவே பழக்கி கிட்டு இருக்கேன் அப்புறம் மருமவ கிட்டே யாரு திட்டு வாங்குறது ஹீ ஹீ :))

    ReplyDelete
    Replies
    1. //போர் அடிச்சா// ஹி ஹி! எதூ!! உங்க சாப்பாடுதான!! ;))))

      Delete
  21. //டூத் பிக்கால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும்,//

    டூத பிக்கால குத்தினா அது அழுவாதா டவுட்டு #6789:-))))

    ReplyDelete
    Replies
    1. டூத்பிக்கா! ச்சே! அது அழுவாது. அழுதாலும்... யாராச்சும் பிங்க் கலர் டிஷ்யூல கண்ணைத் துடைச்சு விடுவாங்க. ;)

      Delete
  22. //கரண்டியால் எடுத்து கிண்ணத்தில் வைத்து சாப்பிடலாம்.// :-))))))))))))))))))))))))

    ReplyDelete
    Replies
    1. என்னைக் காப்பாற்ற யாருமே இல்லையாஆஆ!!!! ;)

      முதல்ல பேக் செய்த பாத்திரத்துல இருக்கிறதை //கரண்டியால் எடுத்து கிண்ணத்தில் வைத்து // திரும்ப குட்டிக் கரண்டியால எடுத்து வாய்ல வைச்சு கரண்டிய முழுங்காம, கிண்ணத்தை முழுங்காம, வட்டிலப்பத்தை மட்டும் முழுங்கணும். கர்ர்ர் ;)

      Delete
    2. மாமி தூங்கப் போறாங்க. யாரும் சத்தம் போட்டு எழுப்பப்படாது. காலைல நேரத்துக்கு ஸ்கூலுக்குப் போகணும் நான். ;) நல்லிரவு.

      Delete
  23. //காலைல நேரத்துக்கு ஸ்கூலுக்குப் போகணும் நான். ;) அதாவது ஒரு 12.45 போல போனா போதுமா ஹி..ஹி... :-))

    ReplyDelete
    Replies
    1. நங் நங் நங். (என்னை நானே...) ;)))))

      Delete
  24. அப்புறம் மருமவ கிட்டே யாரு திட்டு வாங்குறது//
    நல்ல சிந்தனை.

    மாமியை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது போல இருக்கே கேள்விகள் அப்பூடி டெரரா இருக்கே.
    லானி, நீங்க வேணுமென்றா டூத் பிக்கால் உங்க ரூம் மேட்டை குத்தி பாருங்க. சரியா.

    ReplyDelete
  25. Nice blog...

    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  26. Lovely blog!!Thanks for dropping by my blog n joining there n for the lovely comment...

    ReplyDelete
  27. வட்டிலப்பம் பார்க்க நல்லா இருக்கு.சாப்பிடமுடியாது. இம்முறை kalu dodol,puluddo,thalakuli நிறைய வாங்கி(செய்தும்)கொண்டுவந்து கொடுத்தேன்.
    செபாம்மா,அப்பா சுகமா? இமா.

    ReplyDelete
    Replies
    1. ஹா! இத்தனை வருஷமா அம்முலுவுக்குப் பதில் போடாமல் இருந்திருக்கிறனா? ;( மன்னிக்க வேண்டுகிறேன்.

      ஹை! புல்டோ செய்தனீங்களோ! எனக்குக் குறிப்பு வேணும்.

      Delete
  28. அன்புள்ள இம்ஸ்சு அவன் என்றால் வெதுப்பி என்று சொல்லி இருக்கிறீர்கள்.தவறு .வெதுப்பி என்றால் பாண்.இப்போது அவன் என்றால் என்ன என்று சொல்லவும் .தெரிந்து கொள்ள ஆவல்.சொல்லும்வரை உண்ணா விரதம் இருப்பேன்.இரவு 9 மணீல இருந்து காலை 7 மணி வரைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //அவன் என்றால் என்ன என்று சொல்லவும் .தெரிந்து கொள்ள ஆவல்.// He! ;))))) ஹிஹிஹீ... ;))

      உண்மையில் எனக்கு இந்தத் தமிழ் மொழிபெயர்ப்புச் சொற்கள் எல்லாவற்றிலும் உடன்பாடு இல்லை சுரேஜினி. சிலது சரியாகத் தெரியுது. சிலது... ஏற்றுக் கொள்ள முடியாமல் இடிபாடா இருக்குது.

      kiln - போறணை. இதுவும் தமிழா இல்லாட்டி போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் கலந்து விட்ட சொல்லா எண்டு தெரியேல்ல. சிம்னி - கணப்பு.

      அந்த வெதுப்பியைத் தட்டேக்கயே நினைச்சுக் கொண்டுதான் தட்டினனான், யாராவது கேட்பினம் எண்டு. ஒருவரும் கேக்கேல்ல. பிறகு நானும் மறந்து போனன். கேள்வி கேக்க நீங்கள் வர வேணும் எண்டு இருந்திருக்குது போல. :)

      காரணம் எல்லாம் கேட்காதைங்கோ, எப்ப வெதுப்பி என்று வாசிச்சாலும் - போறணை தான் நினைவுக்கு வருது; பாணை நினைக்கிறேல்ல. அது.... வெதும்பி எண்டு இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும் எண்டு நினைக்கிறன். ;)) வெதுப்பும் வேலையைச் செய்யிறவர் வெதுப்பி. உள்ள கிடந்து வெதும்புறவர் வெதும்பி - இப்ப... நான். ;))

      Delete
  29. Surejini.... Take a look at this. :-) https://www.facebook.com/thamizhthamizhar/photos/a.904941466304582.1073741832.609662572499141/904943236304405/?type=3&theater

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா