Saturday 26 May 2012

Linen Shelf

நாட் குறிப்பிலிருந்து - 07/01/2012

வீடும் வாகனம் நிறுத்தும் அறையும் இணையும் இடத்தில் இருக்கிறது எங்கள் சலவைக்கான இடம்.
சலவை இயந்திரமும் கழுவும் தொட்டியும் அதற்கான சிறிய அலமாரியும் சின்னதாக ஒரு முதலுதவிப் பெட்டியும் மட்டும் அங்கே இடம் பிடித்திருந்தது. அங்கே இடம் வீணாகிக் கொண்டிருப்பதாக வீடு வாங்கிய காலத்திலிருந்தே எங்கள் அனைவருக்கும் ஒரு எண்ணம்.

அப்போது மலிவாக சிறிய ராக்கைகள் விற்பனைக்கு வந்திருந்தது; ஒன்றாக ஆறு வெள்ளைநிற ராக்கைகள் வாங்கி வந்தோம். காலை ஆரம்பித்த வேலை... சற்று நேரத்தில் மூத்தவரும் வந்து இணைந்து கொள்ள, இரண்டு மணி நேரத்தில் முடிந்தது.

தேவையான பலகைகள், இணைப்புகள் அனைத்துமே தனித்தனியாகப் பெட்டிகளில் இருந்தன. ஒவ்வொன்றாக அவற்றில் மூன்றைப் பொருத்தி வைத்துவிட்டு...
ஒன்றைச் சுவரில் இணைத்து அளவு பார்த்து...
மீதியையும் இணைத்து முடித்ததும்...
என் வேலையை ஆரம்பித்தேன்.
இடது புறம் இருக்கும் இடைவெளியில் பின்பு எப்போதாவது சின்னதாக தட்டுகள் அடித்துக் கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறோம்.

36 comments:

  1. என்னது? DIY-ஆ? எங்க வீட்டில் எல்லாம் நடக்காது இமா! :) ஷெல்ஃப் அழகா இருக்கு. டவல் நீட்டா மடிச்சு வைச்சிருக்கீங்க!

    யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும் -என்பது இதுதானோ? ராக்கை;)யில அடுக்கியிருக்கும் பொருட்களில் இமாவின் கைவண்ணம் மிளிர்கிறது! ஜூப்பர்!
    :)

    ReplyDelete
    Replies
    1. ஸ்மைலி ஸ்மைலியா போட்டு கொல்றாங்களே!!!!!!
      ;))) 'ராக்கை' திசைச்சொல்; எங்க தமிழ்லாம் பார்த்து சிரிக்கப்படாது. ;)

      செம்மறியும் இருக்கு, சிடிசன்ஷிப் கிடைச்சதுக்கு ஸ்கூல்ல கொடுத்தது. ;))

      Delete
  2. நல்லா பயனுள்ள விஷயங்களா செய்யறாங்க... :) குட் ஜாப் - வனிதா

    ReplyDelete
  3. //பூனைக்கும் ஒரு காலம் வரும்//
    பூனை!!!!!!! விம்பாரோட வாங்க கெதியா. ;)))

    ReplyDelete
  4. டவல் நீட்டா மடிச்சு வைச்சிருக்கீங்க! /// no no no

    அழகா மடக்கி மடக்கி மடித்து வைத்து இருக்காங்க மீ escappeeee...

    ReplyDelete
    Replies
    1. ;)))))))))

      ஓஹோ! சிவா தமிழ் கலக்கல். ;D

      Delete
  5. அங்க அங்க பூசார் வேற துண்டுக்கு எல்லாம்
    காவல் காக்கிறார்

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி... கோவமா வரப் போகுது பூஸ், பத்திரம் சிவா. ;)

      Delete
  6. அவ்வ்வ்வ்வ்வ்வ் றீச்சர்.. செல்ஃப் வச்சிருக்கிறா.... டவல் எல்லாம் அடுக்க.

    சூப்பரா இருக்கு... கிரிஸ் அங்கிளின் கை வண்ண மாச்சே..

    ReplyDelete
  7. //என் வேலையை ஆரம்பித்தேன்.///

    எப்பூடி இமா.. இவ்ளோ உயரத்தில ஏறி பொருட்கள் வச்சு எடுப்பீங்க:))) ஹையோ நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன் சாமீஈஈஈஈஈஈ:)) எனக்கு இமாவைத் தெரியாதே:)

    ReplyDelete
    Replies
    1. பேப்பர் எதுக்கு இருக்கு!! ;)
      அங்கிள் ஏறி நிக்கிற ஸ்டூல் என்டதுதான் அதீஸ். அதுக்கும் மேல வளரவேணும் எண்டால்... சலவை இயந்திரம் இருக்கு. ;) எனக்கு இதெல்லாம் சின்னன்ல இருந்தே பழக்கம். என் காலே எனக்கு உதவி என்று பழகீட்டன். காலில்லாதவங்களே சந்தோஷமாச் சீவிக்கினம். நல்லா இருக்கிற நாங்கள் யோசிக்கப்படாது. ;D

      Delete
  8. பார்த்தீங்களோ முழுவியளத்துக்கு பூஸைத்தான் வச்சிருக்கிறா இமா:)) அவ்ளோ பிரியம் என்னில:))

    ReplyDelete
    Replies
    1. இல்ல... எலி வந்து விம் பாரை கொண்டு போகாமல் இருக்க. ;D

      Delete
  9. அதென்னது பூஸுக்கு மேல.. பேப்பர் டவல்..., ”..... டிஷ்யூ” கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    செம்மறி ஆடார்...... கலக்குறார்.... ஜீனோ பப்பியை விட்டிட்டீங்களே இமா.. ஒட்டியிருந்து பார்த்துக் குலைக்கப் போறார்:)))

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி.... ;)

      அதூ... பேப்பர் டவல் கூட இல்ல. வே...ற. ;)))

      //ஜீனோ பப்பியை விட்டிட்டீங்களே// பப்பி காலைல வந்து செம்மறியைப் பார்த்து தான்தான் என்று நினைச்சு ஏமாந்து போச்சுது, பாவம்.

      Delete
  10. கடவுளே.. அது குலைக்க இல்ல குரைக்க.. உஸ்ஸ்ஸ் யப்ப.. கெ.கிருமீஸ் வருவதற்குள் கண்டு பிடிச்சிட்டேன் சமீஈஈஈஈ:))

    //Siva sankar27 May 2012 12:48 AM
    அங்க அங்க பூசார் வேற துண்டுக்கு எல்லாம்
    காவல் காக்கிறார்///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. றீச்சர் சிவாவைப் பாருங்கோஓ.. “டிஷ்யூ” வைத் துண்டெனச் சொல்றார்:))

    ReplyDelete
    Replies
    1. //குலைக்க இல்ல குரைக்க// குலை சரிதான்; பிழையில்லை அதீஸ். காளமேகப்புலவர்ட சிலேடைப் பாட்டு ஒன்று இருக்கு... தேங்காய்க்கும் நாய்க்கும்...

      ஓடுமிருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
      நாடும் குலை தனக்கு நாணாது - சேடியே
      தீங்கானதில்லாத் திருமலை ராயன் வரையில்
      தேங்காயும் நாயுமெனச் செப்பு.

      Delete
    2. //சிவாவைப் பாருங்கோஓ.. “டிஷ்யூ” வை// ;))))) இமா க.கா.போஓ.... ;))

      Delete
    3. _()_ ................!!!!

      இமா என்னை எங்கியோ கொண்டு போயிட்டீங்க

      Delete
    4. கடவுளே.. அது குலைக்க இல்ல குரைக்க.. உஸ்ஸ்ஸ் யப்ப.. கெ.கிருமீஸ் வருவதற்குள் கண்டு பிடிச்சிட்டேன் சமீஈஈஈஈ:))//

      kikkk kikk kikk keeeeeeeeee:))))))))

      Delete
    5. //கெ.கிருமீஸ் வருவதற்குள் கண்டு பிடிச்சிட்டேன் சமீஈஈஈஈ:))//

      அது அந்த பயம் இருக்கணும் :))

      Delete
  11. அப்படியா ரெடிமேடா வாங்கின மாதிரி அருமையா இருக்கு இமா ராக்கை!

    //ஒன்றைச் சுவரில் இணைத்து அளவு பார்த்து...//

    அளவு பார்த்தது சுவரைதானே? ஏன்னா அங்க imma ன்னு எழுதியிருக்கே..., என் கண்ணுக்குதான் இமாவை தெரியலயோன்னு கேஏஏஏ...ட்டேன் ;)))

    ReplyDelete
    Replies
    1. ஹை! எப்புடி இப்புடில்லாம்!! ;)))))

      Delete
    2. //ஹை! எப்புடி இப்புடில்லாம்!! ;)))))//

      இருக்கிற 5 ஃபோட்டோவில் எல்லாவற்றிலும் ரைட் சைட்ல imma னு போட்டுவிட்டு, அளவெடுக்குறதுல மட்டும் கரெக்டா டேப்புக்கு மேலே போட்டிருக்கீங்க. அதுக்குதான் டீச்சரம்மா ;) கேட்டேன். நான்தான் கேட்டிருக்கணும், 'எப்புடி இப்புடில்லாம்....!!':))))

      (எங்க கண்ணைவிட்டு தப்ப முடியாதுல்ல... :-))

      Delete
    3. ;))) போடுறப்ப யார் இதைக் கவனிப்பாங்கன்னு நினைசேனோ அவங்க க.கா.போய்ட்டாங்க. நீங்க புடிச்சிருக்கீங்க, வாழ்க வளமுடன்ன்ன்ன். ;))))

      Delete
  12. சூப்பரா இருக்கு இமா..எனக்கு இம்மாதிரியான விஷயங்கள் ரொம்ப பிடிக்கும்..இப்படி மடிக்கவும் பிடிக்கும் மடிக்கிறவங்களையும் பிடிக்கும்.வீட்டை அழகா வைக்க ரொம்ப இன்ஸ்பிரேஷனா இருக்கீங்க இமா
    Thalika

    ReplyDelete
    Replies
    1. அடடா! இதாரு வந்திருக்காக! தளீ... _()_ ;D

      உங்க வீட்டு வேலைல்லாம் எப்பிடி போகுது! கட்டி முடிஞ்சுதா? அங்க டச்சு விட்டுப் போனதுல விபரம் தெரியல.

      இந்தப் பக்கமும் எட்டிப் பார்த்ததுக்கு நன்றி தளீஸ்.

      Delete
  13. ஒரு இடத்தையும், ஒரு பொருளையும் வீணாக்காமல் உபயோகப்படுத்தியுள்ளது நல்ல ஐடியா தான். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    //என் வேலையை ஆரம்பித்தேன்//

    அவர்கள் கஷ்டப்பட்டு செய்து மாட்டிய அந்த ராக்கில் எதையாவது அழகாக ஷோவாகக் காட்டி, போட்டோ எடுத்து பதிவிடும் வேலை மட்டுமா ... இமா ;)))))

    ReplyDelete
    Replies
    1. ;)) சரியா பார்த்து பாய்ன்டைப் புடிச்சிருக்கீங்க அண்ணா, வாழ்த்துக்கள். ;)

      Delete
  14. ரொம்ப அழகா அரேஞ் செய்திருக்கீங்க இமா .
    பார்த்து பூஸ் எல்லாத்தையும் உருட்டி விட்டுடப் போகுது

    ReplyDelete
    Replies
    1. இந்த ராக்கை அடிச்சதுக்குப் பிறகு என்னை யாரும் 'டவல் எங்க?' என்று கேட்கிறது இல்லை. வசதியா இருக்கு அஞ்சூஸ்.

      Delete
  15. டீச்சர் லினேன் ஷெல்ப் ரொம்ப அழகா இருக்கு. அதில் நீங்க அடுக்கி வெச்சு இருக்கும் விதம் அழகோ அழகு. பூஸ் வீட்டுக்குள்ளே இருந்து ரொம்ப தொந்தரவு கொடுத்திட்டாங்களோ? இந்த மாதிரி வாஷிங் ரூம் உக்கு அனுப்பிட்டீங்க :))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா