Wednesday 21 August 2019

தொட்டிச் செடிகள்

ஒரே நாளில் இருவருக்குப் பிறந்தநாள் வருடத்தில் மூன்று முறை எங்கள் பகுதியில் (வேலையில்) வரும். என்னோடு பிறந்தநாள் கொண்டாடுபவர் ஒருவரும் இருக்கிறார்.

சற்று நேரம் குறைவாக இருந்த சமயம் இருவருக்காகச் செய்தவை இங்குள்ளவை இரண்டும்.

கூடைகள் - http://imaasworld.blogspot.com/2019/08/blog-post_13.html ல் பயன்படுத்திய மிட்டாய்ப் பெட்டியின் மீதியை ஒரு அட்டையின் மேல் ஒட்டியிருக்கிறேன். 3D ஸ்டிக்கர் வைத்து உயர்த்தினேன்.
இலைகள் - கடதாசி
பூக்கள் - குட்டி பஞ்ச் பயன்படுத்தி வெட்டி எடுத்து, நடுவே மை இல்லாத பேனையால் அழுத்திவிட்டு கொத்தாக வரும் விதமாக ஒட்டியிருக்கிறேன்.
கரை & எழுத்துகள் - ஸ்டிக்கர்

3 comments:

  1. அழகான வாழ்த்து அட்டை. உங்கள் பொறுமையும் ஆர்வமும் வியக்க வைக்கிறது.

    ReplyDelete
  2. இப்படி எல்லாம் அழகாக செய்து போட்டால் என்ன எழுதுவது இமா. பொறுமையின் சிகரம். வித்தியாசமா யோசித்து செய்றீங்க.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா