Friday 23 August 2019

மூன்று மெழுகுவர்த்திகள்


இன்று எங்கிருந்தோ கண்முன்னே வந்து குதித்தது இந்தப் படம். செய்தது எப்போது என்பது நினைவில் இல்லை ஆனால் யாருக்காகச் செய்தேன் என்பது நினைவிருக்கிறது. பல வருடங்களின் முன்பு செபாவின் பக்கத்து வீட்டுச் சிறுமிகளில் ஒருவர் - அனிக்கா அல்லது அனன்யாவின் மூன்றாவது பிறந்தநாளுக்காகச் செய்து கொடுத்தேன்.

கரை - எனக்கு மிகவும் பிடித்த செப்பு வர்ணத்திலான ஸ்டிக்கர்.
கேக் - corrugated அட்டை
மெழுகுவர்த்திகள் - கையில் அகப்பட்டகடதாசி எதுவோ

சுடர் - உண்மையில் புகைப்படத்தில் இருக்கவில்லை. வேலை முடியும் முன்பே புகைப்படம் எடுத்திருப்பேன். பெரும்பாலும் வேலை முடிந்த சந்தோஷத்தில் அனுப்பும் முன் புகைப்படம் எடுப்பது மறந்து போகும். பிறகு வரைந்திருக்கிறேன்.

மூத்த பெண்ணின் முதலாவது பிறந்தநாளுக்கும் ஒன்று செய்திருந்தேன். அது சின்னச் சின்ன விளையாட்டுப் பொருட்கள் அமைப்பில் ஆன பொத்தான்களை ஒட்டிச் செய்தது. பின்பக்கம் இருக்கும் வளையங்களை குறட்டினால் வெட்டி நீக்கி இருந்தேன். அப்போது என் கையில் இருந்தது ஃபில்ம் ரோல் போடும் கமரா. முக்கியமான நிகழ்வுகளைத் தவிர வேறு எதையும் படம் எடுத்து வைக்க நினைத்திராத காலம் அது.



5 comments:

  1. அழகான வாழ்த்து அட்டை. பாராட்டுகள்.

    ஃபில்ம் ரோல் போட்டு எடுக்கும்போது கொஞ்சம் குறைவான படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்போது மாதிரி இருந்தால் பல படங்கள் எடுத்திருப்போம்! :)

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.
      பாராட்டுக்கு நன்றி.

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  3. அழகான வாழ்த்து அட்டை. ஆனா எனக்கு உங்க ட மெனக்கெடல் பொறாமையாக இருக்கு.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா