Saturday 22 May 2010

வருந்துகிறேன்

 
மங்களூர் விமான விபத்தில் சிக்கிய அனைவரது குடும்பத்தினர்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக.
~~~~~~~

இன்று பலர் மனதையும் பாதித்துள்ள செய்தி இது.

என் தந்தை ஏழு வருடங்கள் தங்கி இருந்த இடம், என் மருமகன் சில வருடங்கள் தங்கிக் கற்ற இடம் + சமீபகாலமாக இந்தியர்களுடன் எனக்கு ஏற்பட்டுள்ள தொடர்பு.... என் இந்த இடுகைக்குக் காரணம்.

மரணத்தைக் கண்டு நான் அஞ்சியது இல்லை. இருப்பினும் தனித்து மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணத்தின் போதும் வேண்டிக் கொள்வேன்... என் கடமைகள் முடியும் வரை வாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென.

தொடர்ந்து செய்திகளை அவதானித்து வருகிறேன்.

கனவுகளோடு கண் மூடியோருக்கு என் அஞ்சலி.
விபத்தில் மீண்டோர் நலம்பெற என் பிரார்த்தனைகள்.  
-இமா

1 comment:

  1. இது ஓர் இரங்கற்செய்தி என்பதால் மரியாதை கருதி கருத்துரை இடும் வசதி முடக்கப்பட்டிருக்கிறது.

    புரிந்துகொண்டமைக்கு நன்றி.

    - அன்புடன் இமா

    ReplyDelete