Friday 18 March 2011

சின்னச் சின்ன ஆசை 2

வீட்டுக்கு மேலாகப் பெரிதாக ஒரு விளாமரம் வளர்ந்திருந்தது. இந்த இரண்டு காய்களிலும் என் கண் போயிற்று. விளாம்பழம் சாப்பிட்டிருக்கிறேன். மரத்திலிருந்து பறித்த, உடன் மாம்பழம், கொய்யாப்பழம், வாழை, பப்பாளி எல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். அப்படி உடன் விளாம்பழம் சாப்பிடக் கிடைத்தால்.. ;))
அந்த மரம் முன்பும் காய்த்திருக்கிறதாம். ஆனால் யாரும் அதிலிருந்து ஒரு பழம் சாப்பிட்டதில்லையாம். குரங்குப் பிள்ளைகள் அதிகமாக இருந்தார்கள். இருந்தாலும் ஒரு அவாவில் தினமும் மூன்று முறை பழம் இருக்கிறதா இல்லையா எனப் பார்த்து விடுவேன். 

மூன்று வாரம் முடிவதற்குள் சாப்பிடக் கிடைக்கவேண்டுமே!

தினமும் பார்த்தேன். என் கவலை புரியாமல் விளாங்காய் தொங்கிக் கொண்டே இருந்தது. 

கிளம்ப முதல் நாள், பெட்டிகள் எல்லாம் கூட ஆயத்தம். இனி எதிர்பார்ப்பதில் என்ன பயன் இருக்கிறது. கூடத்தில் எல்லோரும் கூடி இருந்தனர். சீட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஒரே ஆரவாரம். சீட்டு விளையாடத் தெரியாத நான் சமையலறையில் மச்சாளிடம் கடைசியில் சொல்ல இருந்தவை எல்லாம் இறக்கி வைத்துக் கொண்டிருக்க விளையாடுபவர்கள் பேசிக் கேட்கிறது.. "பெரியம்மா போறதுக்கு முதல் இந்த விளாம்பழம் விழுமா?" சிரிப்பு. 
 
தூங்கப் போகிறோம், காலையில் புறப்பாடு.

என்னைவைத்துச் சிரிப்பு நடக்கிறது. நாங்களும் சிரித்து விட்டுப் பேச்சைத் தொடர்கிறோம். 

தலைக்கு மேல் ஒரு 'டொம்' காது வெடிக்கிற மாதிரி ஒரு சப்தம். ஒன்றும் புரியவில்லை.
'டம டம டம டம டம டம டம டம டம டம டம டம டம டம டம ........
சப்'

வெளியே விளக்கு எரியவில்லை. மின்விளக்கினைக் கொண்டு சென்று எடுத்து வந்தேன் இதனை. ;)
மறுநாட் காலை சீனி போட்டுக் குழைத்து சந்தோஷமாக ஆளுக்கொரு கரண்டி கொடுத்துச் சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டேன்.

21 comments:

  1. இமா... என்னவருக்கும் இப்பழம் ரொம்ப விருப்பம். வினாயகர்சதுர்த்திக்கு வரும்'னு நினைக்கிறேன்... சரியா நினைவில்லை. நான் இதுவரை சாப்பிட்டதில்லை. - Vanitha

    ReplyDelete
  2. இமாவின் உலகில் என்றும் இதுபோன்ற
    சின்னச் சின்ன விஷயங்களைக் கூட
    ரசித்து மகிழ்கிற
    அந்த மகிழ்ச்சியை
    நான் மிகவும் ரசிக்கிறேன்
    அது என்றென்றும் குறையாது வளர பெருக
    எல்லாம் வல்லவனைப் பிரர்த்திக்கிறேண்

    ReplyDelete
  3. எனக்கும் ரொம்ப ஆசைங்க,நாவில் நீர் ஊற வைத்துவிடீங்க. அடுத்தமுறை பார்சல் அனுப்பிவிடவும்..மணம் காட்டிக் கொடுத்துவிடும். பள்ளிக் காலத்தில் நண்பி கொண்டுவந்த பழம் மணந்து ஆசிரியை இடம் பிடிபட்டு பனிஷ்மென்ட் வாங்கினோம்.

    ReplyDelete
  4. ஆ!!!!!!!!!!!!!!
    இந்த பழத்தை கண்ணால் பார்த்தே வருஷமாச்சு
    எனக்கு ஒருவர் இதை உப்பு மிளகு போட்டு தந்தாங்க
    அம்மாடியோவ் அவளவு taste

    ReplyDelete
  5. நான் இது பார்த்திருக்கேன் ஆனா சாப்பிட்டு பழக்கமில்லை ஆர்டினரி பழங்கள்ல இருந்து வித்தியாசமா இருக்கிறத பார்த்தாலே சாப்பிட தோணறதில்லை..

    பதிவு சுவாரஸ்யம் றீச்சர்..!

    ReplyDelete
  6. ஆ.. வியாம்பயம்:).. நான் காயாக உப்போடு பழமாக சீனியோடு... ஆஅ.... சூப்பராக சாப்பிட்டிருக்கிறேன்.

    ஏன் இமா, வாதனாராணி, முசுட்டை.. என்னாச்ச்சு?

    ReplyDelete
  7. நிஜமாவே சாப்பிட்டதில்லையா வனி!! விளாம்பழ ஜாம் கிடைச்சா வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்க. ஜூஸ் கான்ல கிடைக்கும் - திக்கா இருக்கும். தேங்காய்ப் பால் விட்டு சாப்பிடலாம். காயை அடிச்சு வெடிக்க வச்சு ராத்திரி முழுக்க உப்புத் தண்ணில ஊற வைக்க வேணும். மறுநாள் சாப்பிட்டா யம். ;P மீதி... அதிரா & ஆஞ்சலின் சொல்லி இருக்காங்க.

    ~~~~~~~~~~~

    பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி ரமணி. முக்கியமான லைனைப் பிடிச்சிட்டீங்க. ;)))
    வாழ்க்கை முழுக்க குட்டிப் பசங்களோட கடத்துறதால இப்பிடி இருக்கேனா தெரியல. இங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சு இருக்கேன். அப்பிடியும்.. ;)

    ~~~~~~~~~~~~~

    நான் பள்ளியில படிக்கேக்க இதெல்லாம் சாப்பிட மாட்டன் நிலா. ஸ்கூல் வாசல்ல இருக்கிற ஆச்சி விப்பா. வாய் பார்த்துக் கொண்டு இருப்பன். அம்மா டீச்சரும் மாமி டீச்சரும் இருந்தாங்கள். ;((

    ~~~~~~~~~~~~~

    நல்ல டேஸ்ட் என்ன ஆஞ்சலின்! ;))அதைக் கயரயும் சேர்த்துச் சுரண்டிச் சாப்பிட வேணும்.

    ReplyDelete
  8. //ஆர்டினரி பழங்கள்ல இருந்து வித்தியாசமா இருக்கிறத பார்த்தாலே சாப்பிட தோணறதில்லை..// உண்மைதான் வசந்த்.
    நானும் சப்போட்டா பழத்தைப் பார்த்து... மெதுவே பெயர் விசாரித்து... ஆனால் சாப்பிடவில்லை. ;))

    ~~~~~~~~~~

    அதீஸ்,
    வாதனாரணி.. இருக்கு. நான் மிச்சத்தில பிஸியாகிப் போனன். முசுட்டையா! அது என்ன!! ;)) செபா மாங்காய் போட்டுக் கடைவா. ;P துளிர் இலையை அப்பிடியே சாப்பிட விருப்பம் எனக்கு. ;( அகத்தி கூடச் சாப்பிடேல்ல. ;( வெள்ளம் வந்த மழைக்காலம் எல்லோ, பலதும் தேட முடியேல்ல.

    பி.கு
    அந்த 'யா'வைப் பார்த்து ஒரு நிமிஷம் திக் எண்டு இருந்துது. செக் பண்ணீட்டன். அப்பா! மீ ஓகே. ;)

    ReplyDelete
    Replies
    1. வாதனாராணி மரத்தின் படம் 1 ஐ அனுப்ப முடியுமா

      Delete
  9. ஆளுக்கொரு கரண்டி கொடுத்துச் சாப்பிட்டு விட்டுப் பு//எனக்கு எனக்கு கொடுக்கலே

    ReplyDelete
  10. இந்த பழம் சாப்டு இருக்கேன்.....பழம் போல இனிப்பான பதிவு (அது கொஞ்சம் புளிக்கர போல இருக்குமே )

    ReplyDelete
  11. //பழம் போல இனிப்பான பதிவு (அது கொஞ்சம் புளிக்கர போல இருக்குமே ) // ம். ;)))

    கைல ஒரு கரண்டியோட சிங்கை ஏர்போர்ட்ல தேடினேன், சிவாவைத்தான் காணோம். ;)

    ReplyDelete
  12. நான் சாப்பிட்டதில்ல இமா.. கேள்விப்பட்டிருக்கேன் இந்தப் பெயரை..

    ஆச்சர்யப்படும் வகையில கிளம்பறதுக்கு ஜஸ்ட் ஒரு நாள் முன்னாடி விழுந்திருக்கு.. ம்ம்.. :)

    ReplyDelete
  13. இமா... இப்பழம் தினம் சப்பிட்டால் பித்தம், அஜீரணம் எல்லாம் போகுமாம். ஆரோக்கியமான பழம் போலும். - Vanitha

    ReplyDelete
  14. //நானும் சப்போட்டா பழத்தைப் பார்த்து... மெதுவே பெயர் விசாரித்து... ஆனால் சாப்பிடவில்லை. ;)) //

    எனக்கு சப்போட்டா பழத்தை கண்டால் மினிமம் 10வது சாப்பிட்டாகனும் .. அதேப்போல அத்திப்பழம் ஆஹா....

    ReplyDelete
  15. காக்காய் உட்கார பணம்பழம் கேள்விப்பட்டு இருக்கேன் இங்கே மாமீஈ சாப்பிட விளாங்காய் விழுந்திருக்கு ஹி..ஹி...

    நான் இதை கண்ணால கண்டே பல வருஷமச்சி அவ்வ்வ்வ்

    ReplyDelete
  16. இங்கு நிறைய விளாம்பழங்கள் கிடைக்கின்றன.ஆசையாக வாங்கி ,பழுக்க வைத்து உடைத்தால் எதுவுமே உருப்படியாக இருந்ததில்லை.விளாம்பழம் சாப்பிடும் ஆசையை விளாம்பழஜாம் சாப்பிட்டு தீர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  17. விளாம்பழம் ஊரிலை சாப்பிட்டது. இப்ப ஜாம் மட்டும் தான். ஜூஸ் நிறைய சீனி போட்டிருந்தார்கள் அதனால் பிடிக்கவில்லை. விளாங்காய் உப்பு தண்ணிலை ஊறப் போட்டு சாப்பிட்டது ஞாபகம் இருக்கு.

    ReplyDelete
  18. stop stop stop. விளாம்பழம் இன்னும் கொஞ்சம் பழுத்து இருக்க வேணும் என்ன. காயை (செஞ்காய் என்டு சொல்லுவினம்) உப்பு போட்டு பல்லால கரண்டி கரண்டி சாப்பிடுறது ஒரு சுகம். பழம் எனக்கு அவ்வளவாக பிடிக்காது. அதுவும் தேங்காய்ப்பால் போட்டால் நகி என்டு ஹிந்தி சினிமாவில ஓவர் ஆக் பண்ணிற மாதிரி தலையில் பின் கையை வச்சு ஒரு சீன் போடுவன் பாருங்கோ. அம்மாவும் பிரசர் 180க்கு ஏறும். ஹி ஹி.

    இரண்டா உடைச்சு, அந்த சிரட்டைக்குள்ளவே சீனி போட்டு கிளறி எப்பவாவது சாப்பிடுவன். என்ட சொயிஸ் உப்பு போட்ட செஞ்காய் தான்.

    பை த வே, இனி உங்கட பக்கம் வர மாட்டன். ஒரு வருஷத்துக்கு தேவையான அளவு சாப்பாட்டை காட்டி டென்சன் படுத்திட்டியள். இதல்லாம் நல்லதுக்கில்ல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

    //எனக்கு சப்போட்டா பழத்தை கண்டால் மினிமம் 10வது சாப்பிட்டாகனும் .. அதேப்போல அத்திப்பழம் ஆஹா..//
    same blood.

    ReplyDelete
  19. இந்த விடுமுறையே ஆச்சர்யம்தான் சந்தனா. ஜஸ்ட் ஒருநாள் முன்னாடி, ஜஸ்ட் ஒரு நாள் பின்னாடி. ;(

    ~~~~~~~~~~

    வெகு சுவையான பழம் வனிதா. இங்க ஆளாளுக்குப் போடுற கமண்ட் பாருங்களேன். ;))

    ~~~~~~~~~~

    அத்திப்பழம்.. நான்கு நாள் முன்னால்தான் சாப்பிட்டேன். இப்ப இங்க சீசன். அப்படி இருந்தது சுவை. யம். ;P (இதுக்கு முன்னால உலர்ந்த அத்திப்பழம் மட்டும் தான் சாப்பிட்டு இருக்கிறேன்.)
    //பணம்பழம் கேள்விப்பட்டு இருக்கேன்// நான் கேள்விப்பட்டதே... இல்ல ஜெய்லானி. இப்பதான் முதல்முறை கேள்விப்படுறேன். ;)) எங்க கிடைக்கும்!! NZ $ ல ஒரு நாலு பழம் ஃப்ரீ டெலிவரி ப்ளீஸ். ;))

    ReplyDelete
  20. அங்க நல்லது கிடைக்காதா ஸாதிகா!!

    ~~~~~~~~~~

    அந்த ஜூஸ் இல்ல வான்ஸ். pulp - MD brand வரும். அதில சீனி இருக்காது.

    ~~~~~~~~~~

    அது செங்காய்தான் அனாமிகா. ஆனால் கிளம்ப வேணுமே.. காலைல முக்கால்பதம் வந்து இருந்துது, சாப்பிட்டாச்சு. ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா