Thursday 17 March 2011

சின்னச் சின்ன ஆசைகள்


மீண்டும் மழைக்காலம் தொடர்கிறது...

வளவைச் சுற்றி வந்து இந்தப் பந்தலைக் கண்டுவிட்டேன், ஒரு நாள் தூதுவளைச் சம்பல்

தினமும் முருங்கைக் கீரை சாப்பிடச் சொல்லி யாரோ ;) அறிவுரை சொன்னார்கள். ஊரில் ஆசைப் பட்ட மட்டும் சாப்பிட்டு விட்டு வந்தாயிற்று. ஆனாலும் எனக்குப் பிடித்த மாதிரி சம்பல் அரைத்துச் சாப்பிடக் கிடைக்கவில்லை, மீதி எல்லோரும் போர்க் கொடி தூக்கி விட்டார்கள். ;(

இப்போ எல்லாம் இப்படி எண்ணெயும் தேங்காய்ப்பூவுமாகப் பார்த்தால் கொஞ்சம் பயம் எட்டிப் பார்க்கிறது. ஆனாலும் விடவில்லை. சண்டிக்கீரைச் சுண்டல் இது. நாங்கள் ஊரில் லெச்சகட்டை என்போம்.
சென்னையில் நிறைய இடத்தில் இந்தத் தாவரத்தை அழகுக்காக வளர்க்கிறார்கள். முன்பு அறுசுவையில் இதைப் பற்றிப் படித்திருக்கிறேன். நேரில் காணக் கிடைத்த போது ஆச்சரியமாக இருந்தது.
அறுசுவையில் இருக்கும் 'சண்டிக்கீரை சுருள் பொரியல்' சமைத்துப் பார்க்க நினைத்தேன். அங்கிருக்கும் சமயம் அறுசுவைக்குப் போக முடியவில்லை. ;(

இது எப்போதும் என் ஃபேவரிட்'. கொஞ்சம் எண்ணெய் அதிகமாக இருந்தது. என் சமையல் அல்ல.
மீதியைத் தணலில் சுட்டு.. ஹும்ம்.. அந்த வாசனை இன்னும் நாசியில் இருக்கிறது.

அறுசுவையில் யாரோ என் 'ப்ரொஃபைல் பார்த்து எனக்கு ஆமை ஓட்டுக்குள் ஆஸ்மியும் அதை உடைக்கவென்று சுத்தியலும் வைத்து அனுப்பினீர்களே, நினைவு இருக்கிறதா? ;) அந்த ஆஸ்மி இது தான். மெத்தென்று வாயில் கரைந்தது. சர்க்கரை போதவில்லை. அதுவும் நல்லதுதான்.

எதுவும் முன்பு போல் இல்லை. தரம், சுவை மாறி விட்டிருந்தது. எனக்கு இன்னும் கருகிய நிறத்தோடு இருந்தால்தான் கவும் பிடிக்கும். கொண்டையும் அழகாக இல்லை. பரவாயில்லை,ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை. ;P

இது... பூஸ் & இமாவின் ஃபேவரிட். ;))) படம் தெளிவாக எடுபடவில்லை. செல்வியம்மா... வந்து பாருங்க, இதுதான் நீங்க வேலியெல்லாம் தேடின குறிஞ்சா.

21 comments:

  1. இமா, இது அநியாயம். தூதுவளை, முருங்கை, .... இந்தப் படங்கள் எல்லாம் போட்டு. கர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  2. ஊருக்குள்ள ஒரு கீரையையும் விடல போலிருக்கே ;( - Vanitha

    ReplyDelete
  3. பொறுங்கோ, இன்னும் இருக்கு வாணியம்மா. ;)

    ~~~~~~~~~~~~

    இல்ல.. அதுக்கு நீங்கள் எதுக்கு அழுறீங்கள் வனி? ;) தேடின நிறையக் கீரைகள் காணேல்ல. எனக்கு முசுட்டைக்கீரை விருப்பம். காரை, கானாந்தி எல்லாம் இல்லை இப்ப. முல்லைக்கீரை பக்கத்து வீட்டில இருந்துது. சாப்பிட இல்ல. சாரணைக்கீரை கிடைக்கேல்ல. ;( என்ன செய்ய வனி? வெப்காம்ல எல்லாத்தையும் பார்க்கலாம் சாப்பிட முடியுமா? போனால் தான் எல்லாம். ;)

    ReplyDelete
  4. ம்... நீங்க சொல்ற எந்த கீரையும் எனக்கு தெரியலயே!!! :( - Vanitha

    ReplyDelete
  5. உணவு வகை களைப் பார்க்கையில் மண் வாசனை வீசுகிறது. ஊரில் இருந்தபோது தேடவில்லை .
    தேடும்போது கிடைக்கக் கஷ்டம்.(வெளி நாட்டில்)

    ReplyDelete
  6. இது evergreen என்று ஒரு மரம் அதுதானே



    குறிஞ்சா எங்கள் வீட்டில் வளர்ந்தது
    எல்லா செடியையும் அது டேக் ஓவர் பண்ணிடுச்சு.
    சண்டியக்கீரை
    இது கல்யாண முருங்கையா?

    .

    ReplyDelete
  7. ஆஸ்மி = பதர் பேணி am i right .

    ReplyDelete
  8. konda kavum -கொண்ட கவும் தான் பார்த்ததும் தின்ன ஆசையா இருக்கு என்ன இந்த கொண்டை பார்த்ததும் சிரிப்பு வந்துட்டு..

    இதே போல ஒரு பலகாரம் ஊர்ல பால்பன் அப்படின்னு செய்வாங்க றீச்சர்..!

    இப்போ நான் என்ன செய்வேன் இதுக்குத்தான் பெரும்பாலும் குக்கிங் சைட்ஸ் போறதே இல்ல..! :(

    ReplyDelete
  9. இப்படி படம் காட்டி வெறுப்பேத்தறீங்களே இமா?! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்*100!

    அஸ்மி அழகா(!) இருக்கு!கவும் லிங்க் பாத்தேன்,கொண்டை போடுவது எப்படின்னு புரியல! :) :) ஹூம்,எப்படியோ ஒரு 7-8 கிலோ ஏறித்தான் ஊருக்கு திரும்பியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்,கரெக்ட்டா?! ;)

    ReplyDelete
  10. அடுத்த விடுமுறைக்கு வனிக்கு பார்சல் அனுப்புறேன். ;)

    ~~~~~~~~~~

    உண்மைதான் நிலா. போனால் ஒரு பிடி பிடிச்சுப் போட்டு வாங்க. ;)

    ReplyDelete
  11. ஆஞ்சலின், நீங்கள் எதைச் சொல்றீங்கள் எண்டு விளங்கேல்ல. நாங்கள் எவர்க்றீன் எண்டு அஸ்பராகஸ் மாதிரி ஒரு fern இருக்கே, அதைத் தான் சொல்லுவோம். ரோஸ் வைக்கேக்க கோட்ல எல்லாம் வைப்பாங்கள்.

    முதலாவது படத்தில தென்னைக்கு இடது பக்கம் தெரியிறது அம்பரெல்லாங்காய் மரம், காட்டுமாங்காய் எண்டுவாங்கள்.

    ReplyDelete
  12. சண்டிக்கீரை கலியாண முருக்கு அல்ல.

    ReplyDelete
  13. //ஆஸ்மி = பதர் பேணி// இருக்காது. ரெசிபி பார்த்தீங்களா? ஒரு இலைட சாறு எடுத்து தேங்காய்ப்பால்ல கலந்து..
    பதர்பேணி!! கேள்விப் பட்ட பேராக இருக்கு. யாராவது சொல்லுங்களேன்.

    ReplyDelete
  14. வசந்த்.. நம்மது குக்கிங் சைட் இல்ல. இது... இமாவின் உலகம். ;)))
    //கொண்டை சிரிப்பு வந்துட்டு.// பரவால்ல சிரிங்க. எனக்கு இன்னும் பேர் பார்த்ததும்... ;))))

    //பால்பன்// யாராச்சும் ரெசிபி கொடுங்க சகோதரிகளே.

    ~~~~~~~~~~~~

    //கரெக்ட்டா?!// கிக் கிக் நோப். அது எல்லாம் விருந்தேயாயினும் விருந்தோட பகிர்ந்து உண்டுருவோம். கடைசில எனக்கு ஒரு பங்குதான் கிடைக்கும். சோ.. 4 கிலோ மட்டுமே. இறக்கிருவேன் சீக்கிரம்.
    இதுக்கு ரெடிமேட் விக் வைக்க முடியாதுல்ல! ;))

    ReplyDelete
  15. இமா எப்படி இருக்கிங்க? ஊரெல்லாம் நன்றாக சுற்றி பார்த்திங்களா? கேரளாவுக்கு போனிங்களா?
    எங்க வீட்டின் பக்கத்தில் இருக்கும் ஒரு கோயிலில் நித நாகலிங்க பூ மரம் இருக்கு என்ன ஒரு வாசனை வாவ் அந்த பூவும் அழகு நா வேற எங்கும் பார்க்கவெ சந்தப்பம் கிடைக்கவில்லை.
    ஊருக்கெல்லாம் போனதில் என்னை மறந்துட்டிங்களோ?

    ReplyDelete
  16. ஐ.. தூதுவேலாஞ் செடி :) நிறைய முள்ளு இருக்குமே.. லேவண்டர் கலர்ல பூ.. ஊர்ல இதோட இலைகள அரைத்து ரசம் வைப்பாங்க இமா - சளிக்கு நல்லதுன்னு சொல்லுவாங்க.

    முருங்கைக்கீரை - ஐய்ய.. கசக்கும்.. ஆனா நெய் காயவைக்கும் போது இதை ஒரு கொத்து போடுவாங்க இமா.. மணமாக இருக்கும்..

    அதென்னது பலாக்கொட்டை பொரியலா?

    குறிஞ்சா ஓ குறிஞ்சா.. :))

    ReplyDelete
  17. //சண்டிக்கீரைச் சுண்டல்//
    இதெல்லாம் சாப்பிட்டே வருசக்கணக்காயிட்டு. ஏன் ஏன் இமாம்மா வயித்தெரிச்சல கிளப்புறியள். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். முருங்கை கீரை கசக்கும். அதனால அம்மா நெய் போட்டு வறுத்துப்போடு, சூடா இருக்கேக்க அடுப்பை நிப்பாட்டி போட்டு தேங்காய்ப்பூ போட்டு கிளறுவா.

    ReplyDelete
  18. பலாக்கொட்டைப் பொரியல். யம் யம். அம்மம்மா நாலா சீவி பொரிப்பா. சில வேளைகளில் சுட்டும் தருவா. முருக்கங்காய் கருவாடு போட்ட குழம்புக்கு கொஞ்ச பிலாக்கொட்டை போட்டு வைப்பா பருங்கோ. யம்ம்ம்ம்ம்ம்.

    அவிச்ச பலாக்கொட்டையை இடிச்சு, தேங்காய்ப்பூ, சீனி, ஏலம் போட்டு சாப்பிடுவதும். ஹையோ. இப்பவே வீட்ட பிளைட் எடுத்து போகவேணு ம் போல இருக்கு. அம்மாட்ட விளக்குமாத்து அடி நிச்சயம் பலாக்கொட்டைக்காக பிளைட் ஏறினால். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஹி ஹி

    ReplyDelete
  19. கேரளாவுக்குப் போற அளவு நேரம் கிடைக்கேல்ல விஜி. ;( நெக்ஸ்ட் டைம் தான்.

    ~~~~~~~~~~

    நான் டேஸ்ட் எண்டு சாப்பிடறது சந்தனா. இலைகுழை எண்டால் எதுவும் சாப்பிடுவன். ;)) அந்தக் காய் பழுக்க.. ;) அதை இண்டோர் ப்ளாண்ட்ல எல்லாம் தொங்க விட்டால் வடிவா இருக்கும். ;)
    என்ன! முருங்கைக்கீரை கசக்குமா!! உங்களுக்குக் குறிஞ்சா தான் சரி. ;))

    ~~~~~~~~~~

    அனாமிகா இன்னொரு ரெசிபி சொல்றன். அடுத்த முறை போகேக்க ட்ரை பண்ணுங்கோ. முருங்கைத் துளிரைக் கந்தப் பார்த்து கொதி தண்ணில போட்டு எடுத்து பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு வச்சு அம்மியில அரைச்சு தேசிக்காய் புளிய வேணும். சுப்பர். கசக்க எல்லாம் மாட்டுது.
    ம். முருங்கைக்காய்க்கு பிலாக்கொட்டை சுப்பர் கொம்பினேஷன்தான்.

    ReplyDelete
  20. ஹாய் இமா மேடம்...,உங்களுடைய இந்த பதிவை பொறுமையாக படித்து பின் பதிவிடுகின்றேன்.
    அதற்க்கு முன் ஒரு சின்ன வேண்டுக்கோள்...
    தாங்களுக்கு என் நினைவாக ஒரு சான்றிதழை வழங்கியுள்ளேன்.முடிந்த போது என் இல்லம் வந்து பெற்றுக் கொள்ளவும் மேடம்....
    நன்றி.

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  21. ;) மிக்க நன்றி அப்சரா.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா