Wednesday 9 March 2011

மலை பாம்பும் எழும்பூரும்


எங்க, ஒருக்கா இந்தப் பலகையில இருக்கிற தடிச்ச எழுத்துச் சொல்லக் கவனமா வாசியுங்க பாப்பம்!

அப்பிடி இல்ல, அப்பிடி இல்ல. ;))
கடகடவெண்டு ரெண்டு மூண்டு தரம் வாசிக்கவேணும். ;)

என்ன!! உங்களை அறியாமல் நடுவில ஒரு "ப்" போட்டீங்களா, இல்லையா? ;))

மாமல்லபுரம் போற வழியில முதலைப் பண்ணைக்குள்ள உள்ளிட்டம். இவருக்குப் பக்கத்தில இருந்த பாம்பார் இலங்கையராம். இவர் மலை பாம்பு. மலையில இல்லாட்டிலும் ஒரு குட்டிப் பாறையிலயாவது இருந்தார். பளபள எண்டு வடிவான சட்டை போட்டு இருந்தார்.

அதை விடுங்க, ஒருக்கா அதில எழுதி இருக்கிறதத் தட்டிப் பார்க்கப் போறன், என்னோட சேர்ந்து வாசிக்கிறீங்களா நீங்களும். ஒரு எழுத்தும் கூட்டாமல் குறைக்காமல் வாசிக்க வேணும்.

ஆயத்தமா!! ;)))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மலை பாம்பு.
இவ்வகை பாம்புகள் இந்தியா முழுவதும் பசுமை காடுகளில் காணப்படுகிறது. நரி, பறவைகள், காட்டுப்பன்றி இதன் உணவாகும். 100 முட்டைகள் வரை இடும். 9 அடி முதல் 10 அடி வரை வளரக்கூடியது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எனக்கு இந்தத் தமிழ் விளங்கேல்ல!! சந்தேகமாக் கிடக்கு. மலை பாம்பும், பசுமை காடும் சரியெண்டால்... காட்டு பன்றியும், வளர கூடியதும் தானே சரியா வரும்!!

அதை விடுங்க. என்ட கணனியில எப்பிடித் தட்டினாலும் அந்தப் பலகையில இருக்கிற மாதிரி ஸ்டைலான 'ழு' எழுத வராதாம். '' வையும் 'ழு' வையும் கலக்கி விட்ட மாதிரி ஒரு எழுத்தாக் கிடக்கு. ;( 

இங்க மட்டும் இல்ல... ஒருநாள் 'எக்மோர்' போவம் எண்டு வெளிக்கிட்டம். 'திருகோணமலை' வெள்ளைகளால 'ட்ரிங்கொமலீ' ஆன மாதிரி 'எழும்பூர்', 'எக்மோர்' ஆகீட்டுது எண்டது ஒருவரும் சொல்லாமலே விளங்கீட்டுது.

அங்க முதல் என்ட கண்ணில பட்ட ஒரு கடைல இருந்த பெயர்ப் பலகையை வாசிச்சு... "எழும்பூருக்கு எப்பிடி..." நான் முடிக்கக் கூட இல்ல; கூட வந்த எங்கட குட்டி ஃப்ரென்ட் பீட்டர், என்ன கேக்க வெளிக்கிடுறன் எண்டு விளங்கிப் போய் "டீச்சர்!!!!! ஆரம்பிச்சுட்டீங்களா!! முடீ..யல," எண்டவும் வாயை இறுக்கி மூடிக்கொண்டு இருந்தாச்சுது. 

உங்களிட்டயாவது கேப்பம். இந்த 'ழு' வை யார் கண்டுபிடிச்சு இருப்பாங்கள்!!! எந்த font ல தட்டினால் இப்பிடி வரும்!!! அகராதி பிடிச்ச ஒரு எழுத்தாக் கிடக்கு. ;( அகராதியிலயும் தேடிப் பார்த்திட்டன், காணேல்ல. ;((

27 comments:

  1. ழ‌(za) ழா(zA) ழி(zi) ழீ(zI) ழு(zu) ழூ(zU) ழெ(ze) ழே (zE)ழை(zai) ழொ(zo) ழோ(zI)

    இமா உங்க டவுட்டு என்ன ?? இப்படியா டீச்சரே கேக்கிரது :(

    ReplyDelete
  2. இலா.. அது "ழு" வோட சுழி பற்றிய நக்கல், இமா ஸ்டை"லு"ல :) ஹைப்ரிட் ஆக இருக்காம் :)

    "காணப்படுகிறது" விட்டுட்டீங்களே இமா :)

    இமா.. எனக்கும் இந்த இலக்கணப் பிழைகள் நிறைய வரும். நீங்கள் சுட்டிக்காட்டியவை நானும் செய்யக் கூடியவை என்பதால, மேற்கொண்டு ஒன்னும் பேசாம வெளிக்கிடுறேன் :)

    தன்னுடைய திறமையால் இமாவின் வாயை அடைத்த எங்கள் குட்டித் தலைவர் பீட்டர் வாழ்க :)

    ReplyDelete
  3. ஆ.... 100 முட்டை இடுமோ?(கள் விடுபட்டுப்போச்சு... நோ கர்ர்ர்.:)).

    அப்போ இப்பூடி பப்ளிக்கிலயே “ழு” வைப் போட்டதை ஆரும் காணேல்லை... “அங்கு” ஒருகாலத்தில நான் ஆசையா:) “முழுப்பெயர்” எனச் சொன்னதுக்கு.... குண்டாந்தடியை எடுத்தவை ஆட்கள்:), அதை எல்லோரும் பார்த்துக்கொண்டுதானே இருந்தனீங்கள்?... இப்போ புரியுதோ.... ழு வைக் கண்டுபிடிச்சது மீ... அதாவது உண்மைப்பெயரோடு உலாவும் அதி....ரா.

    இலா என்ன நடந்தது? இதுக்குத்தான் ஓவராப் படிக்காமல் என் பக்கமும் எட்டிப்பாருங்க எனச் சொன்னேனெல்லோ அண்டைக்கு.... இது முழு:)க்க :) தமிழாக்கிடக்கே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  4. //எனக்கு இந்தத் தமிழ் விளங்கேல்ல!! சந்தேகமாக் கிடக்கு.//

    மாமீஈஈஈஈஈஈ இப்பதான் நீங்க சரியா என் ரூட்டில வந்திருக்கீங்க ..அதுக்கு முதல் வாழ்த்துக்கள்..!!. எப்போ சந்தேக கண்ணோட யோசிக்கிறீங்களே அப்பவே அதுக்குள்ள திர்வும் கண்டிப்பா கிடைக்கும் :-)


    இந்த கூகிள் இண்டிக் எல்லாம் விட்டு போட்டு NHM பாவிங்கோ அப்பதான் தமிழ்ல கதைக்க லகுவா இருக்கும் . :-))

    ழ் ( z ) ழ (za ) ழா( zaa) ழெ (ze ) ழே ( zee) ழு (zu )ழூ (zuu ) ழி( zi) ழீ (zii ) ழொ (zo ) ழோ ( zoo) ழை(zai)


    தமிழ் பொனடிக் யுனிகோட் மட்டும் போதும்

    ReplyDelete
  5. மிட் நைட்டில பா....பா....பா..ம்.......பு படமா ...அவ்வ்வ்வ்

    வான்ஸ் இந்த ஏரியா பக்கமே வராதே... ஹி..ஹி.. :-))

    ReplyDelete
  6. //அகராதி பிடிச்ச ஒரு எழுத்தாக் கிடக்கு. ;( அகராதியிலயும் தேடிப் பார்த்திட்டன், காணேல்ல. ;(( //

    க்கி..க்கி..க்கிகீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ..

    ReplyDelete
  7. பாம்பு!!! ஆத்தீ.... எப்படி தான் அழகா இருக்கார்'னு சொல்ல முடியுதோ.... அது இமா'கே உள்ள ஸ்பெஷாலிட்டி. நம்மால் பார்க்கவே முடியல, பயமா இருக்கு. ;(

    "ழு" பாவம்.... விட்டுடுங்க. பாம்பை மட்டும் பாருங்கோ. :D - Vanitha

    ReplyDelete
  8. ஏனுங்கோ இமா,முதலைப்பண்ணைக்கு போய்ட்டு முதலையை படம் புடிச்சி போடாமல் பாம்பை படம் புடிச்சி போட்டு டெரர் காட்டுறீங்களேப்பா???

    ReplyDelete
  9. எனக்கு கூட இந்த டவுட் வந்திச்சு இமா .
    எக்மோர் எப்படி எழும்பூர் ஆச்சு.

    ReplyDelete
  10. அப்புறம் அங்கே museum போனீங்களா.

    ReplyDelete
  11. இமா அவர்களே...,பாம்பை பார்க்கும் ஆவல் எனக்கு இருக்கும்.ஆனால் அதையும் தாண்டி ஒரு பயமும் வரும்.
    இதை பார்க்கும் போதே யம்மாடியோ.....வ்வ்வ்வ்
    உடம்புல ஏதோ ஊறுவதுபோலல்லவா இருக்கு....
    உங்கள் எழுத்து பிழை சந்தேகத்தை கூட முழுசா படிக்க முடியலன்னா பார்த்துக்கங்களேன்...இது நீங்களே எடுத்த ஃபோட்டோங்களா...?

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  12. //இமா உங்க டவுட்டு என்ன ??// கிக் கிக். நிஜமாவே புரியலயா இலா!! ;)

    ~~~~~~~~~~

    //அது "ழு" வோட சுழி பற்றிய,// புரிஞ்சு இருக்குமே! சந்துதான் இமாவோட உலகத்து ஆஸ்தான ட்ரான்ஸ்லேட்டர்.
    நிறையவே //"காணப்படுகி"//ன்றன. சாம்பிளுக்கு ரெண்டு மட்டும் கொடுத்து இருக்கேன் சந்தூஸ்.

    எங்க ஊர்ல 'அ'ரோக்கியமா வாழுறதுக்கு சிலது ஒரு ஃபார்மசில வித்தாங்க. பரவால்ல... அது தமிழரோட ஃபார்மசி இல்ல. சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. ஏதோ எழுதி இருக்கேன். இதான் இப்போ நிலமை. படிச்சுப் படிச்சு மனசுல பதிஞ்சா தப்பும் சரியாகிரும் போல. ;( ஒருகாலம் எங்க பசங்க எங்களைத் தப்பும்பாங்க, பாருங்க. ;))

    //எனக்கும் இந்த இலக்கணப் பிழைகள் நிறைய வரும்.// எனக்கும் நிறைய வரும். ஆனா 'எனக்கு பிழை வரும்' என்று எங்களுக்கு சொல்லத் தெரியுது இல்ல. அப்போ சரிவரும். ;))

    இது... வெறும் அடிப்படை. இருந்தாலும் ஒரு காரணம் இருக்கு எல்லாத்துக்கும். நான் நினைக்கிறதைத் தனிப் பதிவா எப்பவாச்சும் சொல்றேன்.

    ம்.. பீட்டர் சார் பற்றியும் சொல்லணும். அதுக்கு முதல்... போன் பண்ணணும். ;) மாசம் ஒருமுறை ஆச்சும் பேசணும் என்று நினைச்சு இருக்கேன், ஒண்ணரை மாசம் ஆச்சு, பார்க்கலாம்.

    ReplyDelete
  13. அது வேற இது வேற அதீஸ். ;)) இந்த 'ழு'வை க்ர்ர் என்னாலயே எழுத முடியாமல் கிடக்கு, நீங்கள் வேற. அந்த 'மலை பாம்பு' போடைக் கொஞ்சம் பெருசாக்கி வாசியுங்கோ. வேணுமெண்டால் [_O-O_]. டைப் பண்ண ஏலாது போல. ;(

    ~~~~~~~~~~

    //அதுக்குள்ள திர்வும் கண்டிப்பா கிடைக்கும்// கிடைக்காது. ;(
    //தமிழ் பொனடிக் யுனிகோட் மட்டும் போதும் // போதாது. ;))) அத வச்சும் அங்க போர்ட்ல இருக்கிற மாதிரி 'ழு' எழுதேல்ல நீங்கள். ;)) நான் சொன்னது உங்களுக்கு விளங்கேல்ல மருமகனே. ;))

    ~~~~~~~~~~

    //இமா'கே உள்ள ஸ்பெஷாலிட்டி.// ஒரு ஸ்பெஷாலிட்டியும் கிடையாது. எனக்கு ஏற்கனவே இருக்கிற சந்தேகம் தீரக் காணோம். நீங்க புதுசா ஒன்று கேட்கப் பண்றீங்க வனிதா. இதுவும் புதுசு இல்ல. சிலகாலம் மனசில இருந்ததுதான். இப்ப கேக்குறன்.. தமிழில apostrophe இருக்குதா? இருந்தால் அது பற்றி அறிந்துகொள்ள ஆசை. எங்க தேடினால் விபரம் கிடைக்கும்??

    ReplyDelete
  14. ஸாதிகா.. ;)) //முதலைப்பண்ணைக்கு போய்ட்டு// ஆமைகளையும் இந்த 'ழு'வையும் பார்த்தே மயங்கிப் போய்ட்டேன். ;)

    அழகு முதலைகள் பார்த்தேன். போட்டுரவா இங்க? ;))

    ReplyDelete
  15. என்னாச்சு இர்ஷாத்!! பாம்பு பார்த்ததாலா? இல்லாட்டா... இமா, ஜெய்லானி மாதிரி பதிவு போட்டிருக்காங்களேன்னா!! ;)))
    இந்தியால... போன வழியெல்லாம் கண்ணை முழிச்சு பார்த்துட்டே போனேன், எங்கயாச்சும் அதிராம்பட்டினம் போர்ட்டு தெரியுதான்னு. ம்ஹூம். காணோம். ;))

    ~~~~~~~~~~

    அடுத்த சந்தேகம்.. ;)) நீங்க ஆஞ்சலீனா? ஏஞ்சலீனா? எப்பிடிக் கூப்பிடட்டும்? ;)
    //எக்மோர் எப்படி எழும்பூர் ஆச்சு.// ஓ!! அப்போ நான்தான் தப்பாப் புரிஞ்சு இருக்கிறேனா? தாங்ஸ்.
    ம். மியூசியம் போனேனே. நிறைய விடயங்கள் கருத்தைக் கவர்ந்தன. முக்கியமாக, பாரதியாரின் அழகுக் கையெழுத்து, மீதியெல்லாம் எங்கு வேண்டுமானாலும் கண்டு இருப்பேன். நன்றி ஸாதிகா.

    ~~~~~~~~~~

    சிவாவுக்கு மகியோட கோன் தோசை கிடைச்சுதா? கொடுக்கச் சொல்லிட்டேன். ;)

    ReplyDelete
  16. அப்சரா அவர்களே!! ;))
    //இது நீங்களே எடுத்த ஃபோட்டோங்களா...?// பின்ன, கூகிள்ள சுட்டதா? ;) இமாவின் உலகத்தில் இமாவுக்கு மட்டும் காப்பி ரைட் ;)) இருக்கிறது போல் படங்கள் தான் வரும். உலகம் ஆரம்பிச்சது முதலே இதை பாலிசியா வச்சு இருக்கிறேங்க.

    அது சரி.. கம்பிக்கு வெளிய இருந்து எடுக்க என்ன பயம்?

    ReplyDelete
  17. ;)) மேல.. போட்டோ ஸ்ட்ரீமில புதுசா ஒரு எழுத்துத் தெரியுதோ! எனக்கு //இந்த கூகிள் இண்டிக் எல்லாம் விட்டுப் போட்டு NHM பாவிங்கோ அப்பதான் தமிழ்ல கதைக்க லகுவா இருக்கும் . :-))// எண்டு சொன்ன ஆக்கள் வந்து கேள்விக்குப் பதில் சொன்னா உதவியா இருக்கும். ;)))

    ReplyDelete
  18. வந்துட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்


    //மேல.. போட்டோ ஸ்ட்ரீமில புதுசா ஒரு எழுத்துத் தெரியுதோ! எனக்கு//
    எனக்கு மூனு தெரியுது ஹி..ஹி..
    //எண்டு சொன்ன ஆக்கள் வந்து கேள்விக்குப் பதில் சொன்னா உதவியா இருக்கும். ;))) //


    ம்..மா(ங்காயை) எ’ழு’த முடிவு எடுத்த பின்ன அ’ழ’கு பார்க்க ஆரம்பிச்சி நடுவில எதை எ’ழு’தன்னு தெரியாம கோவில்ல கானாமப்போன கு’ழ’ந்தை மாதிரி ’மு’ழிப்பது தெரியுது எனக்கு ..

    உங்களுக்கு எபப்டி தெரியுது மாமீஈஈஈஈஈஈஈஈஈ :-))))))))))))))))))

    ReplyDelete
  19. க்ர்ர்ர். குழம்பி. ;))

    ReplyDelete
  20. 'மலை'ப்பா இருக்கிறது படிக்க...படிக்க.

    ReplyDelete
  21. இமாவின் உலகத்தில ஆமை, முயல், பப்பி, பூஸ், மயில், குதிரை, பட்டாம்பூச்சி இன்னும் என்னவெல்லாமோ இருந்துது. ஒரு புலி இல்லாத குறை இருந்துது இத்தனை நாள். வாங்க, நல்வரவு. _()_

    ம்... உங்க 'ஆக்யூபேஷன்' தான் கொஞ்சம் பயமுறுத்துது.

    //'மலை'ப்பா இருக்கிறது படிக்க...படிக்க.// ஓ!! உங்க கைல இருக்கிற புத்தகத்தைச் சொல்றீங்களா? ;)

    கொஞ்ச நாள் முன்னாடிதான் அம்மா கேட்டாங்க "யாரிந்த "குறட்டை"புலி?" என்று. ;) எங்கருந்து புடிச்சீங்க இந்தப் பேர்!!

    ReplyDelete
  22. //தமிழில apostrophe இருக்குதா// - ஏற்கவனே நீங்க 'ழ'கு குழப்பின குழப்பத்தில் எங்க தட்டினாலும் நினைவு வந்து படுத்துது... இதுல என்கிட்டயே புது குழப்பமா??? என் தமிழை பிழை சொல்ல கூடாது. வேண்டாம்... அழுதுருவேன். - vanitha

    ReplyDelete
  23. சரி, சரீ, அழாதீங்க. ;)))))))))
    நான் ஒண்ணுமே கேக்கல. வாபஸ். ;))

    ReplyDelete
  24. /தன்னுடைய திறமையால் இமாவின் வாயை அடைத்த எங்கள் குட்டித் தலைவர் பீட்டர் வாழ்க :) //
    ha ha ha. Class.

    ReplyDelete
  25. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். ஜெய்லானியைக் கண்டால் பாம்பே நடுங்கும். எவ்வளவு டவுட். இப்ப எல்லாம் நம்ம பக்கம் வந்து டவுட் கேக்கறது குறைஞ்சுடுச்சு என்டு நிம்மதியா இருந்தால் (கிடிங்) இமாம்மாவிடம் கேட்கிற டவுட் எல்லாம் கூடிக்கொண்டே இருக்கு. ஒரு மலைப்பாம்பை UAEகு அனுப்பிவிடுவமே இமாம்மா.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா