Monday 14 March 2011

சல்மல்


ஒரு மழைநாள், கண்டிவாவியைச் சுற்றி இருந்த வீதியில் நடந்துகொண்டிருந்த பொழுது பெரிய பெரிய காய்களோடு நின்றிருந்த இந்த மரம் என்னைக் கவர, மழையையும் பொருட்படுத்தாது தரித்து நின்று எடுத்த படங்கள் இவை.
இந்தக் காய்களை முன்பெப்போதும் கண்டதில்லை. தரையில் கொட்டிக் கிடந்த பூக்கள்... சல்மல் - தம்புல்ல விகாரையில் புத்தர் பெருமான் முன்னால் அர்ச்சனைக்காக வைக்கப்பட்டிருந்து பார்த்திருக்கிறேன்.

மேலே அதே மலர் இந்த மரத்தில்.

இங்கு வந்ததும் இணையத்தில் தேடிப் பார்க்கலாம் என்று பெயர்ப்பலைகையையும் மரத்தோடு சேர்த்து படம் எடுத்து வைத்தேன்.

இதே தாவரம் மீண்டும் சில நாட்களில் வேறு ஓர் இடத்தில் என் கண்ணில் பட்டது, சென்னையில் எழும்பூர் அருங்காட்சியகப் பக்கம் பெரிதாக ஒரு மரம் நின்றது - நாகலிங்கப் பூ மரம்.

எனக்கு இது புதிதானாலும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த தாவரமாக இருக்கலாம். இருப்பினும் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது.

சிங்களவர் இதை சல்மல் என்று அழைத்தாலும் இது அந்த மரம் அல்லவாம்.

காய்கள் பீரங்கிக் குண்டுகள் போல் இருந்தன. மேலதிக விபரம் இங்கே.

இந்த வீதியுலா ;) பற்றி வேறொரு சம்பவமும் இப்போது நினைவு வருகிறது.
அங்கங்கே மரங்களின் அடியில் அர்ச்சனைக்கான பொருட்களைச் சிலர் விற்றுக் கொண்டிருந்தனர். உரக்கப் போவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்த மழைக்குப் பயந்து விரைந்து கொண்டிருந்த வேளை எதிர்பாராமல் என் முன்னே ஒரு கை அட்டைப்பெட்டி ஒன்றை நீட்டியது. தவிர்த்துவிட்டு நகர்ந்தேன். முன்னே சென்ற மருமகன் சட்டென்று நின்று என்னைத் திரும்பிப் பார்த்து ஒரு நக்கல் சிரிப்புச் சிரித்தார். "அவ சந்தனக்குச்சு விக்கப் பிடிச்ச ஆளப் பாருங்க,"
இமாவுக்கு ஊதுபத்தி வாசனை ஆகாது. ;( மீதிப் பயணம் முழுக்கச் சிரிப்பதற்கு இதுதான் தலைப்பாக இருந்தது அனைவருக்கும். ;)

23 comments:

  1. அடுத்த [பதிவு சென்னை அருங்காட்சியகத்தை எதிர்பார்க்கலாமா இமா?

    ReplyDelete
  2. வணக்கம்...!!!! நான் பூவுக்குச் சொன்னேன்.

    ReplyDelete
  3. ;(( அங்குமட்டும் ஒரு படமும் எடுக்காமல் நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தாயிற்று ஸாதிகா. எழுதுவதற்கு விடயம் இருக்கிறது.

    ~~~~~~~~~~

    வணக்கம்...!!!! நான் பூஸுக்குச் சொன்னேன்.

    ReplyDelete
  4. நாங்க போனப்ப நிறைய photos எடுத்தோம் .
    அது போன வருடம் .அங்கே ஒரு புக் Exibition இருந்ததே அதுக்கும்
    போனிங்களா.
    thanks for sharing.
    thanks for your suggestion about my card too.now ive entered both for the challenge .

    ReplyDelete
  5. அப்போ ஆஞ்சலீன் போட்டோஸ் போட்டு போஸ்ட்டிங் போடுவாங்க. ;)

    ~~~~~~~~~~~~~~~

    இது யாரு சின்னதா சிரிக்கிறது! டவுட் ஒண்ணும் வரல போல!! ;)

    ReplyDelete
  6. றீச்சர் இது நாகலிங்க மரம் அந்த பழம் நாகலிங்கம், அந்த பூ நாகலிங்கப்பூ பழம் ப்ரீஃப் டீடெயில்ஸ் http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

    நீங்க கொடுத்திருக்கிற லிங் வேலை செய்யலை...!

    மரத்துல நீங்க மாட்டின குடும்ப பெயரை வைத்தே கண்டுபிடிக்க முடிந்தது...

    வர்ட்டா றீச்சர்...!

    ReplyDelete
  7. இமா.. என்னதிது.. உருளைக்கிழங்குகள் இப்படிக் காய்க்கினம்? :))))

    ReplyDelete
  8. புஷ்பம் அயகாய் இருக்கு..

    ReplyDelete
  9. வசந்த்.. பேர் தட்டேக்க சிரிப்பு வருது. ;))))))
    //ப்ரீஃப் டீடெயில்ஸ்// ஆட் பண்ணிட்டேன். தாங்ஸ்.
    //லிங் வேலை செய்யலை...!// சொன்னதுக்கு தாங்ஸ். இப்ப சரி செய்தாச்சு.
    //மரத்துல நீங்க மாட்டின குடும்ப பெயரை // என்ன சொல்றீங்க!!! ;)))))
    ம். வாங்க. அது... 'ரீ---' ;)))

    ReplyDelete
  10. நான் சிரிப்புப் பதிவா போட்டிருக்கிறன்!!! ;)

    சந்தூஸ்... இப்பிடி சீரியஸா எல்லாம் யோசிக்கப் படாது. உருளைக்கிழங்குக் காய் பார்த்து இருக்கிறீங்களா? குட்டிக் குட்டி வட்டுக்கத்தரிக்காய் போல இருக்கும்.

    ReplyDelete
  11. இமா... இதே மரத்தை நீங்க சின்னமலையில் இருந்து அடையார் போகும் வழியில் உள்ள AIR ட்ரெயினிங் சென்டர் பகுதியிலும் காணலாம். இன்னும் பெரிய மரம், இன்னும் பெரிய பெரிய பழங்களுடன் காணலாம். அழகாக இருக்கும். - Vanitha

    ReplyDelete
  12. புகைப்படங்கள் மிக அழகு இமா! நாகலிங்கப்பூ இள‌ம் பருவத்தில் பார்த்தது. அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு இருக்கும். இப்போதெல்லாம் அப்படி இருக்கின்றதா என்று தெரியவில்லை. நாகலிங்கப்பூ மிகவும் வாசனையாக, பார்க்க அழகாக இருக்கும். சிவனின் பூஜைக்கு மிகவும் உகந்த மலர் இது என்று சொல்வார்கள்.

    ReplyDelete
  13. அடுத்த தடவை வரப்ப இருந்தால் காண்கிறேன் வனி. ;)

    ~~~~~~~~~~

    எனக்கும் நாகலிங்கப்பூவின் அழகு.. நிறம் பிடிக்கும். //வாசனை// முயன்று பார்த்ததில்லை அக்கா. எங்கள் ஊரில் நாகலிங்கப் பூ மரம் இருக்கவில்லை. ஆனால் சிறு வயதில் தெருவுக்குத் தெரு குல்மோஹர் பூத்துக் குலுங்கும். இம்முறை மருந்துக் கூட ஒரு மரம் கண்ணில் படவில்லை. நிறைய விதமான தாவரங்கள் காணக் கிடைக்கவே இல்லை. ;( எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள்தான் உயர்ந்து போய் இருக்கின்றன. ;)

    ReplyDelete
  14. இமாவில் உல‌க‌ம் பூத்துக்குலுங்குதே.. அழ‌கான‌ ப‌ட‌ங்க‌ள் இமா.. ம்ம் தொட‌ர்ந்து க்ளிக்குங்க‌..

    ReplyDelete
  15. //வசந்த்.. பேர் தட்டேக்க சிரிப்பு வருது. ;))))))//

    என் பேரா இல்ல நாகலிங்க மரத்து பேரையா? ஆவ்

    ////மரத்துல நீங்க மாட்டின குடும்ப பெயரை // என்ன சொல்றீங்க!!! ;)))))//

    பாட்டனி படிக்கிறப்போ (பட்டாணி திங்கிறப்போன்னு கூட வச்சிக்கலாம்) ஒவ்வொரு தாவரத்திற்க்கும் ஒரு குடும்ப பெயர் இருக்குமே அத சொன்னேன்

    இந்த மரத்தோட டீடெயில்ஸ் அந்த லிங்ல இருக்கிறதுதான்..

    பிரிவு: மக்னோலியோபைட்டா
    வகுப்பு மக்னோலியோப்சிடா
    வரிசை: எரிகேலெஸ்
    குடும்பம்: லெசித்திடேசியே (இது அந்த நேம்பிளேட்ல ஆங்கிலத்துல இருக்கிறது அதை சொன்னேன்)
    பேரினம்: கூரூபிட்டா

    ReplyDelete
  16. புரிஞ்சுது சார். ;)))

    ReplyDelete
  17. நாகலிங்கப்பூவைப் பார்த்துப் பலநாளாச்சு இமா.ஊரிலே பூண்டி கோயிலில் இந்த மரம் இருக்கு. நல்ல வாசனையா,அழகா இருக்கும்.

    ReplyDelete
  18. ம். அங்க மாதா கோவில் ஒண்ணும் இருக்கா மகி!!

    ReplyDelete
  19. ஒரு முறை வற்றாப்பளை அம்மன் கோவிலுக்குப் போனபோது நிறைய மரங்களைக் கண்டோம். வாசனையான பூ என்றாலும் பாம்பு வரும் என்று வீட்டில் தொடவிடவில்லை.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா